கோயிந்து புலம்பல்....
ஒரு மாசத்துக்கு முந்தி ஒர்நா..... காத்தால அஞ்சு மணிக்கு ரிச்சால தூங்கினு இர்க்கசொல்லோ..... ஒரு பூமா வந்து கோபாலபுரம் வர்யான்னு கேட்டுச்சு? ஓகேமா ஏறி குந்துன்னு சொல்லி, கோபாலபுரம் போனேன்பா.... அங்கே ரொம்ப பெரிய க்யு இர்ந்துச்சி, பூமா என்ன வேயிடிங்க்ள போட்டுட்டு உள்ளார அவங்க ஹஸ்பண்ட பாக்கப் போச்சி.......
நானும் சரின்னு ஒரு பீடி வலிச்சிக்னே...., அங்கே இர்ந்த செகுர்டியாண்ட "என்னாபா அல்லாரும் இம்மா சீக்கிரமே இங்கன வந்துகீராங்கோன்னு?" கேட்டுகுனேபா.... செகுர்டி "அல்லாரும் அவங்கவங்க புள்ளைய உச்கூல்ள சேக்க வந்துர்காங்கோன்னாறு". "அப்டி இன்னாபா இந்த உச்கூல்ள கீதுன்னு?" கேக்கசொல்லோ "இந்த ஸ்கூல்தான் வருசா வருஷம் first வர்தாமிள்ளன்னு" சொன்னாரு.
அதுக்குள்ளே பூமா அது ஹஸ்பண்ட இட்டாந்து ரிச்சா பின்னாடி குந்த வச்சி சாயா, நாஸ்தா குட்தூது. பாய் சாப்டசொல்லோ அவராண்ட
"என்ன பாய் இது அவ்ளோ பெரிய உச்கூலா"
"ஆமாம்பா இதுதான் எல்லா வருசமும் first வருது, இங்க சேத்தா பிள்ளைங்க நல்லா படிக்கும்"
"இங்க நம்ம புள்ளைய சேக்க முடியுமா பாய்?"
"அதுக்கு வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும், வருசத்துக்கு முப்பதாயிரம் செலவாகும்ன்னு" சொன்னாரு
"எதுக்குபா வைப்ஃ இல்ல ஹஸ்பண்ட் படிச்சிருக்கணும்?"
"அப்பத்தான் பசங்களுக்கு வீட்டிலும் சொல்லி கொடுக்க முடியும்"
"அப்போ இவங்க உச்கூல்ள என்ன சொல்லி குடுப்பாங்க?"
"அது ஸ்கூல் ரூல்"
"என்ன ரூலோ..... பூ.... நமக்கு அதெல்லாம் வேணாம்பா, எம்புள்ள வூட்டாண்ட கீற கவர்மெண்டு உச்கூல்லையே படிக்கட்டும்"
"என்ன ரிக்ஷாகார் இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இந்த 'Q' எதுக்குன்னு நெனச்சீங்க, இது வெறும் application வாங்க மட்டும்தான், இன்னும் interview, donation இருக்கு, அதுக்கப்புரமாதான் அட்மிச்சின், donation எப்படியும் ஐம்பதாயிரம் கேட்பார்கள், அப்புறமா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு, வீடு ஐந்து கிலோமீட்டர்க்குள் இருக்க வேண்டும்" ன்னு பூமா சொல்லுச்சி.
"இதுக்குத்தான் நான் நேத்து ராத்திரியே இங்கே வந்து கியுவில் நின்னேன்"
"அட உடு பாய் நமக்கு இது தோதுபடாது, என்னிக்கோ ஒரு ரா கண்ணு முழிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?.................யா..... அப்போ என்னப்போல அன்னாடங் காட்சிங்க புள்ளையே பெத்துக்காம...., கோட்டர் உட்டுட்டு குப்புறதான் படுக்கணும் போல!!!"
மறுக்கா இது நடந்து ஒரு வாரங் கழிச்சி அந்த பூமாவ மர்கேட்டுல பாத்தேன் "என்ன பூமா சீட்டு கேட்சிதான்னேன்?"
"இல்லப்பா கார் இல்லன்னு சீட் கெடைக்கல, இப்போ எம்பய்யன் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டோம்"
"ஒகே பூமா வர்டா......."
மனசுகுல்லோ "அப்போ பாவோம் பாய்க்கு அன்னக்கி ரா தூக்கமும் வேஸ்டாப் பூடுச்சா.....?"
நாந் தெரியாமத்தான் கேக்குறேன்மா நம்ம டாக்டர் அப்துல் கலாம், இப்போ ராக்கெட் உட்ட டாக்டர் மயிசாமி அண்ணாதுரை, அல்லாம் இந்த உச்கூள்ளயா படிச்சாங்க?
அப்படியே மொத ரேங்க் எடுத்தாலும் அது ஏதோ ஒரு பொண்ணோ, ஆணோதானே...? அல்லருமா எடுப்பாங்க....?
என்ன---ஓப்பா..... ;
குப்ப மேட்டரு - I
இதுபோல்தான் இதற்குமுன் எடுத்த காவியப் படைப்புகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் அந்தந்த படங்களின் உண்மை நிலை நாடறிந்தது.... (தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடுச்சு). இனி அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், டைரக்டர் எல்லாம் ஆளாளுக்கு ஒரு சானலில் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒரு ஸ்லாட்டில் நான் நடிக்கும்போது...... அது அப்படி, இது இப்படி......, நான் கழட்டினேன், பூட்டினேன் என்று சொல்லுவார்கள். சன் டாப் டென்னிலும் படம் அடுத்த பத்து வாரத்திற்கு முதல் இடத்தில் இருக்கும், பாடல்களும் அவ்வாறே.
இப்பொழுது நம் கேள்வியெல்லாம்..... ஏன் இப்படி உண்மைக்கு புறம்பான நியூசைப் பரப்ப வேண்டும்? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான், ஆனால்..... அதையே எல்லோரும் பாக்க..... ஊம்..…, ரசிக்க..… ஊம்.... திணித்தால் எப்படி?
கடந்த வெள்ளிக் கிழமை பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வைத்து வெடிக்கச் செய்திருக்கிறார்கள், அதுவும் வெள்ளிக் கிழமை தொழுகையின்போது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும்..... அவர்கள் மனசற்றுப் போனவர்கள், என்ன கொடுமையான நிகழ்வின் எதிர்ப்பாக இதைச் செய்திருந்தாலும்....... அவர்கள் எந்த மதாக இருந்தாலும், அவர்கள் கடவுள் இதை மன்னிக்க மாட்டார். பாகிஸ்த்தான் வளர்த்த காடா இந்த தீவிரவாதம், இன்று அவர்கள் மேலேயே பாய்கிறது.
நாளுக்கு நாள் இந்த மிஸ் சென்னை சென்னைமேன் நிகழ்ழ்சி (விஜய்), கண் கூசும் அளவுக்கு போகிறது. வெறும் ஜட்டியோடு ஷவரில் நனைவது, சக பங்கேற்பாளர்களுடன் குத்தாட்டம் போடுவது என்று ஏகத்துக்கும் அட்டூழியம் நடக்கிறது. பேஷன் ஷோவ்க்கு நிகராக அசிங்கங்களை அரங்கேறுகிறது.
நேற்று இரவு கண் விழித்து T20 மேட்ச் பார்த்ததில் ஒரு நன்மை இனி கண் முழிக்க வேண்டாம், ஆனால் காலை ஆபிசில் எனக்கு நல்லா பழுக்க காய்ச்சிய கம்பி இருந்தது அதில் உக்கார்ந்ததனால் சூ.... சூ.... எரிகிறது. ;
ராஜாதி ராஜா – விமர்சனம்
இசை : கருணாஸ்
கதை+திரைக்கதை+இயக்கம் : ஷக்தி சிதம்பரம்
கதை :
லாரன்சின்தந்தை இறக்கும் தருவாயில், லாரன்சிடம் "உன் மூன்று அண்ணன்களையும்
முறையே, போலீஸ், வக்கீல் மற்றும் டாக்டர் ஆக்கவேண்டும்" என்று சத்யம் வாங்கி இறக்கிறார். (ஆமா அது ஏன் தம்பியிடம்?) லாரன்சும் தன் அண்ணன்களை படிக்க வைக்க, சினிமாவிலே மட்டும் சாத்தியமான கார் துடைப்பது, பொட்டலம் கட்டுவது, கை வண்டி இழுப்பது என்று மிக மிக கஷ்டப்பட்டு, எல்லோரையும் தன் சத்தியத்தின் படியே டாக்டர், வக்கீல், போலீஸ் என்று ஆக்குகிறார் (அதானே இல்லேன்னா....... அவன் என்ன ஹீரோ?). பின் அவர்கள் பாதை மாறுகிறார்கள் , அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்..... கதை.
மும்தாஜ் பேசும் டயலாக் எல்லாம் சொந்த வசனம்போல் உள்ளது, சும்மா…. கேரக்டர் உடன் ஒன்றிய நடிப்பு என்று சொல்ல வந்தேன். ஒரு பைட், ஒரு காமடி, ஒரு லவ் சீன என்று தெள்ளத் தெளிவான திரைக்கதை. பின்னணி இசையில் கருணாஸ் தெரிந்த அளவுக்கு நடிப்பிலோ..... பாடல்களிலோ..... தெரியவில்லை (முயற்சித்தால் இசையில் வாய்ப்பிருக்கிறது).
நான்கு ஹீரோயின்களும் கொடுத்த காசுக்குமேல் கூவி இருக்கிறார்கள்...............சாரி சாரி ரசிகர்களைக் கவர்ச்சி ஆட்டத்தில் திணறடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் காத்தலும்...... அழித்தலும்....... ஒருவனே என்கிறார் இந்த ராஜாதி ராஜா. ;
தோரணை
நடிகர்கள் - விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், கிஷோர், பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர்...
இசை - மணி ஷர்மா
திரைக்கதை, இயக்கம் - சபா ஐயப்பன்
மூன்று கோணத்தில் இருந்து கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..... ஆனால்.....? அதில் குழம்பி, ரசிகர்களையும் குழப்பி இருக்கிறார்கள். இது ஏற்கனவே தருண்கோபி காட்டிய வழி......தான்.
கதை : விஷால் அண்ணன் கிஷோர் சின்ன வயசிலேயே காணாமல் போய்விடுகிறார், அவரைத்தேடி.... விஷால் சென்னை வருகிறார். ஆனால், தன் அண்ணன் உயிருக்கு இருக்கும் ஆபத்திலிருந்து, அண்ணனை மீட்டாரா ? என்பதே மீதிக்கதை. இடை இடையே ஸ்ரேயுடன் காதல் செய்கிறார், கிடைத்த இடத்தில் சந்தானத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
இதுதான் தனக்குண்டான பாதை என்று விஷாலே முடிவு செய்து படம் நெடுகிலும் பன்ச் டயலொக் பேசுவது, பறந்து பறந்து அடிப்பது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பக்கம் பக்கமாக டயலொக் பேசி, தொழில்முறை தாதாக்களை திருத்தமுடியும் என்றால் போலீஸ்க்கு வேலை ஏது?
தோரணை - விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாக்கும்,
ரசிகர்களுக்கும் பெரிய தலைவேதனை. ;
கோயிந்து புலம்பல்....
அல்லார்க்கும் வணக்கம்,
நேத்து நம்ம வெல்டிங் குமார புழல் ஜெயிலில் போட்டுத் தள்ளிட்டாங்கலாம்பா.....
குமாரோட ஜெயில்ல இருந்த அன்பு, கார்மேகம், ராஜா இவங்க மூணுபேரும் சேர்ந்து குமார மௌடர் பண்ணிட்டங்கலாம்பா.... ஆமா...... நாந் தெரியாமத்தாந் கேக்குறேன் , அதுவரைக்கும் போலீஸ் இன்னா பண்ணினுஇருந்தது?
தப்புத்தண்டா பண்ணவங்கலதான் ஜெயில்ல போடுவாங்க ஆனா அந்த ஜெயில்லயே தப்புப் பண்ணினா எங்கே போடுவாங்க. ?
ஜெயில்ல கீரவனுக்கு கத்தி எப்டிப்பா கட்ச்சிது? இன்னாவோ ஜட்டில கத்திய மற்ச்சி வச்சீனு இறந்தானா!!
குமார் வெளியில இர்க சொல்லோ இன்னா ரப்பசர் பண்ணியினு இர்ந்தாந் தெர்யுமா? இப்பபார் புட்டான் அத்தாம்பா லைப்பு பெர்சுங்கோ சும்மாவா சொல்ச்சிங்கோ "கத்தி எட்த்தவனுக்கு கத்தியாலதாம்ப சாவு!!"
செத்தவன் ஒன்யும் நல்லவன் இல்யே!! உடு போவட்டும், நம்ம போயப்பப் பாப்போம்.
;வவுறு எரியிது....
இந்த போலீஸ்க்கு என்னமாதிரி அன்னாடங் காச்சிங்கள காண்டு ஏத்றதே வேலையாபுடுச்சி. காச்சினது தப்புதா இல்லீங்கள அதுகொஸ்ரம் இப்டிலாந் கொட்சல்குடுக்னமா. இன்னமாதிரி ரப்ச்சர் ஆபிசருங்கள வேலையஉட்டு துக்கணும் அக்காங்...
அர்சாங்கம் விக்கிற சரக்கத்தான் வாங்கி குடிக்கினம்னா என்ன மாதிரி அன்னாடங் காச்சிங்க ஊட்டுக்கு எப்படி துட்டு குடுக்றது. ;
கோட்டர் கோயிந்து - ஹிஸ்ட்ரி
அல்லாருக்கும் வணக்கம்!!!
நான்தான் கோட்டர் கோயிந்து, அண்ணாத்த பித்தன் என்க்கு கிளாஸ்மேட் (glassmate), அவராண்ட சொல்ற மேட்டர... ஏதோ இன்டர்நெட்டுல போடுவாரமில்ல ...., அட்தாபா நம்ம மேட்டரயும் போடச்சொன்னே, இனி தின்த்திகும் ஏதாவது சொல்லலாம்னு யோச்சினுக்கீரன்.
அப்பால நம்ள பத்தி இன்னா சொல்றது..... ரிச்சா வலிக்கிறது தொழிலு, ரெண்டு கட்டு பீடி, கோட்டரு, ரவகானம் சோறு இது இர்ந்தாப் போதும்பா....
தின்த்திகும் கோட்டரு,
ஞயிதுக்கியம தியட்டரு,
அரிப்பெடுத்தா 'மேட்டரு'
இத்தாம்பா நம்ம ஹிஸ்ட்ரி இபோதைக்கி அப்பீட்டு......
;
