Pages

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வந்கம்பா!!

முன்ன மாரி உப்போ சவாரி சரியா வர்தில்லபா நம்ம பொயப்பு கொஞ்சம் டல்லடிக்குது. உச்கூல் அடுத்தவாரம் தெரந்துக்குனாக்கா.... நமக்கு ரெண்டு ரெகுலர் உச்கூல் சவாரி வந்துரும், அப்டியே பொயப்பு ஓடீடும்.

அப்றோம் அல்லாரும் எப்படி கீறீங்கோ இம்மா நாலும் நான் உங்கள கண்டுக்காம இர்ந்துட்டேன்பா. நாம பேச ரொம்ப விஷயம் இர்ந்துது, ஆனா நான்தான் வரலபா, இப்போதான் வந்துட்டேன் இல்ல, இனி பாரு நம்ம ஆட்டைய.... "ஒர்தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேம்பா....." அக்காங்....

படிப்பு கட்ணம் குறையும்னு சொன்னாங்கோ, ஐய்....யா அடிச்சிதுரா லக்கி ப்ரைஸ், நம்ம புள்ளாண்டான கூட இங்க்லீஷ் உஸ்கூல்ல போட்டுடலாம்னு திங்க் பண்ணுரதுக்குல்லோ..... திடீர்னு தனியார் பள்ளி சங்க நாட்டாமைங்க நம்ம தலீவர கண்டுக்னதுல, உப்போ அரசு அந்தர் பல்டி அடிச்சி 'விரைவில் கல்விக் கட்டண நிர்ணயம்பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்'ன்னு சொல்லுது.

கமால வாங்கிட்டு.... கமுக்கமா காதும், காதும் வெச்சாமாதிரி சைலண்டா ஜகா வாங்கிடுவாங்கோ.... நல்லது நடக்கும்னு வாயப் பொலந்துக்கின்னு இர்ந்த பெத்தவங்க வாயில பெரிய ஊசிப் போன போண்டாவா வப்பாங்கோ.

ஏற்கனவே இதுமாதிரிதான் காலேஜு பீச குறையும்னு ரயிடுலாம் பண்ணனாங்கோ ஆனா ஒன்யும் புடிபடல. அல்லா காலேஜும் அவன் இஷ்டத்துக்குத்தான் பீஸ் புடுங்குராங்கோ.

காப்ரேசன் உஸ்கூல்ல இன்னாபா இல்ல...? நல்லாதாம்பா கீது, கொஞ்சம் நம்ம வாத்திமாறுங்கோ அவங்க வேலைய ஒயுங்கா பாத்தா, அது போதும்பா. இந்த பேமானி பெத்த சோமாரிக்கு, கார்பரேசன் உச்கூல்தான் விதிச்சது.

சவாரி வராப்ல கீது நா கயண்டுக்குரேன், வர்டா.....

;

குப்ப மேட்டரு...

மங்களூர் விமான விபத்து ஒரு தேசிய சோகம். தவறு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நிறைய ஊகங்கள் ரெக்கை கட்டுகின்றன. ஊடகங்களும் இழப்பின் எண்ணிக்கையை தன விருப்பத்துக்கு கூட்டி குறைத்துச் சொல்கின்றன. உயிர்களை புசித்து ஏப்பம் விட்டு மனித, இயந்திரத் தவறென்பதில் அர்த்தமில்லை. இனி இதுபோல் நடக்காமல் அதைத் சரி செய்வதே அந்த ஆத்மாக்களுக்குச் செய்யும் அஞ்சலி.

--------------XXX------------------XXX------------------

நாம் தமிழர் என்று முழங்கியவர்களும் இப்பொழுது தனிக்கட்சி தொடங்கி விட்டனர். இருக்குற கட்சி போதாதென்று மற்றுமொரு கட்சிக்கு IJK தொலைக்காட்சியில் தொல்லை கொடுக்கிறார்கள். எல்லோரும் தலைவனாகனும்னு நினைச்சா யாருதான் தொண்டனா இருக்குறது.

--------------XXX------------------XXX------------------

சினிமாவையே விஞ்சும் ஒரு கதை தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி தன் வக்கிர எண்ணத்தை நிறைவேற்ற ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியிருக்கிறார். நடந்தது இதுதான். ஏதோ ஒரு கேசில் நீதி வேண்டி இந்த காமுகன் இருக்கும் நிலையம் சென்றிருக்கிறனர் கணவனும் மனைவியும்.

பார்த்த உடனே இவருக்குள் காமம் பாஸ்பரசாய் பற்றிக்கொள்ள அந்த தம்பதியை அடிக்கடி தன்னை தேடி வரும்படி செய்திருக்கிறார். அவரது வக்கிர பார்வை பிடிக்காமல் இந்த பெண் வரவில்லை என்றால் வீடு தேடி வந்து தன் இச்சைக்கு இறை தேடி இருக்கிறார். இவனுக்கு பயந்தே அவர்கள் வேறு இடம் மாறிவிட்ட போதும், தொல்லை தாளவில்லை. கணவன் வெளிநாடு சென்றது இந்த காமுகனுக்கு ரொம்ப வசதியாய் போய் விட்டது. என்ன தேவையோ அதை மிரட்டியே பெற்றிருக்கிறான்.

இப்பொழுதும் அந்த பெண்ணை மறைத்து வைத்து, கணவனை விரட்டி அடித்திருக்கிறான். தன் அரசியல் செல்வாக்கால் இந்த கேசை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். இவ்வளவுக்கு பிறகும் அந்த கணவன் தன் மனைவி மனதால் நல்லவள், அதனால் நான் அவளுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார். "நல்லார் ஒருவர் உளரேல், கோடையிலும் மழை பொழியும்".

--------------XXX------------------XXX------------------

பய்யாவ சுறா விழுங்கியது, சுறாவ சிங்கம் அடிக்கும்னு சொல்லி சொல்லி பார்ப்பவர் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். சுறா சூம்பிப் போயி சுப்புக்கே இரையானாலும் குடும்ப தொலைக்காட்சியில் வெற்றின்னு முரசறையுறாங்கோ. ஆககூடி தங்கள் சர்வாதிகாரத்தை வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள்.

இனி அடுத்த சப்ப படம் தங்கள் பானரில் வரும்வரைக்கும் சுறாவும், சிங்கமும் கம்பீரமாக முன்னணியில் இருப்பார்கள்.

--------------XXX------------------XXX------------------

கற்புக்கரசி, கலியுக கண்ணகி குஷ்பூ ஒரு தொலைகாட்சி பேட்டியில், தனக்கும் பிரபுவுக்கும் தொடர்பிருந்தது உண்மை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், பிரபு மனைவிக்கு இது மனக் கஷ்டம்தானேன்னு கேட்டதுக்கு, காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லியிருக்கிறார். இப்போ புரியிதா கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வச்சுக்கிரதுல தப்பில்லை, அது பப்பி லவ்வுனாலும் டப்பி லவ்வுன்னாலும்.

;

கூடையில் என்ன பூ....?

வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில், மந்தார இலையில் விருந்து இவருக்கு. சாயம் போனாலும் சரக்கு போனாலும் வாடிப் போகாத குஷ்பூ. வழக்கு முடிந்ததும் மறுபடி வழுக்கி விழாமல் இருக்க தாய் கழகத்தில் சேருவார், தேசிய கட்சியை தேடிப்போவார் என்றெல்லாம் ஆருடம் சொல்லப் பட்டது.

ஆனால் இனி கழகத்தின் கண்மணியாய் வலம் வருவார். மேலவை, கீழவை எதிலாவது ஏறி அமர்வார். ஓடி ஓஞ்ஜாலும், பாடி தேஞ்ஜாலும்... ஓடுற குதிரையில ஒக்காந்தால் தானே ஊர் போயி சேர முடியும்.
தலிவரே சொல்லிட்டாரு குஷ்பூ முற்போக்கான பெண் என்று, இனி ஒரு ....போக்கும் அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது.

இனி நெஞ்சு கணக்கும், மஞ்ச புடிக்கும், மானாட மாயிலாட, பெண் சிங்கம்னு கர்ஜித்தே இவர் காலம் போகும். ;

சிங்கம் சிலுப்பிட்டு கெளம்பிடுச்சு........

தமிழுக்கு சேவை செய்யவே பிறப்பெடுத்தவங்க நாங்களெல்லாம். அதனால சிங்கம் மறுபடியும் களம்ஏறங்கிடுச்சே.........

கொஞ்ச நாள் ஆபிசுல ஆப்பாவே இருந்தது, அதனாலதான் என்னால தொடர்ந்து சேவை செய்ய முடியவில்லை. இனிமே பின்னி பெடலேடுக்க வேண்டியதுதான் பாக்கி.

வாங்கடா சோடி போடுவோம் சோடி, வலையில வெளையாடுறவன், வெத்தா எழுதுறவன், வேரும்பயன், எவனா இருந்தாலும் ஒரு கை பார்க்காம தூங்க மாட்டான் இந்த பித்தன். ;
 

Blogger