Pages

கூட்டா சேர்ந்து நாட்ட......

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வன்கம்பா!!!

ரொம்ப நாளா ஒடம்பு பேஜார் பண்ணதுல, அண்ணாத்தைய பாக்க முட்யாமப் பூடுச்சு, அதான் வர்ல, இன்மே அடிக்கடி வரேந்பா. ப்ளு, க்ளுன்னு டர்ர்ர்... ஆயிடுச்சி நம்ம வூட்ல, அப்பல நம்ம ராயப்பேட்டா ஆஸ்பிடல்ல, உன்க்கு ஒன்னும் இல்லன்னு சொல்டாங்கபா....
*** X *** X***
நம்ம ஊட்டாண்ட கீற டில்லிபாபுக்கு வர்ஷகண்கா 2300 ரூபாதான் சம்பளம், பாவம் அவன் பொண்டாட்டியும் நாலு வீட்ல வேல பாத்து, குடும்பத்த தல்லுதுங்க. ஆனா... MLAக்கு எல்லாம் சம்பளம் ஏத்திட்டாங்க, அதில்லாம அவங்களுக்கு இரண்டரை கிரவுண்டு நிலம் வேற தர்றாங்களாம்பா....

நாந் தெரியாமத்தான் கேகுறேந், இவங்கல்லாம் இப்போ குந்த குட்ச இல்லாமையா கீறாங்கோ...?, அப்போ எலக்சன் சொல்லோ ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் குடுத்தது ஆரு துட்டு.... ?
*** X *** X***
ரொம்போ நேக்கா வள்ளுவர் செலைய கர்நாடகாவிலும், கன்னட கவிஞர் சர்வக்ஞர் செலைய தமிழ்நாட்டிலும் திறந்த, ரெண்டு மாநில முதல் அமைச்சர்களும், ரொம்ப பிரெண்ட்ஸா கீறா மாதிரி காட்டிக்கிறவங்க. ஏந் காவேரிய நமக்கு கொண்டு வரக் கூடாது?

ஆனா கர்நாடகாவில மல பேஞ்சா மட்டும், ஆரும் சொல்லாம தெறந்து வுட்டுருவாங்கோ, இல்லாங்காட்டி அவங்க அண வோடஞ்சு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு பயம்.
*** X *** X***
ஏதோ ஸ்விஸ் பேங்காமே அங்கே இருக்க பணத்துல, இந்தியர்களோட பணம்தான் ரொம்ப அதிகமாமே...?!, பணம் போட்டவன் சினிமாகாரன், கிரிகெட் விளையாடுறவன், பெரிய பெரிய முதலாளிங்க, அயோக்கிய அரசியல்வாதிங்க, அப்படி இருக்கோ சொல்லோ..., இது அவன் வயித்துக்கு மீறிய பணம், அத்த திரும்ப கொண்டாந்தா என்ன?

அமா இப்போ அரசாங்கம் அந்த பணத்த ஒழுங்கா காட்டி வரி கட்டிட்டா, நீங்க அத முறையா ஊஸ் பண்ணலாம், அல்லாங்காட்டி அரசே அத மொத்தத்தையும் எடுத்துக்கும்னு சொன்னா, அல்லாரும் அத்திரிபுத்திரி ஆகி வரி கட்டிட மாட்டாங்கோ? ஆனா அத்த ஆரு செய்யுறது....? செய்ய வேண்டிய அரசியல் வாதிங்கோ முக்காவாசி பேர் அதில பணம் போட்டிருக்கான்...?

அல்லாரும் கூட்டா சேர்ந்து நாட்ட மொட்ட அடிக்கிறாங்க...

அட நம்ம நிலமைய சொல்லு, பத்து நாளா பொயப்புக்கு போகாம ஊட்ல குந்திக்கீனு இர்ந்தா ஊட்டுக்காரி கொமட்லயே குத்துறா...

அதுசரி பல்லு கீரவேந், பகோடா துண்ணுறான், பரதேசி நாம பண்ணு வாங்க காசில்லாம அல்லாட வேண்டியதுதான்...

சரிப்பா போயி நம்ம போயப்பப் பாப்போம்....! ;

7 comments:

ரஹ்மான் said...

உங்கள் வலைப் பக்கத்திற்காக ஒரு பதிவு,
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_676.html

கலையரசன் said...

சும்மா பிளிர்றீங்க... நிசமாவே நல்லாயிருக்குபா..
நீங்க ஏன் திரட்டியில சேர்க்க மாட்டுறீங்க?

டக்ளஸ்... said...

நல்லாத்தான்பா சொல்லிருக்காம் கோட்டர் கொயிந்து.

பித்தன் said...

வருகைக்கு நன்றி கலை,

நான் திரட்டியில் என் பதிவுகளை இணைக்கிறேனே....! நேற்று சிறிது நேரம் என் இணைய இணைப்பில் தடுங்கல்கள் இருந்தது அதை களைந்த பின் இணைத்தேன் அதனால்தான் உங்கள் பார்வையில் படாமல் போயிருக்கும்.

பித்தன் said...

வருகைக்கு நன்றி டக்ளஸ்....

பித்தன் said...

வருகைக்கு நன்றி ரஹ்மான்....

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆனா கர்நாடகாவில மல பேஞ்சா மட்டும், ஆரும் சொல்லாம தெறந்து வுட்டுருவாங்கோ, இல்லாங்காட்டி அவங்க அண வோடஞ்சு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு பயம்.//

எம்மாம்பெரிய சிந்தனை!

 

Blogger