நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நண்பன் ஒருவன் படிக்கும்போது பெண்களைக் கவரவேண்டி நிறைய விஷயங்கள் தொட்டு வைத்தான், படிப்பைத் தவிர. நாலு ஐந்து பெண்கள் எப்பொழுதும் அவன் ஏட்டில் இருக்கும். படிப்பு வரவே இல்லை. ஒருதலையாய் காதலிக்காமல் தறுதலையாய் போன மிச்ச சொச்ச பேரில் இவனும் ஒருவன்."எப்படிடா மச்சின்னு...." கேட்டால்....
" மச்சி சில பொண்ணுகளுக்கு பாலிடால் காட்டி மடக்குவேன், பல பொண்ணுகளுக்கு நான் ஜாலி டால்(Doll), அவளுக்கு புக்ஸ் புடிச்சா..., ரெண்டு ஆத்தர் பேர சொல்லி கவுத்துடுவேன், இவளுக்கு ஊர் சுற்றப் பிடிக்கும்னா... பைக்ள வச்சி சுத்துவேன்னு" சொல்லுவான். அவன் இலகெல்லாம் எட்டாவதிலிருந்து பத்தாவது படிக்கும் பிள்ளைகள். "அதுக்கப்புறம் அவளுகளுக்கு அறிவு வந்துடும் 'மச்சி'..." என்பான். இன்றுவரை யாரிடமும் எல்லை மீறினது கிடையாது. "என்னவோ தெரியல 'மச்சி' பயமா இருக்கு...." "அப்புறம் ஏண்டா சுத்துறன்னு..?" கேட்டால் "ச்...ச்..சும்மா" என்று கண் சிமிட்டுவான்.
விடலை வயதை தாண்டி வேலை தேடி அலைந்து ஏதேதோ வேலை செய்து சிறிது காலம் வெளிநாட்டிலும் இருந்தான். வீட்டில் பார்த்த பெண்ணை மணம் முடித்து இரண்டு குழந்தைகள். ரொம்ப நாளைக்கு பின் நேற்று அவனை சந்தித்தேன், "என்ன 'மச்சி' எப்படி இருக்கே...?" "ரொம்போ நல்லா இருக்கேண்டா..." பின் சம்பிரதாய பேச்சுக்களின் ஊடே "இப்போ எங்கேடா வேலை செய்யிறன்னு...? கேட்டேன் மிக உற்சாகமாக சென்னையில் உள்ள வடநாட்டு காதல் ராணியின் பெயரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொன்னான்.
"பரவாயில்லைடா, ரொம்ப நல்ல இடத்துலதான் இருக்கே, என்ன வேலைன்னு...?" கேட்டேன் "மச்சி, கொசு ஓட்டுறது"ன்னு சொன்னான் "என்னடா.... மருந்தடிக்குற வேலையான்னு...? கேட்டால் "இல்லை, கொசு ஓட்டுறது, கையில கொசு ஓட்டுற பேட்ட கொடுத்து கொசு ஓட்டனும்னு சொன்னாங்க, சொம்ப ஜாலியா இருக்குடா மச்சான்" என்றான்.
எனக்கு பகீரென்றது "என்னடா சொல்லுற...?" "ஆமா மச்சி, இதுக்கு முன்னாடி கொசு மருந்து அடிக்கிற வேலை, இப்போ ப்ராஜெக்ட் மாறி, இந்த வேலை, மருந்தடிக்குரதுக்கு இந்த வேலை பரவாயில்லைன்னு? சொன்னான். "எப்படிடா நாலாயிரத்துக்கு ஆள் கிடைக்குதுன்னு என்ன வேலைன்னாலும் செய்யச் சொல்லுவாங்களா.... அதுக்குன்னு எவ்வளவோ மெஷின் இருக்குல்ல...., அத வைக்க வேண்டியதுதானே...? ஏண்டா ஒரு ஆள வச்சி கொசு ஓட்ட வைக்கணும்..?" "மச்சி ஹோட்டலுக்கு இது பெருமைதானே, நாங்க பாத்தீங்களா ஆள வச்சி கொசு ஒட்டுரோம்னு சொல்லிக்கலாமில்ல...". "இருந்தாலும் ஈனக்கு இது ரொம்ப கேவலமான செயல்ன்னு தோணுது".
"மச்சி இதுக்கே ஷாக்காயிட்டா எப்படி, இதில் டாற்கெட்லாம் உண்டு, சூப்பு வந்து பாக்கும்போது... ஒரு கொசு கூட இருக்கக் கூடாது, இருந்தால் ஆப்புதான்னு..." ரொம்ப சாதாரணமாகச் சொன்னான். "மச்சி அதுமட்டுமில்ல, நான் கொசு ஓட்டும்போது சத்தம் வரும், அப்ப பிகருங்கல்லாம் திரும்பி பார்க்குமடா...? "அட மடையா, ஊரே திரும்பி பார்க்கும்..." "அதெல்லாம் பார்த்தல் முடியுமா மச்சி, குடும்பம் ஓடனுமில்ல, வீட்லயும் வேலைக்கு போகுது, அப்படி இப்படி பண்ணிதானே கொடும்பத்த ஓட்ட வேடியிருக்குது".
"மச்சி பொண்ணு பின்னாடி போகணும்னா, வெட்டி ஆபீசரா இருக்கணும், பொண்ணு உன் பின்னாடி வரணும்னா வெட்டியான் வேலைன்னாலும் செய்யோணும்....!" ;
2 comments:
அதே ஹோட்டலில் நான் வேலை செய்திருக்கேன், ஹவுஸ் கீப்பிங்கில்!
நன்றி வால்.... ஆமா இந்த நண்பன் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது......
Post a Comment