Pages

தமிழ் வழி பொறியியல்..... சரியா.....?

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் வழி பொறியியல் படிப்புக்கு நிறைய மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்கிறேன். - முதல்வர். தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேச்சுப் பயிற்ச்சியும் முக்கியம் என்பதால், ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.

இந்த பதிவுக்குள் போகும் முன்..... இது நான் பட்ட பாடு மற்றவர்கள் படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உதித்தது. இதில் நிறையப்பேர் என் கருத்துடன் வேறுபடலாம், ஆனால் எதார்த்தம் என்று வரும்போது சதவீதம், கருத்துக் கணிப்பு போன்ற எதுவும் நிற்காது. உண்மை ஒரு அரக்கனாய் நம்மை கவ்வி கடைந்தெடுக்கும். இதைச் சொல்வதனால் நான் தமிழுக்கு எதிரானவன் என்று யாரும் நினைத்து விடக் கூடாது (ஆட்டோ வருமென்ற பயந்தே).

தமிழ் வழிக் கல்வி என்பது தரம் தாழ்ந்ததென்றோ, அது படித்தால் வேலைக் கிடைக்காது என்றோ, நான் சொல்ல வரவில்லை. என் பயமெல்லாம் யதார்த்த உலகோடு ஒன்றுதலில் உள்ள நடைமுறைச் சிக்கலைப் பற்றியதே!. தனியாக ஆங்கிலத்தையோ வேறு மொழியையோ கற்கலாம்தான்..... ஆனால் அது படிப்புடனே என்றால் கற்பது எளிது.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்சார்ந்த படிப்பென்பது நடுத்தர வர்கத்தின் குரல்வளை நெருக்கும் முள் அணிகலனே. கையிருப்பு, காது, கழுத்து, காட்டை வித்து, கடனை வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைப்பதென்பது ஒரு முதலீடாகவே கொள்ளப் படுகிறது. படித்து முடித்ததும் வேலை வேண்டி நிற்கும்போது, மற்றைய மொழிகள் தெரிந்திருந்தால் அது ஒரு கூடுதல் தகுதி, மற்றவரிலிருந்து நம்மை தனித்தும் காட்டும்.

உலகமயமாக்கலின் உடுக்கைக்கேற்ப பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வேரூன்றின, வேலைவாய்ப்புகள் கேட்கும் தகுதிகளில் முக்கியமான ஒன்று ஆங்கில அறிவு. படித்தது பொறியியல் எனில், நடைமுறையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் வேற்று மொழியிலிருந்து வந்தவையாகவே இருக்கும், அதன் சரியான உச்சரிப்பும் ஆங்கில எழுத்துக் கோர்வையும் தெரிந்திருப்பது அவசியம்.

தன்னை வேறு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள இன்று 99சதவீத நிறுவனங்கள் ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகப் பயன்படுத்துகின்றன. அலுவலக அளவில் எல்லா சம்பாஷனைகளும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகின்றன. மேலும் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறியாளராக ஒருவர் நிலைநிற்க வேண்டுமாயின் ஆங்கில அறிவு இன்றியமையாதது.

தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது. தமிழ் வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அரசு சொல்லியிருக்கிறது, வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

அப்படியே தமிழ் வழி படிக்க நேர்ந்தாலும் எப்பாடுபட்டாகிலும் ஆங்கிலத்தை (எத்தனை மொழிகள் கற்க முடியுமோ) கற்றே ஆகவேண்டிய வியாபார உலகத்தில் நாம் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் குறைந்தது மூன்று மொழிகள் (ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம்) பள்ளிப் பாடத்தில் உள்ளன. அதனால்தான் மலையாளிகள் உலகெங்கிலும் விரவியுள்ளனர். பெங்களூர், ஆந்திராவிலும் இதே நிலைதான், பல்மொழி பேசுவது இயல்பாகவே அமைந்துவிடுகிறது. நான் (சுய தம்பட்டம் இல்லை) படித்தது தமிழ் வழியே, ஆனால் வேலை வாங்கும்முன் தாவு தீர்ந்துவிட்டது.

எல்லாம் சரி! தமிழில் படிக்கும் B.E படிப்பை அனைத்து நிறுவனங்களும் அங்கீகரித்து, இப்படி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுடன், இந்த அரசாங்கம் இதை செய்யாமல், வெறுமனே பேருக்காகவும், புகழுக்காகவும் செய்வார்கலெனில், இதற்காக பாடுபட்டவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடும். சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மானியர்களைப்போல் தாய்மொழியில் கற்றால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க, தமிழ்வழி ஆரம்பக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ஆங்கிலத்தை முறையாகப் பயிற்றுவித்து அவர்கள் திறன் மேம்பட அரசு ஆவன செய்ய வேண்டும். ;

13 comments:

virutcham said...

உங்கள் எண்ணத்தில் நியாயம் இருக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே தமிழில் தொழில் நுட்பம் கற்றுக் கொடுக்கும் முன்னர், இப்போது இருக்கும் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்து பாடங்களுக்கும் ( குறைந்த பட்சம் முதல் ஆண்டு பாடங்களுக்கு ) தமிழ் உரைகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தால் மாணவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். ஆங்கிலத்தில் தனிப் பயிற்சியும் அளித்தால் முதல் வருடம் சற்று சிரமப் படும் மாணவர்கள் அடுத்தடுத்த வருடங்களில் ஏனைய மாணவர்களுக்கு இணையாக படிக்கத் துவங்கி விடுவார்கள். இது இப்போதைய வர்த்தக உலகத்துக்கு தேவையான தகுதிகளை இழக்காமல் இருக்க உதவும்.

Kishore Sheik Ahamed said...

Many existing engg colleges although the medium of instruction is english still most of the conversation goes in tamil.Introducing tamil medium of instruction will hav some effect on students but when it comes to availablity of standard books students hav no other option than english.these things cannot be changed easily. combining these two i don think this will have much influence on career related activities.advantage here is ppl with low marks even got in CEG campus of anna univ by choosing Tamil medium.

பித்தன் said...

Thankx Virutcham for the comments!!

பித்தன் said...

Thankx kishore

♠ ராஜு ♠ said...

நல்ல பதிவு தல..!

கொற்றவன் KOTRAVAN said...

நீங்கள் தமிழ் வழியில் கற்றீர்கள் .சரி
உங்கள் பள்ளியில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்து இருக்குமே அதை ஒழுங்காக கற்றீரா.அப்படி இருப்பின் என் உமக்கு எளிதில் வேலை கிட்டவில்லை .இரண்டு மொழியே ஒருங்காங்க கற்க முடியாத நீங்கள் மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும் என்று கூறுவது நகைப்பாக இருக்கிறது .தமிழ் நாட்டில் தமிழ் வழியில் கற்றோருக்கு தமிழாவது தெரிகிறது. ஆங்கில வழியில் கற்றோருக்கு தமிழும் தெரிவதில்லை ஆங்கிலமும் தெரிவதில்லை.சரி கல்வி கற்பது அறிவை வளர்க்கவா வயிறாய் வளர்க்கவா

அமுதா கிருஷ்ணா said...

உருப்படாமல் போவதற்கு ஒரு வழி...

ராம்ஜி_யாஹூ said...

படிக்க போகும் மாணவரின் ஆர்வம், குறிக்கோள், குடும்ப சூழல் போன்றவை இங்கே கருத்தில் கொள்ளப் பட வேண்டும்;

உதாரணமாக: ஒரு மாணவரின் தந்தை நிறுவனம், தொழிற்சாலை தமிழ்நாட்டில் வைத்து உள்ளார், உள் நாட்டிற்குள்ளேயே வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்த பொறியியல் மாணவன் படித்து முடித்து தன் தந்தை நிறுவனத்திலேயே சேரப் போகிறார் என்றால் தமிழ் வழி கல்வியில் குறை இல்லை.

படித்து முடித்த பின் தமிழ்நாட்டில் மட்டுமே வேலை செய்ய விரும்ப போகிறார் (அரசு/தனியார் பணியில்), கிடைக்கும் வாய்ப்பு, சம்பளம் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் தமிழ் வழி கல்வி சிறந்தது

படித்து முடித்து நான் பன்னாட்டு நிறுவங்களில் பணி புரிய ஆசையாக உள்ளேன், வேணி லாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது என் ஆசிய, குறிக்கோள், கனவு என்னும் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அவசியம்


If the stundet has come from a rich family and planning to have own civil construction company in chennai, erode, cbe, nangercoil, he/she need not study in English medium.

If the student has come froma an average family and he has to definitely join with TCS, wipro, ibm, aacneture, shell then he has to go for English Medium.

பித்தன் said...

// கொற்றவன் KOTRAVAN said...
நீங்கள் தமிழ் வழியில் கற்றீர்கள் .சரி
உங்கள் பள்ளியில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்து இருக்குமே அதை ஒழுங்காக கற்றீரா.அப்படி இருப்பின் என் உமக்கு எளிதில் வேலை கிட்டவில்லை .இரண்டு மொழியே ஒருங்காங்க கற்க முடியாத நீங்கள் மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும் என்று கூறுவது நகைப்பாக இருக்கிறது .தமிழ் நாட்டில் தமிழ் வழியில் கற்றோருக்கு தமிழாவது தெரிகிறது. ஆங்கில வழியில் கற்றோருக்கு தமிழும் தெரிவதில்லை ஆங்கிலமும் தெரிவதில்லை.சரி கல்வி கற்பது அறிவை வளர்க்கவா வயிறாய் வளர்க்கவா//

முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!

ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்ததுதான் ஆனால் அதுதான் எனக்கு வேப்பங்காயாக கசந்ததே!! படித்ததும் விருப்பத் துறையில் அல்லது படிப்புச் சார்ந்த துறையில் ஒரு தொடக்க உள்நுழைவு ரொம்ப சிரமமாக இருந்தது.

கற்பது அறிவை வளர்க்கத்தான் என்றாலும், நடுத்தர வர்க்க வாழ்கை வழிநடத்தல் என்பது, படித்த படிப்பினால் என்பது என் மிகத் தாழ்மையான கருத்து. யாரும் பணத்தை வைத்துக் கொண்டு வேலை தேடுவதில்லை மாறாக படிக்கும்போதே வேலை செய்யும் நிலையே இன்னும் முக்கால் வாசி தமிழனின் நிலையாக இருக்கிறது.

பித்தன் said...

// அமுதா கிருஷ்ணா said...
உருப்படாமல் போவதற்கு ஒரு வழி...//

உருப்பட வேண்டும் என்பதே என் அவா....

பித்தன் said...

//படிக்க போகும் மாணவரின் ஆர்வம், குறிக்கோள், குடும்ப சூழல் போன்றவை இங்கே கருத்தில் கொள்ளப் பட வேண்டும்;

உதாரணமாக: ஒரு மாணவரின் தந்தை நிறுவனம், தொழிற்சாலை தமிழ்நாட்டில் வைத்து உள்ளார், உள் நாட்டிற்குள்ளேயே வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்த பொறியியல் மாணவன் படித்து முடித்து தன் தந்தை நிறுவனத்திலேயே சேரப் போகிறார் என்றால் தமிழ் வழி கல்வியில் குறை இல்லை.//

தங்கள் வருகைக்கு நன்றி....!

எந்தனை பேர் சொந்தமாக தொழில் வைத்திருப்பார்கள் அப்படியே வைத்திருப்பவர் எல்லாம் தத்தமது பிள்ளைகளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க அனுப்பிவிடுவார்கள். என் கவலை எல்லாம் மீதமுள்ள 90 சதவீத மக்களைப் பற்றியதே....! இங்கே படிப்பே முதலீடு எனும்போது எங்கே சொந்தமாக தொழில் தொடங்குவது.....

பித்தன் said...

//படித்து முடித்த பின் தமிழ்நாட்டில் மட்டுமே வேலை செய்ய விரும்ப போகிறார் (அரசு/தனியார் பணியில்), கிடைக்கும் வாய்ப்பு, சம்பளம் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் தமிழ் வழி கல்வி சிறந்தது

படித்து முடித்து நான் பன்னாட்டு நிறுவங்களில் பணி புரிய ஆசையாக உள்ளேன், வேணி லாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது என் ஆசிய, குறிக்கோள், கனவு என்னும் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அவசியம்//

போட்டி என்று வரும்போது நான் மற்றவர்களுடன் மோத ஆங்கிலம் முக முக்கிய தகுதி. மேலும் பொருளாதாரக் கொள்கையில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்திருக்கின்றன வாய்ப்பு என்று வரும்போது எல்லா வாய்ப்பையும் நாடுவதுதான் நம்மை நிலைநிறுத்த ஒரு சிறந்த வழி.....

பித்தன் said...

//If the stundet has come from a rich family and planning to have own civil construction company in chennai, erode, cbe, nangercoil, he/she need not study in English medium.

If the student has come froma an average family and he has to definitely join with TCS, wipro, ibm, aacneture, shell then he has to go for English Medium.//

How many families can afford to have their own business, it might be very meager in numbers i'm worrying about the mass.

 

Blogger