Pages

மூட்டைப் பூச்சிக்கு பயந்து...

என் வீட்டில் மூட்டைப் பூச்சியின் தொல்லை அதிகமானதினால்... அதை ஒழிக்க ஒரு தனிப்படை அமைத்து, (நம்ம பள்ளி, கல்லூரி capitation fees ஒழிப்பு கமிட்டீ போல) நான் தலைமைஏற்று, என் home minister, மற்றும் இரு செயல் வீர தம்பிகள் ஆகியோர் அதிரடி தீவிர வேட்டையில் இறங்கினோம், இதில் complain தந்த media and பாதிக்கப் பட்ட பொதுமக்களாக என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள்.

ஒவ்வொரு இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேடி vaccum cleaner போட்டு உறுஞ்சுவது என் வேலை, என் பின்னாடியே வந்து ஸ்ப்ரே அடிப்பது என் தம்பியின் வேலை, பின் மாட்டியவர்களை சாகும்வரை தூக்கிலிடவேண்டிய பங்கு என் மனைவிக்கு. எல்லாம் முடித்து அதை சுத்தம் செய்து வீட்டைக் கழுவி விட்டு எல்லாரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம். ரொம்ப நிம்மதியாக இருக்கிறது என்று என் பிள்ளைகள் சந்தோஷித்தார்கள். என் தந்தையால் மிகுந்த பாராட்டைப் பெற்றோம்.

ஹோட்டலில் வயிறு ரொப்பி வீடு வர மூன்று மணி நேரம் ஆனது. வீடு வந்து கதவு திறந்ததும்.... எங்களை வரவேற்றது ஒரு மூட்டைப் பூச்சி. என் தந்தை சொன்னார் இது போகாது, ஒன்று நாம் வீட்டைக் காலி செய்யவேண்டும், இல்லையேல் வீட்டையே கொளித்திட வேண்டும் என்றார்.

இதைப் போலவே ஒரு வாரத்துக்கு முன் கல்லூரிகளில் அதிரடி சோதனை அவ்வளவு பணம் சிக்கியது, லைசென்ஸ் ரத்து என்று எல்லா டிவிக்களும் அலறின. ஆனால் நடப்பது என்னவோ அதற்க்கு நேர்மாறன ஒன்று. சிக்கலில் மாட்டிய பூந்தமல்லிக்கருகில் இருக்கும் ஒரு பொறியியல் காலூரியில், என் சித்தி பொண்ணுக்கு இரண்டாமாண்டு சேர்க்கைக்கு போனபோது, மிக பகிரங்கமாக, ஆறு லட்ச ருபாய் DD எடுத்து வருமாறு சொன்னார்கள், கேட்டதற்கு மீடியாவில் போடுவது மாதிரி எல்லாம் நடக்க முடியாது என்று சொன்னார்கள்.

இப்பொழுது வீட்டை மாற்றலாமா? அல்லது கொளுத்தலாமா? என்று யோசித்து வருகிறோம். இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து...... ;

மாயாண்டி குடும்பத்தார் - விமர்சனம்

தருண் கோபி, மணிவண்ணன், ராஜ்கபூர், G M குமார், பொன்வண்ணன், சீமான், சிங்கம் புலி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, ஜகன்னாத், தமிழரசி, பூங்கொடி
நெறியாள்கை : ராசு மதுரவன்
மியூசிக் : சபேஷ் முரளி

மாயாண்டி குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது, பங்காளி சண்டையை பற்றிய கதைதான் என்றாலும், அந்த மதுரை மண் மணத்தை கண் முன் நிறுத்துகிறார் ராசு மதுரவன். ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மாயாண்டி திடீர்யென இறந்து போக கடைசி மகனின் நிலைதான் கதை. அந்த கடைசி மகனின் பார்வையில் இருந்து கதை சொல்லி இருக்கிறார். சீமான் தானே எழுதிய பாடலைப் பாடி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது, பாடலில் ரத்தத்தை சூடேற்றும் வரிகள் தெறிக்கின்றன.

மனைவிகள் தம்பியைப் புறக்கணிக்கும் போதெல்லாம், அண்ணன்கள் உருகி உருகி தம்பியை உபசரிப்பது அருமை. கள்ளக் காதலையே தெரிந்து செய்யும் போது கூடப் பிறந்த பொறப்புக்கு செய்வதை தெரியாமல் செய்யவேண்டியிருக்கிறது (பொட்டில் அடித்த உண்மை - சபாஷ் ராசு மதுரவன்)

இசை சபேஷ் முரளி, பாடல்கள் பின்னணி இசை மதுரை மணத்தை தேனாகப் பாயவைக்கிறது சபாஷ்!!.

மாயாண்டி குடும்பத்தார் - நாமும் தைரியமாக போய் அவர்களுடன் கறிசோறு சாப்பிடலாம். ;

குப்ப மேட்டரு - III

நேற்று மட்டும் வெவ்வேறு விதத்தில் மூன்று பாலியல் வல்லுறவு நடந்திருக்கிறது. ஒன்று ஒரு காவல்துறை அதிகாரியே ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டிருக்கிறார், மற்றொன்று எட்டு வயது சிறுமியை ஒருவன் வல்லுறவு கொண்டு கொன்றிருக்கிறான்.

இதில் நம்மை அதிர்ச்சியடைய வைத்த காவல்துறை அதிகாரியை என்ன செய்வார்கள்? நிரூபிக்கப்பாட்டால்... (நிரூபிக்க இன்றைய தேதியில் DNA போன்ற அதிநவீன முறைகள் உள்ளது) அந்த காமுகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.... அதுவும் அப்பெண்ணுக்கு ஏதாவது நல்ல வக்கீல் கிடைத்தால் ஒழிய.... இல்லையேல், வழக்கு இழுத்துக் கொண்டே போய், அப்பெண்ணும் அக்காமுகனும் மூப்பெய்திய பொழுதில் கடைசியில் அவன் விடுதலையாகலாம். அல்லது அவன் சிறையில் தின்னு கொழுத்து, மீண்டும் ஒரு தவறுக்கு அச்சாரம் போடுவான்.

இதற்க்கு பதில் அவனுடைய வேலையைப் பறித்து, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கோ அல்லது அவள் கணவனுக்கோ அவர்களின் தகுதி திறமைக் கேற்ப ஒரு அரசாங்க பணிகொடுக்கலாம். அந்த காமுகனின் GPF PF போன்ற சேமிப்புகளை இவர்கள் பெயருக்கு மாற்றி விட வேண்டும்.

அவனுடைய உறுப்பு இனி சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படும் வகையில் ஏதாகிலும் ஹார்மோனல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

அவனின் கதையையும் அவனுக்கு விதிக்கப் பட்ட தண்டனையையும் எல்லா காவல்துறையிலும் திருடர்கள் அறிவிப்புப் பலகையில் ஒட்டவேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை குற்றங்கள் கம்மியாகாது

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

மாசிலாமணி படத்தில் மற்ற எல்லா ஹீரோவைப் போல் ஒரு காதல் படத்தில் அறிமுகமான அடுத்தப் படத்திலேயே நகுலும் அடிதடியைக் கையில் எடுத்திருக்கிறார். கதைப் பழசு என்றாலும் டைரக்டர் தெரிகிறார். இதைப் ப்ரமோட் பண்ணும் வகையில் நகுலும் சுனைனாவும் தமிழ்நாடு முழுக்க சுற்றிவருகிறார்கள், கல்லா கட்டும் முயற்சியில் இது புது வகை.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------


ஆஸ்திரேலியாவில் மேலும் இரண்டுபேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் நிலைமை மோசமாகுமுன் இந்திய அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனே இரண்டு அரசும் பேசி செயலில் இறங்க வேண்டும். இல்லையேல் சிங்கபூரில் நடந்தது மாதிரி மிகப் பெரிய கலவரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை. பொறுமைக்கும் எல்லையுண்டு அரசே!!.

அஸ்திரேலிய கல்வி மந்திரி திரு. லிசா பால் டெல்லி வந்து வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் திரு. வயலார் ரவியைச் சந்தித்தார் அப்பொழுது திரு. வயலார் ரவி கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. லிசா பால் இனிவரும் நாட்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறையும் வகையில் உறுதியான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகத் தெரிகிறது (அப்போ தாக்குதல்கள் நடக்கும் ஆனா குறையும்? இது எப்டி இருக்கு?)

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

இந்தி மிட்நைட் மசாலா நடிகை ராக்கி சாவந்த் தனது சுயம்வரத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் இதை NDTV ஒளிபரப்ப இருக்கிறது. (இன்னும் தனது முதலிரவைத்தான் ஒளிபரப்பவில்லை. CDயில் தனியே வெளியில் கிடைக்கிறது, ஆனால் அது வந்திருந்த மாப்பிள்ளைகளுடன் இல்லை, அவர்களுக்கு இது தெரியுமோ? தெரியாதோ?). வந்திருந்த 16 போரையும் மணக்க விரும்புவதாக இந்த 28 வயது கிளி ஜோள்ளியது. ;

குப்ப மேட்டரு - II

சட்டசபையில் துணை முதல்வரை வாழ்த்திப் பேசினார் என்று திரு. எஸ் வி சேகர் மீது காடுமையான கோபத்தில் இருக்கிறது தலைமை. இதைப்பற்றி திரு. எஸ் வி சேகர் கூறுகையில்..... ''சட்டமன்ற உறுப்பினர்களை ஆட்டு மந்தையாக வைத்துகொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது (இன்றுவரை இவரும் அதில் ஒரு ஆடுதான், அதையும் அவரேதான் சொல்லியிருக்கிறார்), நான் துணை முதல்வரை வாழ்த்திப் பேசும்போது, முதலில் என்னை என் சாதியைச் சொல்லிக் கேவல மாகத் திட்டினார் கலைராஜன். ஆனால், நான் என்ன சாதியோ அதே சாதிதான் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும். 'மேற்கொண்டு ஒருவார்த்தை பேசினா உன்னைப் போட்டுத் தள்ளிடுவேன்' என்று என்னைப் பார்த்துச் சொன்னார் கலைராஜன்"

இவர்கள் மக்கள் பிரதிநிதிகள், ஆனால் சட்டசபையில் தெருச் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் சாதிச் சண்டையாக்க முயற்சிக்கிறார்கள். பேசியவரும் கேட்டவரும் தத்தமது சாதியையும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களையும்மே அவமதித்திருக்கிறார்கள்.

மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர், தன்னுடைய இளவயது மகன் திலீபன்ராஜை வைத்து சிசேரியன் ஆபரேஷனில் ஈடுபட்டது...., அதற்க்கு மெடிக்கல் கவுன்சில், முருகேசன் மீது நடவடிக்கை எடுத்தது நாடறிந்தது. இந்நிலையில், அதே மணப்பாறையில் ஜி.கே.எம். என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார். அதற்க்கு நாம தேர்ந்தெடுத்த அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.... பாவம் அமைச்சருக்கு இவ்விசயம் தெரியாதுபோலும்... அப்படின்னா மெடிகல் கவுன்சில் எடுத்ததா சொன்ன நடவடிக்கை என்ன?

எப்படியோ தனது காதல் அரங்கம் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிட்டார் வேலு பிரபாகரன். ரசிகர்களே!! காத்திருங்கள் திறந்த மனதுடன்.....

மேலும் ஒரு கட்சி வரப் போகிறது. வந்ததுங்களே இன்னும் சொன்னதைச் செய்யல.... இளைய தளபதி கட்சி ஆரம்பிக்கப் போகிறது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது. அவர் தந்தையே இதை உறுதி செய்திருக்கிறார். (ண்ணா நல்லதுங்கண்ணா!!)

காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததோ.... இல்லை பனம்பழம் விழும்நேரம் காக்கா உட்கார்ந்ததோ!! வெர்ஜின் மொபைல் ஆன்டி விளம்பரம் இப்பொழுதெல்லாம் வருவதில்லை. இப்பொழுது வரும் கார்டூன் வோலம்பரம் ரசிக்கும்படியே இருக்கிறது. நிறுத்திய அத்துணை உள்ளங்களுக்கும் பித்தனின் நன்றிகள். ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வண்கம்,

ஒரு மாசத்துக்கு முந்தி ஒர்நா..... காத்தால அஞ்சு மணிக்கு ரிச்சால தூங்கினு இர்க்கசொல்லோ..... ஒரு பூமா வந்து கோபாலபுரம் வர்யான்னு கேட்டுச்சு? ஓகேமா ஏறி குந்துன்னு சொல்லி, கோபாலபுரம் போனேன்பா.... அங்கே ரொம்ப பெரிய க்யு இர்ந்துச்சி, பூமா என்ன வேயிடிங்க்ள போட்டுட்டு உள்ளார அவங்க ஹஸ்பண்ட பாக்கப் போச்சி.......

நானும் சரின்னு ஒரு பீடி வலிச்சிக்னே...., அங்கே இர்ந்த செகுர்டியாண்ட "என்னாபா அல்லாரும் இம்மா சீக்கிரமே இங்கன வந்துகீராங்கோன்னு?" கேட்டுகுனேபா.... செகுர்டி "அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு". "அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு?" கேக்கசொல்லோ "இந்த ஸ்கூல்தான் வருசா வருஷம் first வர்தாமிள்ளன்னு" சொன்னாரு.

அதுக்குள்ளே பூமா அது ஹஸ்பண்ட இட்டாந்து ரிச்சா பின்னாடி குந்த வச்சி சாயா, நாஸ்தா குட்தூது. பாய் சாப்டசொல்லோ அவராண்ட
"என்ன பாய் இது அவ்ளோ பெரிய உச்கூலா"
"ஆமாம்பா இதுதான் எல்லா வருசமும் first வருது, இங்க சேத்தா பிள்ளைங்க நல்லா படிக்கும்"
"இங்க நம்ம புள்ளைய சேக்க முடியுமா பாய்?"
"அதுக்கு வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும், வருசத்துக்கு முப்பதாயிரம் செலவாகும்ன்னு" சொன்னாரு
"எதுக்குபா வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும்?"
"அப்பத்தான் பசங்களுக்கு வீட்டிலும் சொல்லி கொடுக்க முடியும்"
"அப்போ இவங்க உச்கூல்ள என்ன சொல்லி குடுப்பாங்க?"
"அது ஸ்கூல் ரூல்"
"என்ன ரூலோ..... பூ.... நமக்கு அதெல்லாம் வேணாம்பா, எம்புள்ள வூட்டாண்ட கீற கவர்மெண்டு உச்கூல்லையே படிக்கட்டும்"
"என்ன ரிக்ஷாகார் இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இந்த 'Q' எதுக்குன்னு நெனச்சீங்க, இது வெறும் application வாங்க மட்டும்தான், இன்னும் interview, donation இருக்கு, அதுக்கப்புரமாதான் அட்மிச்சின், donation எப்படியும் ஐம்பதாயிரம் கேட்பார்கள், அப்புறமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு, வீடு ஐந்து கிலோமீட்டர்க்குள் இருக்க வேண்டும்" ன்னு பூமா சொல்லுச்சி.

"இதுக்குத்தான் நான் நேத்து ராத்திரியே இங்கே வந்து கியுவில் நின்னேன்"

"அட உடு பாய் நமக்கு இது தோதுபடாது, என்னிக்கோ ஒரு ரா கண்ணு முழிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல!!!"

மறுக்கா இது நடந்து ஒரு வாரங் கழிச்சி அந்த பூமாவ மர்கேட்டுல பாத்தேன் "என்ன பூமா சீட்டு கேட்சிதான்னேன்?"

"இல்லப்பா கார் இல்லன்னு சீட் கெடைக்கல, இப்போ எம்பய்யன் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டோம்"


"ஒகே பூமா வர்டா......."

மனசுகுல்லோ "அப்போ பாவோம் பாய்க்கு அன்னக்கி ரா தூக்கமும் வேஸ்டாப் பூடுச்சா.....?"

நாந் தெரியாமத்தான் கேக்குறேன்மா நம்ம டாக்டர் அப்துல் கலாம், இப்போ ராக்கெட் உட்ட டாக்டர் மயிசாமி அண்ணாதுரை, அல்லாம் இந்த உச்கூள்ளயா படிச்சாங்க?

அப்படியே மொத ரேங்க் எடுத்தாலும் அது ஏதோ ஒரு பொண்ணோ, ஆணோதானே...? அல்லருமா எடுப்பாங்க....?

என்ன---ஓப்பா..... ;

குப்ப மேட்டரு - I

நேற்று மாலை சன் நியூசில் மாசிலாமணி திரைப்படம் திரைஅரங்கில் பிச்சுக்கொண்டு ஓடுவதாக காட்டினார்கள், அதுவும் தலைப்புச் செய்தியில். ஏற்கனவே நொடிக்கொருதரம் ஒவ்வொரு சானலிலும் மாற்றி மாற்றி அதன் ட்ரைலரை போட்டு காதுசவ்வை கிழிக்கிறார்கள், இதில் இந்த தலைப்புச் செய்தி இன்று பிதற்றலில் தலைப்பாகி இருக்கிறது.

இதுபோல்தான் இதற்குமுன் எடுத்த காவியப் படைப்புகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் அந்தந்த படங்களின் உண்மை நிலை நாடறிந்தது.... (தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடுச்சு). இனி அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், டைரக்டர் எல்லாம் ஆளாளுக்கு ஒரு சானலில் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒரு ஸ்லாட்டில் நான் நடிக்கும்போது...... அது அப்படி, இது இப்படி......, நான் கழட்டினேன், பூட்டினேன் என்று சொல்லுவார்கள். சன் டாப் டென்னிலும் படம் அடுத்த பத்து வாரத்திற்கு முதல் இடத்தில் இருக்கும், பாடல்களும் அவ்வாறே.

இப்பொழுது நம் கேள்வியெல்லாம்..... ஏன் இப்படி உண்மைக்கு புறம்பான நியூசைப் பரப்ப வேண்டும்? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான், ஆனால்..... அதையே எல்லோரும் பாக்க..... ஊம்..…, ரசிக்க..… ஊம்.... திணித்தால் எப்படி?

கடந்த வெள்ளிக் கிழமை பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வைத்து வெடிக்கச் செய்திருக்கிறார்கள், அதுவும் வெள்ளிக் கிழமை தொழுகையின்போது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும்..... அவர்கள் மனசற்றுப் போனவர்கள், என்ன கொடுமையான நிகழ்வின் எதிர்ப்பாக இதைச் செய்திருந்தாலும்....... அவர்கள் எந்த மதாக இருந்தாலும், அவர்கள் கடவுள் இதை மன்னிக்க மாட்டார். பாகிஸ்த்தான் வளர்த்த காடா இந்த தீவிரவாதம், இன்று அவர்கள் மேலேயே பாய்கிறது.

நாளுக்கு நாள் இந்த மிஸ் சென்னை சென்னைமேன் நிகழ்ழ்சி (விஜய்), கண் கூசும் அளவுக்கு போகிறது. வெறும் ஜட்டியோடு ஷவரில் நனைவது, சக பங்கேற்பாளர்களுடன் குத்தாட்டம் போடுவது என்று ஏகத்துக்கும் அட்டூழியம் நடக்கிறது. பேஷன் ஷோவ்க்கு நிகராக அசிங்கங்களை அரங்கேறுகிறது.

நேற்று இரவு கண் விழித்து T20 மேட்ச் பார்த்ததில் ஒரு நன்மை இனி கண் முழிக்க வேண்டாம், ஆனால் காலை ஆபிசில் எனக்கு நல்லா பழுக்க காய்ச்சிய கம்பி இருந்தது அதில் உக்கார்ந்ததனால் சூ.... சூ.... எரிகிறது. ;

ராஜாதி ராஜா – விமர்சனம்

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், காம்னா, மீனாக்சி, ஸ்னிக்தா, மும்தாஜ், போஸ் வெங்கட், கருணாஸ், மற்றும் பலர்.
இசை : கருணாஸ்
கதை+திரைக்கதை+இயக்கம் : ஷக்தி சிதம்பரம்

கதை :
லாரன்சின்தந்தை இறக்கும் தருவாயில், லாரன்சிடம் "உன் மூன்று அண்ணன்களையும்
முறையே, போலீஸ், வக்கீல் மற்றும் டாக்டர் ஆக்கவேண்டும்" என்று சத்யம் வாங்கி இறக்கிறார். (ஆமா அது ஏன் தம்பியிடம்?) லாரன்சும் தன் அண்ணன்களை படிக்க வைக்க, சினிமாவிலே மட்டும் சாத்தியமான கார் துடைப்பது, பொட்டலம் கட்டுவது, கை வண்டி இழுப்பது என்று மிக மிக கஷ்டப்பட்டு, எல்லோரையும் தன் சத்தியத்தின் படியே டாக்டர், வக்கீல், போலீஸ் என்று ஆக்குகிறார் (அதானே இல்லேன்னா....... அவன் என்ன ஹீரோ?). பின் அவர்கள் பாதை மாறுகிறார்கள் , அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்..... கதை.

மும்தாஜ் பேசும் டயலாக் எல்லாம் சொந்த வசனம்போல் உள்ளது, சும்மா…. கேரக்டர் உடன் ஒன்றிய நடிப்பு என்று சொல்ல வந்தேன். ஒரு பைட், ஒரு காமடி, ஒரு லவ் சீன என்று தெள்ளத் தெளிவான திரைக்கதை. பின்னணி இசையில் கருணாஸ் தெரிந்த அளவுக்கு நடிப்பிலோ..... பாடல்களிலோ..... தெரியவில்லை (முயற்சித்தால் இசையில் வாய்ப்பிருக்கிறது).

நான்கு ஹீரோயின்களும் கொடுத்த காசுக்குமேல் கூவி இருக்கிறார்கள்...............சாரி சாரி ரசிகர்களைக் கவர்ச்சி ஆட்டத்தில் திணறடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் காத்தலும்...... அழித்தலும்....... ஒருவனே என்கிறார் இந்த ராஜாதி ராஜா. ;

தோரணை

படம் - தோரணை
நடிகர்கள் - விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கிஷோர், பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர்...
இசை - மணி ஷர்மா
திரைக்கதை, இயக்கம் - சபா ஐயப்பன்

மூன்று கோணத்தில் இருந்து கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..... ஆனால்.....? அதில் குழம்பி, ரசிகர்களையும் குழப்பி இருக்கிறார்கள். இது ஏற்கனவே தருண்கோபி காட்டிய வழி......தான்.

கதை : விஷால் அண்ணன் கிஷோர் சின்ன வயசிலேயே காணாமல் போய்விடுகிறார், அவரைத்தேடி.... விஷால் சென்னை வருகிறார். ஆனால், தன் அண்ணன் உயிருக்கு இருக்கும் ஆபத்திலிருந்து, அண்ணனை மீட்டாரா ? என்பதே மீதிக்கதை. இடை இடையே ஸ்ரேயுடன் காதல் செய்கிறார், கிடைத்த இடத்தில் சந்தானத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதுதான் தனக்குண்டான பாதை என்று விஷாலே முடிவு செய்து படம் நெடுகிலும் பன்ச் டயலொக் பேசுவது, பறந்து பறந்து அடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பக்கம் பக்கமாக டயலொக் பேசி, தொழில்முறை தாதாக்களை திருத்தமுடியும் என்றால் போலீஸ்க்கு வேலை ஏது?

தோரணை - விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாக்கும்,
ரசிகர்களுக்கும் பெரிய தலைவேதனை. ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வணக்கம்,


நேத்து நம்ம வெல்டிங் குமார புழல் ஜெயிலில் போட்டுத் தள்ளிட்டாங்கலாம்பா.....


குமாரோட ஜெயில்ல இருந்த அன்பு, கார்மேகம், ராஜா இவங்க மூணுபேரும் சேர்ந்து குமார மௌடர் பண்ணிட்டங்கலாம்பா.... ஆமா...... நாந் தெரியாமத்தாந் கேக்குறேன் , அதுவரைக்கும் போலீஸ் இன்னா பண்ணினுஇருந்தது?


தப்புத்தண்டா பண்ணவங்கலதான் ஜெயில்ல போடுவாங்க ஆனா அந்த ஜெயில்லயே தப்புப் பண்ணினா எங்கே போடுவாங்க. ?

ஜெயில்ல கீரவனுக்கு கத்தி எப்டிப்பா கட்ச்சிது? இன்னாவோ ஜட்டில கத்திய மற்ச்சி வச்சீனு இறந்தானா!!

குமார் வெளியில இர்க சொல்லோ இன்னா ரப்பசர் பண்ணியினு இர்ந்தாந் தெர்யுமா? இப்பபார் புட்டான் அத்தாம்பா லைப்பு பெர்சுங்கோ சும்மாவா சொல்ச்சிங்கோ "கத்தி எட்த்தவனுக்கு கத்தியாலதாம்ப சாவு!!"

செத்தவன் ஒன்யும் நல்லவன் இல்யே!! உடு போவட்டும், நம்ம போயப்பப் பாப்போம்.

;

வவுறு எரியிது....

'கள்' எறக்க தட விதிச்சிருக்காங்கோ உண்மைதான் !! ஏதோ கோவை சரகத்தில் தென்ன விவசாயிகள் 'கள்' எறக்கி இருக்காங்கோ..., போலீஸ் புடுச்சிக்கினுப் போய் கோர்டுல உடாம.... அவங்கள அம்மணமாக்கி... ரூம்ல ஓட உட்டுருக்காங்க. என்னய்யா இது ஞாயம்.

இந்த போலீஸ்க்கு என்னமாதிரி அன்னாடங் காச்சிங்கள காண்டு ஏத்றதே வேலையாபுடுச்சி. காச்சினது தப்புதா இல்லீங்கள அதுகொஸ்ரம் இப்டிலாந் கொட்சல்குடுக்னமா. இன்னமாதிரி ரப்ச்சர் ஆபிசருங்கள வேலையஉட்டு துக்கணும் அக்காங்...

அர்சாங்கம் விக்கிற சரக்கத்தான் வாங்கி குடிக்கினம்னா என்ன மாதிரி அன்னாடங் காச்சிங்க ஊட்டுக்கு எப்படி துட்டு குடுக்றது. ;

கோட்டர் கோயிந்து - ஹிஸ்ட்ரி

அல்லாருக்கும் வணக்கம்!!!

நான்தான் கோட்டர் கோயிந்து, அண்ணாத்த பித்தன் என்க்கு கிளாஸ்மேட் (glassmate), அவராண்ட சொல்ற மேட்டர... ஏதோ இன்டர்நெட்டுல போடுவாரமில்ல ...., அட்தாபா நம்ம மேட்டரயும் போடச்சொன்னே, இனி தின்த்திகும் ஏதாவது சொல்லலாம்னு யோச்சினுக்கீரன்.

அப்பால நம்ள பத்தி இன்னா சொல்றது..... ரிச்சா வலிக்கிறது தொழிலு, ரெண்டு கட்டு பீடி, கோட்டரு, ரவகானம் சோறு இது இர்ந்தாப் போதும்பா....

தின்த்திகும் கோட்டரு,

ஞயிதுக்கியம தியட்டரு,

அரிப்பெடுத்தா 'மேட்டரு'

இத்தாம்பா நம்ம ஹிஸ்ட்ரி இபோதைக்கி அப்பீட்டு......

;

இப்பவே கண்ணக் கட்டுதே....

விஜய் டிவியில் மிஸ் & மிஸ்டர் சென்னை என்ற காவிய நிகழ்ச்சியில்..... சிறந்த ஆண் மற்றும் சிறந்த பெண்ணுக்கான தேடலில் ஒரு பகுதியாக, ஏற்காட்டில் இரண்டு, இரண்டுபேர் ஜோடியாக மூங்கில் கொடியைஎடுத்துச் செல்வது, பூகி பைக் ஓட்டுவது என்ற வீர தீர சாகசங்களைச் செய்தார்கள் (இது எல்லாம் எப்படி சிறந்த சென்னை வாசிக்குத் தகுதியாகுமோ).

தோற்றவர்கள், ஜெயித்தவர்கள் என்ற பாரபட்சமின்றி.... தங்கள் பார்ட்னரை கட்டிப்பிடி வைத்தியத்தில் குளிப்பாட்டினார்கள். இதைப் பார்த்தபோது இது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸெஸ் சென்னைக்கான போட்டியோ.... என்ற ஐய்யம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. (பின்ன நம்ம வயிர் எறிவது யாருக்குத் தெரியும்)

இதில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, திநகரில் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிய உள் பனியனோடு வந்தார் (என்ன அவசரமோ). பங்குகொண்ட அனைவரும், தொகுப்பாளினி முதல் நடுவர்கள் வரை எல்லோரும் கூடுமானவரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்பது ஊபத்தகவல்.

சிறந்த சாகச ஆண் பெண் தேர்ந்தெடுக்கும் முன் பங்குகொண்ட அனைவரும் ஜோடி ஜோடியாக அணிவகுத்து வந்தனர். இதில் சில பேரை சென்ற வாரம் ஆங்கிலம் சரியாக பேசத் தெரியவில்லை என்று போட்டியிலிருந்து விளக்கினர் (கணம் பொருந்திய நடுவர்களே!!! நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்த ஆண் பெண் சென்னை என்பதை மறந்துவிடீர்களோ!!!).

இப்பவே கண்ணக் கட்டுதே!!! ;

ஆரம்பிச்சிட்டாங்கையா.......

போன வாரம் வரை ஐ.பி.எல் ஜுரத்தில் இருந்த பிள்ளைகளை இப்பொழுது ஐ.சி.சி. 20/20 ஜுரம் பிடிக்கும். இது லண்டனில் நடக்கும் என்பதால் அவர்கள் தூக்கத்தை வேறு கெடுக்கும்.

நிலைத்து நின்று ஆடும் ஆட்டமான ஐந்து நாள் கிரிக்கெட் எங்கே வழக்கொழிந்து போகுமோ என்று வருத்தம் ஓங்க இந்த மேட்ச்களைப் பார்க்கவேண்டி இருக்கிறது. எல்லா விளையாட்டைப் போல் இதுவும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்த மாற்றம் சற்று பயம்கலந்த நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

என்னதான் அடித்து ஆடுவது, மூன்று மணி நேரத்தில் போட்டிக்கான முடிவு, ஒவ்வொரு பந்தும் எல்லையைத் தொடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு, எல்லா பந்தயும் விலாசவே எதிர்நோக்கும் மட்டையாலனை கையாள கூடுதல் முயற்சி எடுத்துப் பந்து வீசுவது, என்று நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பே!!! இதற்கிடையில் ஒளிப்ம்பிக்கிலும் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தேறி வருகிறது, என்ன இருந்தாலும் ஐந்துநாள் ஆட்டம்தான் கிரிக்கெட்டின் முதுகெலும்பு, அதுதான் ஆட்டத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

இந்த T20போட்டிகள் முழுதும் வியாபார நோக்கங்களையே குறி வைத்து ஏய்யப் படுகிறது, போட்டிகளின் நடுவில் ஊக்கிகளின் (Cheer Girls) ஆட்டம் (விளையாட்டின் நடுவில் ஆடுபவரின் எண்ணமெல்லாம் அடுத்த பந்தை எப்படி வீசுவது அல்லது அப்படி எதிகொள்வது என்பாதாகத்தான் இருக்கும் அதில் அவர்கள் எங்கே இந்த ஊக்கிகளைப் பார்ப்பது ) , போட்டியைக்
காண வரும் சினிமா மற்றும் வட்டார பிரபலங்களால் போட்டிக்கு விளம்பரம் கிடைத்தாலும்....., இதில் அவர்களும் பயனடைகிறார்கள் என்பதே நிதர்சனம்.

யார் செய்த புண்ணியமோ!! இது இந்த முறை பள்ளி விடுமுறையின் போது வருகிறது இல்லையென்றால்..... பொற்றோர்களின் பாடு இன்னும் கவலைக்கிடமாகப் போகும். அட்சயத் த்ரிதியைப் போல், காதலர்தினம், அன்னையர்தினம், தந்தையர்தினம் போல் இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமே. எல்லா விளம்பரதாரரும், வியாபாரிகளும் குச்சி ஐஸ் விற்பவர் முதல்.... கோடிகளில் புரளும் பெரிய பெரிய நிறுவனகள் எல்லாம் இதை தங்கள் விளம்பர யுக்தியாகவே பயன் படுத்திகிறார்கள்.

இதில் அதிக ரன் அடிக்கப்போவது டோனியா, ஹெடனா அல்லது குரோம்பேட்டை கோவிந்தா, அதிக விக்கட்டை வீழ்த்தப்போவது பிரெட்லீ, ஷோயப் மாலிக் அல்லது மடிப்பாக்கம் மரியா என்பது தொடங்கி அதிகமுறை சிக்ஸ் அடித்தவர், கேட்ச் விட்டவர் என்று தொல்லைக்காட்சிகளிலும் போட்டி வைத்து நம்ம தொலைப்பேசி மற்றும் அலைப்பேசி பிள்ளை எகிற வைக்கும் உசார்.

இத்தனை கேள்விகளையும் மீறி இந்த வகை ஆட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வெற்றியே.

சாரிங்க நானும் இன்னக்கி இந்தியா பாகிஸ்தான் பயிற்ச்சி ஆட்டம் பாக்கணும் விடு ஜூட்...... ;
 

Blogger