Pages

ஆல்பர்ட்டில் லெக்கு

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லெக்கு மற்றும் சகாக்களுடன் ஆல்பர்ட்டில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். நம்ம ராஜா வழியில ஒரு டாஸ்க் மார்க் கடையைப் பார்த்ததும், கம்பத்தைப் பார்த்த நாய் போல பம்மினான். சரின்னு எல்லோரும் உள்ளே போனோம். ஒரு மானங்கெட்ட மானிட்டர் ஹாப் வாங்கி நாலு பேரு அடிக்கலாம்னு பிளான். மொடாக் குடியர்களுக்கு மப்பு ஏறனும்னா மானிடர்தான் சரி, பிபி என்றால் எல்லோரும் பத்தவில்லை என்று மேலும் பிபி ஏத்துவார்கள்.

லெக்குக்கு பீஃப் என்றால்.... நாக்கை நல்லா நாளின்ச்க்கு நீட்டுவார். அவருக்கு எப்போதுமே பீஃப்தான் சரக்கு, சரக்கு வெறும் கீப்தான். நாக்கில் சரக்கை நக்கினாலே வாய் தஞ்சாவூர் வரை தாறுமாறாகப் போகும். ஆகையால் அவரை எப்போதுமே நாங்கள் லிமிட்டில் வைப்போம்.

கொஞ்சம் அசட்டையா இருந்ததுல அதிகமா சரக்கடிச்சிட்டாரு லெக்கு. ஆஹா என்ன நடக்கப் போகுதோ, நடப்பதெல்லாம் நாராயணன் சித்தம்னு, நடையக் கட்டினோம் ஆல்பர்ட்டுக்கு. ஆல்பர்ட்டுக்குதான் போனோம், ஆனால் நம்ம கிரகம் அங்கே டிக்கட் கிடைக்கவில்லை, சரி நம்ம மணிரத்தினம் படமாச்சேன்னு பேபிக்கு விரைந்தோம். அப்பவே லெக்கோட அட்ராசிடி ஆரம்பாமாயிடிச்சி.

நா இந்த நாதாரிப் படத்திற்கு வர மாட்டேன். அவருக்கு நச்சுனு ஹீரோயின் இருக்கணும், இல்லன்னா கலக்கலான சண்டைகள் இருக்கணும். இது ரெண்டும் நம்ம மணி படத்தில் இருக்காது. கேட்டையே கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு அடம் பண்ணாரு. என்னடா இது ஆரம்பத்திலேயே அலும்பு தாங்கலைன்னு அவர அணைச்சி அள்ளிப் போட்டுட்டுப் போய் உள்ளே உட்கார்ந்தா.... அட்டகாசமான ஆரம்பம் அம்பேல் ஆயிடிச்சி படத்துல.

அப்படியே ஹாப் லைட் வெளிச்சத்துல, ஆளாளுக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நம்ம லெக்கு ஒரு ஆன்ட்டி மடியில உக்காரப் போய்....., அதிரிபுதியாப் போயிடிச்சி. மன்னிப்பு கேட்டு, மாமிய மடக்கி, உட்கார்ந்தோம். ஏற்கனவே அவருக்கு புடிக்காதப் படத்துக்குப் வந்ததில்.... பொறிப் போறியா துப்புன லெக்கு, ஆன்ட்டி மேட்டர்ல கடுப்பாயி, அக்கினியா அள்ளிப் போடுறாரு. அவர் பக்கம் திரும்பினாத்தானே அக்கினின்னு ஆன் ஸ்க்ரீனைப் பார்த்தேன்.

இன்டெர்வெல்லுக்கு முன்னாடி திரும்பி பார்த்தா ஆளக் காணோம்.... அடி வயிற்றில் அமிலம் சுரக்க, அலர்ட்ஆகி வெளியே வந்தால்.... ஒரு ஆன்ட்டியோட சண்டை போடுறாரு, இனிமா குடிச்ச கொரங்கா என்ட்ரி ஆனா.... ஆன்ட்டி நம்மளையும் சேர்த்து அடிக்க வருது, என்னன்னு விசாரிச்சா, மப்பில் லெக்கு.... லேடிஸ் டாயிலேட்டில் போயிருக்காரு,

"தியேட்டர்ல என் மேல உக்கரும்போதே, சும்மா விட்டுட்டோம் இப்ப விட முடியாதுன்னு" ஆப் ஆவாம சவுண்ட் விடுது ஆன்ட்டி.

அதற்குள் ஆன்ட்டி புருசனும் அங்கே வர, கயித்துல தொங்குன எங்க மானம், கருடன் கொத்துன கிளியாட்டம் சும்மா கிர்ர்னு பறக்குது. ஸாரு சைலன்ட் ஆனாலும்..., ஆன்ட்டி சாந்தி ஆகவே இல்லை. அதற்குள் கூட்டம் கூடி விட, சப்பைக்கே சப்போர்ட்டா வர சனங்க, சந்தனம் கிடைத்தால் விடுமா... ஆளாளுக்கு அள்ளி மார் மேலும் தோள்மேலும் பூச, அத்தனையும் வாங்கிட்டு அடக்கமா நின்னாரு லெக்கு.

"சார்....ர், ஏதோ தெரியாம நடந்துடுச்சின்னு...."
நாசூக்கப் பேசி, அவங்கள அனுப்பிட்டு ஆசுவாசப்பட்டோம். எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சின்னு எடத்த காலிபண்ணுற நேரத்துல.... இன்னொரு குடிமகன் லெக்கு கிட்ட வந்து, "எல்லாம் பத்துட்டப் போலன்னு....!!!" கேக்க அவனை அப்படியே அமுக்கி, ஆல்பர்ட்டுக்கு பாய் சொன்னோம். ;

No comments:

 

Blogger