Pages

குப்ப மேட்டரு....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ராக்கி சாவந்த் ஒரு பிட்டுப் பட நடிகை, (பிட்டுத் துணிப் போட்டு, பிட்டு பிட்டாக வடமொழிப் படங்களில் நடிப்பார்). இதில் இவர் ஓப்பனாக பேசுபவர் என்கிறப் பேர் வேறு. அவர் தனது மாப்பிள்ளையை நேற்று தேர்ந்தெடுத்தார் இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இந்நிகழ்ச்சி நேரடியாக NDTV Imagine ஒளிபரப்பானது.

இவரை கட்டிக் கொள்ள ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் கடைசியாக மூன்றுப் பேரைத் தேர்ந்தெடுத்து, அதில் நேற்று எலேஷ் பருஜன்வாலாவைத் தேர்ந்தெடுத்தார். எலேஷ் கனடா வாழ் இந்தியர், அங்கே ஏதோ வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாராம் (ஆமா இந்த மாதிரி நடிகைகளைக் கட்டிக் கொள்ளவென்று.... அவதாரமெடுத்திருக்கும் எல்லோரும், ஏதோவொரு வியாபாரம் செய்வார்கள்). வெத்துப்பட்டி விப்பவன், வெங்காயம் விப்பவன், எல்லோரும் வியாபாரிதானே.

இந்த கருமத்தையெல்லாம் ஒளிபரப்பி தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்யும் யுக்க்திதான் நெருடலாக இருக்கிறது. விட்டால் அவர்களது படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஒளிபரப்பி, தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிப்பார்கள். இதுவே ஒரு சாலையோர பெண்ணின் சுயம்வரமென்றால்.... ஒளிபரப்பி இருப்பார்களா? மாட்டார்கள்...! ஏன் என்றால் ஒரு பிரபல முகமென்றால்.... நெற்றிப் பொட்டில் இருந்து, உள்ளாடை வரை விளம்பரங்கள் குவியும். பணம் அள்ளலாம், என்கிற மலிவான வியாபார நோக்கமே. நாட்டுக்கு நல்லது செய்யாவிடினும் சடுதியில் தள்ளி விடாமல் இருந்தால் அதுவே மிகப் பெரும் தேசத் தொண்டாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினமாம். இதுபோல்.... காதலர் தினம், அன்னையர் தினம், இத்யாதி இத்யாதி... ஹோட்டல், காபி ஷாப்புகள் மிகுந்துவிட்ட இந்நாளில்... இதெல்லாம் வியாபார நோக்கத்திலேயே எய்யப் படுகிறது. ஊடகங்களும் இதை வைத்து பணம் பண்ணுகின்றன. நல்ல நட்புக்கு எல்லா நாளும் நந்நாளாம், அதுபோலவே மற்றைய தினங்களுக்கும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த லக் ஹிந்திப் படம் பார்த்தேன், சூதாட்டம்தான் கதைக் களம், ஆனால் இது மனிதர்களை வைத்து ஆடும் சூதாட்டம். மாடுகளை வைத்தே..... ஆடக்கூடாதெனும்போது, மனிதர்களை வைத்து ஆடுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்சனைக்குரிய நீச்சல் காட்சி, கதைக்கு மிக அவசியம் மென்றார் ஸ்ருதி, ஆனால்.... அது கதைக்கு கொஞ்சம்கூட அவசியப் படவில்லை. சீரோ(Zero) ஹிப் சைஸ்சில் மிக அழஅகாகவே இருக்கிறார் ஸ்ருதி. மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை. குட்டி பதினாறடி பாய்ந்திருக்கிறது.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மைக்ரோஸாப்ட் மற்றும் யாஹூவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்படி யாஹூ மைக்ரோஸாப்டின் பிங்(Bing) தேடுபொறியை உபயோகிக்கும், அதுபோலவே மைக்ரோஸாப்ட், யாஹூ தளங்களில் தனது விளம்பரங்களை வெளியிடும். அமெரிக்காவில் இன்டர்நெட் விளம்பரங்களில் வெறும் 25% மட்டுமே இந்த இரு நிறுவனகள் வைத்திருக்கின்றன. ஆனால் இவர்களின் போட்டி நிறுவனமான கூகிள் (google) 65% வைத்திருக்கிறது. இந்த புரிந்துணர்வு மூலம் கூகிளின் மார்கெட்டைப் பிடிக்க மார்தட்டுகின்றன.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆமா இன்னும் மாசிலாமணி டாப் டென்னில், முதலில் இருக்கிறது. நாடோடிகள் இரண்டாமிடம். இதில் மாசிலாமணி ஜனரஞ்சகமாக ஓடுவதாக (எந்த தியேட்டரில் என்று தெரியவில்லை?) சுயதம்பட்டம் வேறு?. காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சுதான் போலும்.....
;

2 comments:

கலையரசன் said...

நம்ம ஊரு டி.வியில ஷக்கீலாவை வைச்சு அதே புரோகிராமை பண்ணாம இருந்தா சரி..

லக் படம் ஆங்கிலத்தில் "கன்டெம்டட்" என்று ஏற்றகனவே வந்ததுதான்.

பொன் குஞ்சை ஒரு நாள் சுட்டாதான் சரிவரும்!

பித்தன் said...

மும்தாஜை வைத்தும் யோசிப்பார்கள்.....

 

Blogger