நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆணி புடுங்குரதுலையே முழு நேரமும் கழிந்ததால இவ்வளவு நாள் பதிவு பக்கமே வர முடியவில்லை. ஆனா தவறாம எல்லா முக்கிய பதிவுகளையும் படிக்க முடுந்தது. ஒரு வாரம் சென்னையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனா கால் எட்டும் தூரத்தில் கடல் இருந்தும் கடலைப் பார்க்க முடியல. நண்பர்களைக் கூட சந்திக்க முடியவில்லை.------xxx-----xxx------xxxx-----
சமீபத்திய பாடல்களில் ஆடுகளத்தில் S.P.Bala, S.P.Charan & Prashanthini பாடிய "ஐயய்யோ நெஞ்சம்" என்கிற பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பிள் ட்யுனாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப நல்லா இருக்கு. அநேகமாக காதல் கிறக்கத்தில் பாடுவதாக இருக்கும்போல் இருக்கிறது. இந்த பாட்டு அப்பா மகன் இருவரின் கிறங்கடிக்கும் குரல்களுக்காகவே மிகமிகப் பிடித்திருக்கிறது.
அடுத்து எத்தனையோ தாய் பாடல் வந்திருந்தாலும் Thenmarku Paruvakaru படத்தில் வைரமுத்து வைர வரிகளில் விஜய்ப்ரகாஷ் பாடி ரத்தினம் என்கிற புது இசைஅமைப்பாளர் இசைஅமைத்து நெஞ்சைக் கரைக்கிறது. இது தெற்கத்தி தாய்களை கண்முன்னே நிறுத்துகிறது. "கல்ல புழிந்து காஞ்சி ஊத்தினா" ஒரு வரியும், "மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா உடல் மக்கி போற மட்டும் ஒழைக்கிரான்னு" அந்த பகுதி தாய அப்படியே பிரதிபலிக்கிற பாட்டு.
------xxx-----xxx------xxxx-----
சென்னையில் புத்தக திருவிழா நடக்கிறது போகமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா நண்பர்கள் கொடுத்தது, நானா விரும்பி வாங்கியதுன்னு இருக்க நிறைய புத்தகங்களே இன்னும் நிறைய படிக்காமல் பரணில் இருக்கு இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டுது. குறைந்த பட்ச பலனாக சில பதிவர்களையும், எழுத்தாளரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கும், என்ன செய்ய திரைகடலேறி ஆணி புடுங்கும்போது இந்தமாதிரி இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
------xxx-----xxx------xxxx-----
கட்டக் கடைசியாக அனைத்து வலையுலகவாழ் மக்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் நல வாழ்த்துக்கள். ;
2 comments:
Nalla irukku Niyaz. Thiraikadal odinalum, namma oorilay irunthalum ellarum pudungarathu ennamo aaniyathan. Evvalavu mudiyumo avvalavu pudingitu namma oorukku vanthiru. Ingeyum niraya aani irukku....
varugaikku nandri
Post a Comment