Pages

குப்ப மேட்டரு....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று பிறந்தநாள் காணும் இசையின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாக்கு வாழ்த்துக்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படப் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பையா, நா.ம.அ, வரிசையில் இதுவும் நிற்கும். மறுபடியும் யுவன் தன முத்திரையைப் பதித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்போதே பச்சக் என்று மனதில் பதிகிறது.
--------------XXX------------------XXX------------------
தமிழ் நாட்டில் உள்ள கடைத்தெரு பெயர்பலகை நிறைய தமிழ் படுத்தி விட்டார்கள் ஆமா சிகப்பு பூதம் அதாம்பா (ரெட் ஜெயன்ட்), ஒன்பது மேகங்கள் (க்ளவுட் நயன்), சூர்ய தொலைகாட்சி சன் டிவி.... இதெல்லாம் தமிழ் பெயர்களா என்று கேட்டீர்களென்றால் நீங்கள் தமிழ் துரோகி என்று சபிக்கக் கடவது....
--------------XXX------------------XXX------------------
மற்றுமொருமுறை சூதாட்டப் புகார், ஒவ்வொருமுறை இப்பிரச்சனை எழும்போது மற்றைய தோல்விகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பணிந்து போதல் பணத்துக்கு மட்டுமே இருக்காது... வேறுபல மிரட்டல் வடிவங்களோ..., அதீத தேவை பூர்திகளோ இருக்கும் என்று நினைக்கிறேன். சோரம் போனவர்கள் ஓரங்கட்டப் படுவார்கள் என்கிறது சர்வதேச கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்.
ஆனால் பிடிபட்ட தரகன் ஒரே நாளில் விடிவிக்கப் பட்டதில் விசாரணையின் வீரியம் வலுவிழந்துவிட்டது.
--------------XXX------------------XXX------------------
வம்சம் மற்றும் நான் மகான் அல்ல பார்த்தேன். இரண்டுமே பிடித்திருந்தது. நா.ம.அ அந்த மாணவர்கள் எபிசோடு சற்றும் பயம்கொல்லவே செய்தது. இசையும் ஒளிபதிவும் கை கோர்க்க சரியான கலவையில் நகைச்சுவையோடு, ஒரு நல்ல படத்துக்கான எல்லா அம்சங்களோடு இருந்தது. வம்சம் வளரும் என்றே தோன்றுகிறது.
--------------XXX------------------XXX------------------
சமீபத்திய பெருந்தலைகள் வரும் விளம்பரங்களில் விஜய் வரும் ஜோஸ் விளம்பரம் நன்றாகவே இருக்கிறது. முப்பது நொடிகளில் ஒரு கதை சொல்லும் சாத்தியம் விளம்பரத்தில் மட்டுமே ஆகக்கூடிய காரியம். இது அந்த நிறுவனத்தின் புகழ் பாடுவதை விட விஜயின் புகழ்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது. விளம்பரத்தில் கதை தெரிவுசெய்யும் சூத்திரம் தெரிந்தவர், பெரிய திரையில் சறுக்குவது சற்று நெருடலே... இனியாவது நல்ல கதைகளை தெரிவு செய்து வெற்றி பெறட்டும்.
--------------XXX------------------XXX------------------
தேர்தல் ஜுரம் வேகமாக பரவி வருகிறது, இனி சாதனைகளை சொல்லி வேதனைகளை தொடரச் செய்யவும், கூழ் ஊத்துதல் முதல் குழு விவாதம் வரை, ஒளிப் பெருக்கி ஒடிந்தாலும் ஓயாது பிரச்சார அலை. ;

3 comments:

அன்பரசன் said...

யுவனுக்கு வாழ்த்துக்கள்

பித்தன் said...

வருகைக்கு நன்றி அன்பரசன்....

Raju said...

குப்ப மேட்டரு சக்க மேட்டரா இருக்கு.

 

Blogger