Pages

பல்லு குத்த 'பேட்'

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருவல்லிக்கேணி சுற்று வட்டார வாண்டுகளுக்கும், வாலிபனுக்கும் வாகான விளையாட்டுத் திடல் மெரீனா கடற்கரை!. அங்கே டீமுக்கு ஒரு கங்கூலி, தெண்டுல்கர்ன்னு, அது ஒரு தனி உலகம். ஞாயிரு விடிந்தும், விடியாததுமாக பேட்டும் கையுமாக, கலைகட்டத் துவங்கி, அந்தி சாயும் வரை அதகளம்தான்.

நான் என் கிரிகெட் சூத்திரங்கள் கற்றது இந்த பட்டறையில்தான். ஞாயிரென்றால் சூரியனின் உதயம், அஸ்தமனம் எல்லாம் எங்கள் மேல்தான். நல்லநாள் விசேஷம் என்றாலும் மேட்ச் என்றால் பேட்ச்சாக கிளம்பிடுவோம்.

அங்கே மாதத்துக்கு ஒரு டோர்னமென்ட் நடக்கும், நாலு அணிகள், எட்டு அணிகள்ன்னு தொடங்கி, 64 அணிகள் கலந்துகொள்ளும் டோர்னமென்ட்டெல்லாம் நடக்கும். இதுவும் அப்படி ஒரு டோர்னமென்ட்தான். இதில் 16 அணிகள் மோதின. எப்படியோ அடித்து பிடித்து நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தோம்.

இறுதிப் போட்டி நாகேஷ் டீமோட, நாகேஷ் டீம் டோர்னமென்ட் என்றால்..... பிச்சைப் பாத்திரம் மாதிரி ஆகிவிடும். வெளி டீமிலிருந்து நல்ல டிக்கெட்களைப் பொறுக்கி, எப்படியும் கப்பை லவுட்டிடனும் என்பது மட்டுமே அவர்கள் எண்ணம். எங்க டீமில் யாரையாவது எடுத்தால்.... அரசு உழியர்கள் போல் தொடர் உண்ணாவிரதம், மறியல்தான். அதனால் எதுக்கு வம்புன்னு நாங்க தோத்தாலும், ஜெயித்தாலும் எங்கள் தொண்ணைகளையும், வெண்ணைகளையும் வைத்தே கலி கிண்டுவோம்.

பல நேரம் கிண்டிய கலி வலிதான்னாலும்....., சில நேரம் பல டீமுக்கு கிலியையும் தந்திருக்கு. ஆனால் பல வீட்டுப் பலகாரமாய் மின்னும் பிச்சைப் பாத்திர டீமைப் பார்த்து பல்லிளித்தோம். "மச்சி நாம தோத்தாலும் பரவாயில்ல ஆனா கலீஜா தோக்கக் கூடாதுன்னான் ராஜா. வெத்தா இருந்தாலும், கெத்த உடாம இருப்போம்னு உருவேத்துனான்".


டாஸ் ஜெயிச்சா அவங்கள பேட் பண்ண சொல்லலாம்னு முடிவு பண்ணி செல்லையாவ டாஸ் போட அனுப்பினோம். இடி டாஸா விழுந்து, நாங்க தோத்தோம். ஆனால், நாகேஷ் ஆண்டவன் தாண்டவம் வேறாக இருந்தது. அவர்களே பேட் செய்யிறோம்னு சொன்னதும் நாங்கள் ரொம்ப 'ஹேப்பி' ஆனோம்.

பதினாறு ஓவரில்.... பறக்க விட்டு அடித்து, மொத்தம் 160 ரன்கள் எடுத்தார்கள். ஸாப்ட் பாலில் இந்த ரன் மலை முகடு, அதுவும் சப்பைகளும், சக்கைகளும் உள்ள எங்களுக்கு இது ட்ரீம் ஸ்கோர். கடவுளின் கருணைப் பார்வையில் அன்று ஷபியும் ராஜாவும் ரவுண்டு கட்டி அடித்து வெற்றியை எங்கள் கண்ணில் காட்டினார்கள். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் 'விட்டத்தைப்' பார்க்க கடைசி ரெண்டு பாலில் எட்டு ரன் தேவை.

இறுதிப் போட்டியானதால் எங்கள் தெரு ஜுனியர் டீமும் அவர்கள் மேட்ச்சை முடித்து கும்பலாக எங்கள் மேச்சைப் பார்க்க வந்துவிட்டனர். டிஸ்கஸ்ஸி, டிஸ்கஸ்ஸி ஆடுனத்தில், நேரம் ரொம்பவே ஆகிவிட்டிருந்தது. பார்கிங்குக்கு வந்த காரில் ஒன்றை நிறுத்தி, வெளிச்சம் 'பிச்'சுக்கு மட்டும் வருகிறா மாதிரி செட் செய்திருந்தார்கள். எங்களை விரட்ட வந்த காக்கி கும்பலும், நாங்கள் கெஞ்சியதில், எங்கள் ஆட்டத்தை வேடிக்கைப் பார்த்தது.

பதட்டத்தில் நான் பேட் பிடிக்க எதிரே பக்கர். பாலா போட்ட பந்தை கண்ணப் பொத்தி சுத்துனத்தில், மூன்று ரன்கள் பெற்று தந்தது. ஒரு பந்தில் ஐந்து ரன் பக்கர் என்ன மியாண்டட்டா ஒரே பாலில் சிக்ஸ் அடிக்க, சரி எப்படியாவது ஒரு 'போர்' அடின்னு சொல்ல, அவன் கிட்ட போய் "மச்சி... கண்ண பொத்தி சுத்து, மாட்னா லக்குதானேன்னு சொன்னா....?" பக்கர் "அந்த காரு லயிட்ட ஆப் பண்ண சொல்லுடா... கண்ணே தெரிய மாட்டேங்குது....!" என்றான் "என்னடா இப்படி ஒரு குண்ட தூக்கிப் போடுறன்னு....?" கேட்க "அந்த காரு போகஸ் லயிட்டுல என் கண்ணு போகஸ் ஆக மாடேங்குதுன்னான், நீ நல்ல கண்ணுல விளையாடுற நான் நாலு கண்ணுல விளையாடுறேன்னு" சொன்னான்.

எலிக்கு பயந்து எருக்கன்ச் செடில விழுந்தா மாதிரி இருந்துச்சி எனக்கு "மச்சி! நடப்பது எல்லாம் நல்லதுக்கேன்னு, கண்ணப் பொத்தி சுத்துன்னு" சொல்லிட்டு அம்பயர் பக்கத்தில் வந்து நின்னேன். பாலா போட்ட பால் வோயிடாக போக, ஆஹா ஒரு பாலில் நாலு மாட்டுச்சினா வெயிட்டுதாண்டான்னு, நினைக்க.... பாலா போட்ட அடுத்த ரெண்டு பாலும் வோயிடாகப் போக, சிறுசு டீமில் இருந்து காளிதாஸ் "பக்கர் அண்ணே...... அடிக்கலன்னாலும் ஒடுங்கன்னு...." கத்துனான். நானும் பக்கர் கிட்ட போயி "மச்சி! இப்போ ரெண்டு தான் தேவை, மாட்டுலேன்னாலும் ஓடி வந்துடுன்னு...." சொன்னேன். அவனும் "சரின்னு" சொன்னான். ஆனால் அடுத்த பாலும் வோயிடாக, ஒரு பாலில் ஒரு ரன்னுன்னு வந்து நின்னுச்சி எப்படியும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம்னு முடிவாயிடிச்சி, அடுத்த பாலும் வோயிடாகப் போக அப்படியே எங்க ரெண்டு போரையும் சுத்தி இருந்த எங்க தெரு பசங்க அலேக்காக துக்கிக் கொண்டு வீடுவரை சேர்த்தார்கள்.

எங்களை விளக்கி விட வந்த போலீஸ் கடைசி பந்து வரை பார்த்து விட்டுதான் சென்றார்கள். இது மாதிரி எத்தனயோ நல்ல நல்ல மேட்சைப் பார்த்தது நம்ம மெரீனா கடற்கரை. ஆனால்.... இப்போ அங்கே ஆடத் தடை, மெரீனாவ அழகு படுத்தரோம்னு, சொல்லி பல்லு குத்த 'பேட்' கேக்குது சென்னை மாநகராட்சி.

முறையான விளையாட்டு ஒவ்வொருவரும் விளையாடுவார்கள் எனில்..... அவர்கள் தேக ஆரோகியமும், மன வலிமையையும் மென்மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டு ஒருவனுக்கு வெற்றி தோல்வியைக் கற்றுத் தருகிறது, விடா முயற்சி, கடைசி வரை போராடும் குணம், மேலாண்மையைக் கற்றுத் தருகிறது, நட்புத் தளம் அமைத்துத் தருகிறது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

இந்த பீச் திடலுக்குப் பதில் வேறு ஒரு திடல் மாநகராட்சி அமைத்துத் தந்தால்.... அது சென்னையைச் சுற்றி இருக்கும் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை......! ;

5 comments:

கலையரசன் said...

பல்லுகுத்த பேட்டுன்னு ஆரம்பிச்சி.. நீங்க விளையான்ட (அ) கலந்துகொண்ட கிரிக்டகெட்டை நடுவுல கொண்டாந்து... கடைசியா கருத்து சொல்லி முடிச்ச பாருய்யா...

அருமைய்யா! அருமை!!

ஹுஸைனம்மா said...

கிரிக்கெட் வர்ணனையாளராக முயற்சிக்கலாமே?

(சத்தியமா நக்கல் இல்லீங்கோ...)

பித்தன் said...

வருகைக்கு நன்றி கலை....

பித்தன் said...

// ஹுஸைனம்மா said...
கிரிக்கெட் வர்ணனையாளராக முயற்சிக்கலாமே?

(சத்தியமா நக்கல் இல்லீங்கோ...)//

தங்கள் அக்கறைக்கு நன்றி முயற்சிக்கிறேன்

பித்தனின் வாக்கு said...

நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி

 

Blogger