Pages

குப்ப மேட்டரு...

சில நாட்கள் முன்னாடி நம்ம ஹிந்தி பிட்டு பட நடிகை ராக்கி சாவந்த், மிகப் பெரிய சுயம்வரம் நடத்தி, அதை டிவியில எல்லாம் ஒளிபரப்பி, ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தாங்க. அதே போல நம்ம தமிழ் சினிமா தொடை, இடை அழகிகளும் இதைச் செய்யலாம்னு இருந்தாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் மனசும் ஒத்து போகவில்லை என்ற கருத்தில்.... ஒத்து போய் பிரியலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க.

இது எல்லாம் வீண் விளம்பர யுக்திதான்னு இப்போ தெளிவாகத் தெரிந்து விட்டது. இருவர் எதிர்பார்ப்பும், எதிரெதிர் திசையிலிருந்ததால்... இந்த விலகல். அது சரி அவன் அவளிடம் எதிர் பார்த்தது அவளை, அவள் அவனிடம் எதிர்பார்த்தது பணத்தை. ஆசைகள் அதிகமானதால்.... நிராசைகள் நிலையானது.

எலி எள்ளுக்கு காய்ந்ததும், புலி புல்லுக்கு ஏங்கியதும், புராணங்களில் கூட இல்லை.

---X---X---

கிரிக்கெட் அம்பயர் டேவிட் செப்பர்ட் நேற்று மரணமடிந்து விட்டார். அவரது சிரித்த முகமும், கூர்மையான பார்வையும், தேர்ந்த கிரிக்கெட் அறிவும் உலகறிந்ததே!!. அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

---X---X---

பெங்களூரையே நடுங்கவைத்திருக்கிறான் மோகன்குமார். ஒன்றல்ல...இரண்டல்ல...19 கொலைகள். அத்தனை பேரையும் சயனைடு கொடுத்துக் கொன்றிருக்கிறான். மூன்று மாதங்களுக்கு ஒன்று வீதம் கடந்த 5 வருடங்களில் 19 பெண்களைத் தீர்த்துக்கட்டிய இவனைப் போல ஒரு சீரியல் கில்லரை இந்தியா இதுவரை கண்டதில்லை!

இது அவன் நினைவில் வைத்துச் சொன்ன்னது ஆனால் இது 60க்கும் மேல் என்று போலீஸ நம்புகிறது. அவன் மயக்கிய பெண்களில் ஒரு நக்சலைட்டும் உண்டு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பெண்களே உஷார்....!

இதை அவனே ஒத்துக் கொண்டிருக்கிறான் சீக்கிரமாக இந்த வழ்க்கை முடித்து அவனுக்கு உச்சபச்ச தண்டனை அளித்தால் தப்பு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும். செய்வார்களா....? ;

குப்ப மேட்டரு...

ஜகதீஷ் ஷர்மா ராஜஸ்தானில் ஒரு தற்காலிக பள்ளியில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். அவரது வேலை பள்ளியை சுத்தம் செய்வது, நேரம் தவறாமல் பள்ளிக் கூட மணி அடிப்பது. அவரது சம்பளம் கடந்த 23௦ வருடமாக ரூபாய் இருபது.

அட மூடர்களே.... இருபது ரூபாயில் ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்.....

அரசு இயந்திரம் பழுதடைந்து உள்ளதா இல்லை பயன் படாமலே உள்ளதா. ஷர்மாவும் பல பேர் காதிலே மணி அடித்தும், பல கதவுகளைத் தட்டியும் பயனில்லாமல் இப்பொழுது கோர்ட் படி ஏறியிருக்கிறார்.

அவருக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.

---X---X---X

நகைச்சுவை நடிகர் மயிசாமி மகன் அருமை நாயகம் நடிக்கும் முடிவிலிருக்கிறார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஒரு தமிழானை விட்டுடுமா..... வாழ்த்துவோம், வரவேற்போம்.

---X---X---X

ஒரு தமிழ் பத்திரிக்கைக்கு எதிராக நடிகர் சங்கம் நடத்திய கூட்டத்தில் சில முன்னணி நடிகர்கள் உளரியத்தில் சுனாமி அடிக்கிறது. பத்திரிக்கைகள் ஏக கடுப்பில் உள்ளன. இவர்கள் வளர பத்திரிக்கைகள் உதவ வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனையை என்றால் கண்ட மேனிக்கு பேசி வில்லங்கத்தை வேலைக்கு வாங்குவது வழ்க்கமாக உள்ளது.

பின் நானா அப்படி சொல்லவே இல்லையேன்னு பலத்தையே திருப்பி போடுறது வழைமையாக உள்ளது. இவர்கள் எல்லோரின் வண்ட வாளங்களை அறிந்த பத்திரிகை நண்பர்களுடன் சுமுகமாகவே இருப்பது நலம்.

இதுவும் இப்போ கோர்ட் படி ஏறியிருக்கு இருபது பேர் கொண்ட இந்த லிஸ்டில் தப்பாக பேசாதவங்களும் இருக்காங்களாம் காரணம் கேட்டால்..... அதில் பேசும்போது புரட்சி தமிழான் இங்கிருக்கும் எல்லார் மேலையும் கேஸ் போடுங்க உங்களால் என்ன புடுங்க முடியும்னு பார்க்கலாம்னு சொல்லியிருக்காரு. புரட்சின்னு பேர் வச்சுக்கிட்டு புரண்டா படுப்பாரு. ;

கோயிந்து புலம்பல்....

அல்லார்க்கும் வந்கம்

இன்னாபா எப்டிகீரீங்கோ, ரொம்ப நாளிக்கா உங்கள அல்லாரையும் பாக்கமா ரொம்ப கஷ்டமா இர்ந்துதுபா. தீவாளிக்கு நம்ம மாமனாரு வூட்டுக்கு போயிருந்ததாலதாந் கோயிந்து வல பக்கமே வர்ல.

நேத்து நம்ம பரத் படம் ஆறுமுகம் பாத்தேந்பா, அட நம்ம தலீவர் படம் அண்ணாமலைய அப்டியே உல்டா பண்ணி கீறானுங்கோ. ஆர்ரா டரக்டருன்னு பாத்தா.... அண்ணாமலைய டரக்ட் பண்ண நம்ம சுரேஸ் கிருஷ்ணாபா. இன்னடா இதுவும் ஒரு ரிமேக்கான்னு கேட்டுக்நாக்கா...? இல்லையாம்ல....!, கத வேற ஒரு ஆளுதாம்பா.

இன்னாடா இவனுங்கோல்லாம் பெரிய டரக்டருங்கோ....? அவந் படத்த கூட தெரியாம கீறானுங்கோ. வேற எவனோ உன் கிட்ட வந்து ஒந் கதயவே சொன்னா...., கஸ்மாலொம் எந் கதயவே என்னாண்ட கமால் பண்ணி ஓட்றியான்னு....? கலுத்தாம்பட்டயில தட்டி ஓட்டாம, கமுக்கமா படம் பண்ணி விக்கிராறு.

ஏற்கனவே இப்டித்தான் பாட்சாவ ஆந்திராவுல இருந்து துட்டு குடுத்து வாங்கி, கஜேந்திரான்னு பண்ணாரு நம்ம சுரேசு. நடிக்கிற கபோதிக்குதான் தெரியல, ஆனா தயாரிப்பலருக்குமா தெரியல..? துட்டு போடுற துக்கராம்முங்க உஜாரா இருக்க வேணாம்.

பதினஞ்சு சீனையும் பக்காவா டகுல்பாஜி பண்ணி திருப்பி எடுத்து.... அத எப்படியும் ஓட்டிடலாம்னு ட்ரீம் காணுராங்கோ. சரி எடுக்குறதுதாந் எடுக்குரீங்க, கொஞ்சம் பந்தாவான அக்டருங்கள போட்டு எடுக்க வேண்டியதுதானே, நேத்து வந்தவந், ஒன்னுக்கு போவத் தெரியாதவன போட்டு, நம்ம தலீவர் படத்த, அவர் பேர கேடுக்குராங்கோ.

இதுக்கு பேசாம சிந்தாதிரி பேட்டயில சீஸ்ஸான வண்டிய சிக்கெடுத்து விக்கலாம்.

போட்டுனு போன சரக்கு புஸ்ஸுன்னு போயிடிச்சி... அப்பாலிக்கா ஊட்ல இர்ந்த சரக்க ஊத்திக்னு தாராந்தந்பா.

சரிப்பா நம்ம பயப்ப பாப்போம் வர்டா... ;

சினி மினி....

பட்டாசை பட்டக்ஸில் கட்டிக் கொண்டு அலைந்ததனால்.... என்னால் வலைப் பக்கமே இத்தனைநாளாக வரவே முடியவில்லை.

திராவிடன், தமிழ் திருநாள் என்று பேசிக் கொண்டாலும், தொல்லைக்காட்சிகள் என்னவோ போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. வாய்ச் சொல்லில் வீரரடி, வியாபாரம் என்று வந்து விட்டால்..... சாணமும் யானையாகும்.
---X---X----

கமல் 50ஐ தொடர்ந்து.... சிம்பு 25, ராதிகா 30ன்னு கொண்டாட தொல்லைகாட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இது ரசிகர்களை மகிழ்விக்க என்றாலும் இதில் ஒரு வியாபாரத் தன்மை இருப்பது மறுக்கமுடியாது.
---X---X----

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார்... பெத்த பெத்த டைரக்டர்களை தனக்கான கதை செய்யச் சொல்லி வெயிட்டிங்.... வாங்க தளபதியே, வந்து வெள்ளித் திரையை ஆள்க....
---X---X----

கமலின் அடுத்த பட நாயாகியாக நடிக்க திரிஷாவும், தமன்னாவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள், அனேகமாக தமன்னா கைப்பற்றுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.....
---X---X----

குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வராமல் இருக்க அவர்களுக்குள்ளாகவே பேசி தாங்களே தங்களுக்குள் போட்டியாக வராமல் இருக்க தத்தமது படங்களை முன்பின் மாற்றி வெளியிடுகிறார்கள் அதானே....
---X---X----

தீபாவளி ரேசில் ஆதவன் பின்தங்க.... பேராண்மை முந்தும்போல் தெரிகிறது.... ;

இது காதலா......?

காலையில் வெகு சீக்கிரமே எழுவது என் வழக்கம் அன்றும் அப்படியே.... எழுந்து, மம்மி தந்த பாலைக் குடித்து விட்டு, நேராக டாயிலெட் சென்று என் காலைக் கடன்களை முடித்து... அம்மா வரும் வரை காத்திருந்தேன். அம்மா வந்து கால் கழுவி, என்னை குளிக்க வைத்தாள். குளித்து உடம்பு முழுவதும் பவுடர் போட்டு, பள்ளி சீருடை அணிவித்து, தோசை ஊட்டினாள்.

பள்ளிக்கு போவதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு காரணம் பிந்து..... என் பள்ளி நாட்களை பளீரென மின்னச் செய்தவள். என் தோழி, தேவதை, துணை இத்யாதி, இத்யாதி.....

பிந்து என் வகுப்பில் படிப்பவள், படிப்பில் படு சுட்டி, கற்பூர மூளை, எதையும் ஒரு முறை சொன்னால் சட்டென பிடித்துக் கொள்வாள். நாட்கள் ஒவ்வொன்றும் நங்கூரமிட்டு நிற்காதா என ஏங்க வைக்கும் அன்புக்கு சொந்தக்காரி. நான் எப்பொழுதும் அவள் பக்கத்தில்தான் உட்காருவேன்.

அவள் வீடு, பள்ளிக்கு மிக அருகிலேயே இருந்தது, ஆனாலும் அவள் எனக்காக காத்திருப்பாள். என்னை யார் பள்ளிக்கு தூக்கிப் போனாலும் "பிந்து வீட்டுக்கா துக்கிப் போ...." என்று அழுது ஆர்பாட்டம் செய்வேன். அவள் வீடு வந்ததும் நிற்கச் சொல்லி, அவளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன்.

அவளை அவள் அம்மா தூக்கிக் கொள்ள, என்னை என் அம்மா தூக்கிக் கொண்டுபோய் எங்கள் வகுப்பில் விடுவார்கள். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும் எனக்கு ஏதோ போல் இருக்கும், அவளும் அதயே நினைப்பதாகச் சொன்னாள்.

எந்த ஒரு கலை நிகழ்ச்சி என்றாலும், நாங்கள் இருவரும் சேர்ந்தே கலந்துக் கொள்ள வைக்கப் பட்டோம். பார்ப்பவர் எல்லாம் ஜோடிப் பொருத்தம் அற்புதம் என்றே வியப்பார்கள்.

மதியம் அவள் வீட்டில் வைத்தே எனக்கும் அம்மா சோறு ஊட்டுவார்கள். நிறைய நாள் அவள் சப்பாடையோ அல்லது என் சாப்பாடையோ இருவரும் சேர்ந்தே சாப்பிடுவோம். எங்கள் நட்பு வீடுவரை வந்தது. விடுமுறை தினங்களிலும்...., நான் அவள் வீடே கெதியென இருப்பேன். எங்கள் இருவர் குடும்பமும் நட்பால் பினைந்தது.

அவள் அப்பா என்னை வாடா மருமகனே என்றுதான் அழைப்பார். கேலிக்காக... "என்னடா மருமகனே.... என் பொண்ணைக் கட்டிக்கிறியா...?" என்று கேட்பார் "ஓ...!" என்று சொல்லி ஓடிவிடுவேன்.

எல்லாம் நான் ஒன்னாவது முடிக்கும் வரைதான்....கடவுளெனும் கொடியவன்.... பிஞ்சு உன்ளங்களை சிதைத்து, ரத்தம் குடிக்கும் இறக்க மற்றவன். நாங்கள் பிரிய நாள் குறித்தான்........ அவள் தந்தைக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி போகவேண்டிய நிர்பந்தம் வந்தது.

அதற்க்கு முந்தைய நாள் இரவு.... நாங்கள் ரொம்ப நேரம் விளையாடினோம், இந்த பிரபஞ்சமே இன்றுடன் முடிந்து விட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு. மறுநாள் அவள் அந்த டெம்போவில், அம்மாவுடன் ஏறும்வரை அழுது கொண்டே இருந்தோம்.

ஆழ்நிலை நினைவில் மூழ்கி இருந்தவனை அம்மா தட்டி எழுப்பினாள் "ஏண்டா...! உன்னை எத்தனை முறை கூப்பிடுறது, காது செவிடாப் போச்சா...?" திடுக்கிட்டு விழித்தவன் "என்ன....?" என்றேன். "நாம பிந்து வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னேனே....! கிளம்பு" சரி என்று கிளம்பி போனோம்.

அதற்குப் பிறகு ஒரு வாரம் அவள் நினைவாக இருந்தது, பின்... என் நாட்கள் ஊருண்டோட, நான் அவளை மறந்தேப் போனேன். பிந்து போல் நிறைய பேர் என் வாழ்வில் வந்து போனார்கள், இன்று எனக்கும் திருமணமாகி, இரண்டு பிள்ளைகள்.

இருபத்தைந்து வருடங்கள் கழித்து அவளைப் பார்க்கப் போகிறேன். அம்மாதான் பிந்துவின் அம்மாவை எங்கேயோ கடைத்தெருவில் பார்த்து... நலம் விசாரித்திருக்கிறாள். அவசரத்தில் இருந்ததினால் இருவரும் மேற்கொண்டு எதுவும் போசாமல் விடைபெற்றுவிட்டார்கள்.

அவர்கள் வீடு இந்த சந்தில்தான் இருக்கு என்று, பிந்தோட அம்மா சொன்னார்கள். பின் வீடு தேடி கண்டுபிடித்து சென்றோம். வீடு ரொம்ப சின்னதாக இருந்தது. ஒரே ஒரு உடைந்த நாற்காலி இருந்தது, அதில் நான் உட்கார்ந்துக் கொள்ள, அம்மா தரையில் அமர்ந்தாள்.

ஒரு சேலைத் திரை மட்டுமே மறைப்பாய் இருக்க, உள்ளே இரு பெண் குரல்கள். பிந்துவின் தந்தை, திரையை விலக்கி வெளியே வந்தார், வயது அவர் முகத்தில் பல கோலங்கள் வரைந்திருந்தது, தலையில் ஒரு முடி கூட இல்லை.

"வணக்கம்..."

"வணக்கம் சார்...!, எப்படி இருக்கீங்க...?"

"ம்... ஏதோ இருக்கோம்...."

என் கண்கள் உள்ளயே நிலை கொண்டிருக்க..... சிறிது நேர மவுனத்துக்கு பின், அம்மாதான் ஆரம்பித்தாள்....
"பிந்து எப்படி இருக்காள்...?" என்றாள்.
அவர் குனிந்த தலை நிமிராமலேயே..... "என்னத்த சொல்லுறது, அவளாகவே விருப்பப் பட்டுத்தான் அபிஷேக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டாள் நாங்கள் அவள் விருப்பத்துக்கு என்றுமே குறுக்கே நின்றதில்லை.

அவரும் நல்லா படிச்சவர்தான். ஒரு நிதி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். என் சொத்த எல்லாம் வித்து சிறப்பா கல்யாணம் பண்ணினோம். ரெண்டு வருஷம் நல்லாத்தான் போச்சு. என்ன ஆச்சோ தெரியாது...? அந்த கம்பெனி முதலாளி ஓடிட்டான். சினச்சர் ஆதொரிட்டி இவர்ன்னு சொல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிடிச்சு, பெயில்ல வெளியே அன்னைக்கி ராத்திரி எல்லாரும் தூங்கும் போது தூக்குப் போட்டு போயிட்டாரு..."ன்னு சொல்லி தேம்பி தேம்பி அழுதார்.

உள்ளிருந்தும் அழுகுரல் கேட்டது. மேற்கொண்டு யாரும் எதுவும் பேச சக்தி இல்லாமல் மவுனத்தை ஆயுதமாக்கி அங்கிருந்து விடை பெற்றோம். நானோ அம்மாவோ கடைசி வரை பிந்துவை பார்க்கவில்லை, எனக்கும் பிந்துவை வேறு கோலத்தில் பார்க்கும் தைரியம் இல்லை.

தவழ்ந்து வந்த குழ்ந்தையைப் பார்த்தேன், அப்படியே சின்ன வயசு பிந்துவை உரித்து வைத்திருந்தது. ;
 

Blogger