Pages

எள்ளு தந்தா..... எலிகாப்டர்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்,

உன்னொரு பைனான்ஸ் கம்பெனி மூடிட்டாங்கோ....

நாந் தெரியாமத்தான் கேட்டுகீறேந்....? எவனாவது எள்ளு தா, எலிகாப்டர் தரேன், ஏரோப்ளேன் தர்றேன்னு சொன்னா...., அவந் ஆரு என்னான்னு தெரியாமவே, நம்ம பய புள்ளைங்க துட்ட கொண்டு கொட்டிடுராங்கோ, அப்புறோம் துட்ட தாராந்துட்டு, அவன புடி, இவன பொசுக்குன்னு, கோர்மேன்ட்டு கிட்ட வந்தா.... அரசாங்கோம் பாவம் இன்னா பண்ணோம்.

இதுக்கு முன்னாடி ஒடுனவங்க அல்லருகிட்ட இர்ந்து, எவ்வளோ கரந்தாங்கோ, ஆராருக்கு குட்தாங்கோன்னு ஏதாவது ரெக்காடு கீதா.....? இர்காது, அல்லாரும் கூட்டு கலவாநிங்கோ.
---X---X----
முந்தா நா நம்ம பீச்சுல, நானும், நம்ம சன்னும் நல்லா கொரட்ட உட்டு தூங்கீனு இர்கொசொல்லோ...., ஒரே டர்ரு புர்ருன்னு மோட்டார் சவுண்டு, ஒரே பைக்குங்கோ, அல்லாரும் சும்மா சர்ருன்னு காத்த கீச்சிக்னு போனாங்கோ, நம்ம கூட தூங்கின்னு இர்தவங்க அல்லாருக்கும் படா பேஜாராப் பூடுச்சி, திடீர்ன்னு ஒரே அதிரி புதிரியாவி, சண்ட மூண்டு.... அப்பாலிக்கா போலீசு வந்து குண்டு போட்டுத்தான் சண்டைய நிறுத்திச்சி.

ரேசுக்கு ஓட்டுற பய புள்ளைங்க, வேற எங்காவது காட்டுக்கு போவ வேண்டியதுதானே, ங்கொய்யாலே... தின்னு கொயுத்துப் போன, இவனுங்க போதைக்கு நாங்க ஊறுகாயா......
---X---X----

இந்த ஆஸ்திரேலியாவுல இன்னாதாம்பா நட்குது...? ஒரே நம்ம பசங்கள அடிக்கீரனுங்க, நம்ம அமைச்சரும்... நம்ம பயலுகள அமைதியா இர்கனும்னு சொல்றாரு.... இதுக்கு இன்னாதாம்பா முடிவு....?

அரசாங்கம் அதிரடியா எதுனா முடிவெடுக்கலைன்னு வை, இது ரொம்ப பேஜாராப் பூடும் அக்காங்....

ஓக்கே பா செட்டம்மா வருது நமக்கு ஒரு சவாரி சிக்கிடிச்சி நாந் கயண்டுக்குறேன், வர்ட்டா. ;

5 comments:

velji said...

இப்பதாங்ன்னா ஒங்க ஏரியாக்கு வந்தேன்..படா கார சாரமா கீதுப்பா!

பித்தன் said...

நன்றி velji

பித்தன் said...

தங்களின் தகவலுக்கு நன்றி, ஏற்கனவே இங்க சிங்கையில் ஒருவர் பித்தன் என்று வைத்து ஞானப்பித்தன் என்று மாற்றிவிட்டார். நானும் இன்னும் இரண்டு நாளில் பெயர் மாற்றிவிடுகிறேன். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இனி நானும் தங்களின் பதிவுகளை படித்து கருத்துரைக்கின்றேன். நிறைய எழுதுங்கள். வாழ்க தோழமை.

Suresh Kumar said...

சென்னை தமிழில் அழகாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

பித்தன் said...

அன்பு பதிவர்களே! ஆன்றசால் பெரியோர்களே, சிவகாசி பட்டாசு வெடிக்கத்தவறினாலும் நீதி தவறாமல் பதிவு எளுதும் பதிவர்களே.
வில்லு படத்தையும் தகிரியமாக பார்த்த வீரர்களே! கடமை மாறவமல் பதிவர் கூட்டத்தில் வடையும்,ஓசி சாப்பாடும் சாப்பிடும் கண்ணியவான்களே! உங்கள் அனைவருக்கும் நான் பித்தன் என்ற பெயரில் பதிவு தொடங்கும் முன்பாக சகோதரர் ஒருவர் அந்த பெயரில் பதிவு போட ஆரம்பித்துவிட்டதால் நான் அவரின் அன்பான வேண்டுகோள்படி(உதைக்கும் முன்பாக) எனது பதிவை பித்தனின் வாக்கு என்று பெயர் மாற்றம் செய்துள்ளேன் என்று கேட்டுக்கொள்கிறேன்.(கொல்கிறேன்).ஆகவே இந்த பெயரிலும் எனக்கு தங்களின் மேலான ஆதரவை நல்கி நன்றாக குத்துமாறு அன்புடன் வேண்டி,விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

 

Blogger