Pages

ஊரார் பிள்ளைக்கு ஊட்டியதில்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

என் மகனுக்கு உடம்பு சரியில்லாததால், அவன் மாத்திரை போடுவதற்கு முன், ஏதாவது சாப்பிட வாங்கிவர என்னைப் பணித்தால் என் மனைவி ரொம்ப 'நம்பிக்கையாய்'.

'வண்டி' எடுத்து கிளம்பினேன் வெகு 'அக்கறையாய்' கடையில் என் மாமாவின் நண்பர் ஒருவர் இருந்தார் ..... "என்ன மாமா எப்படி இருக்கிறீர்கள் " என்றேன்

"ஹும்! ஏதோ இருக்கேன்" என்றார்

"என்ன மாமா ரொம்ப வருத்தமாக சொல்கிறீர்கள்"

"ஒன்னும் இல்லப்பா" என்றார்

"உங்கள் மனைவி பிள்ளைகள் எல்லாம் எப்படி இருகிறார்கள் ?" என்றதுதான் தாமதம்.....

கண்ணில் நீர்பனிக்க "அவளை 'அத்துவிட்டுடலாம் ' என்று பார்கிறேன்" என்றார் நான் அதிர்ச்சியுற்றவனாக "என்ன மாமா என்ன பிரச்சனை" என்றேன்

"ஒண்ணுமில்லைப்பா! பசங்களுக்கு சரியாக சாப்பாடு உட்டத் தெரியவில்லை" என்றார் நான் அதீத அக்கரையில் "இதெல்லாம்... ஒரு காரணமா!! 'மாமா', உங்களுக்கு தெரியாததா?" என்றேன்

"இல்லப்பா! அவள் சரிபடமாடடாள் அதனால், அவள் அண்ணன் வீட்டிற்க்கே....! அவளை திருப்பி அனுப்பிவிட்டுட்டேன்" என்றார்

"என்......ன...? மாமா நல்லா படிச்ச!!!? நீங்களே இப்படி பேசலாமா, பிள்ளைகள் வளர்ப்பில் உங்களுக்கும், பங்கில்லையா?" என்றேன்

"இருக்குத்தான்!! ஆனால், இனி அவர்களை திருத்தவே...., என் மனைவியை தள்ளி வைக்கிறேன், 'வக்கீல் நோடீசும்' அனுப்பி இருக்கிறேன்" என்றார்

கவலை தோய்ந்த முகத்துடன் "மாமா!... கண்டிப்பாக உங்கள் முடிவுக்கு இது காரணமாக இருக்காது, அதுமட்டுமில்லாது... இந்த காரணம் 'ரத்துக்கு' போதாது" என்றேன்

"தெரியும்! அதனால்தான், 'வக்கீல் நோடீசில்' முக்கிய காரணமாக, கடந்த பத்து வருடமாக, எங்களுக்குள் தாம்பத்தியம் இல்லை என்று எழுதினேன், என் இத்தனை வருட வாழ்கை போனதற்கு அவள்தான் காரணம் " என்றார்

"என்ன மாமா இப்படி சொல்லலாமா..." என்றேன் கனத்த மனதுடன்

"உண்மைப்பா.... எங்களுக்குள் பத்து வருடங்களுக்கு மேலாக, 'ஒன்றும்' இல்லை, நான் பக்கத்தில் போனாலே..... கத்துகிறாள்" என்றார் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

"இதெல்லாம்...! பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை"

"இல்லப்பா எவ்வளவோ போசியாகிவிட்டது...! 'தீர்ப்பு' ஒன்றுதான் பாக்கி" என்றார்

"இருந்தாலும்...... ஒருமுறை உங்கள் மனைவியிடம் போசுங்கள்" என்றேன் "இல்லை கண்டிப்பாக நான் அவளை 'ரத்து' செய்துவிட்டு மறுமணம் செய்துக்கொள்ள போகிறேன்" என்றார்

"மாமா... குழந்தைகள், வளர்ப்பில் நிச்சயம் உங்களுக்கும் பங்கிருக்கிறது, வெளிநாட்டிலேல்லாம், ஒரு தாய் கருவுற்ற உடனே..... தாய், தந்தை இருவரும் தங்களை முறையாக பெற்றோராவதற்கு, தயார் படுத்திக்கொள்கிறார்கள். கருவுற்ற தாயை கவனித்தலில் இருந்து, பிள்ளைகள் வளர்ப்பு வரை , எல்லாவற்றையும் சொல்லித் தர அங்கே அரசாங்கமே... பல வாய்ப்புகளை, ஏற்படுத்தித் தருகிறது. அதனால் பிள்ளைகள் வளர்ப்பில் 'நிச்சயம்' உங்களுக்கும் பங்கிருக்கிறது" என்றேன்

"இல்லப்பா..... இப்போ எல்லாம் முடிந்து விட்டது , இனி நான் ஒன்றும் செய்யமுடியாது" என்றார்.

"ஏதாகிலும் நல்ல ஒரு முறைக்கு, இருமுறை யோசித்து செய்யுங்கள்" என்றேன்

எங்கள் விதண்டா வாதத்தில் நேரம் போனது தெரியவில்லை நானும் அவசரத்தில் கிளம்பியதால் கைக்கெடிகாரம் கட்டவில்லை 'சரி' என்று சுயநினைவு வந்தவனாக.......

"'ஐயோ சாரி' மாமா நான் வந்த வேலையே..... மறந்து விட்டேன் நான் பிறகு பார்கிறேன்" என்று அவரிடம் அத்துக்கொண்டு கடை நோக்கி விரைந்தேன்...., கடை மூடியிருந்தது விபரீதத்தை உணர்ந்தவனாக விட்டேன் ஒரு உதை என் வண்டிக்கு, அது உயிர்த்தெழுந்தது வீடு வந்து, கதவு தட்டினேன், ரொம்ப நேரம் காத்திருத்தலுக்குப் பின், என் அம்மா வந்து கதவைத் திறந்தார்கள்.

"சின்ன பிள்ளை அவனுக்குகூட உன்னால் உடனே வரமுடியாமல் அப்படி என்னதான்.........!!! வேலை, அவன் உன் பிள்ளை தெரிஞ்சிக்கோ" என்றார்

"மணி என்ன"

"மூன்று"

"ஐயோ !!!!"

இருட்டில் பூனைபோல் என் அறைக்கதவை திறந்தேன் உடை மாற்றி உணவருந்தாமல் படுத்துக்கொண்டேன்

நினைத்துப்பார்த்த போது அவர் சொன்னதில் ஒரு மிக முக்கியமான ஒன்று தாம்பத்தியம், சின்ன வயதில் இருந்து எனக்கு எவ்வளவோ கற்றுகொடுக்கப் பட்டிருக்கிறது ஆனால் 'கலவி......'

கேட்டால் மேற்கோள் காட்ட 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை' என்பார்கள்.... உண்மையில்......

"Unsaid is more in Sex"

'கலவி' என்பது கையாள்வது, 'தருவித்தலும், தருவிக்கப்படுதலும்', இன்பம் இங்கே...!!!

"Get less and give more is what Love Making"

உச்சத்தைத் தொடுவதே எண்ணமென்றாலும்......!!!

எச்சிலில்..., தொடங்குதல் முறை.

"Sex is mind driven than the body"

வாத்சாயனார் பிறந்த நாட்டில்..., முறையான செக்ஸ் கல்வி இல்லை என்பதை நாம் எல்லாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் . எந்த மதமும் முறையான, தாம்பத்யம் தவறென்று சொல்ல வில்லை.

செக்ஸ் கல்வி என்றால்.....

எப்படி 'செய்வது' என்பதை சொல்வதல்ல....

எப்படி 'அணுகுவது' என்பது........

முஹம்மது நபி (Peace be upon him) ..., "மக்களே...! 'பெண்கள்' உங்களுக்கான விளைநிலங்கள்" என்கிறார். கோயில் சிற்பங்கள் சிலவற்றிலும் 'கலவியே' பிரதானம்..., நீதிமன்ற படியேறும் பல வழக்குகளில் 'கலவியே' கூட காரணமாக இருக்கலாம்.

இந்துவின் வாழ்க்கை சிறந்த மூன்று குறிக்கோள்களைக் கொண்டது.

அர்த்தம், தர்மம், காமம்.

தர்மத்தின் ஒரு பகுதிதான் காமம், 'தர்மத்துடன் இணைந்ததுதான் காமம். அதனால் நான் காமமாய் இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னார்.

'கலவி' பற்றிய மூட நம்பிக்கைகள் விலகும்போது...., வக்கிர வித்தைகள் போய், வசீகர விஷயங்கள் உட்புகும்.

இதையெல்லாம் நினைத்து எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை என் மகன் என் காதருகே வந்து "டாடி....! நாங்கெல்லாம் பாட்டி வீட்டுக்குப் போகிறோம்" என்றான் பதறியடித்து எழுந்தேன் "என்னம்மா என்ன திடீரென்று... உன் வீட்டுக்கு என்றேன்?" என் மனைவியிடம் "உங்கள் மகனுக்கு, ஒரு ரொட்டித் துண்டு வாங்கிவர, துப்பில்லாத உங்களுடன் என்னால் இனி வாழமுடியாது" என்று விறு விறுவென சென்றாள்.....

நான் அவள் புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டே...., தெருமுனை வரைச் சென்றேன்.... வெறும் கைலியை கட்டிகொண்டே......

;

No comments:

 

Blogger