Pages

வங்கத்தாயே எங்களை வஞ்சித்தாயே

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வலை மட்டுமே
வீசி வாழ்ந்த எங்களை
அலை வீசி கொன்று குவித்தாய்!

உப்பின் சுவை கூட்டவே
எங்கள் கண்ணீரைக் கேட்டாயோ!
உடலுக்குத்தான் உயிர் தேவை...
கடலுக்குமா?

உயிர் கொடுத்த நீயே
அதைப் பறித்தாயே,
அதீத கோபத்தால் - உந்தன்
குணமிழந்தாயே!

முறையாக அலை வீச
நுரை மீந்துப்போகும்,
இன்று நீ வீசிய வீச்சில் - எங்கள்
நுரையீரல் காய்ந்து போகும்...

படி தாண்டா தத்துவம்
பத்தினிக்கு மட்டுமா?
பரந்த கடலே - உனக்கும்தான்!

ஒரு முறை நீ வெகுண்டாய்...
சேதங்கள் ஆயிரம்
மறுமுறை நீ வருவாய்
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட
எங்கள் பாதத்தை மட்டும் தீண்ட ....


;

1 comment:

அம்பாளடியாள் said...

கடலன்னை தந்த துயரங்களை அருமையாக உணர்வுபூர்வமாக வடித்துள்ளீர்கள்.தொடர்ந்தும்
எழுதுங்கள் உங்கள் கவிதைகள் சிறப்புற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே..........

 

Blogger