Pages

கோயிந்து புலம்பல்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்

இன்னாபா எப்டிகீரீங்கோ, ரொம்ப நாளிக்கா உங்கள அல்லாரையும் பாக்கமா ரொம்ப கஷ்டமா இர்ந்துதுபா. தீவாளிக்கு நம்ம மாமனாரு வூட்டுக்கு போயிருந்ததாலதாந் கோயிந்து வல பக்கமே வர்ல.

நேத்து நம்ம பரத் படம் ஆறுமுகம் பாத்தேந்பா, அட நம்ம தலீவர் படம் அண்ணாமலைய அப்டியே உல்டா பண்ணி கீறானுங்கோ. ஆர்ரா டரக்டருன்னு பாத்தா.... அண்ணாமலைய டரக்ட் பண்ண நம்ம சுரேஸ் கிருஷ்ணாபா. இன்னடா இதுவும் ஒரு ரிமேக்கான்னு கேட்டுக்நாக்கா...? இல்லையாம்ல....!, கத வேற ஒரு ஆளுதாம்பா.

இன்னாடா இவனுங்கோல்லாம் பெரிய டரக்டருங்கோ....? அவந் படத்த கூட தெரியாம கீறானுங்கோ. வேற எவனோ உன் கிட்ட வந்து ஒந் கதயவே சொன்னா...., கஸ்மாலொம் எந் கதயவே என்னாண்ட கமால் பண்ணி ஓட்றியான்னு....? கலுத்தாம்பட்டயில தட்டி ஓட்டாம, கமுக்கமா படம் பண்ணி விக்கிராறு.

ஏற்கனவே இப்டித்தான் பாட்சாவ ஆந்திராவுல இருந்து துட்டு குடுத்து வாங்கி, கஜேந்திரான்னு பண்ணாரு நம்ம சுரேசு. நடிக்கிற கபோதிக்குதான் தெரியல, ஆனா தயாரிப்பலருக்குமா தெரியல..? துட்டு போடுற துக்கராம்முங்க உஜாரா இருக்க வேணாம்.

பதினஞ்சு சீனையும் பக்காவா டகுல்பாஜி பண்ணி திருப்பி எடுத்து.... அத எப்படியும் ஓட்டிடலாம்னு ட்ரீம் காணுராங்கோ. சரி எடுக்குறதுதாந் எடுக்குரீங்க, கொஞ்சம் பந்தாவான அக்டருங்கள போட்டு எடுக்க வேண்டியதுதானே, நேத்து வந்தவந், ஒன்னுக்கு போவத் தெரியாதவன போட்டு, நம்ம தலீவர் படத்த, அவர் பேர கேடுக்குராங்கோ.

இதுக்கு பேசாம சிந்தாதிரி பேட்டயில சீஸ்ஸான வண்டிய சிக்கெடுத்து விக்கலாம்.

போட்டுனு போன சரக்கு புஸ்ஸுன்னு போயிடிச்சி... அப்பாலிக்கா ஊட்ல இர்ந்த சரக்க ஊத்திக்னு தாராந்தந்பா.

சரிப்பா நம்ம பயப்ப பாப்போம் வர்டா... ;

2 comments:

பித்தனின் வாக்கு said...

அண்ணாமலை அடச்சீ ஆறுமுகம் படத்த இதைவீட நல்லா விமர்சனம் பண்ணமுடியாது. ஒரு டைரடக்டர் அவர் படத்த அவரே ரீமேக் பண்ண கொடுமை இது. கொஞ்சம் மாத்தி இருந்தாக் கூட நல்லா இருக்கும். இதுல நானும் கோயிந்து கோஸ்டிதான் வாத்தியாறே. நன்றி.

பித்தன் said...

வருகைக்கு நன்றி பித்தன்...

உங்கள் புகைப்படம் சூப்பெர்

 

Blogger