Pages

மூட்டைப் பூச்சிக்கு பயந்து...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
என் வீட்டில் மூட்டைப் பூச்சியின் தொல்லை அதிகமானதினால்... அதை ஒழிக்க ஒரு தனிப்படை அமைத்து, (நம்ம பள்ளி, கல்லூரி capitation fees ஒழிப்பு கமிட்டீ போல) நான் தலைமைஏற்று, என் home minister, மற்றும் இரு செயல் வீர தம்பிகள் ஆகியோர் அதிரடி தீவிர வேட்டையில் இறங்கினோம், இதில் complain தந்த media and பாதிக்கப் பட்ட பொதுமக்களாக என் பெற்றோர் மற்றும் பிள்ளைகள்.

ஒவ்வொரு இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேடி vaccum cleaner போட்டு உறுஞ்சுவது என் வேலை, என் பின்னாடியே வந்து ஸ்ப்ரே அடிப்பது என் தம்பியின் வேலை, பின் மாட்டியவர்களை சாகும்வரை தூக்கிலிடவேண்டிய பங்கு என் மனைவிக்கு. எல்லாம் முடித்து அதை சுத்தம் செய்து வீட்டைக் கழுவி விட்டு எல்லாரும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம். ரொம்ப நிம்மதியாக இருக்கிறது என்று என் பிள்ளைகள் சந்தோஷித்தார்கள். என் தந்தையால் மிகுந்த பாராட்டைப் பெற்றோம்.

ஹோட்டலில் வயிறு ரொப்பி வீடு வர மூன்று மணி நேரம் ஆனது. வீடு வந்து கதவு திறந்ததும்.... எங்களை வரவேற்றது ஒரு மூட்டைப் பூச்சி. என் தந்தை சொன்னார் இது போகாது, ஒன்று நாம் வீட்டைக் காலி செய்யவேண்டும், இல்லையேல் வீட்டையே கொளித்திட வேண்டும் என்றார்.

இதைப் போலவே ஒரு வாரத்துக்கு முன் கல்லூரிகளில் அதிரடி சோதனை அவ்வளவு பணம் சிக்கியது, லைசென்ஸ் ரத்து என்று எல்லா டிவிக்களும் அலறின. ஆனால் நடப்பது என்னவோ அதற்க்கு நேர்மாறன ஒன்று. சிக்கலில் மாட்டிய பூந்தமல்லிக்கருகில் இருக்கும் ஒரு பொறியியல் காலூரியில், என் சித்தி பொண்ணுக்கு இரண்டாமாண்டு சேர்க்கைக்கு போனபோது, மிக பகிரங்கமாக, ஆறு லட்ச ருபாய் DD எடுத்து வருமாறு சொன்னார்கள், கேட்டதற்கு மீடியாவில் போடுவது மாதிரி எல்லாம் நடக்க முடியாது என்று சொன்னார்கள்.

இப்பொழுது வீட்டை மாற்றலாமா? அல்லது கொளுத்தலாமா? என்று யோசித்து வருகிறோம். இந்த மூட்டைப் பூச்சிக்கு பயந்து...... ;

No comments:

 

Blogger