Pages

குப்ப மேட்டரு....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
64ம் ஆண்டு சுதந்திரதினம் பித்தனின் வாழ்த்துக்கள்.

இந்த நல்ல நாளில் நான் இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. என் குடும்பத்தில் உள்ள மொத்தம் பதினைந்து பெரும் கண்தானம் செய்திருக்கிறோம். நீண்ட மோதலுக்குப் பிறகு என் உறுப்புகள் மற்றும் உடல் தானத்துக்கும் வீட்டாரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறேன். இதைத்தவிர நான் சொல்லிக் கொள்ளும்படி இந்த நாட்டுக்கு ஒன்னும் செய்யவில்ல என்பதில் வெட்கித் தலை குனிகிறேன்.

தாய் மண்ணே வணக்கம்.....!
--------------XXX------------------XXX------------------
மருத்துவர் ராமதாஸ் 2011ல் ப.ம.க ஆட்சி அமைக்கும் சூழ்நிலை இல்லை என்று சொல்லியிருக்கிறார், (இல்லன்னா என்ன 3011, 4011ன்னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியதுதான்), மேலும் தாங்கள் தே.மு.தி.க உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அறிக்கை விட்டிருக்கிறார். மாமா மயக்கும் பேச்சாலும், அம்மா அதிரடி செய்கையாலும் கைவிடப்பட்ட நிலையில் கலங்காமல் நிற்கிறார் தமிழ் குடி தாங்கி.
--------------XXX------------------XXX------------------
சீனிவாசன் என்பவர் சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளை அடித்து நான்கு தத்துப் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை போலீசில் பிடிப்படும்போதும் தண்டனையை முழுமையாக அனுபவித்து வருவது வாடிக்கை என்று கூறியிருக்கிறார். தான் கஷ்டப் பட்ட நேரத்தில் தன்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் உதவவில்லை என்பதனால் ஒரு வைராக்கியத்தில் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் கண்முன்னே நடந்திருக்கிறது.

கல்வி வியாபாரமானதிலும், சுயநலம் மலிந்துபோன சமுதாய சூழ்நிலையாலும் இது மேலும் தொடரும் என்பது என் அனுமானம். நான் டிப்ளோமோ முடித்து பயிர்ச்சியாளனாக இருந்த போது, என் நண்பன் அவனுக்குத் தெரிந்த பெண்ணின் தந்தை இல்லா நிலையில் தாய் வீடுகளில் வேலை செய்து அப்பெண்ணை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் படிப்பைத் தொடர முடியாத நிலை என்றான். நான் அப்பெண்ணுக்கு உதவுவதாகக் கூறினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணுக்கு தோல் தொழில்நுட்ப பிரிவில் பட்டய பாடம் கிடைக்க பணம் முதற்கொண்டு அலைவதுவரை ஆவன செய்தோம். இன்று பதினைந்து வருட இடைவெளியில் அப்பெண் தனக்குத் தெரிந்த சில பேருக்கு இதுபோல் வுதவுவதாக அறிந்து மிகவும் சந்தோஷித்தோம். இப்பொழுதும் விழுதுகள் என்ற பெயரில் சிறு சிறு உதவிகள் செய்துவருகிறோம். இதுபோல் அவரவர்கள் தத்தமது சுற்றத்தை மேம்படுத்துவார்கள் எனில் இந்த சமுதாயம் கண்டிப்பாக உயரும். எல்லாமும் அரசாலேயே அமைத்துத் தரவேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
--------------XXX------------------XXX------------------
ஏழு வயதில் நான் ரமலான் நோன்பிருந்தேன் என்ற காரணத்தில் என் மகனையும் முதல் நோன்பு வைக்க விருப்பம் கொண்டேன். காலையில் நான்கு மணிக்கு ஒரு தம்ளர் ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து மாலை ஆறு முப்பது வரை வாயில் பச்சை தண்ணி கூட குடிக்காமல் வாந்தியுடன் எனக்கு ஷாந்தி தந்தான். நான் நோன்பிருந்த காலத்தில் இவ்வாறெல்லாம் வருந்திநேனா தெரியாது ஆனால் அவன் வாடியதில் நான் வருந்தினேன்.
--------------XXX------------------XXX------------------
நடிகர் நடிகைகள் துணிக்கடை, சோப்பு, சீப்பு, பேர்னஸ் க்ரீம் போன்ற விளம்பரங்களுக்கு வருவது பரவாயில்லை அது அவர்கள் தொழிலுக்கு தேவையானது. தன்னைப் போல் பளபளக்க, மினுமினுக்க என்று கூவி கூவி விற்கலாம். ஆனால் அடகுக்கடை விளம்பரத்தில் வருவது கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாதது. எந்தவகையிலும் பொருந்திப் போகாத ஒரு விளம்பரத்தில் நடிகரைப் போட்டால் லாபம் கொழிக்கும் என்று எப்படி நினைத்தார்களோ...!. நடிகரும் சரி நிறுவனமும் சரி பெக்குல மக்கு மகேஷ உருவாக்கினார்களோ....!. ஒருவேளை படம் போக கசில்லை எனில்... நகையை அடகு வைத்தாவது படத்தைப் பார் என்று சொல்கிறார்களோ.....!

காத்து உள்ள போதே கள்ள கட்ட நினைக்கிறார்கள்..... ;

No comments:

 

Blogger