விடுதலைப்புலிகள் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் மலையாள படமான ராம ராவணன் படம் குறித்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் :-
சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.
கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.
ஆனால் இந்த படத்தின் ஹீரோ சுரேஷ் கோபி நாங்கள் மலையாளிகளாக இருந்தாலும் தமிழர்களின் வலிகளைப் புரிந்து படம் எடுத்திருக்கிறோம், அவர்களின் உணர்வுகளைப் சரியாக பிரதிபளித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஒரு உலக பிரச்சனையை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதன் வலி தெரிவதில்லை.
உலகமே நம் இனம் அழிவதை வேடிக்கைப் பார்க்கும்போது, அண்டை மாநிலத்தவரான இவர்கள், இதுமாதிரி ஒரு படத்தை எடுத்திருப்பது நம்மை மீண்டும் சீண்டுவதாகவே இருக்கும். தமிழனின் பிரச்சனையை தன் பிரச்சனையாக நினைப்பார்களேயானால் இதுமாதிரி ஒரு படத்தை எடுக்கவே முன் வந்திருக்கக் கூடாது. இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போலத்தான்.
ஒரு விஷயத்தின் அடியோ முடியோ தெரியாதபோது வாயையும் 'சூ'வையும் பொத்திக் கொண்டிருப்பதே அவர்கள் நமக்குச் செய்யும் இமாலய உதவி.
சீமான் இதை தமிழ்நாட்டில் விளியிட தடை விதிக்கக் கோரியிருக்கிறார் ஆனால் இதை வேறு எங்குமே வெளியிட நிரந்தரத் தடை விதிப்பது சாலச் சிறந்தது. செய்வார்களா......?
No comments:
Post a Comment