Pages

'நகை' ப்பூ......

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாளை விடுமுறைக்கு, எழுதிக் கொடுத்து சீக்கிரமே அலுவலகத்தை விட்டு கிளம்பினேன். செக்யூரிட்டி தனபாலனிடம் 3000ரூபாய் கடன் கேட்டிருந்தேன், நேற்றே "தரேன்" என்று சொன்னவன், மறந்ததினால்... "இன்று தருகிறேன்" என்றான். அவன் பின்புற கேட்டில் இருந்ததனால், என் வண்டியை எடுத்துக் கொண்டு, பின்புற கேட்டுக்கு வந்தடைந்தேன். யாராவது என்னைப் பார்கிறார்களா..... என்று மறுமுறை நோட்டம்விட்டு அவனருகில் சென்றேன்...
"சார் இந்தா சார் நீ கெட்ட 3000ரூபாய், கரீக்டா சம்பளம் வாங்குன ஒட்னே குத்தூடு சார்"
"சரிப்பா கண்டிப்பா தந்து விடுகிறேன், இதை யாரிடமும் சொல்லாதே"
"சர்சார்"

அவன் தந்த 2700 (300வட்டி போக) வாங்கிக் கொண்டு, திநகர் வந்து.... அந்த பெரிய நகைக்கடை உள்ளே நுழைந்தேன்...... 'நாளைக்கு எங்களுக்கு கல்யாண நாள்'. ஆச்ச்சு இன்றுடன் 12 வருடம் முடிந்து விட்டது.

இது 'அட்சய த்ரிதி' மாதம் என்பதால்..... எல்லா கடையிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. விற்பனைப் பிரதிநிதியைப் பார்க்கவே அரைமணி நேரம் பிடித்தது, இந்த கூட்டத்தில் என்னைத்தவிர எல்லோரும் கிலோ கணக்கில் நகைகள் வாங்கினார்கள்.

இந்த நெரிசலில், வெள்ளியில் கொலுசு வாங்க மனசு இடம் கொடுக்கவில்லை. விருடேன்று வெளியில் வந்தேன்...., வண்டியை எடுத்தேன், நேரே என் வீட்டருகில் உள்ள சின்ன நகைக் கடைக்கு வந்தேன்.... "என்ன சார் வேணும்"
"ஒரு நல்ல வெள்ளி கொலுசு வேணும்"
"உட்காருங்கோ சார்!" என்னை அமர்த்திய பிறகுதான் 'குளிரூட்டியை' இயக்கினார் அந்த கடைகாரர்.

பின், வெள்ளி கொலுசு வகைகளை எடுத்து காட்டினார். நிறைய முத்துக்களுடன் இருந்த கொலுசை தேர்வு செய்தேன்..... அதன் எடையைப் பார்த்து, பின்
"விலை 4500 ரூபாய்" என்றார்
"சார்...... என்னிடம் அவ்வளவு இல்லை, அதைவிட கம்மியாக.......... ஆனால் அதே டிசைனில், வேறு ஏதாவது இருந்தால் காட்டுங்கள்" என்றேன்
"இல்லைசார், இந்த டிசைனில் இது ஒண்ணுதான் சார் இருக்கு" என்றார்.
பின் அதற்கடுத்த கொலுசை தெரிவு செய்து, விலை கேட்டேன்
"இது 2800 ரூபாய்" என்றார் பின் கெஞ்சி கூத்தாடியத்தில்...., 200 ரூபாய் குறைத்து 2600 ரூபாய்க்கு கொடுத்தார்.

அதை வாங்கி, என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். வரும் வழியில் 70 ரூபாய்க்கு 'தமகாரோட் அல்வா' வாங்கிக் கொண்டு மீதம் இருந்ததுக்கு, மல்லிப்பூ வாங்கினேன். மனதில் இதை எப்படி என் மனைவிக்கு கொடுப்பது.... என்பதை ஒத்திகைப் பார்த்துக் கொண்டே....... வீடு வந்து சேர்ந்தேன். பூ, அல்வா, கொலுசு எல்லாவற்றையும் என் அலுவலகப் பையிலேயே வைத்து. குளித்து, உடைமாற்றி, இரவு உணவு உண்டபின், ஏதும் பேசாமல் படுக்கையை அடைந்தேன்.

உறக்கம் வராமல்..... எப்படி ஆரம்பிக்கலாம் ? என்று மனதில் வியுகம் அமைத்தேன். இரவு எல்லா வேலையும் முடித்து, மிகவும் அயர்ச்சியாக என்னருகில் படுத்த்தவளை.... சரியாக இரவு 12 மணிக்கு எழுப்பினேன்..... "என்னங்க, உங்களுக்கு வேற வேலையே இல்லை"
"ஏய்.... இங்க பாரேன்" என்று கையில் வைத்திருந்த மல்லிப் பூவை காட்டினேன் "ம்ம்.... அப்படிவையுங்க, நாளைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றாள்

பின்னர் மெதுவாக அவள் காதருகில் சென்று,
"கொஞ்சம் ஹாலுக்கு வாயேன்" என்றேன்
அவளும் என்ன? ஏதென்று தெரியாமல், என் பினாலேயே வந்தாள்...
"Happy Wedding Anniversary" என்று சொல்லி அவள் கையில் என் கவிதையை கொடுத்தேன்....
"ஆமா இது மட்டும் தானா....?" என்றாள்
"இல்லை!, நான் உனக்கு வேறொன்றும், வைத்திருக்கிறேன்" என்றேன்
ரொம்ப ஆவலாய்.... "என்ன?" என்றாள் "ம்ம்.... வெயிட்" என்று சொல்லி என் சட்டை பையில் இருந்து அந்த கொலுசை, எடுத்து என் கையில் ஒழித்து வைத்துக் கொண்டு....

"நான் இந்த பரிசைக் கொடுத்தால்...., நீ என்ன தருவாய்?" என்றேன்
"ஆமா..., என்னிடம் என்ன இருக்கிறது?, கொடுக்க, காட்டுங்க எனக்குத் தூக்கமாக வருகிறது" என்றாள்.

பின், என் கையில் இருந்த அந்த கொலுசை அவளிடம் கொடுத்தேன்.... மிகவும் ஆவலாய் "ப்பூ.... இதுதானா?" என்றாள் சுரத்தே இல்லாமல்.
"இதை வாங்கவே......, நான் என்ன பாடு பட்டேன் என்று எனக்குத் தான் தெரியும், பத்து வடிக்கு என் ஆபிஸ் செக்உரிடியிடம், கடன் வாங்கினேன்"
"யார் உங்களை இப்படி செய்யச் சொன்னா?, இந்த ௧௨ வருஷத்தில் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க வக்கத்துப் போன, ஒரு வாழ்கை எனக்கு விதிச்சிருக்கு" என்று விருட்டென எழுந்து படுக்கச் சென்றாள்

எனக்குத்தான் தூக்கம் வரவில்லை, இந்த கொலுசைக் கொடுத்து என்னவெல்லாம் பதிலுக்கு அவளிடம் இருந்து கிடைக்கும், என்று கனாக் கண்டேன்.

'நான் ரொம்பத்தான் ஆசைப் பட்டுட்டேனோ!!.'

கடைசிவரை அந்த இனிப்பை நாங்கள் இருவரும் சுவைக்கவில்லை. ;
 

Blogger