Pages

குப்ப மேட்டரு.....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜெய்பூரில் மீண்டும் ஒரு மாணவி, தன் பள்ளி முதல்வரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். இதுபோல் வன் கொடுமைகள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த முதல்வருக்கு தரப் படும் தண்டனை, மிகக் கொடுமையாய் இருப்பதோடல்லாமல், எல்லா பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் இந்த செய்தியை பதிய வேண்டும். மீண்டும் யாரேனும் தவறு செய்ய மனதாலும் நினைக்காத வண்ணம் பள்ளிகள் காக்கப் படவேண்டும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
தமிழன் நிலை உயரும் வரை, இலவசங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். தம்பியை கை கொடுத்து தூக்காமல், ஒரு கை கொடுத்து வாய் அடைப்பது அரசியல் ராஜ தந்திரம் அன்றி வேறில்லை.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

எனும் பாட்டியின் பாடல் அறியாதவரில்லை.

நிலை உயர ஆவன செய்யாமல், இலவசங்களினால் இட்டு நிரப்ப நினைப்பது, கனி இருப்ப, காய் நகர்துதலே.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
வலைப்பூவை திரையுலகம் சற்று கலக்கத்துடனே பார்க்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த மிகப் பிரம்மாண்டமான திரைப் படத்த்தை, கிழி கிழியென்று கிழித்ததில் திரையுலகமே மிகுந்த வருத்தத்தில் உள்ளது.

ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் இதே வலைப்பூவில்தான் சில நல்ல விமர்சனங்களும் விளைந்திருக்கின்றன. சமீபத்தில் வந்த மாயாண்டி குடும்பத்தார், வெண்ணிலா கபடிக் குழு, சுப்ரமணியபுறம் என்று நல்ல படங்களையும் இந்த வலைப்பூ உலகம் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்தது.

தயாரிப்பாளரும், இயக்குனரும் அதீத பிரமாண்ட மோகத்தால் அனாவசிய செலவு செய்யாமல், கதையோடு இயந்த கருத்து சொல்ல விழைந்தால், அது நல்லதொரு மாற்றத்தை திரையுலகில் ஏற்படுத்தும்.

வலையுலக நண்பர்கள், ஒரு படத்தை விமர்சிக்கும் போது, சற்று சிரத்தையாக, அதில் புழங்கும் மிக அதிக பணம் மற்றும் பணியாற்றும் எண்ணற்ற தொழிழாளர்களின் வாழ்கையை நினைத்து எழுதுவது எல்லோருக்கும் நன்மைபயக்கும் என்பதில் ஐய்யமில்லை.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் வழக்கம் போலவே இந்த முறையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகின்றன. இந்தியா போல் வளரும் நாடுகளில், இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் வந்தாலும் விற்பனை சக்கை போடு போடும். ;

5 comments:

கலையரசன் said...

//வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்//

சூப்பர் பாட்டுப்பா.. இப்பதான் கேள்வி படுகிறேன்..

பித்தன் said...

அண்ணே இது ஒளவை பாட்டி பாடியது....

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

கனககோபி said...

//அந்த முதல்வருக்கு தரப் படும் தண்டனை, மிகக் கொடுமையாய் இருப்பதோடல்லாமல், எல்லா பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் இந்த செய்தியை பதிய வேண்டும். //

பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவர்களெல்லாம் மனிதர்கள் இல்லை, ஆகவே மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படத் தேவவையில்லை.

பித்தன் said...

வருகைக்கு நன்றி தமிழ் முல்லை,
வருகைக்கு நன்றி கனககோபி,

 

Blogger