Pages

நன்றி நவில்தல்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ப்ளாக்குன்னு ஒன்னு ஆரம்பிச்சி ஆறேழு மாசம் ஆச்சி, எழுதுற ஒன்னுக்கு, மூணு கமென்ட் வந்தாலே ரொம்ப ஜாஸ்தி.

"கடை விரித்தேன்..... கொள்வாரில்லை"ன்னு, நானும் ஒவ்வொரு நாளும் தெறந்து தெறந்து பார்த்தா அங்கொன்னும் இன்கோன்னும் கமென்ட் வந்திருக்கும். தொடர்ச்சியா நம்ம கலை அண்ணாச்சி எட்டிப் பார்ப்பாரு. சரி நாம இன்னும் ரொம்ப தூரம் போகனும்போலன்னு...? என்ன நானே தேத்திக்குவேன். நான் எழுதிய நாலைஞ்சு கதைகள் இளமை விகடன், கீற்று மற்றும் தமிழ் எழுத்தாளர்கள்ன்னு ஒன்னு ரெண்டு இணையத்தில் வந்திருக்கிறது.

சீக்கு புடிச்ச கோழியா.... சீண்டிப் பாக்க ஆளில்லாம சிக்னல்ல நின்னவன, விகடனின் மின்னிதழுக்கு ஒரு கதை எழுதி தருமாறு கேட்டு, ஒரு நாள் மின்னஞ்சல் ஒன்று வந்தது. நம்மளையும் மதித்து கேக்குறாங்களேன்னு ரொம்ப பெருமையா இருந்தது. அட.... நமக்கும் ஒரு அங்கீகாரம் இருக்குடான்னு, உள்ள இருக்கும் குரங்கு துள்ளாட்டம் போட்டது.

ரொம்ப சிரத்தையாக யோசித்து, பல்லு கொடஞ்சேன், பாக்கு போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க. என்னவோ எழுதி அனுப்பினேன் அது பிரசுரமாச்சின்னு வந்ததும், என்னையே ரத்தம் வர கிள்ளிப் பார்த்தேன். நெசமாவே வந்திருக்கு.

இந்த சந்தோஷ தருணத்தில் என் பதிவுகளையும் மெனக்கெட்டு படித்து பின்னோட்டம் இடும் அண்ணன் கலை, ராஜூ, கும்மாச்சி, தண்டோரா, செல்வா, சுரேஷ் குமார், ரஹ்மான், ஜெட்லி,சிங்கை பித்தன், வலசு - வேலணை மற்றும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் பொன்னான ஆதரவை நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்......

-------------------------------------------------------------------------------
அன்புபையீர்,

யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் வெளியாகிவிட்டது. தங்களது படைப்பும் இடம்பெற்றுள்ளது. பங்களிப்புக்கு நன்றி.

மின்னிதழை டவுன்லோடு செய்ய... http://youthful.vikatan.com/youth/Nyouth/min_nov_10112009.asp

- யூத்ஃபுல் விகடன் ;

15 comments:

♠ ராஜு ♠ said...

இப்போதான் மின்னியலை தரவிறக்கி நியாஸ்ன்னு உங்க பேரைப் பார்த்து, இங்க வந்தா பதிவு போட்ருக்கீங்க வாழ்த்துக்கள் தல.

♠ ராஜு ♠ said...

"தோல்விக்குப் பின்னால்" சூப்பரா இருக்கு.

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் நண்பா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

தலைப்புல நன்றி நவில்தல்னு பார்த்தவுடனே பதிவுலகைவிட்டுத்தான் போகிறீர்கள்போலன்னு நினைச்சு சந்தோஷமா (போட்டிக்கு ஆள் குறையும்ல..) வந்தேன். அப்ப போகலையா.? :-((

ஹிஹி.. சும்மாச்சுக்கும் சொன்னேன். விகடனுக்கும், தொடர்வெற்றிக்கும் வாழ்த்துகள் பித்தன்.!

RAMYA said...

"தோல்விக்குப் பின்னால்" நல்லா இருக்குங்க!

விகடனுக்கும், தொடர்வெற்றிக்கும் வாழ்த்துகள் பித்தன்!!

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
தலைப்புல நன்றி நவில்தல்னு பார்த்தவுடனே பதிவுலகைவிட்டுத்தான் போகிறீர்கள்போலன்னு நினைச்சு சந்தோஷமா (போட்டிக்கு ஆள் குறையும்ல..) வந்தேன். அப்ப போகலையா.? :-((

ஹிஹி.. சும்மாச்சுக்கும் சொன்னேன். விகடனுக்கும், தொடர்வெற்றிக்கும் வாழ்த்துகள் பித்தன்.!
//

லொள்ளு கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது :))

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் பித்தன். நான் தங்களின் பதிவுகளை படிக்கின்றேன். பல முறை பின்னூட்டம் இடமுடியவில்லை. மன்னிக்கவும் நன்றி. இன்னும் நிறைய எழுதவும்.

கலையரசன் said...

"வாழ்"த்துக்கள் மாமே!! இன்னம் படிக்கவில்லை நீ எழுதினதை... படிச்சிட்டு வந்து இன்னொன்னு போடுறேன்!

பித்தன் said...

//இப்போதான் மின்னியலை தரவிறக்கி நியாஸ்ன்னு உங்க பேரைப் பார்த்து, இங்க வந்தா பதிவு போட்ருக்கீங்க வாழ்த்துக்கள் தல//

நன்றி ராஜு..... தங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்கும் பித்தன்.

பித்தன் said...

//வாழ்த்துக்கள் நண்பா..//

தங்கள் முதல் வருகைக்கு நன்றி வசந்த். ஆஹா இன்னொரு நண்பர் கிடைச்சுட்டார். தங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து எதிர்நோக்கும் பித்தன்.

பித்தன் said...

//தலைப்புல நன்றி நவில்தல்னு பார்த்தவுடனே பதிவுலகைவிட்டுத்தான் போகிறீர்கள்போலன்னு நினைச்சு சந்தோஷமா (போட்டிக்கு ஆள் குறையும்ல..) வந்தேன். அப்ப போகலையா.? :-((

ஹிஹி.. சும்மாச்சுக்கும் சொன்னேன். விகடனுக்கும், தொடர்வெற்றிக்கும் வாழ்த்துகள் பித்தன்.!//

நன்றி ஆதி,

அவ்வளவு சீக்கிரம் நல்லது நடக்குமா இன்னும் மொக்கை போட கொட்டி கிடக்கு மேட்டரு..... தங்கள் ஓட்டுக்களையும், ஆதரவையும் வேண்டும் பித்தன்.

பித்தன் said...

//"தோல்விக்குப் பின்னால்" நல்லா இருக்குங்க!

விகடனுக்கும், தொடர்வெற்றிக்கும் வாழ்த்துகள் பித்தன்!!//

நன்றி சகோதரி, முதல் முதல் ஒரு பெண் வாசகி. இன்னும் என் பொறுப்பு கூடிக் கொண்டே போகிறது. இனி அதிக சிரத்தை எடுத்து என் எண்ணத்தைப் பதிவு செய்வேன்.

பித்தன் said...

//"வாழ்"த்துக்கள் மாமே!! இன்னம் படிக்கவில்லை நீ எழுதினதை... படிச்சிட்டு வந்து இன்னொன்னு போடுறேன்!//

"மாமே!!" அப்போ நம்ம ரொம்போ நெருங்கிட்டோம்னு சொல்லுங்கோ. என் மொக்கைக்கும், குப்பைக்கும் நட்பு பாராட்டும் தங்கள் அன்புக்கு நன்றி.

நட்புடன் பித்தன்.

பித்தன் said...

//வாழ்த்துக்கள் பித்தன். நான் தங்களின் பதிவுகளை படிக்கின்றேன். பல முறை பின்னூட்டம் இடமுடியவில்லை. மன்னிக்கவும் நன்றி. இன்னும் நிறைய எழுதவும்//

அது சரி!! என் குப்ப மேட்டரையும், சப்ப மேட்டரையும் படிக்கவே ரொம்ப பெரிய மனசு வேணும். உங்கள் ஆதரவுக்கு நன்றி பித்தன்.

கோவி.கண்ணன் said...

//ரொம்ப சிரத்தையாக யோசித்து, பல்லு கொடஞ்சேன், பாக்கு போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க. என்னவோ எழுதி அனுப்பினேன் அது பிரசுரமாச்சின்னு வந்ததும், என்னையே ரத்தம் வர கிள்ளிப் பார்த்தேன். நெசமாவே வந்திருக்கு//

வாழ்த்துகள் !

 

Blogger