Pages

ஆரம்பிச்சிட்டாங்கையா.......

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
போன வாரம் வரை ஐ.பி.எல் ஜுரத்தில் இருந்த பிள்ளைகளை இப்பொழுது ஐ.சி.சி. 20/20 ஜுரம் பிடிக்கும். இது லண்டனில் நடக்கும் என்பதால் அவர்கள் தூக்கத்தை வேறு கெடுக்கும்.

நிலைத்து நின்று ஆடும் ஆட்டமான ஐந்து நாள் கிரிக்கெட் எங்கே வழக்கொழிந்து போகுமோ என்று வருத்தம் ஓங்க இந்த மேட்ச்களைப் பார்க்கவேண்டி இருக்கிறது. எல்லா விளையாட்டைப் போல் இதுவும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்த மாற்றம் சற்று பயம்கலந்த நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

என்னதான் அடித்து ஆடுவது, மூன்று மணி நேரத்தில் போட்டிக்கான முடிவு, ஒவ்வொரு பந்தும் எல்லையைத் தொடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு, எல்லா பந்தயும் விலாசவே எதிர்நோக்கும் மட்டையாலனை கையாள கூடுதல் முயற்சி எடுத்துப் பந்து வீசுவது, என்று நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பே!!! இதற்கிடையில் ஒளிப்ம்பிக்கிலும் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தேறி வருகிறது, என்ன இருந்தாலும் ஐந்துநாள் ஆட்டம்தான் கிரிக்கெட்டின் முதுகெலும்பு, அதுதான் ஆட்டத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

இந்த T20போட்டிகள் முழுதும் வியாபார நோக்கங்களையே குறி வைத்து ஏய்யப் படுகிறது, போட்டிகளின் நடுவில் ஊக்கிகளின் (Cheer Girls) ஆட்டம் (விளையாட்டின் நடுவில் ஆடுபவரின் எண்ணமெல்லாம் அடுத்த பந்தை எப்படி வீசுவது அல்லது அப்படி எதிகொள்வது என்பாதாகத்தான் இருக்கும் அதில் அவர்கள் எங்கே இந்த ஊக்கிகளைப் பார்ப்பது ) , போட்டியைக்
காண வரும் சினிமா மற்றும் வட்டார பிரபலங்களால் போட்டிக்கு விளம்பரம் கிடைத்தாலும்....., இதில் அவர்களும் பயனடைகிறார்கள் என்பதே நிதர்சனம்.

யார் செய்த புண்ணியமோ!! இது இந்த முறை பள்ளி விடுமுறையின் போது வருகிறது இல்லையென்றால்..... பொற்றோர்களின் பாடு இன்னும் கவலைக்கிடமாகப் போகும். அட்சயத் த்ரிதியைப் போல், காதலர்தினம், அன்னையர்தினம், தந்தையர்தினம் போல் இதுவும் ஒரு வியாபாரத் தந்திரமே. எல்லா விளம்பரதாரரும், வியாபாரிகளும் குச்சி ஐஸ் விற்பவர் முதல்.... கோடிகளில் புரளும் பெரிய பெரிய நிறுவனகள் எல்லாம் இதை தங்கள் விளம்பர யுக்தியாகவே பயன் படுத்திகிறார்கள்.

இதில் அதிக ரன் அடிக்கப்போவது டோனியா, ஹெடனா அல்லது குரோம்பேட்டை கோவிந்தா, அதிக விக்கட்டை வீழ்த்தப்போவது பிரெட்லீ, ஷோயப் மாலிக் அல்லது மடிப்பாக்கம் மரியா என்பது தொடங்கி அதிகமுறை சிக்ஸ் அடித்தவர், கேட்ச் விட்டவர் என்று தொல்லைக்காட்சிகளிலும் போட்டி வைத்து நம்ம தொலைப்பேசி மற்றும் அலைப்பேசி பிள்ளை எகிற வைக்கும் உசார்.

இத்தனை கேள்விகளையும் மீறி இந்த வகை ஆட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வெற்றியே.

சாரிங்க நானும் இன்னக்கி இந்தியா பாகிஸ்தான் பயிற்ச்சி ஆட்டம் பாக்கணும் விடு ஜூட்...... ;
 

Blogger