Pages

முழிச்சிக்கோ சகோதரா முழிச்சிக்கோ....

முன்னெல்லாம் குடியரசு நாளன்று கருக்கலிலே எழுந்து, சூரியனையே துயில் எழுப்பி, பந்துக்களோட மெரீனா கடற்கரைக்குச் சென்று குடியரசுதின அணிவகுப்பை பார்பதென்பது எங்கள் நாள்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். அரைக்கால் பருவத்திலிருந்து பதின்ம வயதுவரை கிட்டத்தட்ட எல்லா வருடமும் பதிவேட்டில் எங்கள் குடும்பத்தின் பெயர் இருக்கும்.

நாங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் போகிறோம் என்று நினைத்தால்... சில நேரங்களில் போரூர், பூந்தமல்லி என்று தொலை தூர இடத்திலிருந்தும் மக்கள் வருவார்கள். காலை உணவு, நொறுக்குத் தீனி கட்டி எடுத்துக் கொண்டு, ரோட்டோரத்தில் உட்கார்ந்து அணிவகுப்பை பார்பதென்பது ஒரு திருவிழாக் கோலம். அது முடித்து வீடு வந்ததும், தில்லியில் நடக்கும் அணிவகுப்பை முழுவதும் பார்த்து முடிப்போம். அந்நாளில் ஒரு முறையேனும் தில்லி சென்று அணிவகுப்பை நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணம், ஆனால் அது இன்று வரை நடக்கவில்லை.

வருடத்தில் ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, ஒரு சிறந்த வியாபார தளமாகவும், சிறு சிறு வியாபாரிக்கு அமைகிறது, பலூன், மூங்கில் ஊதுகுழல், பாப்கான் என்று ஒரு கிராம திருவிழாக்கான எல்லா அம்சத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

பத்து நாளைக்கு முன்னிருந்தே அணிவகுப்புக்கான ஒத்திகைகள் நடக்கும் கடற்கரை சாலை வழித்தடம், காலை போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து, எல்லா வாகனங்களும் திருவல்லிக்கேணி சாலை வழியாக நெருக்கியடித்து போகும். ஒத்திகை முடிந்து இந்த அலங்கார ஊர்திகள் வெலிங்டன் சீமாட்டி பள்ளியிலும், காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும், அதை பார்க்கவே நிறைய கூட்டம் கூடும்.

என் தந்தை தோள்மேல் இருந்து பார்த்தது முதல், இன்று நான் தந்தையாய் என் மகன்களை உயர்த்திக் காட்டுவதேன்பதே அலாதி ஆனந்தம். எத்தனை சண்டைகள், கூக்குரல்கள் ஏண்டா சனியனே என் காலை மிதிச்சென்னு தொடங்கி... ஊரில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் சரளமாய் விளையாடும்.

ரோமியோக்களுக்கு இது தெய்வ தரிசனம், கன்னிகளும் கண்ணண்களும் புத்தாடை என்ன, புதுப் பொலிவு என்னான்னு ஒரு தினுசாத்தான் சுத்துவார்கள். "மச்சான் என் ஆளு முறுக்கு கொடுத்தாடா இந்தா சாப்புடுன்னு" சொல்லி முறுக்க பாஸ் பண்ணி, மயில பிக்கப் பண்ண க்ளோசப் உலகில் இருப்பார்கள். கன்னிகளும் கண் ஜாடை கை ஜாடை காட்டி, கவருவார்கள். கன்னிகளின் அப்பன்களும், அண்ணன்களும் தங்கள் கோல்கேட் வலயத்தால் எல்லைச் சாமியாக காவல் இருப்பார்கள். இதையெல்லாம் மீறி பல பக்கங்களிலிருந்து பறக்கும் முத்தம் காற்றில் மிதந்து மார்கழி மாசத்தையே மப்புள சுத்த வைக்கும்.

அணிவகுப்பில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல் துறையும் தத்தமது சாதனைகள், செயல்பாடுகளை விளக்கும் வண்ணம்..., காட்சிப் படுத்தப் பட்ட அலங்கார ஊர்தி, கலாச்சார நடனம் என்று ஒரு ஆண்டில் தமிழ்நாட்டின் இல்லை இந்தியாவின் முக்கிய பதிவாக இது விளங்குகிறது.

பார்வையாளனாய் இருந்து, பள்ளி, கல்லூரி நாட்களில் பங்கேற்பாலனாய் இருந்தவரை, காந்திசிலையிலிருந்து... கண்ணகி சிலை வரை கூட்டம் அம்மும். ஆனால் இப்பொழுதெல்லாம் விவேகானந்தர் இல்லம் வரை கூட கூட்டம் இருப்பதில்லை. இதற்க்கு முக்கிய காரணம், இரவு வெகு நேரம் வரை தொலைகாட்சி பார்த்து விட்டு, உச்சி வெயில் குச்சி வச்சி எழுப்பும் வரை மக்கள் தூங்குகிறார்கள். டிவி மனிதனின் வாழ்கையில் ரொம்பவே ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களுக்கும் பொறுமை இல்லை எல்லாம் தங்கள் வரவேற்பறைக்கே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்,
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.....

ஜெய் ஹிந்த்!!!
;

குப்ப மேட்டரு......

ஆணி புடுங்குரதுலையே முழு நேரமும் கழிந்ததால இவ்வளவு நாள் பதிவு பக்கமே வர முடியவில்லை. ஆனா தவறாம எல்லா முக்கிய பதிவுகளையும் படிக்க முடுந்தது. ஒரு வாரம் சென்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனா கால் எட்டும் தூரத்தில் கடல் இருந்தும் கடலைப் பார்க்க முடியல. நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை.
------xxx-----xxx------xxxx-----
சமீபத்திய பாடல்களில் ஆடுகளத்தில் S.P.Bala, S.P.Charan & Prashanthini பாடிய "ஐயய்யோ நெஞ்சம்" என்கிற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பிள் ட்யுனாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப நல்லா இருக்கு. அநேகமாக காதல் கிறக்கத்தில் பாடுவதாக இருக்கும்போல் இருக்கிறது. இந்த பாட்டு அப்பா மகன் இருவரின் கிறங்கடிக்கும் குரல்களுக்காகவே மிகமிகப் பிடித்திருக்கிறது.

அடுத்து எத்தனையோ தாய் பாடல் வந்திருந்தாலும் Thenmarku Paruvakaru படத்தில் வைரமுத்து வைர வரிகளில் விஜய்ப்ரகாஷ் பாடி ரத்தினம் என்கிற புது இசைஅமைப்பாளர் இசைஅமைத்து நெஞ்சைக் கரைக்கிறது. இது தெற்கத்தி தாய்களை கண்முன்னே நிறுத்துகிறது. "கல்ல புழிந்து காஞ்சி ஊத்தினா" ஒரு வரியும், "மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா உடல் மக்கி போற மட்டும் ஒழைக்கிரான்னு" அந்த பகுதி தாய அப்படியே பிரதிபலிக்கிற பாட்டு.
------xxx-----xxx------xxxx-----
சென்னையில் புத்தக திருவிழா நடக்கிறது போகமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா நண்பர்கள் கொடுத்தது, நானா விரும்பி வாங்கியதுன்னு இருக்க நிறைய புத்தகங்களே இன்னும் நிறைய படிக்காமல் பரணில் இருக்கு இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டுது. குறைந்த பட்ச பலனாக சில பதிவர்களையும், எழுத்தாளரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும், என்ன செய்ய திரைகடலேறி ஆணி புடுங்கும்போது இந்தமாதிரி இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
------xxx-----xxx------xxxx-----
கட்டக் கடைசியாக அனைத்து வலையுலகவாழ் மக்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள். ;

குப்ப மேட்டரு....

எந்திரன் படத்தை இங்கே தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் பார்த்தேன். நம்ம ஊர் டென்ட் கொட்டகைப் போல் ஓடிச் சென்று இடம் பிடிக்க வேண்டும். வரிசை எண் பிரிண்ட் செய்திருந்தாலும், யாரும் அது படி அமருவதில்லை. 'ஒலி' அமைப்பு மிக மட்டமாக இருந்தது. இந்த மாதிரி ஒரு technically uphold படத்தை மோசமான திரையரங்கில் பார்க்க நேர்ந்தது என் முன்வினை. ஆனால் இங்கே audiience பொதுவாகவே 'சத்யம்' 'ஐநாக்ஸ்' வகையைச் சேர்ந்தவர்கள், ஒரு காமடி காட்சி வந்தாலும், உதட்டோரப் புன்னைகை சிந்தி, சத்தம் வராமல் கை தட்டி ரசிப்பார்கள், ஆனால் அன்று அதற்க்கு நேர்மாறாக விசிலும், டான்சும் விண்ணைத் தொட்டது.
--------------XXX------------------XXX------------------
தோணி தலைமையில் இப்போ உள்ள அணி சிறப்ப்பகவே செயல்படுகிறது, நேற்று நடந்த அஸ்த்ரேலிய அணிக்கு எதிரான மேட்சில், அனாயசமாக ஆடி வென்றுவிட்டது. சில நாட்கள் வெளியில் இருந்து, மீண்டும் தனது இருப்பை ரன்களால் உறுதி செய்திருக்கிறார் யுவராஜ். முந்நூறு ரன்களுக்கு அருகில் சேஸ், நடுத்தர வரிசை சிறப்பான ஆட்டத்தினால் சுளுவான வெற்றியைப் பிடிக்க முடிந்தது. ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடப் பட வேண்டியது, என்ன ஒரு பொறுப்புடன் அதே சமயம் consistency maitain செய்கிறார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுமாதி சோதனை முயற்சி செய்து புதுப் புது வீரர்களைத் தயார் படுத்தி வைத்தால்...., ஆபத்தில் உதவுவார்கள். இனி வரும் காலம் இளைஞர்கள் கையில் சந்தேகமே இல்லை.
--------------XXX------------------XXX------------------
எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி இன்னும் நிறைய விழாக்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் (என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்......!) படம் கண்டிப்பாக ஒரு வருடம் ஓட்டப் படும். என்ன அதற்குள் காட்சிக்கு காட்சி ஒரு விழா எடுத்து களிப்புருவார்கள்.
--------------XXX------------------XXX------------------
நண்பர் ராஜூவின் கதை மலர்வாசகன்.! அருமையான எழுத்துநடையிலும், தேர்ந்த வார்த்தைக் கோர்வையாலும் அசத்தியிருக்கிறார். படித்துத்தான் பாருங்களேன்.
--------------XXX------------------XXX------------------
நண்பர்கள் சிலரது வீட்டில் தொலைகாட்சி, ரேடியோ முதலான நேரக் கொல்லிகள் இல்லை. "எப்படி நேரம் போகிறதுன்னு..?" கேட்டால்.....! "இப்போதான் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட முடிகிறது, மிகுந்த நேரம் கிடைப்பதால்.... மனைவிக்கும் வீட்டு வேளைகளில், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவி செய்ய முடிகிறது. அதனால் பல நேர வெட்டி சண்டைகள் குறைந்து, ஒருவித அமைதி திரும்பியிருக்கிறது" என்றனர். என் நாட்கள் ரிமோட்டுடந்தான் விடிந்து, அடைகிறது, சில நேரம் அலாரமும் டிவியிலேயே செட் செய்து தூங்கிப் போகிறேன். ;

எந்திரன் - ஒரு பார்வை

வலை உலகில் முதல் முறையாக..................

கதை,வசனம் சுஜாதா, சங்கர் மற்றும் வைரமுத்து மகன் கார்கி. கதையை தேய்த்து செய்திருப்பதில் இம்மூவரின் பங்கும் ரொம்ப முக்கியம். என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா இவர் இல்லை என்றால்....... அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆங்காங்கே விஞ்ஞான தகவல்களைத் தூவி தன்னை நிருபித்துக் கொள்கிறார். மனிதர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். 'பி' 'சி' சென்டருக்கும் புரியும்படி எளிய விளக்கங்களைக் கொடுத்து கதையை தோள் கொடுத்து நடத்தியிருக்கிறார். hats off to him....

உலகமே எதிர்பார்த்த மாபெரும் படம், அந்த எதிர்பார்ப்பை இருநூறு சதம் நிறைவேற்றி இருக்கிறது. கண்டிப்பா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி இந்த படம். தமிழில் ஒரு புது முயற்சி, இன்னும் என்ன என்ன வேண்டுமோ அதெல்லாம் நிரப்பிக் கொள்ளுங்கள். கதை ஒரு வரியில் சொல்லி விடக் கூடியதுதான், அதை சொல்லிய விதம் தமிழுக்கு புதுசு.

ரஜினி climaxஇல் ஒரு அரைமணிநேரம் கலக்கியிருக்கிறார், மூன்றுமுகம் ரஜினியைப் பார்த்ததுபோல் இருந்தது. என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் இப்பட மேக்கப்புக்காக தன்னை வருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது (விஜய் வகையறாக்கள் கவனிக்க வேண்டியது).




ஐஸ்வர்யாராய் இன்னுமும் நீங்கள்தான் உலகாழகி, என்ன ஒரு அழகு...? ஒரு சீனில் புடவையில் வருவார்பாருங்க கோர்ஜியஸ். என்ன நடிப்பு, என்ன டான்சு கலக்கிட்டீங்க. எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.



சங்கர் - ட்ரைன் சீனில் எச்சைத் துப்ப வருபவனை ரஜினி மிதித்து ஓடுவது, லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீசை கத்தியால் கீறுவது போன்ற தன்ஒழுக்க சிந்தனைகளை தூவியிருக்கிறார் (ஒரு சீனில் வந்தாலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார் கொச்சின் ஹனீபா, இவ்வளவு சீக்கிரம் நம்மையெல்லாம் விட்டு சென்றதில் தென்னக சினிமா உலகம் ஒரு தேர்ந்த நடிகனை இழந்து விட்டது). எண்ணற்ற ரஜினி, ஐஸ்வர்யா என்று பாடல்களிலும், காட்சிப் படுத்தலிலும் ரிச்னசை மிதக்க விடுகிறார். ரோபோ செய்யும் சேஷ்டைகளிலே நகைச்சுவையைத் தடவியிருக்கும்போது ஒரு உலகதர விஞ்ஞானியின் விளங்காத உதவியாளராக ரெண்டுபேரைப் போடவேன்டிய வியாபார நிர்பந்தத்தில் சிக்கியிருப்பது தமிழ்நாட்டின் விதி.

கிராபிக்ஸ் கலக்கல், ஆனால் மீண்டும் மீண்டும் பல வித உருமாற்றத்தில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு அற்புதம் கிராபிக்ஸ் எது நிஜம் எதுன்னு தெரியாமல் கதைக்கு தேவையான ரிச்னஸ் இருக்கிறது. கலை இயக்குனர் சாபு சிறில் உழைப்பு அருமை ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

மொத்தத்தில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இந்திய சினிமா ஹிஸ்டரியில் ஒரு முக்கியப் படம். ;

வலையுலகில் முதல் முறையாக.......

தமன்னாவுடன் கார்த்திக்கு காதலா....?
?
?
?
இலங்கையில் அமைதி திரும்புமா....?
?
?
?
லஞ்ச லாவண்யம் இல்லாத இந்தியா உருவாகுமா....?
?
?
?
அம்மா... நாடு திரும்புவார்களா....?
?
?
?
கலைஞர் பாராட்டு விழாவே இனி வேண்டாம் என்கிறாரா.....?
?
?
?
அன்புமணி ராமதாசுக்கு எம்.பி சீட் வேண்டாமா....?
?
?
?
விஜய் இனிமே தொடை தட்டி வசனம் பேச மாட்டாரா.....?
?
?
?
விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணியா....?
?
?
?
நதிகள் இணைப்பு சாத்தியமா......?
?
?
?

இதெல்லாம் நமக்கெதுக்குங்க.... நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச இந்திரன் படத்தின் விமர்சனம் இன்னைக்கு ராத்திரி வலை ஏற்றம் செய்வான் பித்தன். கண்டிப்பா உங்க எல்லோரையும் விட நான்தான் முதலில் படம் பார்ப்பேன்........

இது எப்படி இருக்கு.....? ;

வயித்தெரிச்சலும் வைத்தியரும்

சின்ன வயசிலிருந்தே சீக்குன்னு வந்தால் பக்குன்னு இருக்கும். அப்போ ஊசிக்கு..., இப்போ காசுக்கு பயம். பத்து நாளாய் வயிறு எரியுதுன்னு (என்னது... யாரப் பார்த்தா....?) வைத்தியரப் பார்கலான்ம்னு அந்த பெரிய மருத்துவமனைக்கு என்னோட பெட்டெர் ஹபோட போனேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடத்தில் இருக்கு, அறை அறையா அலைஞ்சாலே ஆயுள் நீடிக்கும்.

முதலில் அனுமதி சீட்டு வாங்க அரைமணி நேர காத்திருத்தலுக்குப் பின் என் முறை வந்ததும் பட்சி எந்த மருத்துவர பாக்கனும்னு கேட்டுச்சி, நமக்கு அதெல்லாம் தெரியாது, விலங்கியல் படிச்ச வீட்டாம்மா கிட்ட கேட்டதுக்கு.... எண்டோக்ரைனாலாஜின்னு சொன்னதும், பட்சி 'பதிய' ஒரு பெரிய கோப்பைக் கொடுத்து,

"இத பூர்த்தி செய்யுங்கன்னு" சொல்லுச்சி. படிக்கிற காலத்திலிருந்தே ஃபாரம் பூர்த்தி செய்யுறது படபடப்பான ஒரு செயல். அதனால அத நம்ம பாரியாகிட்ட கொடுத்தேன். பூர்த்தி செய்து மறுபடி பட்சி கிட்ட போயி நின்னா.... ஒரு பேப்பர நீட்டி "நேரா அறை எண் இருநூத்தி அஞ்சுக்கு போயிக்கோன்னு..." பறைஞ்சது.

விதி வலியதுன்னு விருந்தாளிய விரட்ட முடியுமா...?, நீண்ட வரிசைக் கடந்து மருத்துவர காணும் பாக்கியம் கிட்டியது. "சொல்லுங்க..., என்ன ப்ராப்ளம்ன்னு?" கேட்டவரு கிட்ட "சார், பத்து நாளா வயிறு எரியுதுன்னு" சொன்னா....? "யாரப் பாத்துன்னு...?" மொக்கப் போட்டாரு மறுத்துவரு. ஆஹா ஆளு அறப்பிளேடோட அலைவாரு போலன்னு, ஆத்திரத்த அடக்கி அப்பாவியா சிரிச்சேன் நக்கல் பண்ணிக்கொண்டே நாலு டெஸ்ட எழுதிக் கொடுத்தாரு. "இத எடுத்துட்டு வாங்க, அப்புறோம் பாக்கலாம்னு..." அனுப்பிட்டாரு. வயித்தெரிச்சல் கரையுமுன்னே வைப்புநிதி கரையும்போலன்னு விதிய நிந்திச்சே.....

மறுபடி பட்சிகிட்டப் போயி விவரம் கேட்டேன். ஒன்னொண்ணுக்கும் தனித்தனியா சிலிப் கொடுத்து, 'சீறிச்சி' சாரி சிரிச்சி வச்சுது சேச்சி. நீர்
மலம்ன்னு முக்கி எடுத்து சில (Money) கரைந்தபின் தகவலை மறுபடி மருத்துவரிடம் காட்டினால்.... உங்களுக்கு ரத்த அழுத்தம் இல்ல (இனிமேதான் வரும்), சக்கரை இல்ல (அதுதான் எனக்கேத் தெரியுமே....!)" "ஆமா சார்ன்னு...." சொன்னா "அப்போ ஏன் என்ன பாக்க வந்தீங்கன்னு....?" கேட்டாரு ஒரு கேள்வி, ராஜ முழி முழித்த திருடனாக நான் விழிக்க, "இல்ல சார், அல்சரிக் போல இருக்குன்னு...." சொன்னா. நீங்க பாக்க வேண்டியது வாயு நிபுனரன்னு என்ன மறுபடி சேச்சியிடம் அனுப்பினார்.

சேச்சி காஸ்ட்ரோக்கு CASE-SHEET கொடுத்து அனுப்பியது.
அவரும் வாயுவ வாய்வழியா கேட்டே.... அத சாப்பிடாதீங்க இதச் சாப்பிடாதீங்கன்னு.... அட்ரீனல சுரக்க வச்சாரு. சாமு, சாபிக்கு பின்னுன்னு சில மாத்திரைகளக் கொடுத்து, சாப்பாட குறைக்கச் சொன்னாரு.

பாத்துன்னு சொன்னாலே பத்து நாளைக்கு பட்டினி போடுவா பத்தினி, இதுல வாயுன்னு சொல்லி வயித்தையே வத்தலாப் போடுறா.

டிஸ்கி : நாடி பிடிப்பதும் பாடி தொடுதலும் ஐய்யனோட போனதோ...?
இல்லை 'ஐ'பாடாய் போனதோ...? (ஆப்பிள் நிறுவனம் 'ஐ'பாடில் ஸ்டெத்ஸ் கொண்டுவந்துள்ளது),என்று பெரிய ஐய்யப்பாடு எழுகிறது
;

குப்ப மேட்டரு....

இன்று பிறந்தநாள் காணும் இசையின் இளைய வாரிசு யுவன் சங்கர் ராஜாக்கு வாழ்த்துக்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படப் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பையா, நா.ம.அ, வரிசையில் இதுவும் நிற்கும். மறுபடியும் யுவன் தன முத்திரையைப் பதித்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்போதே பச்சக் என்று மனதில் பதிகிறது.
--------------XXX------------------XXX------------------
தமிழ் நாட்டில் உள்ள கடைத்தெரு பெயர்பலகை நிறைய தமிழ் படுத்தி விட்டார்கள் ஆமா சிகப்பு பூதம் அதாம்பா (ரெட் ஜெயன்ட்), ஒன்பது மேகங்கள் (க்ளவுட் நயன்), சூர்ய தொலைகாட்சி சன் டிவி.... இதெல்லாம் தமிழ் பெயர்களா என்று கேட்டீர்களென்றால் நீங்கள் தமிழ் துரோகி என்று சபிக்கக் கடவது....
--------------XXX------------------XXX------------------
மற்றுமொருமுறை சூதாட்டப் புகார், ஒவ்வொருமுறை இப்பிரச்சனை எழும்போது மற்றைய தோல்விகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பணிந்து போதல் பணத்துக்கு மட்டுமே இருக்காது... வேறுபல மிரட்டல் வடிவங்களோ..., அதீத தேவை பூர்திகளோ இருக்கும் என்று நினைக்கிறேன். சோரம் போனவர்கள் ஓரங்கட்டப் படுவார்கள் என்கிறது சர்வதேச கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்.
ஆனால் பிடிபட்ட தரகன் ஒரே நாளில் விடிவிக்கப் பட்டதில் விசாரணையின் வீரியம் வலுவிழந்துவிட்டது.
--------------XXX------------------XXX------------------
வம்சம் மற்றும் நான் மகான் அல்ல பார்த்தேன். இரண்டுமே பிடித்திருந்தது. நா.ம.அ அந்த மாணவர்கள் எபிசோடு சற்றும் பயம்கொல்லவே செய்தது. இசையும் ஒளிபதிவும் கை கோர்க்க சரியான கலவையில் நகைச்சுவையோடு, ஒரு நல்ல படத்துக்கான எல்லா அம்சங்களோடு இருந்தது. வம்சம் வளரும் என்றே தோன்றுகிறது.
--------------XXX------------------XXX------------------
சமீபத்திய பெருந்தலைகள் வரும் விளம்பரங்களில் விஜய் வரும் ஜோஸ் விளம்பரம் நன்றாகவே இருக்கிறது. முப்பது நொடிகளில் ஒரு கதை சொல்லும் சாத்தியம் விளம்பரத்தில் மட்டுமே ஆகக்கூடிய காரியம். இது அந்த நிறுவனத்தின் புகழ் பாடுவதை விட விஜயின் புகழ்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது. விளம்பரத்தில் கதை தெரிவுசெய்யும் சூத்திரம் தெரிந்தவர், பெரிய திரையில் சறுக்குவது சற்று நெருடலே... இனியாவது நல்ல கதைகளை தெரிவு செய்து வெற்றி பெறட்டும்.
--------------XXX------------------XXX------------------
தேர்தல் ஜுரம் வேகமாக பரவி வருகிறது, இனி சாதனைகளை சொல்லி வேதனைகளை தொடரச் செய்யவும், கூழ் ஊத்துதல் முதல் குழு விவாதம் வரை, ஒளிப் பெருக்கி ஒடிந்தாலும் ஓயாது பிரச்சார அலை. ;
 

Blogger