Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த தலைவர் குடும்பம், கட்சி தொண்டரடிப் பொடியர்கள் என்று கோவையே அதகளப் பட்டது. எல்லா கவிஞ்சர்களும் தலைவர் புகழ் பாடும் ஒரு மேடையாகவே இதை உருமாற்றினர். பலவித கருத்துகள் விமர்சனங்களையும் புறம் தள்ளிய இதன் வெற்றி கவனிக்கத் தக்கது. இது ஒரு தனி மனிதனின் கனவு. உலகமே இன்று தமிழையும் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஒரு மாநாடு.


One Man Show
--------------XXX------------------XXX------------------
நம்ம அணு ஹாசனுக்கு மறுமணம் நடக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது, விகாஸ் ராணுவத்தில் பணி புரிந்தார். அந்த மன முறிவுக்குப் பின் மீண்டும் இவருக்கு காதல் அரும்பியிருக்கிறது இந்த திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.


Happy and long Married life
--------------XXX------------------XXX------------------
சமீபத்தில் வலையுலகில் நடந்தது ஓய்ந்த பிரச்சனையின் வீரியம் குறைந்து போன நிலையில், மறுபடியும் காரணகர்த்தாவை ஏழுத அழைக்குது நட்பு வட்டம். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா....? வருவது தவறில்லை மீண்டும் தவறிகூட இந்த தவறைச் செய்யக்கூடாது.


Dont go to pavilion
--------------XXX------------------XXX------------------
சூப்பர் சிங்கர் போன்றே சன்டிவியும் சங்கீத மகா யுத்தம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாளடைவில் ஏனைய கலக்கப் போவது, கவுத்தி அடிப்பது போன்ற நிகழ்ச்சிகளை விழுங்கி ஏப்பம் விட்டது போல, இந்த சங்கீத மகா யுத்தம் சுப்பர் சிங்கரையும் விழுங்கி ஏப்பம் விடும் என்பதில் ஐய்யமில்லை.


Cut throat competition
--------------XXX------------------XXX------------------
கேப்டன் மிக மும்மரமாக அம்மாவுடன் சிட்டிங்கில் இருக்கிறார். தேர்தல் செலவு, குறைந்தது பதினைந்து சீட் என்று ஏகப்பட்ட கண்டிசன்கள். அப்போ இவ்வளவு நாள் தனித்து போட்டியிடிவேன்ன்னு சொன்னதெல்லாம் சும்மாவா...... கட்சியாவது கொள்கையாவது......


Money Makes many things possible
--------------XXX------------------XXX------------------
ராவணன் சரியாக நின்று போரிடாததால்.... சிங்கம் சீறிப் பாய்கிறது, இருந்தும் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் வைத்து தினுசு தினுசான விளம்பர யுக்திகளை கடைப் பிடித்து, அதன் வேகத்தை கூட்ட முயற்ச்சிக்கிறது தயாரிப்பு தரப்பு. விட்டால் தியேட்டரில் சமோசா போண்டா விற்பவரைக் கூட பேட்டி எடுத்துப் போடுவார்கள்.


Marketing Strategy

;

No comments:

 

Blogger