Pages

குப்ப மேட்டரு...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்து பத்திரிக்கையின் அதிபர் திரு.N. ராம் சமீபத்தில் இலங்கை அரசின் விருந்தினராக இலங்கை சென்று வந்துள்ளார். வந்தவர் சும்மா வரவில்லை.... சனியுடனே வந்திருக்கிறார். அங்கே உள்ள முகாம்கள் எல்லாம் இந்திய முகாம்களைவிட சிறந்ததாகவே இருக்கிறது என்றும், அங்கே இருக்கும் மக்கள் ரொம்ப சந்தோசமாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லி... பெரிய பிரச்னைக்கு சிண்டு முடிந்திருக்கிறார்.

இவர் போனது அரசாங்க விருந்தினராக, அதிலும் ராஜபக்ஷே நண்பராக (ஏற்கனவே சந்திரிகாவிடன் இருந்து “லங்கா ரத்னா” விருதைப் பெற்றவர்) சென்றிருக்கிறார். இவர் முகாமில் இருந்தவர்களிடம் பெரிதாக எதையும் பேசவில்லை. இவர் முகாம்களுக்குச் சென்றது ராணுவத்தின் உதவியுடன், அப்படியிருக்கையில் அங்கே உள்ள தமிழர்கள் ராணுவத்தை எதிர்த்து என்ன பெரிசாகப் பேசிவிட முடியும்.

இலங்கை அரசு அனுமதியில்லாமல் ஒரு பத்திரிக்கையாளரோ, நிருபரோ இந்த முகாம்களுக்குச் சென்றுவிட முடியாது. அப்படியிருக்கையில் இவரை, அரசே அங்கே கூட்டிச் சென்றிருக்கிறது. அப்படியானால்.... அங்கே சூழ்நிலையை தங்களுக்குத் தக்கபடி மாற்றித்தான் இவரை கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. மேலும் ஒரு பக்க கருத்தை வைத்து அங்கே எல்லோரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் என்பது சுயஏமாற்று கூற்று. அவர் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்.

பொய்யை உரத்துக் கூறி உண்மையாக்க முயற்சிக்கிறார், இது எரிகிற திரியைத் தூண்டியதாகவேத் தெரிகிறது. அவர்களுக்கு உதவா, மனஊனம் கொண்ட மூத்த பத்திரிக்கையாளரே!! இதுபோல் பொய் பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் அதுவே அவர்கள் நெஞ்சில் பால் வார்த்ததாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------

நாடோடிகள் படத்தைப் பலரும் துவைத்து, அலசி காயப்ப் போட்டு விட்டதால்... அதைப் பற்றிய விமர்சனம் தனியாக எழுதவில்லை. படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். தயவு செய்து வெண்திரையில் காணுங்கள். இதுபோல் நிறைய கதை என்னிடமும் இருக்கு அதையெல்லாம் வேறு வேறு பதிவாக்க நினைக்கிறேன்.

இதுதான் உங்கள் தளம் சமுத்திரக்கனி, எங்கிருந்தீர்கள் இவ்வளவு நாள்? வாழ்த்துக்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். உங்கள் அடுத்தடுத்த படைப்பும் அமர்களமாய் இருக்க வாழ்த்துக்கள். சசியின் நடிப்பு சூப்பர் ஆனால் நடிப்பைத் தள்ளி வைத்து, ஒரு இயக்குனராய் பயணிப்பதை.... ரசிகர்களாய் விரும்புகிறோம். பரணி மற்றும் விஜய் தேர்ந்த நடிப்பு, குறிப்பாக பரணி அந்த குண்டு கண்ணிலேயே வசனம் பேசுகிறார். அபிநயா குறைவில்லா நடிப்பு நம்பமுடியவில்லை மும்பை ஹீரோயின்களைவிட நன்றாகவே உதட்டசைவிக்கிறார்.

நாடோடிகள் - ஓடோடிப் பார்த்து ஓஹோ என்று ஒடவைக்கலாம்.

-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
முத்திரை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் (உள்ளம் கேட்குமே, உன்னாலே! உன்னாலே, SMS போன்ற படங்களில் நடித்த நடிகர்) ஜீவா பாசறையில் இருந்து வந்தவர் என்ற ஏக எதிர்பார்ப்பில் போய் பார்த்தால் சாதாரண தெலுங்கு சினிமா கதை ஆனால் அவரின் இயக்கமும், ஒளிப்பதிவாளர் சல்மீன் உழைப்பும் தெரிகிறது.

முத்திரை - சரியாக குத்தவில்லை... ;

4 comments:

கும்மாச்சி said...

நியாஸ் வணக்கம், உங்கள் கருத்து நியாயமானது. ராம் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

பித்தன் said...

Yes, from the begining he's doing so in his press. U know before this all party discussion which had take place in chennai, there was a writeup in hindu saying srilanka was right in his stand.

He's blingly spporting lanka for self benefit.

கலையரசன் said...

இவனையெல்லாம் அந்த முகாம்ல போட்டு கும்முனாதான் புத்தி வரும்..
ஹிந்து பத்திரிகையை தவிர்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும் நாம்?

பித்தன் said...

ஆமா கலை நீங்கள் சொன்னது சரி ஆனால்..... இவனெல்லாம் திருந்த மாடடானுங்க... அவர் பத்திரிக்கையை புஅரகநிப்பது நம்ம மாதிரி ஆளுங்கதான் ஆனா மேல்தட்டு முக்கால்வாசி அந்த கருமத்தான் படிக்குது.

 

Blogger