Pages

'கொசப்பேட்டையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை வரை' --A true time travel

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னைக்கும் எனக்குமான பழக்கம் நான் பிறந்ததிலிருந்து தொடங்குகிறதுஆம்! நான் சென்னைக்காரன், வெளிமாநிலத்திலோ, நாட்டிலோ என்னனை மதராஸி என்றழைப்பார்கள்நானும் மதராசியாகவே இருக்க விரும்புகிறேன்.   பின்புறம் கிழிந்த கால்ச்சட்டையை மட்டுமே அணிந்து தெருவெங்கும் இந்நகரத்தின் வெயிலைச் சுமந்து சுற்றியிருக்கிறேன்எந்தெந்த நாடோ, ஊரோ சுற்றியியலைந்தாலும், நினைவில் மதராஸை சுமந்தலையும் அக்மார்க் மதராஸி நான்சொந்த ஊர் பல்லவ நகரமென்றாலும், எப்பொழுது யார் என்னைக் கேட்டாலும்…மதராஸி’ என்றே சொல்லுவேன், அதில் ஒரு சிறு மிதப்பிருக்கும்சேரளநாட்டினர் போல்…. என் தாய் நாடு மதறாஸ்தான்.

 

சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பேரிடர் நாட்களிலும்,  விநாயகர் ஊர்வல மற்றும் கோவை குண்டுவெடிப்பு கலவர  நாட்களிலும், இப்பொழுது இந்த கிருமித் தோற்று பயத்திலும் நான் இந்த நகரத்தை விட்டு வெளியேற விரும்பியதில்லை.  இந்த ஊர் தான் எனக்கு சோறுபோட்டது என்பதைத் தாண்டி, இந்நகரம்தான் எல்லாவற்ற்றையும் தந்தது. அவ்வாறு நோக்கின் என்னைப் போலவே இந்நகரமும் நீளத்திலும், அகலத்திலும் அதீத வளர்ச்சி அடைந்திருக்கிறது, அடைந்துக் கொண்டிருக்கிறது.

 

மதராசுக்கும் எனக்குமான பந்தத்தையும், எங்களின்  பயம், கோபம், வெறுப்பு, அருவருப்பு, அழுகை, துக்கம், தூக்கம், தனிமை, துயரம் ஆகியவற்றை அசைபோடும் ஒரு சிறு பின்னோக்கிய பயணமே 'கொசப்பேட்டையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை வரை' இத்தொடர்.  வாருங்கள் என்னுடன் சேர்ந்து காலஎந்திரத்தில் பயணிப்போம்.

;

No comments:

 

Blogger