Pages

இனிப்பு தந்த இனிமா

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அப்போ நான் ஒரு சின்ன விளம்பர நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தேன். புதிதாக ஆரம்பித்த நிறுவனம், அதனால் பண்ணு, பப்பர மிட்டாய்ன்னு சின்னச் சின்ன பஞ்சர் ஓட்டுற வேலையே வந்தது, ஆனாலும் இதில் எங்கள் முழு திறமையையும் காட்டணும்னு, காசுக்கு மேலேயே கூவுவோம்.

கொஞ்ச நாள்ல அந்த பஞ்சர் வேலையும் வராம, டின்ஜர் வச்ச மாதிரி அடிவயிறு எரிஞ்சது. ஒரு கட்டத்துல, எங்க டக்ளசுக்கே (ஓனருங்கோ), என்னடா இது பொழைப்பு, இப்படி 'ஈ' கூட வராம காஞ்சிக் கெடக்கேன்னு ரொம்ப கவலையாப் பட்டாரு. நாங்களும் சார் எப்படியும் நமக்கு ஒரு நல்ல காலம் வரும் சார்ன்னு, அவருக்கு எடுத்துச் சொல்லி பின்ன இந்த கடையையும் அவரு மூடிட்டாருன்னா.... நாங்க சோத்துக்கே சிங்கியடிக்கன்னும்னு, அவருக்கு சில பல பிட்டப் போட்டு, கடைய மயிரைக் கட்டி இழுத்துட்டு வந்தோம்.

ஒரு நாள் திடீர்ன்னு நம்ம டக்ளசு.... வாயெல்லாம் பல்லோட, வாசல்ல வரும்போதே.... "எல்லோரும் மீட்டிங்குக்கு வாங்கன்னு..." சைகை செஞ்சாரு. ஆஹா பண்ணு, டீக்குக் கூட வழியில்லம டின்னு கட்டி அனுப்பப் போறாருன்னு, டர்ர்ர்... ஆகி எல்லோரும் மீட்டிங்குக்கு போனோம்.

"ஒரு பெரிய இனிப்பு வியாபாரி, அவருக்கு நிறைய கடைகள் இந்தியாவைத் தாண்டியும் வியாபித்திருக்கிறது, நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வர்றார், அவருக்கு ஒரு நல்ல கான்செப்ட் 'அட்' வேணுமாம்" என்றார் டக்லஸ்.

ஆஹா கொரவ கேளுத்தியே கிடைக்கலன்னு காத்திருந்த நமக்கு, சொறா சிக்கிடிச்சின்னு, என் பாஸு ரொம்ப 'பீல்' ஆயிட்டாரு. எல்லா டீம் மெம்பரையும் கூப்பிட்டு, "கான்செப்ட் பிடிங்கன்னு சொல்லிட்டு இது நமக்கு வாழ்வுன்னு நினைச்சி பண்ணுங்கன்னு, எப்படியும் பட்ஜெட் ஒன் 'சி'க்கு மேல போகும்னு" ஒரு பிட்டையும் போட்டுட்டுப் போயிட்டாரு. ஏன்னா அப்பத்தான் அந்த இனிப்பு நம்ம தமிழ் நாடு பூரா பேமஸ் ஆயட்டிருந்த நேரம். சீக்கு பிடிச்ச கோழி, சிலிக்கான்வேலில அலஞ்சா மாதிரி அவனவன், அவங்கவுங்க கற்பனை குதிரைய கூட்டிகிட்டு உலகம் பூரா சுத்துனானுங்க.

மறுநாள் இனிப்பு எங்க ஆபிஸ் வந்துது, "சொல்லுங்கண்ணே... என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...." இனிப்பு "கான்செப்ட் கலக்கலா இருக்கோனும் அண்ணேன்னு...." ஆரம்பத்துலேயே அளப்பரிய அள்ளி வுட்டுது. டக்லஸ் "அதெல்லாம் நம்ம பயபுள்ளைங்க பின்னிடுவாங்கன்னு, நம்மளோட ரேஞ்சப் பாருங்கன்னு நம்ம பன்னு, பஞ்சு, பப்பர மிட்டாய் விளம்பரங்கள காட்டி நம்ம தெறமைய அள்ளி விட்டாரு.

இனிப்பு 'புல்'ளாயி, "சரிண்ணே...! நம்ம கடை விளம்பரங்கள இனிமே நீங்களே பண்ணலாம்ன்னு..." சொல்லிச்சி

நம்மாளு மறுபடியும் "அண்ணே....! என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...."

நம்மாளு இனிப்பு சொன்ன பதிலுல.... இனிமா தின்னா மாதிரி ஆயிடிச்சி.

நாங்க டிவி, ரேடியோன்னு யோசிக்க...

"இனிப்பு சார் பளுன்னுல வேணும்னு..." சொல்ல, பொங்குன காவிரிய பொடி டப்பால அடக்கினாமாதிரி புஸ்ஸுன்னு போயிடிச்சி...


ஒன் 'சி'க்கு எதிர்பார்த்த, டக்லஸ் ஒரு க்ளாஸ் 'டி'க்கு கூட தேறாதுன்னு, ரொம்ப ஒடிஞ்சு போயிட்டாரு. இருந்தாலும் நாங்க அதுலேயும் எங்க முழு தேரமயக் காட்டி சிறந்த விளம்பரமாத் தான் செஞ்சோம். ;

4 comments:

Unknown said...

நல்லா எழுதறீங்க. கொஞ்சம் எழுத்துப்பிழைகளையும் கவனிச்சீங்கன்னா இன்னும் சிறப்பாக வரும்.
manjoorraja.blogspot.com

பித்தன் said...

நன்றி ராஜா,

எழுத்துப் பிழைகளைச் சரி செய்து விடுகிறேன்.

கலையரசன் said...

கடைசியில இப்படி கவுத்துபுட்டாய்ங்களே ராசா..?
விடு.. விடு.. தண்ணிய குடி!!

பித்தன் said...

கரீக்ட்பா, ரொம்ப தேங்க்ஸ் கலை...

 

Blogger