Pages

சினி மினி....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பட்டாசை பட்டக்ஸில் கட்டிக் கொண்டு அலைந்ததனால்.... என்னால் வலைப் பக்கமே இத்தனைநாளாக வரவே முடியவில்லை.

திராவிடன், தமிழ் திருநாள் என்று பேசிக் கொண்டாலும், தொல்லைக்காட்சிகள் என்னவோ போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. வாய்ச் சொல்லில் வீரரடி, வியாபாரம் என்று வந்து விட்டால்..... சாணமும் யானையாகும்.
---X---X----

கமல் 50ஐ தொடர்ந்து.... சிம்பு 25, ராதிகா 30ன்னு கொண்டாட தொல்லைகாட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இது ரசிகர்களை மகிழ்விக்க என்றாலும் இதில் ஒரு வியாபாரத் தன்மை இருப்பது மறுக்கமுடியாது.
---X---X----

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார்... பெத்த பெத்த டைரக்டர்களை தனக்கான கதை செய்யச் சொல்லி வெயிட்டிங்.... வாங்க தளபதியே, வந்து வெள்ளித் திரையை ஆள்க....
---X---X----

கமலின் அடுத்த பட நாயாகியாக நடிக்க திரிஷாவும், தமன்னாவும் கடுமையாக முயற்சிக்கிறார்கள், அனேகமாக தமன்னா கைப்பற்றுவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.....
---X---X----

குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வராமல் இருக்க அவர்களுக்குள்ளாகவே பேசி தாங்களே தங்களுக்குள் போட்டியாக வராமல் இருக்க தத்தமது படங்களை முன்பின் மாற்றி வெளியிடுகிறார்கள் அதானே....
---X---X----

தீபாவளி ரேசில் ஆதவன் பின்தங்க.... பேராண்மை முந்தும்போல் தெரிகிறது.... ;

2 comments:

பித்தனின் வாக்கு said...

// கமல் 50ஐ தொடர்ந்து.... சிம்பு 25, ராதிகா 30ன்னு கொண்டாட தொல்லைகாட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இது ரசிகர்களை மகிழ்விக்க என்றாலும் இதில் ஒரு வியாபாரத் தன்மை இருப்பது மறுக்கமுடியாது //
இப்படி தொடர்ந்து நடத்துனங்க அப்புறம் விழாவுக்கு அர்த்தம் இல்லாது போய்விடும்.
// திராவிடன், தமிழ் திருநாள் என்று பேசிக் கொண்டாலும், தொல்லைக்காட்சிகள் என்னவோ போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. வாய்ச் சொல்லில் வீரரடி, வியாபாரம் என்று வந்து விட்டால்..... சாணமும் யானையாகும். //
தீபாவளிக்கு குளித்து தலைமுழுகி, புத்தாடை உடுத்தி, கோவில் செல்வது, உற்றார் உறவினருடன் இனிப்பு உண்டு, பட்டாசு வெடிப்பது இந்து பண்டிகை.
முழுக்க தண்ணியடித்து, படத்துக்கு போய், இல்லாட்டி டீ வி முன்னாடி உக்காந்து புருசன் நடிகையும், மனைவி நடிகனையும் இரசிப்பது நம்ம லேட்டஸ்ட் கலாச்சாரம். நன்றி.

பித்தன் said...

என்ன பண்ணுறது இதுதான் நம்ம கலாசாரம்....

வருகைக்கு நன்றி பித்தன்....

 

Blogger