Pages

பல்லு குத்த 'பேட்'

திருவல்லிக்கேணி சுற்று வட்டார வாண்டுகளுக்கும், வாலிபனுக்கும் வாகான விளையாட்டுத் திடல் மெரீனா கடற்கரை!. அங்கே டீமுக்கு ஒரு கங்கூலி, தெண்டுல்கர்ன்னு, அது ஒரு தனி உலகம். ஞாயிரு விடிந்தும், விடியாததுமாக பேட்டும் கையுமாக, கலைகட்டத் துவங்கி, அந்தி சாயும் வரை அதகளம்தான்.

நான் என் கிரிகெட் சூத்திரங்கள் கற்றது இந்த பட்டறையில்தான். ஞாயிரென்றால் சூரியனின் உதயம், அஸ்தமனம் எல்லாம் எங்கள் மேல்தான். நல்லநாள் விசேஷம் என்றாலும் மேட்ச் என்றால் பேட்ச்சாக கிளம்பிடுவோம்.

அங்கே மாதத்துக்கு ஒரு டோர்னமென்ட் நடக்கும், நாலு அணிகள், எட்டு அணிகள்ன்னு தொடங்கி, 64 அணிகள் கலந்துகொள்ளும் டோர்னமென்ட்டெல்லாம் நடக்கும். இதுவும் அப்படி ஒரு டோர்னமென்ட்தான். இதில் 16 அணிகள் மோதின. எப்படியோ அடித்து பிடித்து நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தோம்.

இறுதிப் போட்டி நாகேஷ் டீமோட, நாகேஷ் டீம் டோர்னமென்ட் என்றால்..... பிச்சைப் பாத்திரம் மாதிரி ஆகிவிடும். வெளி டீமிலிருந்து நல்ல டிக்கெட்களைப் பொறுக்கி, எப்படியும் கப்பை லவுட்டிடனும் என்பது மட்டுமே அவர்கள் எண்ணம். எங்க டீமில் யாரையாவது எடுத்தால்.... அரசு உழியர்கள் போல் தொடர் உண்ணாவிரதம், மறியல்தான். அதனால் எதுக்கு வம்புன்னு நாங்க தோத்தாலும், ஜெயித்தாலும் எங்கள் தொண்ணைகளையும், வெண்ணைகளையும் வைத்தே கலி கிண்டுவோம்.

பல நேரம் கிண்டிய கலி வலிதான்னாலும்....., சில நேரம் பல டீமுக்கு கிலியையும் தந்திருக்கு. ஆனால் பல வீட்டுப் பலகாரமாய் மின்னும் பிச்சைப் பாத்திர டீமைப் பார்த்து பல்லிளித்தோம். "மச்சி நாம தோத்தாலும் பரவாயில்ல ஆனா கலீஜா தோக்கக் கூடாதுன்னான் ராஜா. வெத்தா இருந்தாலும், கெத்த உடாம இருப்போம்னு உருவேத்துனான்".


டாஸ் ஜெயிச்சா அவங்கள பேட் பண்ண சொல்லலாம்னு முடிவு பண்ணி செல்லையாவ டாஸ் போட அனுப்பினோம். இடி டாஸா விழுந்து, நாங்க தோத்தோம். ஆனால், நாகேஷ் ஆண்டவன் தாண்டவம் வேறாக இருந்தது. அவர்களே பேட் செய்யிறோம்னு சொன்னதும் நாங்கள் ரொம்ப 'ஹேப்பி' ஆனோம்.

பதினாறு ஓவரில்.... பறக்க விட்டு அடித்து, மொத்தம் 160 ரன்கள் எடுத்தார்கள். ஸாப்ட் பாலில் இந்த ரன் மலை முகடு, அதுவும் சப்பைகளும், சக்கைகளும் உள்ள எங்களுக்கு இது ட்ரீம் ஸ்கோர். கடவுளின் கருணைப் பார்வையில் அன்று ஷபியும் ராஜாவும் ரவுண்டு கட்டி அடித்து வெற்றியை எங்கள் கண்ணில் காட்டினார்கள். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் 'விட்டத்தைப்' பார்க்க கடைசி ரெண்டு பாலில் எட்டு ரன் தேவை.

இறுதிப் போட்டியானதால் எங்கள் தெரு ஜுனியர் டீமும் அவர்கள் மேட்ச்சை முடித்து கும்பலாக எங்கள் மேச்சைப் பார்க்க வந்துவிட்டனர். டிஸ்கஸ்ஸி, டிஸ்கஸ்ஸி ஆடுனத்தில், நேரம் ரொம்பவே ஆகிவிட்டிருந்தது. பார்கிங்குக்கு வந்த காரில் ஒன்றை நிறுத்தி, வெளிச்சம் 'பிச்'சுக்கு மட்டும் வருகிறா மாதிரி செட் செய்திருந்தார்கள். எங்களை விரட்ட வந்த காக்கி கும்பலும், நாங்கள் கெஞ்சியதில், எங்கள் ஆட்டத்தை வேடிக்கைப் பார்த்தது.

பதட்டத்தில் நான் பேட் பிடிக்க எதிரே பக்கர். பாலா போட்ட பந்தை கண்ணப் பொத்தி சுத்துனத்தில், மூன்று ரன்கள் பெற்று தந்தது. ஒரு பந்தில் ஐந்து ரன் பக்கர் என்ன மியாண்டட்டா ஒரே பாலில் சிக்ஸ் அடிக்க, சரி எப்படியாவது ஒரு 'போர்' அடின்னு சொல்ல, அவன் கிட்ட போய் "மச்சி... கண்ண பொத்தி சுத்து, மாட்னா லக்குதானேன்னு சொன்னா....?" பக்கர் "அந்த காரு லயிட்ட ஆப் பண்ண சொல்லுடா... கண்ணே தெரிய மாட்டேங்குது....!" என்றான் "என்னடா இப்படி ஒரு குண்ட தூக்கிப் போடுறன்னு....?" கேட்க "அந்த காரு போகஸ் லயிட்டுல என் கண்ணு போகஸ் ஆக மாடேங்குதுன்னான், நீ நல்ல கண்ணுல விளையாடுற நான் நாலு கண்ணுல விளையாடுறேன்னு" சொன்னான்.

எலிக்கு பயந்து எருக்கன்ச் செடில விழுந்தா மாதிரி இருந்துச்சி எனக்கு "மச்சி! நடப்பது எல்லாம் நல்லதுக்கேன்னு, கண்ணப் பொத்தி சுத்துன்னு" சொல்லிட்டு அம்பயர் பக்கத்தில் வந்து நின்னேன். பாலா போட்ட பால் வோயிடாக போக, ஆஹா ஒரு பாலில் நாலு மாட்டுச்சினா வெயிட்டுதாண்டான்னு, நினைக்க.... பாலா போட்ட அடுத்த ரெண்டு பாலும் வோயிடாகப் போக, சிறுசு டீமில் இருந்து காளிதாஸ் "பக்கர் அண்ணே...... அடிக்கலன்னாலும் ஒடுங்கன்னு...." கத்துனான். நானும் பக்கர் கிட்ட போயி "மச்சி! இப்போ ரெண்டு தான் தேவை, மாட்டுலேன்னாலும் ஓடி வந்துடுன்னு...." சொன்னேன். அவனும் "சரின்னு" சொன்னான். ஆனால் அடுத்த பாலும் வோயிடாக, ஒரு பாலில் ஒரு ரன்னுன்னு வந்து நின்னுச்சி எப்படியும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம்னு முடிவாயிடிச்சி, அடுத்த பாலும் வோயிடாகப் போக அப்படியே எங்க ரெண்டு போரையும் சுத்தி இருந்த எங்க தெரு பசங்க அலேக்காக துக்கிக் கொண்டு வீடுவரை சேர்த்தார்கள்.

எங்களை விளக்கி விட வந்த போலீஸ் கடைசி பந்து வரை பார்த்து விட்டுதான் சென்றார்கள். இது மாதிரி எத்தனயோ நல்ல நல்ல மேட்சைப் பார்த்தது நம்ம மெரீனா கடற்கரை. ஆனால்.... இப்போ அங்கே ஆடத் தடை, மெரீனாவ அழகு படுத்தரோம்னு, சொல்லி பல்லு குத்த 'பேட்' கேக்குது சென்னை மாநகராட்சி.

முறையான விளையாட்டு ஒவ்வொருவரும் விளையாடுவார்கள் எனில்..... அவர்கள் தேக ஆரோகியமும், மன வலிமையையும் மென்மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டு ஒருவனுக்கு வெற்றி தோல்வியைக் கற்றுத் தருகிறது, விடா முயற்சி, கடைசி வரை போராடும் குணம், மேலாண்மையைக் கற்றுத் தருகிறது, நட்புத் தளம் அமைத்துத் தருகிறது. இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

இந்த பீச் திடலுக்குப் பதில் வேறு ஒரு திடல் மாநகராட்சி அமைத்துத் தந்தால்.... அது சென்னையைச் சுற்றி இருக்கும் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை......! ;

குப்ப மேட்டரு...

தாக்கரேக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமாகிவிட்டது, இப்போது சச்சினிடம் வாயக் கொடுத்து புண்ணாகப் போகிறார். நான் ஒரு இந்தியன் என்று சொன்னது தப்பா.....? இவங்களோட இந்த சின்ன பிள்ளைத் தனமான தாக்குதல்களை அரசியலுடன் நிறுத்தினால் நல்லது. நான் தெரியாமத்தான் கேக்குறேன் இவருடைய பாஸ்போர்டில் நாடு என்னுமிடத்தில் இந்தியன் உள்ளதா அல்லது மாராட்டியன் என்று உள்ளதா...? தாக்ரே இந்த சில்லறைத் தனமான அரசியல் செய்யும் பைத்தியக் காரத் தனத்தை விட்டு எப்பொழுதுதான் வெளியே வருவார்.......?
------X------X------
மற்றுமொரு தொழிற்சாலை சென்னைக்கு மிக அருகில் துவங்க உள்ளது. ஏற்கனவே இயங்கிவரும் ஹுண்டாய், நோக்கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வளவு....? வேலை வாய்ப்பு பெருகியது, எவ்வளவு பேர் பயனடைந்தார்கள்....? ஆஹா இன்னொரு சாதனை இந்த ஆட்சியில்.

ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களால் பல விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளது, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க. ஆமா கான்ட்ராக்டில் வேலை கிடைத்தது. தினமும் நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம். எல்லா மேல் நிலை ஆட்களுக்கும் தங்கள் நாட்டு பிரதிநிதிகளைத்தான் நியமித்திருக்கிறார்கள் இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

இதில் அரசு மான்யம் என்ற பேரில் பல வித சலுகைகள் பெற்றுக் கொண்டு, நம்ம மக்களை அடிமையாக நடத்துகின்றன இந்த வெளி நாட்டு நிறுவனங்கள்.

வாங்குனவன் பேசமாட்டன்,
பேசுறவன் இருக்க மாட்டான்,
அடிமையா இருப்பதென்பது - என்
ஆயுள் விதிதானோ....?

--சாமானியன்

------X------X------

கர்ப்பகிரஹத்துக்குள் தன் வக்கிரத்தை அரங்கேற்றிய குருக்கள் (எதில்...?), தேவநாதன் தானே வந்து கோர்டில் சரணடைந்திருக்கிறார். எந்த மதமும் இல்லறத்திற்கு எதிராக இல்லை ஆனால் ஒரு பூஜை செய்யும் குருக்கள், அந்த புண்ணிய தளத்திலேயே வக்கிரமாக நடந்து கொண்டது கண்டிக்கத் தக்கது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட சூட்டோடு கடுமையான தண்டனை கிடைக்க எல்லாம் வல்லோனை பிரார்த்திப்போமாக.
------X------X------
நேற்று வரை இருந்த 'நினைத்தாலே இனிக்கும்' சற்று சறுக்கி, முதலிடத்தில் 'கண்டேன் காதலை' வந்திருக்கிறது, இது அடுத்து 'வேட்டைக்காரன்' வரும் வரையில் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். வேட்டைக்காரன் புலியாய் உருமினாலும், பூனையாய் உரு மாறினாலும், சன் டிவியின் அடுத்த படம் வரும் வரையில் முதலிடத்திலேயே இருக்கும்.
------X------X------
'பையா', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களுடன் அண்ணன் சூர்யா நடித்த படமும் ரிலீசுக்கு தயாரான நிலையில், மார்கண்டேயன்.... அண்ணனும் தம்பியும் போட்டி போட வேண்டாம்னு நினைக்கிறாராம். பணத்தைப் போட்ட தயாரிப்பாளர் தலையில் பெரியக் கல்லைப் போடாமல் இருந்தால் சரி. ஏற்கனவே செல்வராகவன் 'மங்கைமடி' சாய்ந்ததில் மட்டுப் படாமல் போனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வேலைகள், இதில் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து தயாரிப்பாளரின் பணத்தில் வெடி வைக்க வேண்டுமா.....? ;

நன்றி நவில்தல்....

ப்ளாக்குன்னு ஒன்னு ஆரம்பிச்சி ஆறேழு மாசம் ஆச்சி, எழுதுற ஒன்னுக்கு, மூணு கமென்ட் வந்தாலே ரொம்ப ஜாஸ்தி.

"கடை விரித்தேன்..... கொள்வாரில்லை"ன்னு, நானும் ஒவ்வொரு நாளும் தெறந்து தெறந்து பார்த்தா அங்கொன்னும் இன்கோன்னும் கமென்ட் வந்திருக்கும். தொடர்ச்சியா நம்ம கலை அண்ணாச்சி எட்டிப் பார்ப்பாரு. சரி நாம இன்னும் ரொம்ப தூரம் போகனும்போலன்னு...? என்ன நானே தேத்திக்குவேன். நான் எழுதிய நாலைஞ்சு கதைகள் இளமை விகடன், கீற்று மற்றும் தமிழ் எழுத்தாளர்கள்ன்னு ஒன்னு ரெண்டு இணையத்தில் வந்திருக்கிறது.

சீக்கு புடிச்ச கோழியா.... சீண்டிப் பாக்க ஆளில்லாம சிக்னல்ல நின்னவன, விகடனின் மின்னிதழுக்கு ஒரு கதை எழுதி தருமாறு கேட்டு, ஒரு நாள் மின்னஞ்சல் ஒன்று வந்தது. நம்மளையும் மதித்து கேக்குறாங்களேன்னு ரொம்ப பெருமையா இருந்தது. அட.... நமக்கும் ஒரு அங்கீகாரம் இருக்குடான்னு, உள்ள இருக்கும் குரங்கு துள்ளாட்டம் போட்டது.

ரொம்ப சிரத்தையாக யோசித்து, பல்லு கொடஞ்சேன், பாக்கு போட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க. என்னவோ எழுதி அனுப்பினேன் அது பிரசுரமாச்சின்னு வந்ததும், என்னையே ரத்தம் வர கிள்ளிப் பார்த்தேன். நெசமாவே வந்திருக்கு.

இந்த சந்தோஷ தருணத்தில் என் பதிவுகளையும் மெனக்கெட்டு படித்து பின்னோட்டம் இடும் அண்ணன் கலை, ராஜூ, கும்மாச்சி, தண்டோரா, செல்வா, சுரேஷ் குமார், ரஹ்மான், ஜெட்லி,சிங்கை பித்தன், வலசு - வேலணை மற்றும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் பொன்னான ஆதரவை நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்......

-------------------------------------------------------------------------------
அன்புபையீர்,

யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் வெளியாகிவிட்டது. தங்களது படைப்பும் இடம்பெற்றுள்ளது. பங்களிப்புக்கு நன்றி.

மின்னிதழை டவுன்லோடு செய்ய... http://youthful.vikatan.com/youth/Nyouth/min_nov_10112009.asp

- யூத்ஃபுல் விகடன் ;

ஊரான் ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே

அல்லார்க்கும் வந்கம்பா

அல்லாரும் எப்டிகீறீங்க....? தடி எடுத்தவன் எலாம் தண்டல்காரன்னு சொல்லுற மாதிரி, இன்னக்கி எவ்வளவோ பேர் நடிக்க வந்துகீராங்கோ, பாதி பேர் வர்ற சொல்லோவே பஞ்சு பேசுதுங்கோ.... கைய்ய சொடுக்குகிறது கால தூக்குரதும்னு டகல்பாஜி வேலை செய்யுராங்கோ, டிரேக்டருங்களும் கேப்புல கெடா வெட்டுராங்கோ. என்னடா கோட்டரும் அவந் பங்குக்கு எறங்கி குட்டிய கொயப்புராநேன்னு டர்...ர்.... ஆவாதீங்கோ.

நியுசு இதாம்பா, நம்ம ஆமீறு கீராருல்லோ...? அவரு நம்ம முருகதாசு குடுத்த ஹிட்டுல ரொம்ப குஷியாகீறாரு, கஜினி சொல்லி அடிச்சிக்ந கில்லிலோ, ஆனா என்ன அந்த படத்த அவரு பொண்ண பாக்க உடலியாம் ஏன்னு தெரியுமா....? அவரு பொண்ணுக்கு இப்போ வயசு பதினொன்னுதான் ஆகுதாம், கஜினில ரொம்ப வயலன்ஸ் கீதாம் இது எப்டி கீதுன்னா....?

இவரு புள்ளதான் புள்ள, மத்தவங்க வூட்ல கீரதுலாம் கல்லுன்னு சொல்லுறாரு... ங்கொய்யாலே அப்புறம் ஏண்டா நிமிசத்துக்கு நாலு தரோம் டிவில அதுக்கு விளம்பரத்த போட்டு தாக்குரீங்கோ. சிக்ஸ் பேக் எயிட் பேக்ன்னு எங்க கனவ துண்ணு துட்டு பாக்குரீங்கோ. உன் சூத்த சுத்தமா வச்சுக்குநோம்னு தோனுற மாதிரி தானே அடுத்தவங்க சூத்தும்.

நம்ம போயப்பப் பாப்போம்..... ;
 

Blogger