Pages

வாழ்த்தி வரவேற்ப்போம்

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

'அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இந்த சாக்கடையை சுத்தம் பண்ண 29 வயதே ஆன சரத்பாபு என்ற இளைஞ்சர் முன் வந்திருக்கிறார். சரத்பாபு சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் , நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு.
இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு.
ஆறு பிள்ளைகளில் ஒருவராய் பிறந்து, இவ்வளவு தூரம் முன் ஏறியிருக்கிறார் என்றால்.... அது மிகப்பெரிய விஷயம் அதுமட்டுமில்லாது, இன்று அரசியலையும் ஒரு கை பார்க்க வருகிறார். இவரைப்போல படித்த துடிப்புள்ள இளைஞ்சர்கள் இன்றைய அரசியலுக்குத் தேவை.
வாழ்த்தி, வரவேற்ப்போம், அத்தொகுதியில் யாரவது இருப்பின் சரத்பாபுவிற்கு வாக்களித்து அவரைப்போல் நிறைய இளைஞ்சர்களை ஊக்குவிப்போம்.
ஜெய் ஹிந்த்!!!!!!!!!!
;
 

Blogger