Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தாக்கரேக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமாகிவிட்டது, இப்போது சச்சினிடம் வாயக் கொடுத்து புண்ணாகப் போகிறார். நான் ஒரு இந்தியன் என்று சொன்னது தப்பா.....? இவங்களோட இந்த சின்ன பிள்ளைத் தனமான தாக்குதல்களை அரசியலுடன் நிறுத்தினால் நல்லது. நான் தெரியாமத்தான் கேக்குறேன் இவருடைய பாஸ்போர்டில் நாடு என்னுமிடத்தில் இந்தியன் உள்ளதா அல்லது மாராட்டியன் என்று உள்ளதா...? தாக்ரே இந்த சில்லறைத் தனமான அரசியல் செய்யும் பைத்தியக் காரத் தனத்தை விட்டு எப்பொழுதுதான் வெளியே வருவார்.......?
------X------X------
மற்றுமொரு தொழிற்சாலை சென்னைக்கு மிக அருகில் துவங்க உள்ளது. ஏற்கனவே இயங்கிவரும் ஹுண்டாய், நோக்கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வளவு....? வேலை வாய்ப்பு பெருகியது, எவ்வளவு பேர் பயனடைந்தார்கள்....? ஆஹா இன்னொரு சாதனை இந்த ஆட்சியில்.

ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களால் பல விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளது, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க. ஆமா கான்ட்ராக்டில் வேலை கிடைத்தது. தினமும் நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். எல்லா மேல் நிலை ஆட்களுக்கும் தங்கள் நாட்டு பிரதிநிதிகளைத்தான் நியமித்திருக்கிறார்கள் இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

இதில் அரசு மான்யம் என்ற பேரில் பல வித சலுகைகள் பெற்றுக் கொண்டு, நம்ம மக்களை அடிமையாக நடத்துகின்றன இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?

--சாமானியன்

------X------X------

கர்ப்பகிரஹத்துக்குள் தன் வக்கிரத்தை அரங்கேற்றிய குருக்கள் (எதில்...?), தேவநாதன் தானே வந்து கோர்டில் சரணடைந்திருக்கிறார். எந்த மதமும் இல்லறத்திற்கு எதிராக இல்லை ஆனால் ஒரு பூஜை செய்யும் குருக்கள், அந்த புண்ணிய தளத்திலேயே வக்கிரமாக நடந்து கொண்டது கண்டிக்கத் தக்கது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட சூட்டோடு கடுமையான தண்டனை கிடைக்க எல்லாம் வல்லோனை பிரார்த்திப்போமாக.
------X------X------
நேற்று வரை இருந்த 'நினைத்தாலே இனிக்கும்' சற்று சறுக்கி, முதலிடத்தில் 'கண்டேன் காதலை' வந்திருக்கிறது, இது அடுத்து 'வேட்டைக்காரன்' வரும் வரையில் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். வேட்டைக்காரன் புலியாய் உருமினாலும், பூனையாய் உரு மாறினாலும், சன் டிவியின் அடுத்த படம் வரும் வரையில் முதலிடத்திலேயே இருக்கும்.
------X------X------
'பையா', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களுடன் அண்ணன் சூர்யா நடித்த படமும் ரிலீசுக்கு தயாரான நிலையில், மார்கண்டேயன்.... அண்ணனும் தம்பியும் போட்டி போட வேண்டாம்னு நினைக்கிறாராம். பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் தலையில் பெரியக் கல்லைப் போடாமல் இருந்தால் சரி. ஏற்கனவே செல்வராகவன் 'மங்கைமடி' சாய்ந்ததில் மட்டுப் படாமல் போனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வேலைகள், இதில் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து தயாரிப்பாளரின் பணத்தில் வெடி வைக்க வேண்டுமா.....? ;

10 comments:

venkat said...

//வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?\\

கும்மாச்சி said...

தாக்கரே எல்லாம் ஒரு மனுஷாகவே மதிக்கக்கூடாது. உங்கள் கருத்து ஏற்புடையதே.
குருக்களுக்கு --சு வெட்டிடணும். கடவுளின் பெயரால் காமலீலை, கொடூரம்டா சாமி.

♠ ராஜு ♠ said...

தாக்கரே ஒரு காமெடி பீஸு..!

பித்தன் said...

வருகைக்கு நன்றி! venkat அடிக்கடி வருக....!

பித்தன் said...

// கும்மாச்சி said...
தாக்கரே எல்லாம் ஒரு மனுஷாகவே மதிக்கக்கூடாது. உங்கள் கருத்து ஏற்புடையதே.
குருக்களுக்கு --சு வெட்டிடணும். கடவுளின் பெயரால் காமலீலை, கொடூரம்டா சாமி.//

ஆனாலும் தாக்ரே பேச்சையும் கேட்டு ஆட நாலு பேரு இருக்காங்க இந்த ஊரில்.....

பித்தன் said...

// ♠ ராஜு ♠ said...
தாக்கரே ஒரு காமெடி பீஸு..!//

இருக்கலாம்...! ஆனால் இப்போதான் காமெடி எல்லாம் ஹீரோவா ஆகுராங்களே....!

கலையரசன் said...

அவனுக்கு பேரு பால் தாக்ரேன்னு வச்சதுக்கு பதிலா... ____ தாக்ரேன்னு வச்சியிருக்கனும் நியாசு!

//வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?//

அருமைய்யா... எங்கிருந்துய்யா புடிக்குற இதெல்லாம்?

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள். பால் தாக்கரே பாலை சச்சின் நேக்கி வீசியுள்ளார்.

பித்தன் said...

/// கலையரசன் said...
அவனுக்கு பேரு பால் தாக்ரேன்னு வச்சதுக்கு பதிலா... ____ தாக்ரேன்னு வச்சியிருக்கனும் நியாசு!

//வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?//

அருமைய்யா... எங்கிருந்துய்யா புடிக்குற இதெல்லாம்?///

அதுவா வருதுண்ணே...!

பித்தன் said...

// பித்தனின் வாக்கு said...
நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள். பால் தாக்கரே பாலை சச்சின் நேக்கி வீசியுள்ளார்.//

யார் மீது வீசினாலும், அவரு பாலையும் சேத்து அடிக்கோணும்....

 

Blogger