Pages

எள்ளு தந்தா..... எலிகாப்டர்....

அல்லார்க்கும் வந்கம்,

உன்னொரு பைனான்ஸ் கம்பெனி மூடிட்டாங்கோ....

நாந் தெரியாமத்தான் கேட்டுகீறேந்....? எவனாவது எள்ளு தா, எலிகாப்டர் தரேன், ஏரோப்ளேன் தர்றேன்னு சொன்னா...., அவந் ஆரு என்னான்னு தெரியாமவே, நம்ம பய புள்ளைங்க துட்ட கொண்டு கொட்டிடுராங்கோ, அப்புறோம் துட்ட தாராந்துட்டு, அவன புடி, இவன பொசுக்குன்னு, கோர்மேன்ட்டு கிட்ட வந்தா.... அரசாங்கோம் பாவம் இன்னா பண்ணோம்.

இதுக்கு முன்னாடி ஒடுனவங்க அல்லருகிட்ட இர்ந்து, எவ்வளோ கரந்தாங்கோ, ஆராருக்கு குட்தாங்கோன்னு ஏதாவது ரெக்காடு கீதா.....? இர்காது, அல்லாரும் கூட்டு கலவாநிங்கோ.
---X---X----
முந்தா நா நம்ம பீச்சுல, நானும், நம்ம சன்னும் நல்லா கொரட்ட உட்டு தூங்கீனு இர்கொசொல்லோ...., ஒரே டர்ரு புர்ருன்னு மோட்டார் சவுண்டு, ஒரே பைக்குங்கோ, அல்லாரும் சும்மா சர்ருன்னு காத்த கீச்சிக்னு போனாங்கோ, நம்ம கூட தூங்கின்னு இர்தவங்க அல்லாருக்கும் படா பேஜாராப் பூடுச்சி, திடீர்ன்னு ஒரே அதிரி புதிரியாவி, சண்ட மூண்டு.... அப்பாலிக்கா போலீசு வந்து குண்டு போட்டுத்தான் சண்டைய நிறுத்திச்சி.

ரேசுக்கு ஓட்டுற பய புள்ளைங்க, வேற எங்காவது காட்டுக்கு போவ வேண்டியதுதானே, ங்கொய்யாலே... தின்னு கொயுத்துப் போன, இவனுங்க போதைக்கு நாங்க ஊறுகாயா......
---X---X----

இந்த ஆஸ்திரேலியாவுல இன்னாதாம்பா நட்குது...? ஒரே நம்ம பசங்கள அடிக்கீரனுங்க, நம்ம அமைச்சரும்... நம்ம பயலுகள அமைதியா இர்கனும்னு சொல்றாரு.... இதுக்கு இன்னாதாம்பா முடிவு....?

அரசாங்கம் அதிரடியா எதுனா முடிவெடுக்கலைன்னு வை, இது ரொம்ப பேஜாராப் பூடும் அக்காங்....

ஓக்கே பா செட்டம்மா வருது நமக்கு ஒரு சவாரி சிக்கிடிச்சி நாந் கயண்டுக்குறேன், வர்ட்டா. ;

ஆந்திர முதல்வரின் அகால மரணம்

"ஹாய்....! I'm ராஜு, வேங்கடபதி ராஜு, IIT பைனல்" என்று தன் உரையை ஆரம்பித்தான்.... முடித்த நேரம், அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது. சிறப்பு விருந்தினராக இருந்த ஜனாதிபதி... "அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்..." என்றார். விழா முடிந்து எல்லோரும் அரங்கு விட்டு வெளியே வரும்வரை, ராஜுவை மொய்த்தார்கள்.

ராஜு ஆந்திர முதல்வரின் ஒரே வாரிசு, ஆனால் தன் சொந்த காலின் நிற்க வேண்டும் என்று சென்னையில் கடந்த பன்னிரண்டு வருடமாக தங்கி படிக்கிறான். தன் செலவுக்கு ஒரு சுற்றுலா துறை நிறுவனத்தில் டூர் மனேஜராக பகுதி நேர வேலை செய்கிறான்.

அறைக்கு வந்ததும் பிலால் ராஜுவிடம் "Excellant presentation, surely it could grab the required attention. அறிவாளிகள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்பதற்கு நீ ஒரு உதாரணம். மச்சி உன் அப்பா முதல்வர். ஆனால் நீ உன் சொந்த காலில் நிக்க வேண்டும் என்று தனியாக அரை எடுத்து, என்னை மாதிரி பிச்சை எடுத்து படிப்பவனுடன் தங்கி..... படிக்கிறே, உனக்கு ஏன் இந்த தலை எழுத்து..?"

"இல்லைடா உங்களுக்கு எல்லாம் அவர ஒரு தலைவராத் தான் தெரியும், ஆனால் எனக்கு அவர் அப்பா, காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்கப் போகும் வரை, அவரைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவர் அடிப்படையிலேயே ரொம்ப நல்லவர், ஆனால் எவ்வளவோ விஷயங்கள் தனக்குப் பிடிக்காமல் செய்கிறார். அவர் இந்த நாட்டுக்கு எவ்வளோவோ செய்யனும்னு நினைக்கிறார், ஆனால் அதில் பத்து சதவீதம் கூட அவரால் செய்ய முடியவில்லை. அதற்க்கு நிறைய காரணம் இருக்கு. அவர் இந்த பாழாப் போன அரசியல விட்டு போகலாம்னு நினைச்சாக் கூட, மக்கள் அவர்தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். உனக்கேத் தெரியும், அவர் இந்த முறை எலக்ஷனில் நிக்கவேஇல்லை, ஆனால் மக்கள் விரும்பி அவரை பதவியை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். மறுபடியும் ஒரு தொகுதி இடைத் தேர்தல் நடத்தி, அவரை வெற்றி பெறச் செய்தார்கள்.... எல்லாம் விதி. நானோ என் குடும்பத்தினரோ அவரைப் பார்க்க வேண்டும் என்றால் கூட, appointmentதான் என்ன செய்ய அவர் வேலை அதுமாதிரி. Initially we too had problem in coping-up with this setup, but as days passed, we'v learnt this system"

"இருந்தாலும்..... மச்சி இப்போது வாரிசு அரசியல் ரொம்ப சாதாரணம், நீயும் அவர் வழியிலேயே அரசியல்லுக்கு போனால், அந்த மாநிலத்துக்கு இன்னும் நல்லது நடக்கும்"

"பிலால்..... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதைப் பற்றி பேசுவதை நிறுத்து. நான் அவரை விட்டு ஒதுங்கியுருப்பதுதான் அவருக்கும் பிடிக்கும், எனக்கும் இதுதான் நல்லது போல் தெரிகிறது. அதனால்தான் என் பள்ளிப் படிப்பு முழுவதும் நான் சென்னையிலேயே பாண்ணினேன். இப்போது இந்த படிப்பு முடிந்ததும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், இந்த சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால் அது எல்லாம் நான் ராஜூவாக இருந்துதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். I' wannah will stop this global varming, for that i dont' need my dad's tag. மச்சி நான் ரொம்ப சாதாரண வாழ்க்கை வாழ நினைக்கிறேன், ஆயிஷாவை கைப் பிடித்து, கடைசி காலம் வரை, அவள் மடியிலேயே இருக்க வேண்டும்."

"சரிடா வா சாப்பிடப் போகலாம்.."
"ஒகே, wait i'll be back in a minute, after taking bath..."

ஆயிஷா ஒரு இஸ்லாமிய கல்லூரியில் கடைசி வருட MBA படிக்கிறாள். டென்னிஸ் விளையாடும் போது ராஜுவுடன் பழக்கம், இருவர் அலைவரிசையும் ஒத்துப் போக.... வெகு விரைவிலேயே அது காதலாக பரிமளித்தது.

ராஜு குளிக்க டாய்லெட் போன உடன் அவன் போன் அலறவும்....
"ராஜு உனக்கு போன்"
"யாரு... மச்சி...?"
"ஆயிஷா...."
"எடுத்துப் பேசுடா..."
"ஏய் நீயே வந்து பேசு..." அது ஒரு ஐந்தாறு முறை அலறி பின் அமைதியானது. ஆனால் மறுபடியும் அது அலறவே, பிலால் எடுத்தான்.

"ஹலோ...!"
"அண்ணே அஸ்ஸலாமு அலைக்கும்"
"வாஹ் அலைக்கும் அஸ்ஸலாம், எப்படிம்மா இருக்கே...?"
"நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க....?"
"நல்லா இருக்கேன்மா"
"அண்ணே..., ராஜு எங்கே....?"
"உள்ளே குளிக்கிறான்"
"அண்ணே, அவருக்கு நான் ப்ரோக்ரம்முக்கு வரலைன்னு, ரொம்ப கோபம், நான் என்ன பண்ணுறது, எங்க வீட்டுல இன்னைக்கி, அக்காக்கு நிச்சய தார்த்தம் அதனால்தான் வர முடியாமப் போயிடுச்சி..."
"பரவாயில்லைமா, நான் அவன் வந்ததும், சமாதானம் பண்ணி, உன்னிடம் பேசச் சொல்கிறேன்"
"தேங்க்ஸ்... அண்ணே"

ராஜு குளித்து வந்ததும், தலை கூட துவட்டாமல், ஆயிஷாக்கு போன் பண்ணினான்....
"ஹாய் டார்லிங்.... நான் உன்னை தப்பா நினைப்பேனா, இல்லடா செல்லம், I know what's your problem was, dont worry. சரி நிச்சயம் எப்படி போனது...?"

"Oh went on well"

"OK babe take care, ill meet you tomorrow" என்று போனைக் கட் பண்ணினான்.

"வா மச்சி சாப்பிடப் போகலாம்"

"ராஜு ரெண்டு ரிங்குல போன் எடுக்கலன்ன உடனே, ஆயிஷா ரொம்ப பயந்துப் போயிட்டா...."

"அவளுக்கு நான் அவளை கை பிடிக்கும் வரை இந்த பயம் இருக்கும்"

"எப்போதான் கல்யாணம்...?"

"அப்பா எப்போவோ சம்மதிச்சிட்டார், நான்தான் அவள் படிப்பு முடியட்டும் என்று சொல்லியிருக்கிறேன்"

கேன்டீன் வந்து தட்டை எடுத்து, ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் தால் எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். அப்பொழுதுதான் டிவியைப் பார்த்தார்கள், காமடி டைமில் வடிவேலு தனக்குத் தெரியாமலே எரித்த தன் தந்தையின் சாம்பல் என்று நினைத்து வேறொருவரின் சாம்பலை உடம்பெல்லாம் பூசிக் கொள்ளும் கட்சி திரையில் ஓடியது.

பிலால் ஏதோ முக்கிய செய்தி திரையில் கிழே ஓடுவதைப் பார்த்தான், "அதில் ஆந்திர முதல்வர் மாயம், தேடுதலைத் தீவிரப் படுத்தியுருக்கிறது அரசு" என்று வந்தது. அதிர்ந்தவன் ராஜுவையும் அதைப் பார்க்கச் சொன்னான். அதிர்ந்தவர்களாக, வேகமாக வேறு நியுஸ் சானலை மாற்றி, பார்த்தபோதுதான் அவர்களுக்கே விஷயம் தெரிந்தது. உடனே ராஜு தன் தந்தையின் செல்லுக்கு தொடர்பு கொண்டான், அது தொடர்பு எயல்லைக்கு வெளியே இருந்தது. அவரது அந்தரங்க காரியதரிசியின் என்னும் அவ்வாறே, என்ன செய்வது என்று தெரியாமல். ஆந்திர DIGக்கு போன் அடித்தான் அவர்
"Sir, dont worry we are trying our level best. His chopper deviated from the signal after 20 minutes of fly, due to bad weather they might have landed somewhere. If possible can you come down"

"OK i'm starting now"

என்று போனை வைத்து. அப்படியே ஏர்போர்ட் போய்... வீடு வந்து சேர்ந்தான். அம்மா ரொம்ப கவலையாக இறந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கவே ரொம்ப கலவரமாக இருந்தது. ஆனால் அருகில் சென்று பேசக் கூட முடியாமல் அவனை மீடியாக்கள் சூழ்ந்துக் கொண்டன. திரும்பவும் பல மட்டங்களில் இருந்து விசாரணைகள் போன் கால்கள் என்று ரொம்பவே பரபரப்பானான். இரவு முழுவதும் தேடுதல் பணி நடந்தது. ஆனால் ராஜுவின் உள் மனசு, காலை ஒன்பது மணிக்கு போனவர், இன்னும் ஒரு தகவலும் இல்லை என்றால்.... ஏதோ அசம்பாவிதம் நடந்ததாகவே தோன்றியது.

"Sir, there is no signal even from the Emergency Locator, we are trying our best. Even army helicopter and rescue people being used in this operation. We'll surely get him alive dont worry" என்றார் உள்துறை அமைச்சர்.

ஆனால் அதிகாலை மூன்று மணியளவில் அவர்களின் Chopper காட்டுப் பகுதியில் நொறுங்கிக் கிடப்பதாகவும் பயணம் செய்த ஒருவருமே உயிருடன் இல்லை என்றும் தகவல் வந்தது அப்படியே உடைந்துபோய் சரிந்தான் ராஜு.

அவரது பூத உடல் அடக்கம் ரொம்ப சிறப்பாகவே நடந்தது. அது முடிந்த அடுத்த கணமே, யார் அடுத்த முதல்வர் என்னும் பேச்சு கட்சிக்குள்ளும், மாநிலத்திலும் பரபரப்பாக எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் கட்சி நிர்வாகிகளும், மேலிடமும், ராஜுதான் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ராஜு மறுத்தான். பிரதமரே அவனிடம் தனியாகப் பேசி, சம்மதிக்க வைத்தார்.

விருப்பமில்லாமல் முள் கிரீடத்தை தலையில் ஏற்றினான். நாளடைவில் அரசியல் கை வரப்பெற்று, ஒரு சிறந்த முதல்வராக மாறினான். ஆனால் ஆயிஷாவினால்தான் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சாதிய அடிப்படை கொண்ட கட்சியின் தலைவராகப் பொறுப் பேற்றதினால்.... ராஜுவால் ஆயிஷாவைக் கைபற்ற முடியவில்லை.

ஆயிஷாவும் குடும்பத்தாரின் வற்புறுத்தலினால் தன் தலைவிதியை நொந்து கொண்டே, வேறொருவரைத் திருமணம் செய்துக் கொண்டாள். ;

சேசுவாய் எதிர் நின்ன கமெராமேன்...

அல்லார்க்கும் வந்கம்பா,

இந்த பஜ்ஜி யாரோ ஒரு கமெராகாரன அடிச்சானே, ரொம்ப கொயுப்பு இவனுக்கு, அடிச்சானே தொர மன்னிப்பும் கேக்க மாட்டாராம்.

ஏம்பா நாந் தெரியாமத்தான் கேட்டுக்கீறேன்...? அந்த கேமரா லென்சு மூடி பட்டத்துக்கு ரொம்பத்தாந் அல்டிகீறானே, ங்கொய்யாலே நெக்குலாப் பூடுச்சி, இவனுங்க எல்லாம் வெளிச்சத்துக்கு வந்ததே இந்த மாதிரி மீடியாக்காரனாலத்தாந் ங்குரத மறந்துட்டு அப்பூடி இன்னா கோவமோத் தெரியல. அந்த கேமராக்காரன் இவனத் திருப்பி அடிச்சான்னா இவன் பகுலு பிகுலூதிக்கும்.

மவனே உஜாரா இர்ந்துக்கோ அல்லாங்காட்டி.... பஜ்ஜிய புயுஞ்சி எண்ணைய எடுதுடுவாங்கோ அக்காங்....
---X---X---
இத்னகோடி கறுப்புப் பணம் இருக்கு, அத்த நம்ம ஹீரோங்கோ.... கஷ்டப் பட்டு லவுட்டிக்னு வர்றா மாதிரி படம் எடுக்குற, அம்மாந் ஹீரோ, டைரடக்கரு, தயாரிப்பாளருன்னு அல்லாரும் ஓயுங்காத்தான் வரி கட்ராங்களா...?

மொத உங்க பின்னால கீற அயுக்க க்ளீன் பண்ணுங்கோ, அப்பாலீக்கா அட்தவன கயுவலாம். கோடி கோடியா சம்பளம்..... உன்னும் உன்னும் ஏத்திக்னே போனா, படத்த நீங்களே பாத்துக்க வேண்டியதுதான், ஒரு பயலும் படம் பாக்க டாக்கீசுக்கு வர மாட்டான், இப்பவே டிக்கெட் வெள பேக்க கீக்குது.....
---X---X---
மேஜர் ஆகாஷ் சிங், நேத்து எல்லையில எதிரியால சுட்டுக் கொல்லப் பாட்டார்னு...., நம்ம பித்தன் அண்ணாச்சி சொன்னாரு. ஆனா.... அத்த எந்த கோபாலபுர டிவியும் காட்டலன்னு ரொம்ப பீல் ஆயிட்டாரு. பாவம் அவங்களுக்கு காட்ட எவ்வளவோ கீது, சர்தான் உடு அண்ணாச்சி. ;

வெளையாட்டா சம்பாதிகிறாங்க....

அல்லார்க்கும் வந்கம்பா,

விளம்பரத்தில அதிகமா சம்பாதிக்கிற ஆளுல மொத ஆளா வந்துகீரதுல ரொம்ப ஹேப்பியா கீது, மொதோ நாலு எட்த்துல, நம்ம ஆளுங்க வந்ததுல கோயிந்து ரொம்ப குஷியாயிட்டாம்பா.

ஆனா நம்மாளு வெள்ளகாரணுவ கிட்ட இர்ந்து கத்துக்கிட்ட கேம்ல, அவனையே மிஞ்சிட்டானுக. கிறிகேட்ட மொத கண்டுகீனு ஆடுனவங்க ஆஸ்தெரெலியா, இங்கிலாந்து, ஆனா அவனுவளையும் நம்மாளு அடிச்சி தூக்கிட்டான் இல்ல. நம்மாளு சிங்கம்லே.

ஆமா நாந் தெரியாமத் தான் கேக்கேன், ஏதோ பேன் விளம்பரத்துல தோனி வந்து இது ரொம்ப நல்லா காத்து தரும் பேநுனு சொல்லிகீறாரு இல்ல ஆனா அவரு வீட்ல அந்த பேநு கீதா...? இர்காது. ஆனா அவர் நம்மள வாங்க சொல்லுவாரு. அவரு ஏதோ களிம்ப நமளையும் தலையில தடவ சொல்லுறாரு ஆனா அந்த களிம்ப அவரு ஊஸ் பண்ணுறாரா?

எல்லையில கீற ஆளுங்க ஆரும் நமக்குத் தெரியாது, ஆனா கொல்ல பக்கமா வந்து தொல்ல குடுக்கும் இந்த கிறிகேட்ட ரொம்ப நல்லா தெரியுது. விளம்பரத்துல, டிவில, பேப்பருல அல்லாத்துலையும் இவனுங்களயே காட்டீனு இர்ந்தா நம்ம புள்ளைங்களுக்கு, இவங்கதான் நாட்ட காக்குற தெய்வமாத் தெரியும்.

வெளையாட்டா சம்பாதிக்கிறாங்க, நம்ம பொயப்பா கேளு, நாய் பட்ட பாடு, லொங்கு லொங்குன்னு ரிச்சா மிதிச்சாதான் கஞ்சே கிடைக்கும். ஆமா எப்போ ஸ்ரீலங்கா ஆட்டம் ஆரம்பிக்குது....
-------x----x----
சமச்சீர் கல்விக்கு ரொம்ப தடுங்கள் வரும் அதெல்லாந் தாண்டி தல கொண்டுவந்துசின்னா ரொம்ப புண்ணியமா போவும், என்ன பணம் புடுங்குறாங்க இந்த இங்கிலீஷ் உஸ்கூலுல.
ஐயா மனசு வச்சா, நிச்சயம் இது சுளுவா வந்துரூம். ;
 

Blogger