Pages

வெளையாட்டா சம்பாதிகிறாங்க....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்பா,

விளம்பரத்தில அதிகமா சம்பாதிக்கிற ஆளுல மொத ஆளா வந்துகீரதுல ரொம்ப ஹேப்பியா கீது, மொதோ நாலு எட்த்துல, நம்ம ஆளுங்க வந்ததுல கோயிந்து ரொம்ப குஷியாயிட்டாம்பா.

ஆனா நம்மாளு வெள்ளகாரணுவ கிட்ட இர்ந்து கத்துக்கிட்ட கேம்ல, அவனையே மிஞ்சிட்டானுக. கிறிகேட்ட மொத கண்டுகீனு ஆடுனவங்க ஆஸ்தெரெலியா, இங்கிலாந்து, ஆனா அவனுவளையும் நம்மாளு அடிச்சி தூக்கிட்டான் இல்ல. நம்மாளு சிங்கம்லே.

ஆமா நாந் தெரியாமத் தான் கேக்கேன், ஏதோ பேன் விளம்பரத்துல தோனி வந்து இது ரொம்ப நல்லா காத்து தரும் பேநுனு சொல்லிகீறாரு இல்ல ஆனா அவரு வீட்ல அந்த பேநு கீதா...? இர்காது. ஆனா அவர் நம்மள வாங்க சொல்லுவாரு. அவரு ஏதோ களிம்ப நமளையும் தலையில தடவ சொல்லுறாரு ஆனா அந்த களிம்ப அவரு ஊஸ் பண்ணுறாரா?

எல்லையில கீற ஆளுங்க ஆரும் நமக்குத் தெரியாது, ஆனா கொல்ல பக்கமா வந்து தொல்ல குடுக்கும் இந்த கிறிகேட்ட ரொம்ப நல்லா தெரியுது. விளம்பரத்துல, டிவில, பேப்பருல அல்லாத்துலையும் இவனுங்களயே காட்டீனு இர்ந்தா நம்ம புள்ளைங்களுக்கு, இவங்கதான் நாட்ட காக்குற தெய்வமாத் தெரியும்.

வெளையாட்டா சம்பாதிக்கிறாங்க, நம்ம பொயப்பா கேளு, நாய் பட்ட பாடு, லொங்கு லொங்குன்னு ரிச்சா மிதிச்சாதான் கஞ்சே கிடைக்கும். ஆமா எப்போ ஸ்ரீலங்கா ஆட்டம் ஆரம்பிக்குது....
-------x----x----
சமச்சீர் கல்விக்கு ரொம்ப தடுங்கள் வரும் அதெல்லாந் தாண்டி தல கொண்டுவந்துசின்னா ரொம்ப புண்ணியமா போவும், என்ன பணம் புடுங்குறாங்க இந்த இங்கிலீஷ் உஸ்கூலுல.
ஐயா மனசு வச்சா, நிச்சயம் இது சுளுவா வந்துரூம். ;

3 comments:

ரஹ்மான் said...

ரெம்ப நல்லாதானே இருந்தீங்க எப்போயிருந்து இந்த மாதிரி.

கோச்சுக்காதீங்க சும்மா தமாசுக்குத்தான்.

கலையரசன் said...

//எல்லையில கீற ஆளுங்க ஆரும் நமக்குத் தெரியாது, ஆனா கொல்ல பக்கமா வந்து தொல்ல குடுக்கும் இந்த கிறிகேட்ட ரொம்ப நல்லா தெரியுது.//

நச்சுன்னு சொன்ன மாமே! அக்காங் சொல்லிக்குறேன்!!

பித்தன் said...

நன்றி கலை,
நன்றி ரஹ்மான்

 

Blogger