Pages

குப்ப மேட்டரு....

எந்திரன் படத்தை இங்கே தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் பார்த்தேன். நம்ம ஊர் டென்ட் கொட்டகைப் போல் ஓடிச் சென்று இடம் பிடிக்க வேண்டும். வரிசை எண் பிரிண்ட் செய்திருந்தாலும், யாரும் அது படி அமருவதில்லை. 'ஒலி' அமைப்பு மிக மட்டமாக இருந்தது. இந்த மாதிரி ஒரு technically uphold படத்தை மோசமான திரையரங்கில் பார்க்க நேர்ந்தது என் முன்வினை. ஆனால் இங்கே audiience பொதுவாகவே 'சத்யம்' 'ஐநாக்ஸ்' வகையைச் சேர்ந்தவர்கள், ஒரு காமடி காட்சி வந்தாலும், உதட்டோரப் புன்னைகை சிந்தி, சத்தம் வராமல் கை தட்டி ரசிப்பார்கள், ஆனால் அன்று அதற்க்கு நேர்மாறாக விசிலும், டான்சும் விண்ணைத் தொட்டது.
--------------XXX------------------XXX------------------
தோணி தலைமையில் இப்போ உள்ள அணி சிறப்ப்பகவே செயல்படுகிறது, நேற்று நடந்த அஸ்த்ரேலிய அணிக்கு எதிரான மேட்சில், அனாயசமாக ஆடி வென்றுவிட்டது. சில நாட்கள் வெளியில் இருந்து, மீண்டும் தனது இருப்பை ரன்களால் உறுதி செய்திருக்கிறார் யுவராஜ். முந்நூறு ரன்களுக்கு அருகில் சேஸ், நடுத்தர வரிசை சிறப்பான ஆட்டத்தினால் சுளுவான வெற்றியைப் பிடிக்க முடிந்தது. ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடப் பட வேண்டியது, என்ன ஒரு பொறுப்புடன் அதே சமயம் consistency maitain செய்கிறார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுமாதி சோதனை முயற்சி செய்து புதுப் புது வீரர்களைத் தயார் படுத்தி வைத்தால்...., ஆபத்தில் உதவுவார்கள். இனி வரும் காலம் இளைஞர்கள் கையில் சந்தேகமே இல்லை.
--------------XXX------------------XXX------------------
எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி இன்னும் நிறைய விழாக்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் (என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்......!) படம் கண்டிப்பாக ஒரு வருடம் ஓட்டப் படும். என்ன அதற்குள் காட்சிக்கு காட்சி ஒரு விழா எடுத்து களிப்புருவார்கள்.
--------------XXX------------------XXX------------------
நண்பர் ராஜூவின் கதை மலர்வாசகன்.! அருமையான எழுத்துநடையிலும், தேர்ந்த வார்த்தைக் கோர்வையாலும் அசத்தியிருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்.
--------------XXX------------------XXX------------------
நண்பர்கள் சிலரது வீட்டில் தொலைகாட்சி, ரேடியோ முதலான நேரக் கொல்லிகள் இல்லை. "எப்படி நேரம் போகிறதுன்னு..?" கேட்டால்.....! "இப்போதான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட முடிகிறது, மிகுந்த நேரம் கிடைப்பதால்.... மனைவிக்கும் வீட்டு வேளைகளில், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவி செய்ய முடிகிறது. அதனால் பல நேர வெட்டி சண்டைகள் குறைந்து, ஒருவித அமைதி திரும்பியிருக்கிறது" என்றனர். என் நாட்கள் ரிமோட்டுடந்தான் விடிந்து, அடைகிறது, சில நேரம் அலாரமும் டிவியிலேயே செட் செய்து தூங்கிப் போகிறேன். ;

எந்திரன் - ஒரு பார்வை

வலை உலகில் முதல் முறையாக..................

கதை,வசனம் சுஜாதா, சங்கர் மற்றும் வைரமுத்து மகன் கார்கி. கதையை தேய்த்து செய்திருப்பதில் இம்மூவரின் பங்கும் ரொம்ப முக்கியம். என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா இவர் இல்லை என்றால்....... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆங்காங்கே விஞ்ஞான தகவல்களைத் தூவி தன்னை நிருபித்துக் கொள்கிறார். மனிதர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். 'பி' 'சி' சென்டருக்கும் புரியும்படி எளிய விளக்கங்களைக் கொடுத்து கதையை தோள் கொடுத்து நடத்தியிருக்கிறார். hats off to him....

உலகமே எதிர்பார்த்த மாபெரும் படம், அந்த எதிர்பார்ப்பை இருநூறு சதம் நிறைவேற்றி இருக்கிறது. கண்டிப்பா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த படம். தமிழில் ஒரு புது முயற்சி, இன்னும் என்ன என்ன வேண்டுமோ அதெல்லாம் நிரப்பிக் கொள்ளுங்கள். கதை ஒரு வரியில் சொல்லி விடக் கூடியதுதான், அதை சொல்லிய விதம் தமிழுக்கு புதுசு.

ரஜினி climaxஇல் ஒரு அரைமணிநேரம் கலக்கியிருக்கிறார், மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது. என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்பட மேக்கப்புக்காக தன்னை வருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது (விஜய் வகையறாக்கள் கவனிக்க வேண்டியது).
ஐஸ்வர்யாராய் இன்னுமும் நீங்கள்தான் உலகாழகி, என்ன ஒரு அழகு...? ஒரு சீனில் புடவையில் வருவார்பாருங்க கோர்ஜியஸ். என்ன நடிப்பு, என்ன டான்சு கலக்கிட்டீங்க. எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.சங்கர் - ட்ரைன் சீனில் எச்சைத் துப்ப வருபவனை ரஜினி மிதித்து ஓடுவது, லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீசை கத்தியால் கீறுவது போன்ற தன்ஒழுக்க சிந்தனைகளை தூவியிருக்கிறார் (ஒரு சீனில் வந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார் கொச்சின் ஹனீபா, இவ்வளவு சீக்கிரம் நம்மையெல்லாம் விட்டு சென்றதில் தென்னக சினிமா உலகம் ஒரு தேர்ந்த நடிகனை இழந்து விட்டது). எண்ணற்ற ரஜினி, ஐஸ்வர்யா என்று பாடல்களிலும், காட்சிப் படுத்தலிலும் ரிச்னசை மிதக்க விடுகிறார். ரோபோ செய்யும் சேஷ்டைகளிலே நகைச்சுவையைத் தடவியிருக்கும்போது ஒரு உலகதர விஞ்ஞானியின் விளங்காத உதவியாளராக ரெண்டுபேரைப் போடவேன்டிய வியாபார நிர்பந்தத்தில் சிக்கியிருப்பது தமிழ்நாட்டின் விதி.

கிராபிக்ஸ் கலக்கல், ஆனால் மீண்டும் மீண்டும் பல வித உருமாற்றத்தில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு அற்புதம் கிராபிக்ஸ் எது நிஜம் எதுன்னு தெரியாமல் கதைக்கு தேவையான ரிச்னஸ் இருக்கிறது. கலை இயக்குனர் சாபு சிறில் உழைப்பு அருமை ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

மொத்தத்தில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இந்திய சினிமா ஹிஸ்டரியில் ஒரு முக்கியப் படம். ;

வலையுலகில் முதல் முறையாக.......

தமன்னாவுடன் கார்த்திக்கு காதலா....?
?
?
?
இலங்கையில் அமைதி திரும்புமா....?
?
?
?
லஞ்ச லாவண்யம் இல்லாத இந்தியா உருவாகுமா....?
?
?
?
அம்மா... நாடு திரும்புவார்களா....?
?
?
?
கலைஞர் பாராட்டு விழாவே இனி வேண்டாம் என்கிறாரா.....?
?
?
?
அன்புமணி ராமதாசுக்கு எம்.பி சீட் வேண்டாமா....?
?
?
?
விஜய் இனிமே தொடை தட்டி வசனம் பேச மாட்டாரா.....?
?
?
?
விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணியா....?
?
?
?
நதிகள் இணைப்பு சாத்தியமா......?
?
?
?

இதெல்லாம் நமக்கெதுக்குங்க.... நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச இந்திரன் படத்தின் விமர்சனம் இன்னைக்கு ராத்திரி வலை ஏற்றம் செய்வான் பித்தன். கண்டிப்பா உங்க எல்லோரையும் விட நான்தான் முதலில் படம் பார்ப்பேன்........

இது எப்படி இருக்கு.....? ;

வயித்தெரிச்சலும் வைத்தியரும்

சின்ன வயசிலிருந்தே சீக்குன்னு வந்தால் பக்குன்னு இருக்கும். அப்போ ஊசிக்கு..., இப்போ காசுக்கு பயம். பத்து நாளாய் வயிறு எரியுதுன்னு (என்னது... யாரப் பார்த்தா....?) வைத்தியரப் பார்கலான்ம்னு அந்த பெரிய மருத்துவமனைக்கு என்னோட பெட்டெர் ஹபோட போனேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடத்தில் இருக்கு, அறை அறையா அலைஞ்சாலே ஆயுள் நீடிக்கும்.

முதலில் அனுமதி சீட்டு வாங்க அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின் என் முறை வந்ததும் பட்சி எந்த மருத்துவர பாக்கனும்னு கேட்டுச்சி, நமக்கு அதெல்லாம் தெரியாது, விலங்கியல் படிச்ச வீட்டாம்மா கிட்ட கேட்டதுக்கு.... எண்டோக்ரைனாலாஜின்னு சொன்னதும், பட்சி 'பதிய' ஒரு பெரிய கோப்பைக் கொடுத்து,

"இத பூர்த்தி செய்யுங்கன்னு" சொல்லுச்சி. படிக்கிற காலத்திலிருந்தே ஃபாரம் பூர்த்தி செய்யுறது படபடப்பான ஒரு செயல். அதனால அத நம்ம பாரியாகிட்ட கொடுத்தேன். பூர்த்தி செய்து மறுபடி பட்சி கிட்ட போயி நின்னா.... ஒரு பேப்பர நீட்டி "நேரா அறை எண் இருநூத்தி அஞ்சுக்கு போயிக்கோன்னு..." பறைஞ்சது.

விதி வலியதுன்னு விருந்தாளிய விரட்ட முடியுமா...?, நீண்ட வரிசைக் கடந்து மருத்துவர காணும் பாக்கியம் கிட்டியது. "சொல்லுங்க..., என்ன ப்ராப்ளம்ன்னு?" கேட்டவரு கிட்ட "சார், பத்து நாளா வயிறு எரியுதுன்னு" சொன்னா....? "யாரப் பாத்துன்னு...?" மொக்கப் போட்டாரு மறுத்துவரு. ஆஹா ஆளு அறப்பிளேடோட அலைவாரு போலன்னு, ஆத்திரத்த அடக்கி அப்பாவியா சிரிச்சேன் நக்கல் பண்ணிக்கொண்டே நாலு டெஸ்ட எழுதிக் கொடுத்தாரு. "இத எடுத்துட்டு வாங்க, அப்புறோம் பாக்கலாம்னு..." அனுப்பிட்டாரு. வயித்தெரிச்சல் கரையுமுன்னே வைப்புநிதி கரையும்போலன்னு விதிய நிந்திச்சே.....

மறுபடி பட்சிகிட்டப் போயி விவரம் கேட்டேன். ஒன்னொண்ணுக்கும் தனித்தனியா சிலிப் கொடுத்து, 'சீறிச்சி' சாரி சிரிச்சி வச்சுது சேச்சி. நீர்
மலம்ன்னு முக்கி எடுத்து சில (Money) கரைந்தபின் தகவலை மறுபடி மருத்துவரிடம் காட்டினால்.... உங்களுக்கு ரத்த அழுத்தம் இல்ல (இனிமேதான் வரும்), சக்கரை இல்ல (அதுதான் எனக்கேத் தெரியுமே....!)" "ஆமா சார்ன்னு...." சொன்னா "அப்போ ஏன் என்ன பாக்க வந்தீங்கன்னு....?" கேட்டாரு ஒரு கேள்வி, ராஜ முழி முழித்த திருடனாக நான் விழிக்க, "இல்ல சார், அல்சரிக் போல இருக்குன்னு...." சொன்னா. நீங்க பாக்க வேண்டியது வாயு நிபுனரன்னு என்ன மறுபடி சேச்சியிடம் அனுப்பினார்.

சேச்சி காஸ்ட்ரோக்கு CASE-SHEET கொடுத்து அனுப்பியது.
அவரும் வாயுவ வாய்வழியா கேட்டே.... அத சாப்பிடாதீங்க இதச் சாப்பிடாதீங்கன்னு.... அட்ரீனல சுரக்க வச்சாரு. சாமு, சாபிக்கு பின்னுன்னு சில மாத்திரைகளக் கொடுத்து, சாப்பாட குறைக்கச் சொன்னாரு.

பாத்துன்னு சொன்னாலே பத்து நாளைக்கு பட்டினி போடுவா பத்தினி, இதுல வாயுன்னு சொல்லி வயித்தையே வத்தலாப் போடுறா.

டிஸ்கி : நாடி பிடிப்பதும் பாடி தொடுதலும் ஐய்யனோட போனதோ...?
இல்லை 'ஐ'பாடாய் போனதோ...? (ஆப்பிள் நிறுவனம் 'ஐ'பாடில் ஸ்டெத்ஸ் கொண்டுவந்துள்ளது),என்று பெரிய ஐய்யப்பாடு எழுகிறது
;

குப்ப மேட்டரு....

இன்று பிறந்தநாள் காணும் இசையின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாக்கு வாழ்த்துக்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படப் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பையா, நா.ம.அ, வரிசையில் இதுவும் நிற்கும். மறுபடியும் யுவன் தன முத்திரையைப் பதித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்போதே பச்சக் என்று மனதில் பதிகிறது.
--------------XXX------------------XXX------------------
தமிழ் நாட்டில் உள்ள கடைத்தெரு பெயர்பலகை நிறைய தமிழ் படுத்தி விட்டார்கள் ஆமா சிகப்பு பூதம் அதாம்பா (ரெட் ஜெயன்ட்), ஒன்பது மேகங்கள் (க்ளவுட் நயன்), சூர்ய தொலைகாட்சி சன் டிவி.... இதெல்லாம் தமிழ் பெயர்களா என்று கேட்டீர்களென்றால் நீங்கள் தமிழ் துரோகி என்று சபிக்கக் கடவது....
--------------XXX------------------XXX------------------
மற்றுமொருமுறை சூதாட்டப் புகார், ஒவ்வொருமுறை இப்பிரச்சனை எழும்போது மற்றைய தோல்விகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பணிந்து போதல் பணத்துக்கு மட்டுமே இருக்காது... வேறுபல மிரட்டல் வடிவங்களோ..., அதீத தேவை பூர்திகளோ இருக்கும் என்று நினைக்கிறேன். சோரம் போனவர்கள் ஓரங்கட்டப் படுவார்கள் என்கிறது சர்வதேச கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்.
ஆனால் பிடிபட்ட தரகன் ஒரே நாளில் விடிவிக்கப் பட்டதில் விசாரணையின் வீரியம் வலுவிழந்துவிட்டது.
--------------XXX------------------XXX------------------
வம்சம் மற்றும் நான் மகான் அல்ல பார்த்தேன். இரண்டுமே பிடித்திருந்தது. நா.ம.அ அந்த மாணவர்கள் எபிசோடு சற்றும் பயம்கொல்லவே செய்தது. இசையும் ஒளிபதிவும் கை கோர்க்க சரியான கலவையில் நகைச்சுவையோடு, ஒரு நல்ல படத்துக்கான எல்லா அம்சங்களோடு இருந்தது. வம்சம் வளரும் என்றே தோன்றுகிறது.
--------------XXX------------------XXX------------------
சமீபத்திய பெருந்தலைகள் வரும் விளம்பரங்களில் விஜய் வரும் ஜோஸ் விளம்பரம் நன்றாகவே இருக்கிறது. முப்பது நொடிகளில் ஒரு கதை சொல்லும் சாத்தியம் விளம்பரத்தில் மட்டுமே ஆகக்கூடிய காரியம். இது அந்த நிறுவனத்தின் புகழ் பாடுவதை விட விஜயின் புகழ்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது. விளம்பரத்தில் கதை தெரிவுசெய்யும் சூத்திரம் தெரிந்தவர், பெரிய திரையில் சறுக்குவது சற்று நெருடலே... இனியாவது நல்ல கதைகளை தெரிவு செய்து வெற்றி பெறட்டும்.
--------------XXX------------------XXX------------------
தேர்தல் ஜுரம் வேகமாக பரவி வருகிறது, இனி சாதனைகளை சொல்லி வேதனைகளை தொடரச் செய்யவும், கூழ் ஊத்துதல் முதல் குழு விவாதம் வரை, ஒளிப் பெருக்கி ஒடிந்தாலும் ஓயாது பிரச்சார அலை. ;

உலகமயமாக்களில் 'ஈ......ஈ' ஓட்டுற வேலை....

நண்பன் ஒருவன் படிக்கும்போது பெண்களைக் கவரவேண்டி நிறைய விஷயங்கள் தொட்டு வைத்தான், படிப்பைத் தவிர. நாலு ஐந்து பெண்கள் எப்பொழுதும் அவன் ஏட்டில் இருக்கும். படிப்பு வரவே இல்லை. ஒருதலையாய் காதலிக்காமல் தறுதலையாய் போன மிச்ச சொச்ச பேரில் இவனும் ஒருவன்.

"எப்படிடா மச்சின்னு...." கேட்டால்....
" மச்சி சில பொண்ணுகளுக்கு பாலிடால் காட்டி மடக்குவேன், பல பொண்ணுகளுக்கு நான் ஜாலி டால்(Doll), அவளுக்கு புக்ஸ் புடிச்சா..., ரெண்டு ஆத்தர் பேர சொல்லி கவுத்துடுவேன், இவளுக்கு ஊர் சுற்றப் பிடிக்கும்னா... பைக்ள வச்சி சுத்துவேன்னு" சொல்லுவான். அவன் இலகெல்லாம் எட்டாவதிலிருந்து பத்தாவது படிக்கும் பிள்ளைகள். "அதுக்கப்புறம் அவளுகளுக்கு அறிவு வந்துடும் 'மச்சி'..." என்பான். இன்றுவரை யாரிடமும் எல்லை மீறினது கிடையாது. "என்னவோ தெரியல 'மச்சி' பயமா இருக்கு...." "அப்புறம் ஏண்டா சுத்துறன்னு..?" கேட்டால் "ச்...ச்..சும்மா" என்று கண் சிமிட்டுவான்.

விடலை வயதை தாண்டி வேலை தேடி அலைந்து ஏதேதோ வேலை செய்து சிறிது காலம் வெளிநாட்டிலும் இருந்தான். வீட்டில் பார்த்த பெண்ணை மணம் முடித்து இரண்டு குழந்தைகள். ரொம்ப நாளைக்கு பின் நேற்று அவனை சந்தித்தேன், "என்ன 'மச்சி' எப்படி இருக்கே...?" "ரொம்போ நல்லா இருக்கேண்டா..." பின் சம்பிரதாய பேச்சுக்களின் ஊடே "இப்போ எங்கேடா வேலை செய்யிறன்னு...? கேட்டேன் மிக உற்சாகமாக சென்னையில் உள்ள வடநாட்டு காதல் ராணியின் பெயரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொன்னான்.

"பரவாயில்லைடா, ரொம்ப நல்ல இடத்துலதான் இருக்கே, என்ன வேலைன்னு...?" கேட்டேன் "மச்சி, கொசு ஓட்டுறது"ன்னு சொன்னான் "என்னடா.... மருந்தடிக்குற வேலையான்னு...? கேட்டால் "இல்லை, கொசு ஓட்டுறது, கையில கொசு ஓட்டுற பேட்ட கொடுத்து கொசு ஓட்டனும்னு சொன்னாங்க, சொம்ப ஜாலியா இருக்குடா மச்சான்" என்றான்.

எனக்கு பகீரென்றது "என்னடா சொல்லுற...?" "ஆமா மச்சி, இதுக்கு முன்னாடி கொசு மருந்து அடிக்கிற வேலை, இப்போ ப்ராஜெக்ட் மாறி, இந்த வேலை, மருந்தடிக்குரதுக்கு இந்த வேலை பரவாயில்லைன்னு? சொன்னான். "எப்படிடா நாலாயிரத்துக்கு ஆள் கிடைக்குதுன்னு என்ன வேலைன்னாலும் செய்யச் சொல்லுவாங்களா.... அதுக்குன்னு எவ்வளவோ மெஷின் இருக்குல்ல...., அத வைக்க வேண்டியதுதானே...? ஏண்டா ஒரு ஆள வச்சி கொசு ஓட்ட வைக்கணும்..?" "மச்சி ஹோட்டலுக்கு இது பெருமைதானே, நாங்க பாத்தீங்களா ஆள வச்சி கொசு ஒட்டுரோம்னு சொல்லிக்கலாமில்ல...". "இருந்தாலும் ஈனக்கு இது ரொம்ப கேவலமான செயல்ன்னு தோணுது".

"மச்சி இதுக்கே ஷாக்காயிட்டா எப்படி, இதில் டாற்கெட்லாம் உண்டு, சூப்பு வந்து பாக்கும்போது... ஒரு கொசு கூட இருக்கக் கூடாது, இருந்தால் ஆப்புதான்னு..." ரொம்ப சாதாரணமாகச் சொன்னான். "மச்சி அதுமட்டுமில்ல, நான் கொசு ஓட்டும்போது சத்தம் வரும், அப்ப பிகருங்கல்லாம் திரும்பி பார்க்குமடா...? "அட மடையா, ஊரே திரும்பி பார்க்கும்..." "அதெல்லாம் பார்த்தல் முடியுமா மச்சி, குடும்பம் ஓடனுமில்ல, வீட்லயும் வேலைக்கு போகுது, அப்படி இப்படி பண்ணிதானே கொடும்பத்த ஓட்ட வேடியிருக்குது".

"மச்சி பொண்ணு பின்னாடி போகணும்னா, வெட்டி ஆபீசரா இருக்கணும், பொண்ணு உன் பின்னாடி வரணும்னா வெட்டியான் வேலைன்னாலும் செய்யோணும்....!" ;

குப்ப மேட்டரு....

64ம் ஆண்டு சுதந்திரதினம் பித்தனின் வாழ்த்துக்கள்.

இந்த நல்ல நாளில் நான் இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. என் குடும்பத்தில் உள்ள மொத்தம் பதினைந்து பெரும் கண்தானம் செய்திருக்கிறோம். நீண்ட மோதலுக்குப் பிறகு என் உறுப்புகள் மற்றும் உடல் தானத்துக்கும் வீட்டாரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறேன். இதைத்தவிர நான் சொல்லிக் கொள்ளும்படி இந்த நாட்டுக்கு ஒன்னும் செய்யவில்ல என்பதில் வெட்கித் தலை குனிகிறேன்.

தாய் மண்ணே வணக்கம்.....!
--------------XXX------------------XXX------------------
மருத்துவர் ராமதாஸ் 2011ல் ப.ம.க ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இல்லை என்று சொல்லியிருக்கிறார், (இல்லன்னா என்ன 3011, 4011ன்னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்), மேலும் தாங்கள் தே.மு.தி.க உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருக்கிறார். மாமா மயக்கும் பேச்சாலும், அம்மா அதிரடி செய்கையாலும் கைவிடப்பட்ட நிலையில் கலங்காமல் நிற்கிறார் தமிழ் குடி தாங்கி.
--------------XXX------------------XXX------------------
சீனிவாசன் என்பவர் சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளை அடித்து நான்கு தத்துப் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை போலீசில் பிடிப்படும்போதும் தண்டனையை முழுமையாக அனுபவித்து வருவது வாடிக்கை என்று கூறியிருக்கிறார். தான் கஷ்டப் பட்ட நேரத்தில் தன்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் உதவவில்லை என்பதனால் ஒரு வைராக்கியத்தில் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் கண்முன்னே நடந்திருக்கிறது.

கல்வி வியாபாரமானதிலும், சுயநலம் மலிந்துபோன சமுதாய சூழ்நிலையாலும் இது மேலும் தொடரும் என்பது என் அனுமானம். நான் டிப்ளோமோ முடித்து பயிர்ச்சியாளனாக இருந்த போது, என் நண்பன் அவனுக்குத் தெரிந்த பெண்ணின் தந்தை இல்லா நிலையில் தாய் வீடுகளில் வேலை செய்து அப்பெண்ணை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத நிலை என்றான். நான் அப்பெண்ணுக்கு உதவுவதாகக் கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு தோல் தொழில்நுட்ப பிரிவில் பட்டய பாடம் கிடைக்க பணம் முதற்கொண்டு அலைவதுவரை ஆவன செய்தோம். இன்று பதினைந்து வருட இடைவெளியில் அப்பெண் தனக்குத் தெரிந்த சில பேருக்கு இதுபோல் வுதவுவதாக அறிந்து மிகவும் சந்தோஷித்தோம். இப்பொழுதும் விழுதுகள் என்ற பெயரில் சிறு சிறு உதவிகள் செய்துவருகிறோம். இதுபோல் அவரவர்கள் தத்தமது சுற்றத்தை மேம்படுத்துவார்கள் எனில் இந்த சமுதாயம் கண்டிப்பாக உயரும். எல்லாமும் அரசாலேயே அமைத்துத் தரவேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
--------------XXX------------------XXX------------------
ஏழு வயதில் நான் ரமலான் நோன்பிருந்தேன் என்ற காரணத்தில் என் மகனையும் முதல் நோன்பு வைக்க விருப்பம் கொண்டேன். காலையில் நான்கு மணிக்கு ஒரு தம்ளர் ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து மாலை ஆறு முப்பது வரை வாயில் பச்சை தண்ணி கூட குடிக்காமல் வாந்தியுடன் எனக்கு ஷாந்தி தந்தான். நான் நோன்பிருந்த காலத்தில் இவ்வாறெல்லாம் வருந்திநேனா தெரியாது ஆனால் அவன் வாடியதில் நான் வருந்தினேன்.
--------------XXX------------------XXX------------------
நடிகர் நடிகைகள் துணிக்கடை, சோப்பு, சீப்பு, பேர்னஸ் க்ரீம் போன்ற விளம்பரங்களுக்கு வருவது பரவாயில்லை அது அவர்கள் தொழிலுக்கு தேவையானது. தன்னைப் போல் பளபளக்க, மினுமினுக்க என்று கூவி கூவி விற்கலாம். ஆனால் அடகுக்கடை விளம்பரத்தில் வருவது கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாதது. எந்தவகையிலும் பொருந்திப் போகாத ஒரு விளம்பரத்தில் நடிகரைப் போட்டால் லாபம் கொழிக்கும் என்று எப்படி நினைத்தார்களோ...!. நடிகரும் சரி நிறுவனமும் சரி பெக்குல மக்கு மகேஷ உருவாக்கினார்களோ....!. ஒருவேளை படம் போக கசில்லை எனில்... நகையை அடகு வைத்தாவது படத்தைப் பார் என்று சொல்கிறார்களோ.....!

காத்து உள்ள போதே கள்ள கட்ட நினைக்கிறார்கள்..... ;

விசாரணை - தொடர்

விசாரணைன்னு சொன்ன உடனே ஏதோ கொலை கேசுன்னு நினைச்சிடாதீங்க இது நம்ம கலைஞர் டிவியில ஒளிபரப்பாகிற விசாரணைத் தொடர். பொதுவாகவே மெகா சீரியல் என்றாலே ஜகா வாங்கும் நான், ராஜேஷ்குமார் கதை வசனத்தில் வாரம் ஒரு கதை சொல்லும் இத்தொடரை விரும்பிப் பார்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு குறுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது இந்த தொடர்.

ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார். தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் அதேநேரம் காட்சிப் பிழை இல்லாமல் ரொம்ப லாவகமாக ஒவ்வொரு வாரமும் நகர்த்துகிறார்கள்.

பல தொழில்நுட்ப விஷயங்களையும் ஆங்காங்கே தூவி தன முத்திரையைப் பதிக்கிறார் ராஜேஷ்குமார். சில நேரங்களில் அரசு சார்ந்த ஒத்தூதல்கள் இருந்தாலும் தன் தந்திர கதை சொல்லுதலால் நம்மை தொடரோடு ஒன்றிட வைக்கிறார். அழுகாச்சி மெகா தொல்லைகளின் எல்லைக்குள் ஆட்படாமல் ஒரு நல்ல நிகழ்ச்சி இது. ஆனால் சரியான விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்பது இடைவேளையில் தெரிகிறது.

ராஜேஷ்குமார் கதைகளில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம்.

இது போன்று நாவல்களை தொடராக்கும் போது உள்ள பெரிய பிரச்சனையே கதையின் நாயகர்கள்தான். ஒவ்வொருவருக்கும் விவேக்கை மனதுக்குள் பலவாறு கற்பனை செய்து இருப்போம். அது ஒத்துபோகாட்டி கதை எப்படி இருந்தாலும் சலிப்பு தட்டிவிடும்.

ஆனால் முன்பு விவேக்காக வந்த சாக்ஷி சிவாவும் ,சரி இப்பொழுது வருபவரும்(பெயர் தெரியவில்லை) சரி, தங்கள் பாத்திரத்தை சரியாகவே செய்கிறார்கள். அதிலும் விவேக்கின் உதவியாளராக வரும் ஷ்யாம் கணேஷ் நேர்த்தியான நடிப்பு.

எல்லா காலங்களிலும் துப்பறியும் கதைஎன்பது மக்களின் ஈர்ப்புக்குரியது அந்த வகையில் விசாரணை பல இல்லங்களில் தினமும் நடைபெறுகிறது.

;

குப்ப மேட்டரு...

இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலம் பிர்புர் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒவ்வொரு விபத்திலும் உயிர் பலி நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதும், மெல்ல மெல்ல அன்றாடம் நம்மை அதைக் கடந்துபோகச் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. பலியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
--------------XXX------------------XXX------------------
சினிமா டுடே என்ற கண்காட்சி. இம்மாதம் 23, 24, 25 தேதிகளில் சென்னை டிரெட் சென்ட்டரில் நடத்தப்படவுள்ளது. 80 வயதை தாண்டியும் கலையுலகத்திற்காக தொடர்ந்து எழுதி வரும் முதல்வர் கலைஞரை கவுரவிக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் நீள கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்களாம் இந்த கண்காட்சியில். இது கின்னசில் இடம் பிடிக்கும் என்கிறார்கள். (ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ச்சியான காகிதத்தையும் இதற்காக உருவாக்கி வருகிறார்களாம்)
--------------XXX------------------XXX------------------
மதராசப்பட்டினம் பழைய சென்னையை கண்முன்னே காட்டியது. நம் சுயநலத்துக்காக அழிக்கப்படும் வளங்களின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. குறைந்த பட்சம் ஒரு துளி வருத்தம், லஜ்ஜை ஏதுமில்லாத சுயநலமிகளாக இருக்கிறோம். இந்த உணர்வு நம்மில் எழுவதுதான் படத்தின் வெற்றி. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றிகலந்த சபாஷ்.
--------------XXX------------------XXX------------------
பத்து நாளாக 'சன்' டைரக்ட் சரியாக வரவில்லை(இன்றுவரை), அமைதியாக வீட்டில் வேலை செய்ய முடிகிறது. இல்லையென்றால் எப்பொழுதும் டீக்கடைபோல் ஏதாவது ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். முதல் ஒன்றிரண்டு நாட்கள் தனித்து தீகார் ஜெயிலில் விட்டதுபோல் ஆனது, சற்று தாமதமாக சுதாரித்துக் கொண்டு பரணில் இருந்த புத்தகங்களை எடுத்து படிக்க, 'அர்த்தராத்திரி விழிப்பு வந்து, துணிவிலகிய மனைவியைப் பார்த்ததுபோல்....' பரவசம் மேலிட மூன்று புத்தகங்கள் படித்து முடித்து விட்டேன். படிப்பதில் உள்ள சுகம் அலாதியானது, நம்முடைய கற்பனைத்திறனை விரிவடையச் செய்கிறது. வாசிப்பென்பது ஆசிரியர் கைப்பிடித்து அவர் உணர்ந்ததை, பார்த்ததை நமக்கு அப்படியே தருவது,
இந்த கற்பனை தளமென்பது வாசகனின் தேவை, புரிதலுக்கேற்ப விரிவடைகிறது. சில விஷயங்கள் பார்க்க ஆழகாக இருக்கும், சில வாசிப்பில் விரிவடையும்.
--------------XXX------------------XXX------------------
அஜீத் வெங்கட்பிரபு இணைவது உறுதியான நிலையில்...., இப்போது தலைப்பில் ஒரு சிறு சிக்கல் வந்துள்ளது. இவர்கள் தேர்வு செய்த தலைப்பு 'மங்காத்தா' இது ஜெமினி நிறுவனத்தை சேர்ந்த மனோ அக்கினேனி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இந்த தலைப்புக்கு ஏற்ற கதையன்றை இயக்கும் முடிவிலிருக்கும் அவர், எக்காரணத்தை முன்னிட்டும் மங்காத்தா தலைப்பை தாரை வார்ப்பதாக இல்லையாம். ஆனால் இந்த தலைப்புக்காக அஜீத்தே அக்கினேனியிடம் போனில் பேசினாராம் முடிவு ஒன்னும் தெரியவில்லை தல தலைப்பில் என்ன இருக்கு அது வெறும் தோலு, உள்ளடக்கம்தான் (கதை) முக்கியம் அதில் கவனம் செலுத்து.
--------------XXX------------------XXX------------------
நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தபோது ப்ளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னேன். நிறைய எழுத்தாளர்களும் இதில் இருக்கிறார்கள் பலதரப்பட்ட நடை, சொற்ப்ரியோகம், கருத்துப் பரிமாற்றம் எல்லாம் நிகழ்கிறது என்று சொன்னேன். "அப்படின்னா எனக்கு ஐந்து லட்ச ரூபாயில் ஒரு நல்ல பிசினஸ் பரிந்துக்கச் சொல்லுங்களேன்" என்று சொன்னார். "என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க....!" என்றேன் அதிர்ச்சி விலகாமல். "ஆமாசார், எவ்வளோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் யாராவது நல்ல ஐடியா தருவார்கள்" என்றார். யாருகிட்டயாவது இருக்கா....? (எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழுக்கிறேன்)
;

தமிழ் வழி பொறியியல்..... சரியா.....?

தமிழ் வழி பொறியியல் படிப்புக்கு நிறைய மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்கிறேன். - முதல்வர். தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேச்சுப் பயிற்ச்சியும் முக்கியம் என்பதால், ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.

இந்த பதிவுக்குள் போகும் முன்..... இது நான் பட்ட பாடு மற்றவர்கள் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உதித்தது. இதில் நிறையப்பேர் என் கருத்துடன் வேறுபடலாம், ஆனால் எதார்த்தம் என்று வரும்போது சதவீதம், கருத்துக் கணிப்பு போன்ற எதுவும் நிற்காது. உண்மை ஒரு அரக்கனாய் நம்மை கவ்வி கடைந்தெடுக்கும். இதைச் சொல்வதனால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று யாரும் நினைத்து விடக் கூடாது (ஆட்டோ வருமென்ற பயந்தே).

தமிழ் வழிக் கல்வி என்பது தரம் தாழ்ந்ததென்றோ, அது படித்தால் வேலைக் கிடைக்காது என்றோ, நான் சொல்ல வரவில்லை. என் பயமெல்லாம் யதார்த்த உலகோடு ஒன்றுதலில் உள்ள நடைமுறைச் சிக்கலைப் பற்றியதே!. தனியாக ஆங்கிலத்தையோ வேறு மொழியையோ கற்கலாம்தான்..... ஆனால் அது படிப்புடனே என்றால் கற்பது எளிது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்சார்ந்த படிப்பென்பது நடுத்தர வர்கத்தின் குரல்வளை நெருக்கும் முள் அணிகலனே. கையிருப்பு, காது, கழுத்து, காட்டை வித்து, கடனை வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைப்பதென்பது ஒரு முதலீடாகவே கொள்ளப் படுகிறது. படித்து முடித்ததும் வேலை வேண்டி நிற்கும்போது, மற்றைய மொழிகள் தெரிந்திருந்தால் அது ஒரு கூடுதல் தகுதி, மற்றவரிலிருந்து நம்மை தனித்தும் காட்டும்.

உலகமயமாக்கலின் உடுக்கைக்கேற்ப பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வேரூன்றின, வேலைவாய்ப்புகள் கேட்கும் தகுதிகளில் முக்கியமான ஒன்று ஆங்கில அறிவு. படித்தது பொறியியல் எனில், நடைமுறையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் வேற்று மொழியிலிருந்து வந்தவையாகவே இருக்கும், அதன் சரியான உச்சரிப்பும் ஆங்கில எழுத்துக் கோர்வையும் தெரிந்திருப்பது அவசியம்.

தன்னை வேறு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள இன்று 99சதவீத நிறுவனங்கள் ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்துகின்றன. அலுவலக அளவில் எல்லா சம்பாஷனைகளும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. மேலும் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறியாளராக ஒருவர் நிலைநிற்க வேண்டுமாயின் ஆங்கில அறிவு இன்றியமையாதது.

தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது. தமிழ் வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசு சொல்லியிருக்கிறது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

அப்படியே தமிழ் வழி படிக்க நேர்ந்தாலும் எப்பாடுபட்டாகிலும் ஆங்கிலத்தை (எத்தனை மொழிகள் கற்க முடியுமோ) கற்றே ஆகவேண்டிய வியாபார உலகத்தில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் குறைந்தது மூன்று மொழிகள் (ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம்) பள்ளிப் பாடத்தில் உள்ளன. அதனால்தான் மலையாளிகள் உலகெங்கிலும் விரவியுள்ளனர். பெங்களூர், ஆந்திராவிலும் இதே நிலைதான், பல்மொழி பேசுவது இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் (சுய தம்பட்டம் இல்லை) படித்தது தமிழ் வழியே, ஆனால் வேலை வாங்கும்முன் தாவு தீர்ந்துவிட்டது.

எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து, இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன், இந்த அரசாங்கம் இதை செய்யாமல், வெறுமனே பேருக்காகவும், புகழுக்காகவும் செய்வார்கலெனில், இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும். சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க, தமிழ்வழி ஆரம்பக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ஆங்கிலத்தை முறையாகப் பயிற்றுவித்து அவர்கள் திறன் மேம்பட அரசு ஆவன செய்ய வேண்டும். ;

குப்ப மேட்டரு...

கோபாலபுரத்தில் இருந்து எல்லாரும் கோடம்பாக்கத்துக்கு வந்தாச்சு சமீபத்திய வரவு கனிமொழி. இனி அங்கிருக்கும் நண்டு சுண்டுகள்தான் வரவேண்டியது பாக்கி இன்னும் கொஞ்ச நாளில் அவர்களும் வந்துடுவாங்க. கலைத்துறையையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியே அதில் முக்கள் கிணறும் தாண்டி விட்டார்கள். என்ன இனி தங்கள் குடும்பம் எடுக்கும் படம் மட்டுமே நன்றாக இருப்பதாக பீற்றிக் கொள்வார்கள்.
--------------XXX------------------XXX------------------
கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பது நம்ம நாயனின் பாலிசியாக இருந்தது நேற்றுவரை. பருப்பு வச்ச போலி பர்சு எல்லாம் காலி, அதனால் தன்னிடம் உள்ள பி எம் டபிள்யு காரை கூட விக்கலாமா என யோசிக்குது பட்சி. அதனால் தன்னை முன்பு தொடர்புகொண்ட விளம்பர நிறுவனத்திடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் நம்ம நயன் டிவியில் தோன்றி குண்டுமல்லி குன்டூசின்னு கூவி கூவி விற்பதை ரசிக்கலாம்.
--------------XXX------------------XXX------------------
தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வெகு ஜோராக ஒரு தேர்ந்த சட்டசபை, நாடாளுமன்ற சாயலில் நடைபெறுகிறது. வெள்ளம் இருக்கும் இடத்தில் மெல்ல வரும்மம் ஈ என்பதைப் போல ஆட்கடத்தல் ஆளும்கட்சி ஆதரவு என்று தகிடுதத்தங்களும் அரங்கேறுகின்றன. அதுசரி ஆதாயம் இருப்பதால்தானே ஆட்டமும், ஆதரவும். செத்த கிளிக்கு எவன் சொத்த எழுதி வைப்பான்.
--------------XXX------------------XXX------------------
அம்பாசமுத்திரம் அம்பானி தன்னை உணர்ந்து தேர்ந்தெடுத்த கதை கருணாசுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஒரு சாயலில் பாலக் காட்டு மாதவனை நினைவு படுத்தியிருந்தாலும் விக்ரமன் படங்களைப் போல் ஒரே பாட்டில் நாயகன் உயரப் பறக்கவில்லை.
--------------XXX------------------XXX------------------
கொடநாட்டில் இருந்து கொண்டாட்டத்தோடு வந்திறங்கிய அம்மா இங்கும் ஊஞ்ச வாழப்பழம் தின்னுட்டு ஓய்வுதான் எடுக்கிறார் போல பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அடத்திய பந்தில் சூடு அவ்வளவாக இல்லை. ஒருவேளை சிங்கிடம் வரும் தேர்தலில் பங்கு எதிர்பார்கிராரோ என்னவோ.
;

புலி வாலைப் பிடித்து.....

படித்து முடித்து வேலை தேடி ஆலாய் பறந்து, இன்று ஆலைக் கரும்பாய் சக்கையாவது வரை........

நடுத்தர மற்றும் அதற்க்கு கீழே உள்ள வர்க வாழிகளின் தலையாய முதலீடே படிப்புதான் 'தான்' வண்டி தள்ளியாவது தன பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது இன்று எல்லா சாமானிய பெற்றோரின் கனவாக இருக்கிறது. முதலீடு எனும்போதே அதில் லாப நோக்கும் இருக்கும்தானே. கை பிள்ளையாய் இருக்கும்போதே "கண்ணு நீ பெரியவனானா என்னவாவே....?" டாக்டர், இன்ஜீனியர் என்பன போன்ற பதிலே எதிர்காலக் கனவின் உரம்தானே.

இந்தக் கனவென்பது பெற்றோர்களின் மனக்கண்ணிலிருந்து பிள்ளைகளின் அகக் கண்ணுக்கு வீசிஎறியப்படுகிறது. பிள்ளைளும் புத்தகச் சுமையினூடே இக்கனவையும் சுமக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வேலை தேடும் காண்டம் ஆரம்பிக்கிறது....
எலி வாலைப் பிடிக்கும்போதே.... ஏரோப்ளேன் ஆசை ரெக்கை கெட்டுகிறது. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு தாவி, தவ்வி, தவழ்ந்து எப்பாடு பட்டாகிலும் தன்நிலை உயர தவம் கிடக்கிறோம்.

இதில் பிடித்தது, பிடிக்காதது நம் கொள்கைக்கு ஏற்றதா..? எனப் பாகுபாடு இல்லாமல் கடனே என்று கடமையைச் செய்கிறோம். கூழ கும்பிடு, ஊளைச் சதை கணக்கில்லாமல் வரவில் இருக்கு. கண்ணியம், கவுரவம் கண்ணிமைக்கும் நேரத்தில் தொலைந்து போகுது. உண்டு களித்திடவும், உடுத்து கிழித்திடவும், உறங்கி விழித்திடவும் நேரமில்லை.

இந்த ஓட்டத்தில் பசிக்கும் ருசிக்கும் இடையில்.... பிஸியில்(Busy) உணவு. மனைவி இருக்கவேண்டிய இடத்தில் இன்று 'மடி'கணினி. எல்லா உரையாடல்களும் 'செல்'லால் நிகழ்கிறது.
நேரம், தூரம் தெரியாது ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் இடையிடையே அடுத்தவர் மீதும் கவனச் சிதறல்கள். எலி எனப் பிடித்தது, இன்று புலி வாலாய் உருமாறி தன் போக்குக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.

எலியாய் இருக்கும்போது அது நம் காலைச் சுற்றியே வருகிறது. நம் தேவைகளும், ஆசையும் விரிவடையும்போது அதற்கேற்ப எலியும் பரிணமித்து கூடுவிட்டு கூடுதாவி, நம்மை யறியாமலே புலியென மாறி ஆட்கொள்கிறது. வேலை ஒரு சமுதாய குறியீடு, நான் இந்த நிறுவனத்தில், இன்ன வேலை செய்கிறேன் என்பதை வைத்துதான் சமூகம் என்னை அளக்கிறது. அத்யாவசிய தேவைக்காக வேலை செய்தது போய்.... இன்று அத்யாவசியமே அனாவசியமாக போய்விட்டது.

விரும்பி ஏற்றதுதான் இன்று நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது.

வாழ்க்கைக்கு தொழில் என்பதொழிந்து, இன்று தொழிலே எல்லோருக்கும் வாழ்க்கையாய்..... ;

பொருள் பாலித்து அருள் தேடும் நித்தியானந்தா.....

மறுபடியும் லைம் லைட்டில் வந்திருக்கிறான் நித்யானந்தா. இந்த முறை அவன் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதம் மற்றும் இனம்.

தான் ஒரு தமிழன் என்றும் அதனால்தான் தன்னை கர்நாடகா அரசு முடக்க நினைக்கிறது அதுமட்டுமில்லாமல் தான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதால் தன் மீது வீண் பழி சுமத்தப் படுகிறது என்றும் சொல்லி தன் மீது ஒரு இரக்கத்தை உருவாக்க நினைக்கிறான். தன் அரசியல் வட்ட, பண பலத்திலும் தனக்கு சாதகமாக போராட்டம், மறியல் என்று செய்யவைத்து தன் தவறுகளை மறைக்க முயற்சி செய்கிறான்.

தன் பெண் பித்துத்தனத்தை யோகி என்ற பெயரால் மறைத்து, இந்தனை நாள் கபட வேஷமிட்டு மக்களை ஏமாற்றியது போதாதென்று, இப்பொழுது மதக் கலவரத்தையும் ஜாதி வெறியையும் தூண்டி விடுகிறான். கடவுளாகவே தன்னை நினைத்துக் கொண்டு இந்த நவீன சாமியார்களின் ஆட்டம் ரொம்பத்தான் அதிகமாகப் போகிறது. இதற்கிடையில் மீண்டும் இவன் ரஞ்சிதாவை சந்தித்து தன்னை காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார் (கொஞ்சியபோதே குழந்தவர்).

அவன் என்ன கருமத்தையாவது செய்து தொலைக்கட்டும், எதற்கு மக்கள் மீது ஜாதி மதக் கலவரத்தை ஏவி விடுகிறான். ஏண்டா நீ என்ன ஜாதியா இருந்தா என்ன எந்த இனமா இருந்தா என்ன? வேசித்தனத்த வெறுங்கையில மூடப் பாக்குறியே. தன்னையே இருளிலும் இழிவிலும் தள்ளியது போதாதென்று தன் ஜாதி, மத மற்றும் இன மக்களையும் கூட்டு சேர்த்துக் கொல்ல பார்க்கிறான்.

இந்த ஒரு விஷயத்தை வைத்தே (ஜாதி மதக் கலவரத்தை தூண்டியதாக) இவன் மீது கேஸ் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளான். முழு மூச்சாக ஆசிரமகாரியங்களில் ஈடுபடுகிறான் இந்த காமுகன் மறுபடி ஏதும் பூதம் கிளம்பாமல் இருக்க வேண்டும்.

தன்னை இந்த வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அருள் பாலித்தது போதாதென்று, இப்பொழுது பொருள் பாலித்து விடுதலை தேடி அலைகிறான். ;

குப்ப மேட்டரு...செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த தலைவர் குடும்பம், கட்சி தொண்டரடிப் பொடியர்கள் என்று கோவையே அதகளப் பட்டது. எல்லா கவிஞ்சர்களும் தலைவர் புகழ் பாடும் ஒரு மேடையாகவே இதை உருமாற்றினர். பலவித கருத்துகள் விமர்சனங்களையும் புறம் தள்ளிய இதன் வெற்றி கவனிக்கத் தக்கது. இது ஒரு தனி மனிதனின் கனவு. உலகமே இன்று தமிழையும் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஒரு மாநாடு.


One Man Show
--------------XXX------------------XXX------------------
நம்ம அணு ஹாசனுக்கு மறுமணம் நடக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது, விகாஸ் ராணுவத்தில் பணி புரிந்தார். அந்த மன முறிவுக்குப் பின் மீண்டும் இவருக்கு காதல் அரும்பியிருக்கிறது இந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.


Happy and long Married life
--------------XXX------------------XXX------------------
சமீபத்தில் வலையுலகில் நடந்தது ஓய்ந்த பிரச்சனையின் வீரியம் குறைந்து போன நிலையில், மறுபடியும் காரணகர்த்தாவை ஏழுத அழைக்குது நட்பு வட்டம். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா....? வருவது தவறில்லை மீண்டும் தவறிகூட இந்த தவறைச் செய்யக்கூடாது.


Dont go to pavilion
--------------XXX------------------XXX------------------
சூப்பர் சிங்கர் போன்றே சன்டிவியும் சங்கீத மகா யுத்தம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாளடைவில் ஏனைய கலக்கப் போவது, கவுத்தி அடிப்பது போன்ற நிகழ்ச்சிகளை விழுங்கி ஏப்பம் விட்டது போல, இந்த சங்கீத மகா யுத்தம் சுப்பர் சிங்கரையும் விழுங்கி ஏப்பம் விடும் என்பதில் ஐய்யமில்லை.


Cut throat competition
--------------XXX------------------XXX------------------
கேப்டன் மிக மும்மரமாக அம்மாவுடன் சிட்டிங்கில் இருக்கிறார். தேர்தல் செலவு, குறைந்தது பதினைந்து சீட் என்று ஏகப்பட்ட கண்டிசன்கள். அப்போ இவ்வளவு நாள் தனித்து போட்டியிடிவேன்ன்னு சொன்னதெல்லாம் சும்மாவா...... கட்சியாவது கொள்கையாவது......


Money Makes many things possible
--------------XXX------------------XXX------------------
ராவணன் சரியாக நின்று போரிடாததால்.... சிங்கம் சீறிப் பாய்கிறது, இருந்தும் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் வைத்து தினுசு தினுசான விளம்பர யுக்திகளை கடைப் பிடித்து, அதன் வேகத்தை கூட்ட முயற்ச்சிக்கிறது தயாரிப்பு தரப்பு. விட்டால் தியேட்டரில் சமோசா போண்டா விற்பவரைக் கூட பேட்டி எடுத்துப் போடுவார்கள்.


Marketing Strategy

;

ஜால்ரா வாசிக்கும் சூர்யா...!

நம்ம சூர்யா பெங்களூரிலிருந்து வெளிவரும் மிர்ரர் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அதில் அவர் :-

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன். நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" நன்றி தமிழ் சினிமா.காம்


ஏண்டா போனது பூனைக்கு பாலூட்ட, ஆனா வழியில புலிக்கு புல்லு புடுங்கி போட்டுட்டு வந்தேன்னு அவன் சொன்னா அதை இவர் ரொம்ப மெனக்கெட்டு 'அவன் ரொம்ப நல்லவன்னு' சொல்லுறாரு.
'எவன் பொண்டாட்டி எவங் கூட போனாலும், போக்கத்தவனுக்கு பொரிகடலன்னு' சொல்லுராமாதிரி தன் படம் எப்படியாவது ஓடவேண்டும் என்று இவர் கரிசனம் காட்டுவது தெரிகிறது.

திரைப்படம் என்பது நிறைய பேரின் முயற்சி, உழைப்பு, ரத்தம் சதை இத்யாதி இதாதி..... ஆனால் தமிழ் சனத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்காமல் இருக்கும் நிலையில், பிடில் வாசித்தவர் நம்ம இலங்கை அதிபர். அதுக்கு ஓபராய் ஒத்து ஊதிட்டு வந்தாருன்னா, சூர்யா இப்போ பெரிய ஜால்ரா எடுத்து வாசிக்கிறார்.

புகழ் ஏணியில் இருப்பவர் இதுபோல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல. கண்டிப்பாக ரத்த சரித்திரா தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் செய்வார்களா.....? ;

சீமான் ஒரு முனை மழுங்கிய கத்தி

தமிழ் இனத்தின் போர்வாள் என்று சமீபகாலமாக உணர்வாளர்களால் கொண்டாடப்படுகிறார் சீமான். ஆனால் அந்த வாள் அவ்வப்போது மொக்கையாகிவிடுவதும் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது அவரது சமீபத்திய முடிவொன்று! தமிழினத்தின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போய் ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர்களின் படங்களை தமிழகத்தில் எங்கும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று முழங்கிய சீமான், தனது கொள்கையிலிருந்து வழுக்கி விழுந்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணத்தை அவரது தம்பிகளே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்!

சூர்யாவும், விவேக் ஓபராயும் நடித்த ரத்த சரித்திரம் படத்தைதான் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போனவர்தான் இந்த விவேக் ஓபராய். அதுமட்டுமல்ல, அங்கு போய் ராஜபக்சேவின் உத்தரவை ஏற்று அங்குள்ள 52 தமிழ் ஜோடிகளுக்கு தனது தலைமையில் திருமணமும் செய்து வைத்தவர்.
இந்த விவேக் ஓபராய் தன்னை ஒரு தமிழர் என்று கூறிக் கொள்பவர் தன தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லி வருகிறார். அவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் முன்னணி நடிகர்களே போக மாட்டேன் என்று சொல்லிய பின்னும் இவர் இலங்கை சென்று விழாவைச் சிறப்பித்து வந்திருக்கிறார்.


இப்பொழுது அவர் செய்ததே மேல், சீமான் தன்னை புலி என்றே பிரகடனப் படுத்தி வருபவர். ஏனைய திராவிடக் கட்சிகள் வாய்ப்பிருந்தும் வாய்திறக்காமல் ஊமையாய் இருக்கும் நிலையில், நாங்கள் தீவிர தமிழ் விடுதலைக்காக போராடுவோம்ன்னு முழங்கி, சமீபத்தில் தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தன் நிலையிலிருந்து தலைக் குப்புற விழுவார் என்று அவர் தம்பிகள் நினைத்திருக்க மாட்டார்கள்.


இது ஏன் என்றால் அடுத்து அவர் தம்பி சூர்யாவிடம் தன் படத்தில் நடிக்கக் கேட்டு காத்திருக்கிறார், இப்பொழுது இந்த படத்தில் சூர்யாவும் இருக்கிறார் அதனால் இந்த படத்தை வெளியிட தடை வேண்டாம் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தனக்கு ஒரு நாயம் மற்றவர்கள்ளுக்கு ஒரு நாயமா......?
என்னே ஒரு


தமிழ் வீரம் தன்னை திரு.பிரபாகரனின் உடன்பிறவா சகோதரர் என்று மேடைக்கு மேடை முழங்கும் சீமானை அண்ணனே இவரது இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார். இப்போ இவருக்கும் இந்த திராவிடக் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம். தனது முடிவை இவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். செய்வாரா.....?

கொள்கையா போடா புண்ணாக்கு.....!

;

நித்தியானந்தாக்கு உள்ள சக்தி.....

அல்லார்க்கும் வந்கம்பா

நம்ம நித்தி வெளியே வந்து என்னவோ யாகம் பாண்ணுராராமே தின்திக்கும் ஒரு தபா இந்த யாகம் பாண்ணுராராமே? இதில இன்னா குத்துதுன்னா ஆசரமத்தில கீற அல்லகையுங்கோ இது ராமாயணத்துல சீதாதேவி தன் மேல போட்ட பழிய ஃபரூப் பண்ணுறதுக் கோசரம் தீல குதிச்சாங்கோ இல்ல அது போலன்னு சொல்லுராங்கோ.

கேக்குறவன் கேணயனா இர்ந்தா கோலிகுண்டுல ஹாலிவுட்ட சுத்துநேன்னு சொல்லுவாங்கோ. இந்தாளு எத்த சொன்னாலும் அத நம்புறதுக்கு ஒரு முட்டாக் கூட்டம் இருக்கு.
ஏண்டா உங்க அட்ராசிட்டிக்கு அளவே கிடையாதா...? யார உயர்த்திப் பிடிக்க யார தாழ்த்துரீங்கோ? இந்தாளு பிரம்மச்சரியத்த
மயிண்டன்பண்ணாம, எவளோடவோ படுத்துட்டு வந்து நான் தூமையானவன்ன்னு சாரிங்கோ தூய்மையானவன்னு சொல்லுரான்னா.... இவன் எவ்வளோ பெரிய டுபாகூரா இர்பான்.
இவன் படுத்தது ஒன்யும் பத்தினி கூட இல்ல, ஆனா அந்த பன்னி இப்போ அமெரிக்க போயிடிச்சு, அவ அப்பன் அங்கே கீரானாமாம்.

இனிமே இந்தாளு நல்லவரு வல்லவருன்னு சொல்லி சொல்லி அவரு இமேஜ ஹயிட் பண்ணிப்பாரு. அப்போ இவ்வளவு நாளும் இவர் கதவத் திற காத்து வரட்டும்னு சொன்னதெல்லாம் சும்மனாச்சுக்கும். நான் தெரியாமத்தான் கேட்க்குறேன் சந்நியாசம்னா இன்னாபா....? எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்காம ஆண்டவனையே தின்துக்கும் ஃபீல் பாண்ணிக்கிட்டு இருக்கோணும். இந்த பராரி பஜாரித்தனம் பண்ணிட்டு நான் புனிதமானவன்ன்னு உடால் உட்டுக்னு கீறான்.

உன்குத் தேவைன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபாரினோ பரலோகமோ போக வேண்டியதுதானே, திரும்ப ஏண்டா சாமின்னு சொல்லி கமால் காட்டிக்குற. இதுல கோர்ட்டு இனி உன்ன ஆராண்டயும் கடவுளைப் பத்தி பேசக் கூடாதுன்னு சொல்லி கீது, நீ திரும்ப நான் நல்லவன் வல்லவன்னு சொல்லி கல்லா கட்டப் பாக்குற.

நான்ச் சொல்லுறதே எவன் கேக்கப் போறான், இனிமே நித்திய சுத்தி பக்தர்கள் கூட்டம் பல்லிளிக்கும், பவனி வரும், நித்திக்கு பணம் வரும்.

ஹ்ம்ம் நம்ம போயப்பச் சொல்லு.... கொட்டருக்கு மீட்டரப் போடணும்னா, முட்டி தேயனும், ஆனா இவனுக்கும் முட்டி தேயுது எதுக்கு.......? ;

விஜய்யின் தொடர் தோல்வி ஏன் - ஒரு அலசல்

நீங்கள் இளைய தலைவலி விஜய் பத்தின இடுக்கை என்று நினைத்து வந்திருந்தால்.... உடனே உங்கள் இருக்கையை காலி செய்யுங்கள், இது கிரிகெட் player முரளி விஜய் பத்தினது.

எல்லா கிரிகெட் வீரருக்கும் ஒரு Patchy Days இருக்கும் நம்ம தமிழாக வீரர் முரளி விஜய்க்கும் இப்போ அதுபோல் ஒரு shape out Days. ஸ்ரீகாந்த்க்குப் பிறகு 2007 வரை இந்திய அணியில் தமிழக வீரர்கள் யாருமே நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இப்பொழுது region வாரியாக தேர்வு நடைபெறுவதால் நம்ம முரளி விஜய் அணியில் இடம் பெறமுடிகிறது.

வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் வாய்பிளந்து இருக்கையில், கிடைத்த வாய்ப்பை வாயில்போட்டு, நம் அனைவரின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொடிருக்கிறார் இவர்.

சீக்கா 1981 தன் முதல் ஒருநாள் போட்டியில் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம். ஆனால் தன் வித்தியாச பேட்டிங் திறமையால் 1992 வரை இந்திய அணியின் அவர் நடத்தியது தனி ராஜ்ஜியம், அசைக்க முடியாத துவக்க ஆட்டக்காரராக இருந்தார். அவர் மூன்று உலகக் கோப்பையில் விளையாடியவர். இந்தியா வென்ற ப்ருடென்ஷியல் உலகக் கோப்பை அணியில் இருந்தவர்.

சீக்காதான் இன்றைய அதிரடி ஆட்டத்துக்கெல்லாம் முன்னோடி. விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்தபோது, இந்த சாதனையை யார் முறியடிப்பார் என்று எதிபார்கிரீர்கள் என்று கேட்ட போது சீக்காதான் அடிப்பார் என்று சொன்னார்.

2008ல் முரளி விஜய் அபினவ் முகுந்த் என்பவருடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட் partnership 462 ரன்கள் குவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த IPL தொடரிலும் தன் அதிரடி ஆட்டத்தை நீருபித்த அவரால் ஜிம்பாப்வே தொடரில் சோபிக்க முடியவில்லை. இதுவரை ஆடிய நான்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் மொத்தமே 71 ரன்கள்தான் எடுத்திருக்கிறார் அதில் அதிகபட்ச ஸ்கோர் 25.

வாய்ப்பு கிடைக்காமல் வாடிநிர்போர் பலரிருக்க கிடைத்த வாய்ப்பை வளைச்சுப் பிடிக்காமல் வழுக்கி விழுந்திருக்கிறார்.
IPLல் ஜொலித்தவர் இப்பொழுது தொங்கியதன் காரணி பல இருக்கலாம். இந்திய ஆடுகள தன்மை, சீதோஷ்ணநிலை, எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களின் பவுசு என நிறைய காரணிகள். முதல் சுற்று சறுக்கினாலும் அடுத்த சுற்றில் முறுக்கி எழ வேண்டும் என்பதே நம் அவா காத்திருப்போம். ;

ராம ராவணன் - ஒரு சர்ச்சை

விடுதலைப்புலிகள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மலையாள படமான ராம ராவணன் படம் குறித்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் :-


சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.
கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.


ஆனால் இந்த படத்தின் ஹீரோ சுரேஷ் கோபி நாங்கள் மலையாளிகளாக இருந்தாலும் தமிழர்களின் வலிகளைப் புரிந்து படம் எடுத்திருக்கிறோம், அவர்களின் உணர்வுகளைப் சரியாக பிரதிபளித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

ஒரு உலக பிரச்சனையை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் வலி தெரிவதில்லை.

உலகமே நம் இனம் அழிவதை வேடிக்கைப் பார்க்கும்போது, அண்டை மாநிலத்தவரான இவர்கள், இதுமாதிரி ஒரு படத்தை எடுத்திருப்பது நம்மை மீண்டும் சீண்டுவதாகவே இருக்கும். தமிழனின் பிரச்சனையை தன் பிரச்சனையாக நினைப்பார்களேயானால் இதுமாதிரி ஒரு படத்தை எடுக்கவே முன் வந்திருக்கக் கூடாது. இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போலத்தான்.

ஒரு விஷயத்தின் அடியோ முடியோ தெரியாதபோது வாயையும் 'சூ'வையும் பொத்திக் கொண்டிருப்பதே அவர்கள் நமக்குச் செய்யும் இமாலய உதவி.

சீமான் இதை தமிழ்நாட்டில் விளியிட தடை விதிக்கக் கோரியிருக்கிறார் ஆனால் இதை வேறு எங்குமே வெளியிட நிரந்தரத் தடை விதிப்பது சாலச் சிறந்தது. செய்வார்களா......?

;

குப்ப மேட்டரு...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!
சூர்யா ஜோதிகா தம்பதிக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு தியா என்கிற பெண் குழந்தை இருப்பது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானே.
--------------XXX------------------XXX------------------
1984ம் வருடம் போபாலில் வெளியான விஷவாயு காரணமாக அதன் சுற்றுப்பகுதியில் வசித்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர், பிறந்த குழந்தைகள் கூட ஊனமாகப் பிறந்தன. அந்த வழக்கில் இன்றுதான் தீர்ப்பு வந்தது எட்டு பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை, கொடுக்கும்போதே அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப் பட்டுடிருக்கிறது.

மிக மிகத் தாமதமான தீர்ப்பு தந்ததோடல்லாமல், குறைந்த பட்ச தண்டனை என்பது இறந்த மற்றும் வாழ்விழந்த ஆன்மாக்களுக்கு செய்த ஆகப் பெரிய அநீதி.

DELAYED JUSTICE IS DENIED JUSTICE
--------------XXX------------------XXX------------------
நேற்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத் தலைவர்
ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்போது, வசதி இருந்தா மெட்ரிக் பள்ளிக்குப் போங்க, இல்லனா அரசு பள்ளிக்குப் போங்கன்னு சொன்னார். இதுமாதிரி ஒரு போது வெளியில் பேசும்போது குறைத்தபட்ச சபை நாகரீகமில்லாமல் இவ்வாறு அவர் பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது. மேலும் அவர் தனது வயதுக்கு மீறிய கோபத்தோடு எதிரணியினரை எதிர்கொண்டார்.

தன் தரப்பு வாதத்தையும் நியாயத்தையும் சொல்ல அவருக்கு எல்லா உரிமையும் உண்டு, ஆனால்... பெற்றோரைப் பார்த்து உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் வேறு பள்ளிக்குப் போ என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை.

Because EDUCATION IS RIGHT OF EVERY CHILD
--------------XXX------------------XXX------------------
நயன்தாராவும் பிரபு தேவாவும் திருமணம் செய்துக் கொண்டார்கள். பிரபுதேவா பெற்றோர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்படி என்ன சிறப்பு இந்த திருமணத்தில்? சிம்புவுடன் காதல் முறிவு, பலப் பல கிசு கிசு எல்லாவற்றையும்தாண்டி இந்த திருமணம் அரங்கேறியிருக்கிறது. ஆனால் பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் அதுவும் வீட்டை எதிர்த்து! எங்கே போனது அந்த காதல்...?

WHAT IS THERE IN EXTRA-MARITAL AFFAIRS OTHERTHAN FLUSH.
--------------XXX------------------XXX------------------
குஷ்பூவைத் தொடர்ந்து, மேலும் பல நடிகைகள் அரசியலுக்குள் விழ துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். சாக்கடை என்றான பிறகு பண்ணி மேய்ந்தாலென்ன பாம்பு மிதந்தாலென்ன, பாமரன் பம்மத்தான் செய்வான்.
--------------XXX------------------XXX------------------
பய்யாவும் பாப்பாவும் லவ்வோ லவ்வுகிறார்களாம் இது ஐய்யாவுக்கு பிடிக்காமல் அர்ச்சனை நடந்ததாம். பய்யா நேராக அண்ணியிடம் போக வேண்டியதுதானே, அனுபவத்தால் ஆதரிப்பாரோ....? ;

பத்திக்கிட்டு எரியுது பதிவு உலகம்

வலையுலகமே வருத்தத்தோட இருக்கு.
ஊதிப் பெரிதாக்க, ஒரு கூட்டம்
ஊத்தி மூட, ஒரு கூட்டம்
ஊமையாய் ஓர் கூட்டம்ன்னு....
ஒரே கூட்ட நெரிசல்.

எங்கெங்கானினும்... அங்கெங்கொணாதபடி
பதிவின் படையல்.
பட்டதை, பார்த்ததைப்,
படித்ததை என பலவற்றைப் பரிமாறி,
படிப்போரை வெறுப்பேற்றி,
பட்டோரை சூடேற்றி,
பசியாற முடியாமல்
பட்டினியாய் இருக்கின்றோம்.
--------------XXX------------------XXX------------------
புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டங்காடு கிராமத்தில்.
ஒரு பெண், தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக அவளை வன்புணர்ச்சி செய்து, அதை கைப்பேசியில் பதிந்து, அவளை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி சொல்லி வருகிறான் செந்தில். போலீசில் ஊர் உலகத்தில் இதுபோல்தானே நடக்கிறதுன்னு...! ரொம்ப நக்கலாக பதில் சொல்லியிருக்கிறான்.

அந்த பெண் இவனை இப்பொழுதும் மணக்க விரும்ப வில்லை. இவனுக்குத் தரும் தண்டனை இனி இதுபோல் யாரும் யோசனை கூட செய்யக் கூடாது. பெண்களின் கற்பு மலிந்து விடவில்லை என்பதற்கு இவன் தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நடக்குமா.....?
--------------XXX------------------XXX------------------
கேப்டன் பெரிய மகனும் மோதலுக்கு தயார் ஆகிறார். சீவி சிங்காரிச்சி ஷோக்கா இருந்தாலும்...., போஷாக்கா இருக்க முடியுமா...? அதனால் முட்டி தேய பஸ்கி எடுக்கிறாராம். வாங்க வாங்க...
--------------XXX------------------XXX------------------
சீரா படம் வந்தாலும், சேர வாரி இறைக்குது நம்ம இளைய தளபதி தலையில. நஷ்ட ஈடு தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டும், தம்பி செவிசாய்க்க வில்லை. தன் அடுத்த பட விநியோக உரிமையை வாங்கி வச்சிருக்காரு.

சத்தா.... இருந்தா..... சத்தம் போட்டு சொல்லலாம்....!
வெத்தா இருந்தா.... வச்சுக்கவா முடியும்....
யோசிப்பாரா இளைய தளபதி...?
--------------XXX------------------XXX------------------
தனது சொந்தங்களுக்கு அரசாங்கத்தில் பதவி கேட்டால் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடிக்கச்சொன்ன டாக்டர், தற்போது தனது மகனுக்கு ராஜ்யசபா சீட்டுக்காக கருணாநிதியிடம் கெஞ்ச வேண்டிடிய அவலமான நிலை!

எல்லாம் பதவி படுத்தும் பாடு.

;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வந்கம்பா!!

முன்ன மாரி உப்போ சவாரி சரியா வர்தில்லபா நம்ம பொயப்பு கொஞ்சம் டல்லடிக்குது. உச்கூல் அடுத்தவாரம் தெரந்துக்குனாக்கா.... நமக்கு ரெண்டு ரெகுலர் உச்கூல் சவாரி வந்துரும், அப்டியே பொயப்பு ஓடீடும்.

அப்றோம் அல்லாரும் எப்படி கீறீங்கோ இம்மா நாலும் நான் உங்கள கண்டுக்காம இர்ந்துட்டேன்பா. நாம பேச ரொம்ப விஷயம் இர்ந்துது, ஆனா நான்தான் வரலபா, இப்போதான் வந்துட்டேன் இல்ல, இனி பாரு நம்ம ஆட்டைய.... "ஒர்தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேம்பா....." அக்காங்....

படிப்பு கட்ணம் குறையும்னு சொன்னாங்கோ, ஐய்....யா அடிச்சிதுரா லக்கி ப்ரைஸ், நம்ம புள்ளாண்டான கூட இங்க்லீஷ் உஸ்கூல்ல போட்டுடலாம்னு திங்க் பண்ணுரதுக்குல்லோ..... திடீர்னு தனியார் பள்ளி சங்க நாட்டாமைங்க நம்ம தலீவர கண்டுக்னதுல, உப்போ அரசு அந்தர் பல்டி அடிச்சி 'விரைவில் கல்விக் கட்டண நிர்ணயம்பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்'ன்னு சொல்லுது.

கமால வாங்கிட்டு.... கமுக்கமா காதும், காதும் வெச்சாமாதிரி சைலண்டா ஜகா வாங்கிடுவாங்கோ.... நல்லது நடக்கும்னு வாயப் பொலந்துக்கின்னு இர்ந்த பெத்தவங்க வாயில பெரிய ஊசிப் போன போண்டாவா வப்பாங்கோ.

ஏற்கனவே இதுமாதிரிதான் காலேஜு பீச குறையும்னு ரயிடுலாம் பண்ணனாங்கோ ஆனா ஒன்யும் புடிபடல. அல்லா காலேஜும் அவன் இஷ்டத்துக்குத்தான் பீஸ் புடுங்குராங்கோ.

காப்ரேசன் உஸ்கூல்ல இன்னாபா இல்ல...? நல்லாதாம்பா கீது, கொஞ்சம் நம்ம வாத்திமாறுங்கோ அவங்க வேலைய ஒயுங்கா பாத்தா, அது போதும்பா. இந்த பேமானி பெத்த சோமாரிக்கு, கார்பரேசன் உச்கூல்தான் விதிச்சது.

சவாரி வராப்ல கீது நா கயண்டுக்குரேன், வர்டா.....

;

குப்ப மேட்டரு...

மங்களூர் விமான விபத்து ஒரு தேசிய சோகம். தவறு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நிறைய ஊகங்கள் ரெக்கை கட்டுகின்றன. ஊடகங்களும் இழப்பின் எண்ணிக்கையை தன விருப்பத்துக்கு கூட்டி குறைத்துச் சொல்கின்றன. உயிர்களை புசித்து ஏப்பம் விட்டு மனித, இயந்திரத் தவறென்பதில் அர்த்தமில்லை. இனி இதுபோல் நடக்காமல் அதைத் சரி செய்வதே அந்த ஆத்மாக்களுக்குச் செய்யும் அஞ்சலி.

--------------XXX------------------XXX------------------

நாம் தமிழர் என்று முழங்கியவர்களும் இப்பொழுது தனிக்கட்சி தொடங்கி விட்டனர். இருக்குற கட்சி போதாதென்று மற்றுமொரு கட்சிக்கு IJK தொலைக்காட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள். எல்லோரும் தலைவனாகனும்னு நினைச்சா யாருதான் தொண்டனா இருக்குறது.

--------------XXX------------------XXX------------------

சினிமாவையே விஞ்சும் ஒரு கதை தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி தன் வக்கிர எண்ணத்தை நிறைவேற்ற ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியிருக்கிறார். நடந்தது இதுதான். ஏதோ ஒரு கேசில் நீதி வேண்டி இந்த காமுகன் இருக்கும் நிலையம் சென்றிருக்கிறனர் கணவனும் மனைவியும்.

பார்த்த உடனே இவருக்குள் காமம் பாஸ்பரசாய் பற்றிக்கொள்ள அந்த தம்பதியை அடிக்கடி தன்னை தேடி வரும்படி செய்திருக்கிறார். அவரது வக்கிர பார்வை பிடிக்காமல் இந்த பெண் வரவில்லை என்றால் வீடு தேடி வந்து தன் இச்சைக்கு இறை தேடி இருக்கிறார். இவனுக்கு பயந்தே அவர்கள் வேறு இடம் மாறிவிட்ட போதும், தொல்லை தாளவில்லை. கணவன் வெளிநாடு சென்றது இந்த காமுகனுக்கு ரொம்ப வசதியாய் போய் விட்டது. என்ன தேவையோ அதை மிரட்டியே பெற்றிருக்கிறான்.

இப்பொழுதும் அந்த பெண்ணை மறைத்து வைத்து, கணவனை விரட்டி அடித்திருக்கிறான். தன் அரசியல் செல்வாக்கால் இந்த கேசை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். இவ்வளவுக்கு பிறகும் அந்த கணவன் தன் மனைவி மனதால் நல்லவள், அதனால் நான் அவளுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார். "நல்லார் ஒருவர் உளரேல், கோடையிலும் மழை பொழியும்".

--------------XXX------------------XXX------------------

பய்யாவ சுறா விழுங்கியது, சுறாவ சிங்கம் அடிக்கும்னு சொல்லி சொல்லி பார்ப்பவர் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். சுறா சூம்பிப் போயி சுப்புக்கே இரையானாலும் குடும்ப தொலைக்காட்சியில் வெற்றின்னு முரசறையுறாங்கோ. ஆககூடி தங்கள் சர்வாதிகாரத்தை வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள்.

இனி அடுத்த சப்ப படம் தங்கள் பானரில் வரும்வரைக்கும் சுறாவும், சிங்கமும் கம்பீரமாக முன்னணியில் இருப்பார்கள்.

--------------XXX------------------XXX------------------

கற்புக்கரசி, கலியுக கண்ணகி குஷ்பூ ஒரு தொலைகாட்சி பேட்டியில், தனக்கும் பிரபுவுக்கும் தொடர்பிருந்தது உண்மை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், பிரபு மனைவிக்கு இது மனக் கஷ்டம்தானேன்னு கேட்டதுக்கு, காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லியிருக்கிறார். இப்போ புரியிதா கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வச்சுக்கிரதுல தப்பில்லை, அது பப்பி லவ்வுனாலும் டப்பி லவ்வுன்னாலும்.

;

கூடையில் என்ன பூ....?

வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில், மந்தார இலையில் விருந்து இவருக்கு. சாயம் போனாலும் சரக்கு போனாலும் வாடிப் போகாத குஷ்பூ. வழக்கு முடிந்ததும் மறுபடி வழுக்கி விழாமல் இருக்க தாய் கழகத்தில் சேருவார், தேசிய கட்சியை தேடிப்போவார் என்றெல்லாம் ஆருடம் சொல்லப் பட்டது.

ஆனால் இனி கழகத்தின் கண்மணியாய் வலம் வருவார். மேலவை, கீழவை எதிலாவது ஏறி அமர்வார். ஓடி ஓஞ்ஜாலும், பாடி தேஞ்ஜாலும்... ஓடுற குதிரையில ஒக்காந்தால் தானே ஊர் போயி சேர முடியும்.
தலிவரே சொல்லிட்டாரு குஷ்பூ முற்போக்கான பெண் என்று, இனி ஒரு ....போக்கும் அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது.

இனி நெஞ்சு கணக்கும், மஞ்ச புடிக்கும், மானாட மாயிலாட, பெண் சிங்கம்னு கர்ஜித்தே இவர் காலம் போகும். ;

சிங்கம் சிலுப்பிட்டு கெளம்பிடுச்சு........

தமிழுக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்தவங்க நாங்களெல்லாம். அதனால சிங்கம் மறுபடியும் களம்ஏறங்கிடுச்சே.........

கொஞ்ச நாள் ஆபிசுல ஆப்பாவே இருந்தது, அதனாலதான் என்னால தொடர்ந்து சேவை செய்ய முடியவில்லை. இனிமே பின்னி பெடலேடுக்க வேண்டியதுதான் பாக்கி.

வாங்கடா சோடி போடுவோம் சோடி, வலையில வெளையாடுறவன், வெத்தா எழுதுறவன், வேரும்பயன், எவனா இருந்தாலும் ஒரு கை பார்க்காம தூங்க மாட்டான் இந்த பித்தன். ;
 

Blogger