Pages

நெஞ்சு பொறுக்குதில்லையே!!மும்பைக்குள் புகுந்து அப்பாவி மக்களை குருவி சுடுற மாதிரி சுட்டுத்தள்ளிய அஜ்மலுக்கு சிறையில் ஏ.சி யாம்! குடிக்கிற தண்ணீர் கூட கூலா இருக்கணும்னு வாட்டர் கூலர் வச்சுருக்காங்களாம். அடக்கடவுளே...

என்னே ஒரு மனிதாபிமானம், கண் எதிரே அவன் நடத்திய படுகொலைகளுக்கு இந்தியா தரும் மரியாதையை என்னவென்று வியப்பது!! நம் மனிதாபிமானம் அடுத்தவர்களை மேலும் மேலும் குற்றம் செய்ய தூண்டுகிறது, நாளை இதுபோல் மற்றொன்று நடவாமல் தடுக்க, வளைகுடா நாடுகளில் உள்ள சட்டம் போல், இங்கும் கொண்டுவந்தால்தான் இம்மாதிரி குற்றம் மட்டுப்படுத்தப் படும்.

சட்டங்கள் கடுமையாக்கப் படும்போது, பயம் வரும் பயம் மட்டும்தான் மக்களை நல்வழிபடுத்தப்படும் என்பது என் போன்ற சாமான்யனின் கருத்து.

வாழ்க இந்திய மனிதாபிமானம்!! வாழ்க இந்திய ஜனநாயகம்!!

ஜெய் ஹிந்து!!!!
;

தள்ளாடும் விழுது

ஆம்!! நான் என் வேலையை விட்டு, விட்டு ஊர் திரும்பப் போகிறேன். இன்று நடந்தது போல் உள்ளது. நான் இந்தியாவை விட்டு வந்து , ஐந்து வருடம் ஓடி விட்டது. உள்ளூரில் தாய், தந்தை உறவினர்கள் என்று சொந்தபந்தங்களுடன் கூடி வாழ்வதென்பது வரம் . அது பலருக்கு எட்டாக்கனி.

ஊருக்கு போவது, மட்டில்லா.... மகிழ்ச்சி என்றாலும், போய் நல்ல வேலை தேடி அமர்வது வரை, மனது சஞ்சலத்துடனே உழலும். என்னைப் போல வெளிநாட்டு வாழ் உயிர்களெல்லாம்...., அன்று பிறந்த குழந்தைதான் ....., நிலையான ஒரு வேலை குதிரும் வரை. நீண்ட சுய அலசலுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்தேன்.

என் முடிவை வீட்டிற்கு தெரியப் படுத்த தொலைப்பேசினேன்.... என் தந்தைதான் எடுத்தார்
"அப்பா!... நான்தான் போசுறேன்"
"என்னடா எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன்பா"
"அப்பா....பா...... நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்"
"ஏன்டா உனக்கு என்ன பைத்தியமா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ இன்னும் ஒரு இரண்டு வருடம் அங்கே இருந்தால்தான் நல்லது"
"அப்பா!! இல்லப்பா, நான் முடிவு பண்ணிட்டேன், இன்னும் ஒரு மாதத்தில் நான் ஊருக்கு வருகிறேன்" என்று நான் சொன்னதுதான் தாமதம் மறுமுனை நிசப்தமாக இருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் என் அம்மா வந்து பேசினார்கள்.

"ஏம்மா அப்பா போனை வைத்துவிட்டு போய்விட்டார்கள் ? நான் ஊருக்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை"

"அப்படியில்லை!, இப்பத்தான் உனக்கும், தங்கைக்கும் கல்யாணம் நடந்தது, அந்த கடன் மற்றும் நம் வீட்டுக் கடன் பற்றிய கவலை அவருக்கு"

"அதுக்காக நான் காலம் பூராவும் இங்கேயே இருக்கனுமா? இதற்க்கு விடிவே இல்லையா?"

"இல்லப்பா எங்களுக்கும் உன் கஷ்டம் புரிகிறது, இருந்தாலும்..... இன்னும் ஓர் இரண்டு வருடம் இருந்தால் நல்லா இருக்கும் என்று....."

"இல்லம்மா நீ என்ன சொன்னாலும் நான் வருவது உறுதி. அப்பாக்கு எப்போதுமே பணம்தான் பிரதானம் . எங்களைப் பற்றி அவருக்கு கவலையில்லை, உங்களுக்கு பணம்தான் முக்கியம், பின் எதற்கு பிள்ளைகள். 'பசிக்கு படுத்தவர்கள்' தானே" என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

ரொம்ப ஆற்றாமையாய் இருந்தது. என்ன இப்படி சொல்லிட்டாரே!, ச்சே அவருக்கு பிளைகள்மேல், அன்பில்லை இருந்தாலும்....., என் முடிவில் மாற்றமில்லை. மறுநாள் முதல் வேலை என் துறை அதிகாரியிடம் என் முடிவைச் சொன்ன்னேன்
"நான் உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன், உன் முடிவை நீ இன்னுமொருமுறை பரிசீலித்துவிட்டு, வந்து சொல்"
"ஒகே" என்று சொல்லிவிட்டு பின் இரண்டு நாள் கழித்து
"இல்லை சார் நான் என் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்"
"சரி!, நீ உன் ராஜினாமா கடிதத்தை கொண்டுவா" என்றார்.

என் ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொண்டு சென்றேன் அதில் அவர் கையெழுத்திட்டு "நீயே இதை பர்சனல் டிபார்ட்மென்ட் அனுப்பிவிடு" என்றார். சொன்னது போல் நான் முப்பது நாட்களில் விடுவிக்கப் பட்டேன் என் துறை பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் என் மேலாளர் "நீ அப்பொழுது வேண்டுமானாலும் இங்கே திரும்பி வரலாம் நான் உனக்கு உதவ காத்திருக்கிறேன்" என்றார்.

இத்தனை நாளாக வீட்டுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. ஊருக்கு கிளம்பும் அன்று இரவு தொலைப்பேசியில் "நான் நாளை காலை வருகிறேன்" என்று மட்டும் சொன்னேன்அதுவும் என் அம்மாவிடம் மட்டுமே. விமான நிலையத்தில் இறங்கினேன். நான் மட்டுமே தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தேன். வெளியில் வந்து பார்த்தல் என் குடும்பத்தினர் அனைவரும், என் மனைவியைத் தவிர (அவள் நிறைமாத நாட்கள் என்பதனால்....) என்னை வரவேற்க வந்த்திருந்தனர். எனக்கு ரொம்ப ஆச்சர்யம்!!. நான் நேற்று இரவு பதினோரு மணிக்குத்தான் தகவல் தெரிவித்தேன், எப்படி அந்த நேரத்தில் வண்டி ஏற்பாடு செய்து வந்தார்கள்?

ஓடிச் சென்று என் அன்னையை கட்டித் தழிவிக் கொண்டேன்
"நீங்கள் எல்லோரும் வந்ததில் எனக்கு மிக்க சந்தோசம்" பின் வந்திருந்த எல்லோருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து, வண்டியில் ஏறினேன். அங்கே, முன் இருக்கையில் என் அப்பா, கவலைதோய்ந்த முகத்துடன். அவரைக் கண்டதும் என் இத்தனைநாள் கோபம் ஊற்றெடுக்க..., அதை அடக்கிக் கொண்டேன். வீடு வரும் வரை வேறு எதுவும் யாரிடமும் பேசவில்லை.

வீடு வந்து சேர்ந்தேன். என் அறையில் மனைவியை காண ஓடிச் சென்றேன். என் மனைவியை கண்டதும், என் கோபமெல்லாம் பறந்தது, அவள் தோற்றமே மாறி, நிறம் போய், பார்க்க ரொம்ப அசிங்கமாக இருந்தாள்....., கரு தந்த மாற்றம் என்றாள் .
"அப்பா என்ன சொன்னார்கள் என்றாள்"
"நான் அவரிடம் போசவே இல்லை" என்றேன்
"ஏன் அப்படி செய்தீர்கள் அவர்தான் நேற்று நீங்கள் பேசியபின் வண்டி ஏற்பாடு செய்ய ரொம்ப கஷ்டப் பட்டார் . வண்டி டிரைவர், தூங்கிக் கொண்டிருந்தாராம், அவர் வீடு தேடி, அலைந்து கண்டுபிடித்து, அவரிடம் கெஞ்சி, வண்டி ஏற்பாடு செய்தார்கள்" என்றாள்.
"செய்யட்டும்!!!, இது அவர் கடமை"
களைப்பில் உறங்கிப் போனேன். பின் மதியம் உணவருந்தத் தான் வெளியில் வந்தேன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு போன பின் நானும் என் மனைவியும் உணவருதினோம்.

உணவருந்தி, என் அறை சென்றவன்தான். வெளியில் வரவே இல்லை!, அதற்குப்பின் என் தந்தை எங்கிருக்கிறாரோ அங்கே நான் நிற்பது கூட இல்லை. ஒரு பதினைந்து நாள் கழித்து, என் மனைவிக்கு பிரசவவலி வந்ததால்... அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.... டாக்டர் "சிசேரியன்" என்றார் நான் என் வாங்கிக் கணக்கில் இருந்து இருபத்தைந்தாயிரம் எடுத்து ஹாஸ்பிடலில் கட்டினேன். ஆண் குழந்தை என்றார்கள், அளவில்லா ஆனந்தத்துடன் குழந்தையை அள்ளி தூக்கினேன்.

என் தந்தை, என் பிள்ளையைப் பார்க்க உள்ளே வந்தார். நான் வெளியில் சென்றுவிட்டேன். அவர் தலை கவிழ்ந்தே உள்ளே வந்து பார்த்துவிட்டு, சென்றுவிட்டார். என் வாங்கிக் கணக்குகள் கரைந்து போய், நாளை எப்படி நாள் போகும் ? என்று மனதில் நினைத்துக் கொண்டே..... என் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்தேன்.

அன்று இரவு... என் அறைக்கு என் தந்தை வந்தார் நான் அவரை கண்டுகொள்ளததுபோல் இருந்தேன். "நான் போசுவது உனக்கு பிடிக்காது என்று தெரியும் இருந்தாலும்..... நான் உன் அளவுக்கு படிக்கவில்லை நீ இப்போது என்னவாக வேலை செய்கிறாய் என்று கூட எனக்குத் தெரியாது. நீயேதான் உனக்கான வேலை தேடவேண்டும், எனக்கும் யாரையும் தெரியாது, உனக்கு சிபாரிசு செய்ய. உனக்கே தெரியும் நம்மிடம் பணமும் இல்லை லஞ்சம் கொடுத்து வேலை ஏதும் வாங்க. நானும் ஒரு தகப்பன்தான். நீ தனியாளாக இருந்தால் நான் நீ வேலையை விட உடனே சம்மதித்திருப்பேன்.., ஆனால் நீயும் ஒரு குழந்தைக்கு தகப்பனாகப் போகும் நேரத்தில் வேலை இல்லை என்றால் ஊர் என்ன சொல்லும், நீ எங்களுக்கு பதில் சொல்லா விட்டாலும் உன் மனைவியின் வீட்டாளுக்கு என்ன பதில் சொல்லுவாய் அதுக்குத்தான் நான் அப்படி சொன்னேன்" என்றார் என்னைப் பார்க்காமலே.

பின் அவர் கையில் இருந்த நூறு ரூபாய் கட்டை என் கட்டிலில் வைத்துவிட்டு "என்னால் இப்போது இவ்வளவுதான் முடியும், இதை உன் செலவுக்கு வைத்துக்கொள்"

நான் கண்ணீர் பெருக்கெடுக்க, அவர் காலில் கிடந்தேன்... என்னைத் தொட்டுத் தூக்கியவர் கண்களில் கண்ணீர்......, என் வயதுகளில் நான் பார்த்திராத ஒன்று!!!.

"எந்த 'விழுதும்', மரத்தைத் தாங்குவதில்லை, அதற்கான அவசியமும் இல்லை. மாறாக............"

;

'நகை' ப்பூ......

நாளை விடுமுறைக்கு, எழுதிக் கொடுத்து சீக்கிரமே அலுவலகத்தை விட்டு கிளம்பினேன். செக்யூரிட்டி தனபாலனிடம் 3000ரூபாய் கடன் கேட்டிருந்தேன், நேற்றே "தரேன்" என்று சொன்னவன், மறந்ததினால்... "இன்று தருகிறேன்" என்றான். அவன் பின்புற கேட்டில் இருந்ததனால், என் வண்டியை எடுத்துக் கொண்டு, பின்புற கேட்டுக்கு வந்தடைந்தேன். யாராவது என்னைப் பார்கிறார்களா..... என்று மறுமுறை நோட்டம்விட்டு அவனருகில் சென்றேன்...
"சார் இந்தா சார் நீ கெட்ட 3000ரூபாய், கரீக்டா சம்பளம் வாங்குன ஒட்னே குத்தூடு சார்"
"சரிப்பா கண்டிப்பா தந்து விடுகிறேன், இதை யாரிடமும் சொல்லாதே"
"சர்சார்"

அவன் தந்த 2700 (300வட்டி போக) வாங்கிக் கொண்டு, திநகர் வந்து.... அந்த பெரிய நகைக்கடை உள்ளே நுழைந்தேன்...... 'நாளைக்கு எங்களுக்கு கல்யாண நாள்'. ஆச்ச்சு இன்றுடன் 12 வருடம் முடிந்து விட்டது.

இது 'அட்சய த்ரிதி' மாதம் என்பதால்..... எல்லா கடையிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. விற்பனைப் பிரதிநிதியைப் பார்க்கவே அரைமணி நேரம் பிடித்தது, இந்த கூட்டத்தில் என்னைத்தவிர எல்லோரும் கிலோ கணக்கில் நகைகள் வாங்கினார்கள்.

இந்த நெரிசலில், வெள்ளியில் கொலுசு வாங்க மனசு இடம் கொடுக்கவில்லை. விருடேன்று வெளியில் வந்தேன்...., வண்டியை எடுத்தேன், நேரே என் வீட்டருகில் உள்ள சின்ன நகைக் கடைக்கு வந்தேன்.... "என்ன சார் வேணும்"
"ஒரு நல்ல வெள்ளி கொலுசு வேணும்"
"உட்காருங்கோ சார்!" என்னை அமர்த்திய பிறகுதான் 'குளிரூட்டியை' இயக்கினார் அந்த கடைகாரர்.

பின், வெள்ளி கொலுசு வகைகளை எடுத்து காட்டினார். நிறைய முத்துக்களுடன் இருந்த கொலுசை தேர்வு செய்தேன்..... அதன் எடையைப் பார்த்து, பின்
"விலை 4500 ரூபாய்" என்றார்
"சார்...... என்னிடம் அவ்வளவு இல்லை, அதைவிட கம்மியாக.......... ஆனால் அதே டிசைனில், வேறு ஏதாவது இருந்தால் காட்டுங்கள்" என்றேன்
"இல்லைசார், இந்த டிசைனில் இது ஒண்ணுதான் சார் இருக்கு" என்றார்.
பின் அதற்கடுத்த கொலுசை தெரிவு செய்து, விலை கேட்டேன்
"இது 2800 ரூபாய்" என்றார் பின் கெஞ்சி கூத்தாடியத்தில்...., 200 ரூபாய் குறைத்து 2600 ரூபாய்க்கு கொடுத்தார்.

அதை வாங்கி, என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். வரும் வழியில் 70 ரூபாய்க்கு 'தமகாரோட் அல்வா' வாங்கிக் கொண்டு மீதம் இருந்ததுக்கு, மல்லிப்பூ வாங்கினேன். மனதில் இதை எப்படி என் மனைவிக்கு கொடுப்பது.... என்பதை ஒத்திகைப் பார்த்துக் கொண்டே....... வீடு வந்து சேர்ந்தேன். பூ, அல்வா, கொலுசு எல்லாவற்றையும் என் அலுவலகப் பையிலேயே வைத்து. குளித்து, உடைமாற்றி, இரவு உணவு உண்டபின், ஏதும் பேசாமல் படுக்கையை அடைந்தேன்.

உறக்கம் வராமல்..... எப்படி ஆரம்பிக்கலாம் ? என்று மனதில் வியுகம் அமைத்தேன். இரவு எல்லா வேலையும் முடித்து, மிகவும் அயர்ச்சியாக என்னருகில் படுத்த்தவளை.... சரியாக இரவு 12 மணிக்கு எழுப்பினேன்..... "என்னங்க, உங்களுக்கு வேற வேலையே இல்லை"
"ஏய்.... இங்க பாரேன்" என்று கையில் வைத்திருந்த மல்லிப் பூவை காட்டினேன் "ம்ம்.... அப்படிவையுங்க, நாளைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றாள்

பின்னர் மெதுவாக அவள் காதருகில் சென்று,
"கொஞ்சம் ஹாலுக்கு வாயேன்" என்றேன்
அவளும் என்ன? ஏதென்று தெரியாமல், என் பினாலேயே வந்தாள்...
"Happy Wedding Anniversary" என்று சொல்லி அவள் கையில் என் கவிதையை கொடுத்தேன்....
"ஆமா இது மட்டும் தானா....?" என்றாள்
"இல்லை!, நான் உனக்கு வேறொன்றும், வைத்திருக்கிறேன்" என்றேன்
ரொம்ப ஆவலாய்.... "என்ன?" என்றாள் "ம்ம்.... வெயிட்" என்று சொல்லி என் சட்டை பையில் இருந்து அந்த கொலுசை, எடுத்து என் கையில் ஒழித்து வைத்துக் கொண்டு....

"நான் இந்த பரிசைக் கொடுத்தால்...., நீ என்ன தருவாய்?" என்றேன்
"ஆமா..., என்னிடம் என்ன இருக்கிறது?, கொடுக்க, காட்டுங்க எனக்குத் தூக்கமாக வருகிறது" என்றாள்.

பின், என் கையில் இருந்த அந்த கொலுசை அவளிடம் கொடுத்தேன்.... மிகவும் ஆவலாய் "ப்பூ.... இதுதானா?" என்றாள் சுரத்தே இல்லாமல்.
"இதை வாங்கவே......, நான் என்ன பாடு பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும், பத்து வடிக்கு என் ஆபிஸ் செக்உரிடியிடம், கடன் வாங்கினேன்"
"யார் உங்களை இப்படி செய்யச் சொன்னா?, இந்த ௧௨ வருஷத்தில் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க வக்கத்துப் போன, ஒரு வாழ்கை எனக்கு விதிச்சிருக்கு" என்று விருட்டென எழுந்து படுக்கச் சென்றாள்

எனக்குத்தான் தூக்கம் வரவில்லை, இந்த கொலுசைக் கொடுத்து என்னவெல்லாம் பதிலுக்கு அவளிடம் இருந்து கிடைக்கும், என்று கனாக் கண்டேன்.

'நான் ரொம்பத்தான் ஆசைப் பட்டுட்டேனோ!!.'

கடைசிவரை அந்த இனிப்பை நாங்கள் இருவரும் சுவைக்கவில்லை. ;

மேன்மக்கள்! மேன்மக்களே!!!

"soory, i didn't see it" என்றேன்
"பரவாயில்லை சார்"
"என்னப்பா, தமிழா?"
"ஆமா சார்"
"சாரிப்பா தெரியாமல் அழுக்காக்கிட்டேன்"
"பரவாயில்லை சார் இதை சுத்தமாக வைத்திருக்கவே என்ன வச்சிருக்காங்க"
"இருந்தாலும் நீ இப்பத்தான் கழுவி....."
"பரவாயில்லை சார்"
"எந்த ஊர்?"
"தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு கிராமம்"
"இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது ?"
"ஆச்சு சார்!, மூன்று வருடம் ஓடிப்போச்சு...., இந்த கம்பனிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது..."

அதற்குள் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வர, கவனம் அதில் சிதற..., நானும் வேளையில் மூழ்கிப்போனேன். இந்த பையனை நான் பர்ததுமுதல்.... ரொம்ப நல்ல பையன், யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டான் ரொம்ப சிரத்தையாக, எந்த வேலையும் செய்வான். அவன் பணி, சுகாதாரப் பணி என்றாலும் வேறு எந்த வேலையென்றாலும்...., மாட்டேன் என்று சொல்லாமல் செய்வான். ரொம்ப அடக்கமான பையன்.


அதற்க்கு மேல் நான் அவனிடம் போசமுடியவில்லை, வேலைப்பளு காரணமாக நானும் ஒரு வாரம் அவனிடம் போசவில்லை. இதற்கிடையில், எங்கள் அலுவலகத்தில் ஒரு பார்ட்டி ஒன்று ஐந்து நச்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்ய என்னை அமர்த்தியதால்...., நான் மேலும் மூன்று சுகாதாரப் பணியாளர்களை உதவிக்கு சேர்த்துக்கொண்டேன்.


அந்த பார்ட்டி, மிகவும் சிறப்பாக நடந்தேறியது. எல்லா பொருட்களும் மறுபடியும் அதன் இருந்த நிலைக்கே...., கொண்டுவர வேண்டும். ஹோட்டலில் இருந்து, சிவப்பு கம்பளம் முதல் 'ஸ்பீக்கர்' வரை, எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றி, மறுபடியும் என் அலுவலகத்தில்..., அது அதை அதன் இடத்தில் பொருத்தி வைத்தார்கள்.

நான் எவ்வளவோ வற்புறுத்தியும் மீந்துப்போன உணவுகளைக் கூட அவர்கள் யாரும் கைவைக்கவில்லை. கேட்டதற்கு,
"இது எங்கள் கம்பனி உத்தரவு" என்றார்கள். இரவு வெகு நேரம் ஆனதால்...., வெளியில் எங்கும் அவர்களுக்கு உணவு கிடைக்காது.
"என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு,
"பரவாயில்லை சார்!, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார்கள்.

நான் அவர்களிடம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கொடுத்து, "நாளை நான் வர மாட்டேன்..., என்று சொல்லிவிட்டு" போகும்போது மணி இரவு இரண்டு.

மூன்றாம் நாள் நான் மறுபடியும் அந்த பையனைப் பார்த்தேன்... "அன்று என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றும் இல்லை சார்!, எங்கள் கம்பனிக்கு போன் செய்தோம், வண்டி வராது, என்றார்கள் இங்கேயே தூங்கி விட்டோம். பின்னர், காலை எங்கள் தினசரி வேலைக்கு, இங்கிருந்தே போய்விட்டோம் ". நான் என்ன சொல்வது என்று தெரியாமல்..., "சாரிப்பா, என்னால்தான் உங்களுக்கு சிரமம்" என்றேன் "அதனாலென்ன, ஒன்றுமில்லை சார்!" என்றான்.


"தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து ....., நீண்ட..... வரிசையில் நின்று, காலைக்கடன் முடித்து, குளித்து, உடைமாற்றி, மறுபடியும் மிகநீண்ட வரிசையில் நின்று...., காலை மற்றும் மத்திய உணவுகளை, மெஸ்ஸில் கட்டிக் கொண்டு, எங்களுக்கான வண்டியில் ஏறி, இங்கே வந்துவிடுவோம்...., எங்கள் வேலை காலை 6.30 மணிக்குத் துவங்குகிறது " என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...

மஹாபாரதத்தில், துரியோதனன் போர் வியுகம் அமைக்கும் பொது, படைத்தளபதியாக கர்ணனை நியமிக்கலாம் எனும்போது, பெரும் எதிர்ப்பு கிளம்புகிர்றது. பின்னர், மூத்தவர், பிதாமகர் பீஷ்மரே!!, படைத்தளபதி என்று அறிவிக்கிறான் துரியோதனன். பின், பிதாமகர் ஏனைய தளபதிகளை அமர்த்துகிறார்..... கடைசியாக காலாட்படைத் தளபதியாக.... கர்ணனை நியமிக்கிறார். கர்ணன் கோபம் கொண்டு "பீஷ்மர் உள்ளவரை களம் புகேன்!!!" என்று சூளுரைத்து, அவையை விட்டு வெளியேறுகிறான். பின் களம் சென்று மாண்டது இதிகாசம்.


இதில் "சத்ரியனுக்கு உண்டான தகுதியிருந்தும், என்னை கடைநிலை தளபதியாக நியமித்தாரே!!!" என்று அடங்கமாட்டாமல், சொல்லி அழுகிறான் மனைவியிடம் கர்ணன். நம்மில் எல்லோரும் மேன்மையான, வேலையே செய்ய விரும்புகிறோம். ஆனால் நமக்கும்....., சில வேலை செய்ய ஆட்கள் தேவைப் படுகிறார்கள்.


அப்பொழுதுதான்....., அவனைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது, "ஏம்பா!!!, இப்படி வந்து கஷ்டப்படுகிறாய்?" என்றேன் "என்ன சார் பண்ணுவது?, வானம் பொய்த்துப் போனதில்... எங்கள் வயுறு காய்ந்து...., ரொம்ப நாள் பசியை எதிர்த்து போராட முடியவில்லை!!!" என்றான். "நல்லா... படித்திருந்தால்!, இப்படி கஷ்டப்பட வேண்டியதில்லையே?" என்றேன்

"படித்த வேலைக்குப் பொருந்தித்தான்..... எல்லோரும் வேலை தேடுகிறார்கள்...., ஆனால்....!" என்றான் விரக்த்தி தொனிக்கும் குரலில்.

"என்னப்பா இப்படி சொல்லிட்ட!!!" என்றேன் "பின்ன, என்ன சார், பசி, பட்டினி விரட்டும் போது...., பால், பழம்தான் தேடுவோம்!!!, பதவிசான வேலையை இல்லை "எல்லாரும் உங்களமாதிரி அஃபிஸர் வேலைக்கே ........ போனால்.... இந்த மாதிரி வேலையைச் செய்யவும் ஆள் வேண்டுமே?"

"ஊரில் நிலம், நீர் என்று, நாங்களும் சொகுசாக வாழ்ந்த காலம் - கடந்தகாலம், நிகழ்காலம்.... ரொம்ப கொடியது, இப்பவும், நிலமெல்லாம் உண்டென்றாலும் பூமிதான் எங்கள் வயிரைபோல் காய்ந்து கிடக்கு.."

"அப்போ, நீ.........." "ஆமா, சார்! நானும் டிகிரி முடித்தவன்தான். தேடுன வேலை கிடைக்கவில்லை, கிடைத்ததை செய்கிறேன்" என்று சொல்லி... மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.

ஏனோ...... "எனக்கும் நானும் ஒரு டிகிரிதான் முடித்திருக்கிறேன் என்று சொல்ல பிடிக்கவில்லை". ;

உங்கள் வேட்பாளரைப் பற்றி அறிக

உங்கள் தொகுதி வேட்பாளரைப் பற்றி உங்க ளுக்கு என்ன தெரியும்?

"உங்கள் வாக்கை பதிவு செய்வதற்கு முன், ஒரு முறை க்ளிக் செய்யுங்கள்!'' என்கிறார் லிபர்டி இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான பரூன் மித்ரா.இந்த நிறுவனம் சார்பாக www.empoweringindia.org என்ற இணையதள துவக்க விழா சென்னையில் நடந்தது.

இந்தியாவின் அனைத்துத் தொகுதி வேட்பாளர்களைப் பற்றிய முழு தகவல்கள் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதி வேட்பாளரின் பூர்வீகம்,கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்கள், சொத்து விவரங்கள் என்று அத்தனை விவரங்களும் இங்கு இருக்கும்.

;

வாழ்த்தி வரவேற்ப்போம்


'அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இந்த சாக்கடையை சுத்தம் பண்ண 29 வயதே ஆன சரத்பாபு என்ற இளைஞ்சர் முன் வந்திருக்கிறார். சரத்பாபு சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் , நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.
இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு.
ஆறு பிள்ளைகளில் ஒருவராய் பிறந்து, இவ்வளவு தூரம் முன் ஏறியிருக்கிறார் என்றால்.... அது மிகப்பெரிய விஷயம் அதுமட்டுமில்லாது, இன்று அரசியலையும் ஒரு கை பார்க்க வருகிறார். இவரைப்போல படித்த துடிப்புள்ள இளைஞ்சர்கள் இன்றைய அரசியலுக்குத் தேவை.
வாழ்த்தி, வரவேற்ப்போம், அத்தொகுதியில் யாரவது இருப்பின் சரத்பாபுவிற்கு வாக்களித்து அவரைப்போல் நிறைய இளைஞ்சர்களை ஊக்குவிப்போம்.
ஜெய் ஹிந்த்!!!!!!!!!!
;

ஊனம்

எல்லோரும் வேக, வேகமாக, தங்கள் வேலைகளை முடித்து.... கிளம்பிகொண்டிருந்தார்கள். நானும், குளித்து ரெடியாகி, என்னக்கு தரப்பட்ட துணியுடுத்தி வாசலில் காத்திருந்தேன்....

'ம்ம்... எங்கே போறோமா?' வீட்டில் எல்லோரும் கிண்டி குழந்தைகள் பூங்காக்கு போறோம்.

ஒருவழியாக எல்லாம் சரியாகி, தேர் கிளம்பி தெருமுனை வந்தது... தெருமுனை கடையை பார்த்ததும்...... சாப்பாட்டு இலை வாங்க மறந்ததை, தன் நினைவில் கொண்டு அம்மா என்னை இலை வாங்கிவர அனுப்பினாள். நானும் இலை வாங்கிக் கொண்டு வேகமெடுத்து, அவர்களை பின் தொடர்ந்தேன் பஸ்நிலையம் நோக்கி. எல்லோரும் ராணி மேரி கல்லூரியில் இருந்து 21 நம்பர் பஸ் வரவும் அதில் ஏறினோம். என் மாமாதான் வந்ததிலேயே 'ஆம்பிள்ளை' என்று அவரிடம் டிக்கெட் எடுக்கும் பொறுப்பு விடப்பட்டது, நான் அவரிடம் "எவ்வளவு ஒரு டிக்கெட்?" என்று கேட்டேன் "ஒரு ரூபாய் இருபது பைசா" என்றார்.

'பீச்' ரோட்டில் வேகமாக வந்த பஸ், அடையாறு வழியாக அரைமணி நேரத்தில் கிண்டி வந்து சேர்த்தது. நாங்கள் இறங்கியதில் முழு பஸ்சுமே காலியாகி ஓட்டுனரும் நடத்துனரும் மட்டும் இருக்க...., பஸ் பரிதாபமாக அந்த இடத்தை காலி செய்தது. நான், என் தம்பி இருவரும் கொஞ்சதூரம் ஓடுவதும், பின் எங்கள் குடும்பத்தினரை தொடுவதும், மறுபடியும் ஓடுவதுமாக நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

மாமா மறுபடியும் ஒருமுறை தலைகளை எண்ணினார், மொத்தம் 27 பேர். பின், என் அப்பா கொடுத்த கடிதத்தை நுழைவாயிலில் காட்டினார். பின்னர் டிக்கெட் பரிசோதகர் அதை தனது மேல் அதிகாரியிடம் கொண்டுசென்றார். மேல் அதிகாரி மாமாவிடம் வந்து, "ஓகே சார் நீங்க போகலாம்" என்றார். மாமா என் அம்மாவிடம், "மச்சனுக்கு, ரொம்ப நல்ல மரியாதை இருக்கிறது. மேனேஜர்.. உடனே நம்மை உள்ளே அனுப்பிவிட்டார், பார்த்தியா!" என்றார். (என் அப்பா பூங்கா எதிரில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் அப்பொழுது பணியாற்றிக் கொண்டிருந்தார்.)

நாங்கள்தான் அன்று முதல் ஆளாக உள்ளே சென்றோம். பின்ன, காலை ஐந்து மணிக்கு எழுந்து, குளித்து, எல்லோருக்கும் தேவையானவற்றை சமைத்து 8.30 மணிக்கு, 'டான்' என்று பூங்கா வாசலில் இருந்தோம். அம்மாக்கு ஊஞ்சல் என்றால் ரொம்ப ஆசை, அதனால் ஊஞ்சல் பக்கத்தில் ஒரு மர நிழலில்....., எங்கள் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டோம். யார் எங்கே போனாலும் அந்த இடத்திற்கு வருமாறு அம்மா உத்தரவிட்டாள்.

அம்மா ஒரு ஊஞ்சலைப் பிடித்துக் கொண்டு "இதில் யாருக்கும் இடமில்லை, நான் மட்டுமே ஆடுவேன்" என்றார். என்னை அவருக்கு 'ஆட்டிவிடும்படி கூறினார். நானும் என்னால் முடிந்தளவு வேகமாக ஆட்டினேன், பின் நானும் ஒரு ஊஞ்சலில் கொஞ்சநேரம் ஆடிவிட்டு...., மிருகங்களைப் பார்க்கச சென்றேன். பின் அலைந்த களைப்பில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்... நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அம்மா ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை, பின் நாங்கள் சாப்பிட்டவுடன், என்னை, அவள் ஊஞ்சலில் 'ஆட' சொல்லிவிட்டு அம்மா சாப்பிடச் சென்றாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அந்த ஊஞ்சலை யாரிடமும் விட்டுதராமல் பார்த்துக்கொள்ள நான் நியமிக்கப்பட்டேன். இதில் மற்ற ஊஞ்சல் எல்லாம் எங்கள் 'கைவிட்டுப் போய்விட்டதனால்....' இதுஒன்றே எங்கள் வசமிருந்தது. அம்மா விரைவாக சாப்பிட்டு கைகழுவியும், கழுவாமலும்.... ஓடி வந்தாள். பின் நான் மறுபடியும் என் தம்பியுடன் விளையாட சென்றுவிட்டேன்.

மாலை நான்குமணி வாக்கில் யானை சவாரி ஆரம்பமாகும் என்பதனால்..... அதுவரை நான் இந்த ஊஞ்சலை விட்டு எழ மாட்டேன் என்றால். ஐந்து மணி சுமாருக்கு..., நாங்கள் எல்லாம் சவாரி முடித்து வந்தவுடன், அம்மா என்னை ஊஞ்சலை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு யானை சவாரிக்குச் சென்றால்.

நான் அதற்குள் ஒருமுறை சறுக்குமரம் ஏறலாம்......! என்று, என் தன்ம்பியை ஊஞ்சலை பார்த்துக்கொள்ளச் செய்து, சறுக்குமரம் ஏறச் சென்றேன். வந்து பார்த்த போது..... ஊஞ்சலில் யாரோ ஒரு பெண், 'இருபது' வயது மதிக்கத் தக்கவள் ஆறிககொண்டிருந்தாள்...!!!!! நான் மிகவும் ஆத்திரம் வர, அந்த பெண்ணை "ரொம்ப நெஞ்சழுத்தம், எப்படி?? நீ சின்னப்பையனை இறக்கிவிட்டு ஊஞ்சலை அவனிடமிருந்து பிடுங்குவாய்?" என்று ஏகமாக கத்தினேன்.... அதற்குள் அம்மா அங்கிருந்து ஓடிவந்து, அவள் பங்குக்கு அப்பெண்ணை கொஞ்சம் திட்டித் தீர்த்தாள். அதற்குள் அவள் ஏழுந்துக் கொண்டாள்.

அம்மா ஊஞ்சல் மறுபடி கிடைத்த சந்தோஷத்தில், ஓடிச்சென்று அமர்ந்துக் கொண்டாள். அப்பொழுது, அந்த பெண் "ஆன்டி, ரொம்ப 'தேங்க்ஸ்', நாங்கள் கோயம்பத்தூரில் இருந்து வந்திருக்கிறோம், இப்பொழுது திரும்பிப் போறோம் , அதனால்தான்..... உங்க சின்னப் பையனிடம் கேட்டு, ஒரு ஆட்டம் ஆடினேன், ரொம்ப 'தேங்க்ஸ்'" என்று புன்னகைத்துவிட்டு நடக்கலானாள்...... ஒரு கால் சற்று தாங்கித், தாங்கி.... என் அம்மாவும் நானும் ஊமையாய் நின்றோம்...... மனதில் ஊனத்துடன்.


இன்று எங்கள் வீட்டில் ஊஞ்சல் உண்டென்றாலும்.....! அம்மா, ஊஞ்சல் ஆடுவதில்லை, அன்றிலிருந்து............ ;

ஊரார் பிள்ளைக்கு ஊட்டியதில்....

என் மகனுக்கு உடம்பு சரியில்லாததால், அவன் மாத்திரை போடுவதற்கு முன், ஏதாவது சாப்பிட வாங்கிவர என்னைப் பணித்தால் என் மனைவி ரொம்ப 'நம்பிக்கையாய்'.

'வண்டி' எடுத்து கிளம்பினேன் வெகு 'அக்கறையாய்' கடையில் என் மாமாவின் நண்பர் ஒருவர் இருந்தார் ..... "என்ன மாமா எப்படி இருக்கிறீர்கள் " என்றேன்

"ஹும்! ஏதோ இருக்கேன்" என்றார்

"என்ன மாமா ரொம்ப வருத்தமாக சொல்கிறீர்கள்"

"ஒன்னும் இல்லப்பா" என்றார்

"உங்கள் மனைவி பிள்ளைகள் எல்லாம் எப்படி இருகிறார்கள் ?" என்றதுதான் தாமதம்.....

கண்ணில் நீர்பனிக்க "அவளை 'அத்துவிட்டுடலாம் ' என்று பார்கிறேன்" என்றார் நான் அதிர்ச்சியுற்றவனாக "என்ன மாமா என்ன பிரச்சனை" என்றேன்

"ஒண்ணுமில்லைப்பா! பசங்களுக்கு சரியாக சாப்பாடு உட்டத் தெரியவில்லை" என்றார் நான் அதீத அக்கரையில் "இதெல்லாம்... ஒரு காரணமா!! 'மாமா', உங்களுக்கு தெரியாததா?" என்றேன்

"இல்லப்பா! அவள் சரிபடமாடடாள் அதனால், அவள் அண்ணன் வீட்டிற்க்கே....! அவளை திருப்பி அனுப்பிவிட்டுட்டேன்" என்றார்

"என்......ன...? மாமா நல்லா படிச்ச!!!? நீங்களே இப்படி பேசலாமா, பிள்ளைகள் வளர்ப்பில் உங்களுக்கும், பங்கில்லையா?" என்றேன்

"இருக்குத்தான்!! ஆனால், இனி அவர்களை திருத்தவே...., என் மனைவியை தள்ளி வைக்கிறேன், 'வக்கீல் நோடீசும்' அனுப்பி இருக்கிறேன்" என்றார்

கவலை தோய்ந்த முகத்துடன் "மாமா!... கண்டிப்பாக உங்கள் முடிவுக்கு இது காரணமாக இருக்காது, அதுமட்டுமில்லாது... இந்த காரணம் 'ரத்துக்கு' போதாது" என்றேன்

"தெரியும்! அதனால்தான், 'வக்கீல் நோடீசில்' முக்கிய காரணமாக, கடந்த பத்து வருடமாக, எங்களுக்குள் தாம்பத்தியம் இல்லை என்று எழுதினேன், என் இத்தனை வருட வாழ்கை போனதற்கு அவள்தான் காரணம் " என்றார்

"என்ன மாமா இப்படி சொல்லலாமா..." என்றேன் கனத்த மனதுடன்

"உண்மைப்பா.... எங்களுக்குள் பத்து வருடங்களுக்கு மேலாக, 'ஒன்றும்' இல்லை, நான் பக்கத்தில் போனாலே..... கத்துகிறாள்" என்றார் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

"இதெல்லாம்...! பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை"

"இல்லப்பா எவ்வளவோ போசியாகிவிட்டது...! 'தீர்ப்பு' ஒன்றுதான் பாக்கி" என்றார்

"இருந்தாலும்...... ஒருமுறை உங்கள் மனைவியிடம் போசுங்கள்" என்றேன் "இல்லை கண்டிப்பாக நான் அவளை 'ரத்து' செய்துவிட்டு மறுமணம் செய்துக்கொள்ள போகிறேன்" என்றார்

"மாமா... குழந்தைகள், வளர்ப்பில் நிச்சயம் உங்களுக்கும் பங்கிருக்கிறது, வெளிநாட்டிலேல்லாம், ஒரு தாய் கருவுற்ற உடனே..... தாய், தந்தை இருவரும் தங்களை முறையாக பெற்றோராவதற்கு, தயார் படுத்திக்கொள்கிறார்கள். கருவுற்ற தாயை கவனித்தலில் இருந்து, பிள்ளைகள் வளர்ப்பு வரை , எல்லாவற்றையும் சொல்லித் தர அங்கே அரசாங்கமே... பல வாய்ப்புகளை, ஏற்படுத்தித் தருகிறது. அதனால் பிள்ளைகள் வளர்ப்பில் 'நிச்சயம்' உங்களுக்கும் பங்கிருக்கிறது" என்றேன்

"இல்லப்பா..... இப்போ எல்லாம் முடிந்து விட்டது , இனி நான் ஒன்றும் செய்யமுடியாது" என்றார்.

"ஏதாகிலும் நல்ல ஒரு முறைக்கு, இருமுறை யோசித்து செய்யுங்கள்" என்றேன்

எங்கள் விதண்டா வாதத்தில் நேரம் போனது தெரியவில்லை நானும் அவசரத்தில் கிளம்பியதால் கைக்கெடிகாரம் கட்டவில்லை 'சரி' என்று சுயநினைவு வந்தவனாக.......

"'ஐயோ சாரி' மாமா நான் வந்த வேலையே..... மறந்து விட்டேன் நான் பிறகு பார்கிறேன்" என்று அவரிடம் அத்துக்கொண்டு கடை நோக்கி விரைந்தேன்...., கடை மூடியிருந்தது விபரீதத்தை உணர்ந்தவனாக விட்டேன் ஒரு உதை என் வண்டிக்கு, அது உயிர்த்தெழுந்தது வீடு வந்து, கதவு தட்டினேன், ரொம்ப நேரம் காத்திருத்தலுக்குப் பின், என் அம்மா வந்து கதவைத் திறந்தார்கள்.

"சின்ன பிள்ளை அவனுக்குகூட உன்னால் உடனே வரமுடியாமல் அப்படி என்னதான்.........!!! வேலை, அவன் உன் பிள்ளை தெரிஞ்சிக்கோ" என்றார்

"மணி என்ன"

"மூன்று"

"ஐயோ !!!!"

இருட்டில் பூனைபோல் என் அறைக்கதவை திறந்தேன் உடை மாற்றி உணவருந்தாமல் படுத்துக்கொண்டேன்

நினைத்துப்பார்த்த போது அவர் சொன்னதில் ஒரு மிக முக்கியமான ஒன்று தாம்பத்தியம், சின்ன வயதில் இருந்து எனக்கு எவ்வளவோ கற்றுகொடுக்கப் பட்டிருக்கிறது ஆனால் 'கலவி......'

கேட்டால் மேற்கோள் காட்ட 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை' என்பார்கள்.... உண்மையில்......

"Unsaid is more in Sex"

'கலவி' என்பது கையாள்வது, 'தருவித்தலும், தருவிக்கப்படுதலும்', இன்பம் இங்கே...!!!

"Get less and give more is what Love Making"

உச்சத்தைத் தொடுவதே எண்ணமென்றாலும்......!!!

எச்சிலில்..., தொடங்குதல் முறை.

"Sex is mind driven than the body"

வாத்சாயனார் பிறந்த நாட்டில்..., முறையான செக்ஸ் கல்வி இல்லை என்பதை நாம் எல்லாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் . எந்த மதமும் முறையான, தாம்பத்யம் தவறென்று சொல்ல வில்லை.

செக்ஸ் கல்வி என்றால்.....

எப்படி 'செய்வது' என்பதை சொல்வதல்ல....

எப்படி 'அணுகுவது' என்பது........

முஹம்மது நபி (Peace be upon him) ..., "மக்களே...! 'பெண்கள்' உங்களுக்கான விளைநிலங்கள்" என்கிறார். கோயில் சிற்பங்கள் சிலவற்றிலும் 'கலவியே' பிரதானம்..., நீதிமன்ற படியேறும் பல வழக்குகளில் 'கலவியே' கூட காரணமாக இருக்கலாம்.

இந்துவின் வாழ்க்கை சிறந்த மூன்று குறிக்கோள்களைக் கொண்டது.

அர்த்தம், தர்மம், காமம்.

தர்மத்தின் ஒரு பகுதிதான் காமம், 'தர்மத்துடன் இணைந்ததுதான் காமம். அதனால் நான் காமமாய் இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னார்.

'கலவி' பற்றிய மூட நம்பிக்கைகள் விலகும்போது...., வக்கிர வித்தைகள் போய், வசீகர விஷயங்கள் உட்புகும்.

இதையெல்லாம் நினைத்து எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை என் மகன் என் காதருகே வந்து "டாடி....! நாங்கெல்லாம் பாட்டி வீட்டுக்குப் போகிறோம்" என்றான் பதறியடித்து எழுந்தேன் "என்னம்மா என்ன திடீரென்று... உன் வீட்டுக்கு என்றேன்?" என் மனைவியிடம் "உங்கள் மகனுக்கு, ஒரு ரொட்டித் துண்டு வாங்கிவர, துப்பில்லாத உங்களுடன் என்னால் இனி வாழமுடியாது" என்று விறு விறுவென சென்றாள்.....

நான் அவள் புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டே...., தெருமுனை வரைச் சென்றேன்.... வெறும் கைலியை கட்டிகொண்டே......

;

விதை

என் மகன் ஒரு நாள் தன் தொப்புளை காட்டி "இது என்ன?" என்றான்

நான் அப்போதைக்கு... தப்பிக்க "நீ சின்னபிள்ளையாய் அம்மா வயிற்றில் இருக்கும்போது, அம்மா சாப்பிட்ட உணவில் பாதி உனக்கு இதன்மூலமாகத்தான் கிடைத்து...!" என்றேன் 'அப்பா தப்பிச்சாச்சி'.

பின் ஒரு நாள் டிவியில் ஏதோ ஒரு படத்திலிருந்து ஒரு காட்சியில் நாயகன், நாயகி தொப்புளில் முட்டை போடுவதை பார்த்திருப்பான் போலும், என்னிடம் வந்து......

"'டாடி' ஒரு அம்மா வயித்துல பாப்பா இருந்ததா?, அதற்காக அந்த 'அய்யா' அம்மா வயித்துல... 'ஆம்லெட்' போட்டாரு 'டாடி,' பாப்பாக்கு ரொம்ப பசிச்சிதுன்னு அவரு அம்மா வயித்துல 'ஆம்லெட்' போட்டாரா? என்றான்.

நான் அதிர்ச்சியில் "ஆம்" என்றேன் சொல்லென்ன கோபத்துடன்....

இதில் ஒரு நல்லதும் உண்டு அவன் இன்னும் தொப்புளில் பம்பரம் விடுவதை பார்க்கவில்லை......

;
 

Blogger