Pages

குப்ப மேட்டரு.....

ஜெய்பூரில் மீண்டும் ஒரு மாணவி, தன் பள்ளி முதல்வரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். இதுபோல் வன் கொடுமைகள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், அந்த முதல்வருக்கு தரப் படும் தண்டனை, மிகக் கொடுமையாய் இருப்பதோடல்லாமல், எல்லா பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் இந்த செய்தியை பதிய வேண்டும். மீண்டும் யாரேனும் தவறு செய்ய மனதாலும் நினைக்காத வண்ணம் பள்ளிகள் காக்கப் படவேண்டும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
தமிழன் நிலை உயரும் வரை, இலவசங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். தம்பியை கை கொடுத்து தூக்காமல், ஒரு கை கொடுத்து வாய் அடைப்பது அரசியல் ராஜ தந்திரம் அன்றி வேறில்லை.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்

எனும் பாட்டியின் பாடல் அறியாதவரில்லை.

நிலை உயர ஆவன செய்யாமல், இலவசங்களினால் இட்டு நிரப்ப நினைப்பது, கனி இருப்ப, காய் நகர்துதலே.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
வலைப்பூவை திரையுலகம் சற்று கலக்கத்துடனே பார்க்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த மிகப் பிரம்மாண்டமான திரைப் படத்த்தை, கிழி கிழியென்று கிழித்ததில் திரையுலகமே மிகுந்த வருத்தத்தில் உள்ளது.

ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் இதே வலைப்பூவில்தான் சில நல்ல விமர்சனங்களும் விளைந்திருக்கின்றன. சமீபத்தில் வந்த மாயாண்டி குடும்பத்தார், வெண்ணிலா கபடிக் குழு, சுப்ரமணியபுறம் என்று நல்ல படங்களையும் இந்த வலைப்பூ உலகம் வாசகர்களுக்கு கொண்டு சேர்த்தது.

தயாரிப்பாளரும், இயக்குனரும் அதீத பிரமாண்ட மோகத்தால் அனாவசிய செலவு செய்யாமல், கதையோடு இயந்த கருத்து சொல்ல விழைந்தால், அது நல்லதொரு மாற்றத்தை திரையுலகில் ஏற்படுத்தும்.

வலையுலக நண்பர்கள், ஒரு படத்தை விமர்சிக்கும் போது, சற்று சிரத்தையாக, அதில் புழங்கும் மிக அதிக பணம் மற்றும் பணியாற்றும் எண்ணற்ற தொழிழாளர்களின் வாழ்கையை நினைத்து எழுதுவது எல்லோருக்கும் நன்மைபயக்கும் என்பதில் ஐய்யமில்லை.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் வழக்கம் போலவே இந்த முறையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் ஏராளமாக விற்பனையாகின்றன. இந்தியா போல் வளரும் நாடுகளில், இன்னும் இதுபோல் ஆயிரமாயிரம் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்கள் வந்தாலும் விற்பனை சக்கை போடு போடும். ;

இனிப்பு தந்த இனிமா

அப்போ நான் ஒரு சின்ன விளம்பர நிறுவனத்தில், வேலை பார்த்து வந்தேன். புதிதாக ஆரம்பித்த நிறுவனம், அதனால் பண்ணு, பப்பர மிட்டாய்ன்னு சின்னச் சின்ன பஞ்சர் ஓட்டுற வேலையே வந்தது, ஆனாலும் இதில் எங்கள் முழு திறமையையும் காட்டணும்னு, காசுக்கு மேலேயே கூவுவோம்.

கொஞ்ச நாள்ல அந்த பஞ்சர் வேலையும் வராம, டின்ஜர் வச்ச மாதிரி அடிவயிறு எரிஞ்சது. ஒரு கட்டத்துல, எங்க டக்ளசுக்கே (ஓனருங்கோ), என்னடா இது பொழைப்பு, இப்படி 'ஈ' கூட வராம காஞ்சிக் கெடக்கேன்னு ரொம்ப கவலையாப் பட்டாரு. நாங்களும் சார் எப்படியும் நமக்கு ஒரு நல்ல காலம் வரும் சார்ன்னு, அவருக்கு எடுத்துச் சொல்லி பின்ன இந்த கடையையும் அவரு மூடிட்டாருன்னா.... நாங்க சோத்துக்கே சிங்கியடிக்கன்னும்னு, அவருக்கு சில பல பிட்டப் போட்டு, கடைய மயிரைக் கட்டி இழுத்துட்டு வந்தோம்.

ஒரு நாள் திடீர்ன்னு நம்ம டக்ளசு.... வாயெல்லாம் பல்லோட, வாசல்ல வரும்போதே.... "எல்லோரும் மீட்டிங்குக்கு வாங்கன்னு..." சைகை செஞ்சாரு. ஆஹா பண்ணு, டீக்குக் கூட வழியில்லம டின்னு கட்டி அனுப்பப் போறாருன்னு, டர்ர்ர்... ஆகி எல்லோரும் மீட்டிங்குக்கு போனோம்.

"ஒரு பெரிய இனிப்பு வியாபாரி, அவருக்கு நிறைய கடைகள் இந்தியாவைத் தாண்டியும் வியாபித்திருக்கிறது, நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வர்றார், அவருக்கு ஒரு நல்ல கான்செப்ட் 'அட்' வேணுமாம்" என்றார் டக்லஸ்.

ஆஹா கொரவ கேளுத்தியே கிடைக்கலன்னு காத்திருந்த நமக்கு, சொறா சிக்கிடிச்சின்னு, என் பாஸு ரொம்ப 'பீல்' ஆயிட்டாரு. எல்லா டீம் மெம்பரையும் கூப்பிட்டு, "கான்செப்ட் பிடிங்கன்னு சொல்லிட்டு இது நமக்கு வாழ்வுன்னு நினைச்சி பண்ணுங்கன்னு, எப்படியும் பட்ஜெட் ஒன் 'சி'க்கு மேல போகும்னு" ஒரு பிட்டையும் போட்டுட்டுப் போயிட்டாரு. ஏன்னா அப்பத்தான் அந்த இனிப்பு நம்ம தமிழ் நாடு பூரா பேமஸ் ஆயட்டிருந்த நேரம். சீக்கு பிடிச்ச கோழி, சிலிக்கான்வேலில அலஞ்சா மாதிரி அவனவன், அவங்கவுங்க கற்பனை குதிரைய கூட்டிகிட்டு உலகம் பூரா சுத்துனானுங்க.

மறுநாள் இனிப்பு எங்க ஆபிஸ் வந்துது, "சொல்லுங்கண்ணே... என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...." இனிப்பு "கான்செப்ட் கலக்கலா இருக்கோனும் அண்ணேன்னு...." ஆரம்பத்துலேயே அளப்பரிய அள்ளி வுட்டுது. டக்லஸ் "அதெல்லாம் நம்ம பயபுள்ளைங்க பின்னிடுவாங்கன்னு, நம்மளோட ரேஞ்சப் பாருங்கன்னு நம்ம பன்னு, பஞ்சு, பப்பர மிட்டாய் விளம்பரங்கள காட்டி நம்ம தெறமைய அள்ளி விட்டாரு.

இனிப்பு 'புல்'ளாயி, "சரிண்ணே...! நம்ம கடை விளம்பரங்கள இனிமே நீங்களே பண்ணலாம்ன்னு..." சொல்லிச்சி

நம்மாளு மறுபடியும் "அண்ணே....! என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க...."

நம்மாளு இனிப்பு சொன்ன பதிலுல.... இனிமா தின்னா மாதிரி ஆயிடிச்சி.

நாங்க டிவி, ரேடியோன்னு யோசிக்க...

"இனிப்பு சார் பளுன்னுல வேணும்னு..." சொல்ல, பொங்குன காவிரிய பொடி டப்பால அடக்கினாமாதிரி புஸ்ஸுன்னு போயிடிச்சி...


ஒன் 'சி'க்கு எதிர்பார்த்த, டக்லஸ் ஒரு க்ளாஸ் 'டி'க்கு கூட தேறாதுன்னு, ரொம்ப ஒடிஞ்சு போயிட்டாரு. இருந்தாலும் நாங்க அதுலேயும் எங்க முழு தேரமயக் காட்டி சிறந்த விளம்பரமாத் தான் செஞ்சோம். ;

அலட்டலா வர்து அலகிப் போட்டி

அல்லார்க்கும் வன்கம்பா

மத்தாநாள் காத்தால ஏதோ மிஸ் உநிவெர்சாமே எங்கேயோ பஹாமால நடக்குமாமே, டிவில காம்சிக்னான். நம்ம இந்தியா பொண்ணுகூட கல்ந்துக்கிதாமே!! ஆளு ரொம்போ சோக்காதான் கீது. அல்லா குஜிலியும் டூபீஸ போடுக்னு, ஒய்யாரமா இடுப்ப ஓடிச்சி, இன்னாமா நடந்து வர்துங்க, கிக்காதாம்பா கீது. ஒவ்வொரு நாட்டு பிகர் ஒன்னொன்னும், சும்மா அய்யர் கட ஆப்பிலாட்டும் அம்சமா கீதுங்க.

ஆனா நா தெரியாமத்தாங் கேட்டுக்குறேன்....?

ஆரோ அஞ்சாறு பேரு செலீக்ட் செய்யுற பிகர்தான் கேலிக்குது, அப்போ அத்தான் இந்த அண்டத்திலேயே அலகின்னு ஆயிடுமா....?

அலகின்னு எத்த வச்சி செலீக்ட் செய்யிராங்கோ...? உனக்கு அலகுனு தெர்றது, என்க்கு தெரியாது. அறிவ, தெறமையா வச்சித்தான் செலீக்ட் செய்யிராங்கோன்னா..... ராகெட் உட்ட கல்பனா சாவ்லா, கிராம விடிவெள்ளி சின்னத்தாயி மாதிரி ஆளுக்குத்தான் தர்னும்.

இந்த போட்டில கலந்துகிட்ட பிகருங்க மட்டும்தான் அலகா....? ஊர்ல எவ்ளோ அலகான, அறிவான நிறையா அம்மனிங்கோ வெளியே தெரியாமலே கன்னாலம் காட்சின்னு செட்டில் ஆவுராங்கோ....

இர்ந்தாலும் நாளைக்கு காலையில, இத்த பாக்காம வுடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன்பா, என்ன நம்ம ஊட்ள எயுந்துக்காம இர்கோனும், அல்லாங்காட்டி செவுலு பிகில் ஊதிக்கும். என்ன இர்ந்தாலும் எனக்கு நம்ம ஊட்டுக்காரிதாம்பா நமக்கு அலகு.
-------X--------X--------
ஜஸ்வந்த் சிங்கும் வெளிய போயிட்டாரு... இவ்வளோ நாள் இர்ந்த அப்போ சொல்லாம, நிறைய மேட்டர இப்போ அவுத்து வுடுறாரு, இதெல்லாம் சகஜம். என்ன நம்ம டிவி, பேப்பருக்கு வாயில கவ்வ பிஸ்கோத்துக்கு ஆச்சி இந்த மாதிரி மேட்டரு எல்லாம்.
-------X--------X--------
அத்வானியோட அள்ளக்கை கட்சில இர்ந்து அப்பீட் அயிட்டாரமிள்ள... ஆனது தப்பில்ல ஆனா அதுக்கு அந்தாள் சொன்ன சப்ப காராணம்தான் மேட்டரு.... அப்பீட் ஆனதுக்கு கட்சில இர்ந்த கொள்கைதான்னு சொல்லிக்னாறு. இதுக்கும் ஜஸ்வந்த் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லையாம்....?

அப்போ ஏம்பா இவ்வளோ நாளா அங்கே ஒன்டிக்க்னு இர்ந்தாராம்...? போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்.....

சரி நம்ம போயப்பப் பாப்போம்....! வர்ட்டா.....! ;

இடைத் தேர்தல் வெற்றி!!!!


வான வேடிக்கைகள்......
வாய் நிறைய இனிப்புகள்.

அண்ணன் வெற்றியை.......
அள்ளக் கைகள் கொண்டாடுகிறார்கள்.

சரக்கும், சைட்டிஸ்ஸும்....
சக்க போடு போடும்

உச்சுக் கொட்டி சாப்பிட்டவன்,
உப்பிட்டவரை, உயர்வாய் பேசுவான்

மறத்தமிழன் நாம,
மல்லாக்க தூங்கயில....
மலை மலையாய் கொள்ளைபோகுது,
மயிர் போனால் என்ன.....
;

கூட்டா சேர்ந்து நாட்ட......

அல்லார்க்கும் வன்கம்பா!!!

ரொம்ப நாளா ஒடம்பு பேஜார் பண்ணதுல, அண்ணாத்தைய பாக்க முட்யாமப் பூடுச்சு, அதான் வர்ல, இன்மே அடிக்கடி வரேந்பா. ப்ளு, க்ளுன்னு டர்ர்ர்... ஆயிடுச்சி நம்ம வூட்ல, அப்பல நம்ம ராயப்பேட்டா ஆஸ்பிடல்ல, உன்க்கு ஒன்னும் இல்லன்னு சொல்டாங்கபா....
*** X *** X***
நம்ம ஊட்டாண்ட கீற டில்லிபாபுக்கு வர்ஷகண்கா 2300 ரூபாதான் சம்பளம், பாவம் அவன் பொண்டாட்டியும் நாலு வீட்ல வேல பாத்து, குடும்பத்த தல்லுதுங்க. ஆனா... MLAக்கு எல்லாம் சம்பளம் ஏத்திட்டாங்க, அதில்லாம அவங்களுக்கு இரண்டரை கிரவுண்டு நிலம் வேற தர்றாங்களாம்பா....

நாந் தெரியாமத்தான் கேகுறேந், இவங்கல்லாம் இப்போ குந்த குட்ச இல்லாமையா கீறாங்கோ...?, அப்போ எலக்சன் சொல்லோ ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் குடுத்தது ஆரு துட்டு.... ?
*** X *** X***
ரொம்போ நேக்கா வள்ளுவர் செலைய கர்நாடகாவிலும், கன்னட கவிஞர் சர்வக்ஞர் செலைய தமிழ்நாட்டிலும் திறந்த, ரெண்டு மாநில முதல் அமைச்சர்களும், ரொம்ப பிரெண்ட்ஸா கீறா மாதிரி காட்டிக்கிறவங்க. ஏந் காவேரிய நமக்கு கொண்டு வரக் கூடாது?

ஆனா கர்நாடகாவில மல பேஞ்சா மட்டும், ஆரும் சொல்லாம தெறந்து வுட்டுருவாங்கோ, இல்லாங்காட்டி அவங்க அண வோடஞ்சு ஊருக்குள்ள தண்ணி வந்துரும்னு பயம்.
*** X *** X***
ஏதோ ஸ்விஸ் பேங்காமே அங்கே இருக்க பணத்துல, இந்தியர்களோட பணம்தான் ரொம்ப அதிகமாமே...?!, பணம் போட்டவன் சினிமாகாரன், கிரிகெட் விளையாடுறவன், பெரிய பெரிய முதலாளிங்க, அயோக்கிய அரசியல்வாதிங்க, அப்படி இருக்கோ சொல்லோ..., இது அவன் வயித்துக்கு மீறிய பணம், அத்த திரும்ப கொண்டாந்தா என்ன?

அமா இப்போ அரசாங்கம் அந்த பணத்த ஒழுங்கா காட்டி வரி கட்டிட்டா, நீங்க அத முறையா ஊஸ் பண்ணலாம், அல்லாங்காட்டி அரசே அத மொத்தத்தையும் எடுத்துக்கும்னு சொன்னா, அல்லாரும் அத்திரிபுத்திரி ஆகி வரி கட்டிட மாட்டாங்கோ? ஆனா அத்த ஆரு செய்யுறது....? செய்ய வேண்டிய அரசியல் வாதிங்கோ முக்காவாசி பேர் அதில பணம் போட்டிருக்கான்...?

அல்லாரும் கூட்டா சேர்ந்து நாட்ட மொட்ட அடிக்கிறாங்க...

அட நம்ம நிலமைய சொல்லு, பத்து நாளா பொயப்புக்கு போகாம ஊட்ல குந்திக்கீனு இர்ந்தா ஊட்டுக்காரி கொமட்லயே குத்துறா...

அதுசரி பல்லு கீரவேந், பகோடா துண்ணுறான், பரதேசி நாம பண்ணு வாங்க காசில்லாம அல்லாட வேண்டியதுதான்...

சரிப்பா போயி நம்ம போயப்பப் பாப்போம்....! ;

கொடுத்து வச்சிருக்கனும்....!

வேலையில் மூழ்கிப் போனால்...., நேரம் போவதே தெரியவில்லை, அலைபேசி அதிர்வில், சுயநினைவு வந்து, யார் மிஸ்ஸுட் கால் கொடுத்ததுன்னு பார்த்தேன், கோட்டி (கோட்டீஸ்வரனின் சுருக்கமே!). தொலைபேசியை எடுத்து நம்பர் சுற்றி "ஹலோ...."
"மச்சான் எனக்கு துபாயில் வேலை செய்ய விசா வந்திருக்கு, நீ கொஞ்சம் அவரசமா வர்றீயா?"

"இல்ல கோட்டி, நா வர லேட் ஆயிடும், வேணும்னா நைட் 9 மணிக்கு மேல் வரவா?"

"சரி மச்சான், நான் என் வீட்ல வெயிட் பண்ணுறேன்"

"ஓகேடா நா நைட் 9 மணிக்கு வர்றேன்"

கோட்டி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் எம்ராய்டரி போடும் வேலை செய்கிறான். என் பால்யகால நண்பன். ஒன்றாகவே ஒரே தெருவில் விளையாடினோம். படிப்பு ஏறாததினால் அவன் மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். படிப்பில்லையே தவிர, நன்றாக எம்ராய்டரி வேலை செய்வான். அவனே படம் வரைந்து, எம்ராய்டரி போடுவான். படம் வரைவதிலே நன்கு தேர்ந்தவன்போல் இருந்தான்.
"மச்சான் நீ தனியா இங்கயே நாலு எம்ராய்டரி மெஷினப் போட்டு, நல்லா சம்பாதிக்கலாம்...." என்று சொன்னோம். ஆனால் அவன் அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியை விட்டு வர மாட்டேன் என்று சொன்னான்.

"என்னடா உன் முதலாளி விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சுன்னு....!" சொன்னால்,

"எனக்கு என்னம்மோ பிடிச்சிருக்கு மச்சி....!" என்பான். சொந்த மாமா மகளையே அமம்மா (அம்மாவின் அம்மா) வற்புறுத்தலின் பேரில் கல்யாணம் பண்ணினான். அவனுக்கு அந்த பெண் பிடிக்காது, ஏன் என்றால்....? பெண் கொஞ்சம் கறுப்பாக இருக்கும். கல்யாணம் ஆகி, அவன் அப்பாவால் தனிக் குடித்தனம் வைக்கப் பட்டான். அவன் சரிவர சம்பளம் வீட்டுக்குத் தராததினால்...., அவனுடைய அமம்மா தன் பேத்திக்கும், பேரனுக்கும் துணையாக அமர்த்தப் பட்டாள். அம்மம்மா பென்ஷனை வைத்து குடும்பம் ஓடியது.

"மச்சி.... சம்பாதிப்பதை எல்லாம் என்னடா செய்வன்னு" கேட்டால்

"அப்படியே செலவாயிடுதுன்னு" சொல்லுவான்.

"அப்படி என்னடா உனக்கு செலவுன்னு கேட்டால்?"

"என்னடா செய்யிறதுன்னு" ரொம்ப சாதரணமா பதில் சொல்லுவான். அவங்க அப்பா அவனை தனிக் குடித்தனம் வைத்ததே, அவன் ஒழுங்கா பணம் தரவில்லை என்றுதான். பின் நானும் அவன் அண்ணனும் அவனுக்கு புத்திமதி சொல்லி, வீட்டுக்கு பணம் தரச் சொன்னோம். கொஞ்ச நாள் நன்றாகப் போனது. ஒரு நாள் கூட அப்பெண்ணை அவன் வெளியில் கூட்டிக் கொண்டு செல்வதை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து ஏதாவது பேமிலி பயணம் ஏற்பாடு செய்தாலும், அவன் தனியாகவே வருவது தொடர்ந்தது. கேட்டால் "அவளுக்கு உடம்பு சரியில்லை, அது இதுன்னு" ஏதாவது சாக்கு சொல்வதே வழக்கம்.

இரண்டு வருடம் கழித்து மனைவி உண்டாகி, பின் கலைந்தது, இதுபோல் மேலும் இரண்டு முறை நடந்தது, பின் நான்கு வருடம் கழித்து ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது. என் வேலை விசயமாக, நான் அடிக்கடி வெளிஊர்களுக்குச் செல்வதாலும், வேலை பளு அதிகமானதாலும், சந்திப்புகள் ரொம்ப அரிதாகவே நடைபெற்றது. குழந்தை குட்டிகள் என்றானபின் நட்பென்பது இரண்டாம் பட்சமே.

கொஞ்ச நாளாகவே வெளிநாடு போக முயற்சி செய்துக் கொண்டிருந்தான் என்று கேள்விப் பட்டேன், இன்றுதான் அது உறுதியானது. வேக வேகமாக எல்லா வேலையும் பார்த்து, முடியாததை திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், என்று எடுத்து வைத்து விட்டு கிளம்ப எத்தனித்த போது, மணி 9.30ரையை தாண்டி இருந்தது. கிளம்புமுன் கோட்டிக்கு, போன் செய்தேன்...

"மச்சி எங்கே இருக்கே?"

"நான் வீட்டிலேதான் இருக்கேன்" என்றான்.

"சரிடா நா இன்னும் அரைமணி நேரத்தில் அங்கிருப்பேன்" என்று சொல்லி என் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அவன் வீடு தெரியும் என்றாலும், பல மாதங்கள் கழித்து போவதனால், சற்று தடுமாறி தடுமாறி வீடு கண்டுபிடித்து போனேன்.
வீட்டில் அவன், மனைவி, பாட்டி மற்றும் அவன் மாமா இருந்தார்கள். என்ன விசா என்று என்னிடம் பார்க்க கொடுத்தார்கள்.

"லேபர்ன்னுதான் போட்டிருக்கு, மற்றபடி வேறு விவரம் ஏதுமில்லைன்னு" சொன்னேன்.

"இது இவர் கூட வேலை செய்தவன்தான் அனுப்பினான், எம்ராய்டரி வேலை என்றுதான் சொன்னான்" என்றார் அவன் மாமனார்.

"சரி, இப்போ என்ன்ன செய்வதா உத்தேசம்?" என்றேன்.

"போகப் போகிறேன்" என்றான்

"ரொம்ப சந்தோசம், அப்ப ஆகா வேண்டிய காரியத்தை பார்க்க வேண்டியதுதானேன்னு" கேட்டேன்.

"அதான் உன்னை இங்கே கூப்பிட்டிருக்கிரோம்ன்னு" சொன்னான்.

அதற்குள் அவன் பாட்டி "இங்கே இருந்து அவன் ஒன்னும் கழட்டப் போறதில்லை. அவன் ஊருக்குப் போவதுதான் சரி, வீட்டுக்கும் சரியா பணம் தராம, சேர்வார் சகவாசம் சரி இல்லாம, ரொம்ப அட்டுழியம் பண்ணுறான். இந்த பேச்ச ஆரம்பிச்ச நாளில் இருந்து, வேலைக்குப் போவதே இல்லை. ஏற்கனவே ஒரு ஆறு மாசமாக, சரியவே வேலைக்குப் போக மாட்டான், ஒரு நாள் போனால், ரெண்டு நாள் லீவ் எடுப்பான். ஆனால் இந்த மூணு மாசமாக சுத்தமா வேலைக்கே போகவில்லை"

"நீ சும்மா இரு" இது கோட்டி.

"இல்ல... அவர் கொஞ்ச நாள் வெளி நாட்டுக்குப் போய் வருவதுதான் சரி!" என்றார் அவன் மாமனார்.

"சரி எப்போ டிக்கெட் போடப் போறே"

"இல்ல அது வந்து.... அதுக்குத்தான் உன்ன கூப்பிட்டிருக்கோம்...." என்றான் மென்று முழுங்கி.

"ஏய் இதில் என்ன தயக்கம் நான் பண உதவி பண்ணுறேன்" என்றேன்.
அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சந்தோசம் தெரிந்தது. விடை பெற்று வெளியில் வந்தோம், நங்கள் இருவரும்.

"ரொம்ப தேங்க்ஸ்டா என்றான்"

"இதில் என்னடா தேங்க்ஸ் வேண்டி கிடக்கு, நீ என் நண்பன், உனக்கு ஒரு நல்லது நடக்க நான் உதுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம்" என்றேன். மறுநாள் நாங்கள் இருவரும் அவனுக்கு, ஒரு டிரவெல்சில் டிக்கெட் புக் பண்ணினோம். சரியாக மூன்றாவது நாளில் பயணம். எல்லா ஏற்பாடும் பரபரப்பாக நடந்தது.

அன்றிலிருந்து அவனுடைய அஃபிஷியல் ஸ்பான்சராக நான் மாறினேன்.

"மச்சி ஒரு பத்தாயிரம் இருந்தால்....., வீட்டுக்கு செலவுக்குக் கொடுப்பேன்" என்றான் நானும் அவன் திருந்தியத்தில், ரொம்ப புளங்காகிதம் அடைந்து, கொடுத்தேன். நேராக அவன் பாட்டியிடம் போய் அந்த பணத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.

"ரொம்ப சந்தோசம்டா.... நீ இப்படி பொறுப்போட இருப்பது" என்றேன் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வர, இருவரும் அப்படியே திநகர் சென்றோம். அவனுக்கு தேவையானதை போத்தீசில் வாங்கினான்.

"மச்சி ஜட்டி பனியன் எடுக்கனும்டா" என்றான் "வாடா ப்ளட்பாமில் எடுக்கலாம்" என்று சொன்னதுக்கு,

"இல்லடா ....,வெளி நாடெல்லாம் போறோம், கம்பெனி ஐட்டமே எடுக்கலாம்" என்றான்.

"அது சரி, ஒம்பணமா இருந்தால் பரவாயில்ல, இது என் பணமாச்சே....!"

"எல்லாத்துக்கும் கணக்கு வச்சுக்கோ மச்சி, போனதும் ரியாலில் அனுப்பிடுறேன்னு" சொன்னான்.

"வக்கனையா பேச மட்டும் கத்துக்கிட்ட".

புலியே புள்ளட்லதான் போகுது, ஆனால்... எலி ஏரோப்ளேன் கேட்ட கதையாக, எல்லாம் மிக உயர்ந்த ரக, பிராண்டட் பொருட்களையே வாங்கினான். இது காலுக்கு காதில (காதி க்ராப்ட்) கட்ட செருப்பு, ஆறுநூரில் வாங்கும் வரை தொடர்ந்தது. இரவு பத்து மணி ஆகிவிட்டதனால் கீதாஞ்சலி போய் சாப்பிட்டோம். எல்லா பில்லும் சேர்த்து பதினைந்தாயிரம் வந்தது சரி நண்பனுக்குத்தான்னு அவனிடம் பில்லை நீட்டினால்,
"எனக்கு என்ன மச்சி தெரியும், நீ எவ்வளவு சொல்றயோ, அத தரப் போறேன்னு" ரொம்ப கஸுவலாக சொன்னான்.

நட்புக்கு விலையேதுன்னு என்னை நானே தேற்றிக் கொண்டு. அவன் வீடு நோக்கி வண்டியை ஓட்டினேன்.

"மச்சி என்னடா உன் பாட்டி, நீ ஆறு மாசமாவே சரியா வேலைக்குப் போவதில்லைன்னு சொல்றாங்க"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி, அது அப்படித்தான் நீ கண்டுக்காதேன்னு" சொல்லி என் வாயை அடைத்தான். மறுநாள் திங்கள், நான் வேலைக்குப் போக வேண்டி இருந்ததால்,

"மச்சி நான் சயந்திரம் வந்து உன்னைப் பார்க்கிறேன்னு" சொல்லி விட்டு விடை பெற்றேன்.

மறுநாள் அவன் பொருட்களைப் பேக் பண்ணி வைக்க, புதிதாக சாம்சோநைட் பெட்டி அவன் வீட்டில் இருந்தது.

"என்ன மச்சி, ஏது இதுன்னு?" கேட்டேன்.

"இப்போதான் வாங்கினேன், மூவாயிரம்....!" என்றான்.

"என்னடா அங்கே நல்ல நல்ல பெட்டி எல்லாம் கிடைக்குமே, இப்போ நீ ஒரு அட்ட பெட்டியில், கட்டிக் கொண்டு போனால், ஊரில் இருந்து திரும்பி வரும் போது நல்ல பெட்டி வாங்கி வரலாமிள்ளன்னு..."

"அட போ மச்சி, அட்ட பெட்டியெல்லாம் கெத்தா இருக்காது...". அடுத்தவன் காசுன்னா.... ஆயிரம் யானை வாங்குவாங்க, போலன்னு நினைச்சுக்கிட்டு பேக் பண்ணினோம்.

"மச்சி சொல்ல மறந்துட்டேனே, டிக்கெட் இன்னும் வரலைடா"

"என்னடா.....? இது நாளைக்கு ஃப்ளைட் வச்சுக்கிட்டு, இன்னும் டிக்கெட் வரலைன்னு" சொல்லுறன்னு அதிர்ச்சியாக் கேட்டா....

"என் ஃப்ரண்ட்தான், கலையில ஏபோர்டில் வைத்து தருவதாகச் சொன்னான்"

"என்னமோடா, எனக்கு இது சரியாப் படலைன்னு" சொல்லும்போதே அவன் பாட்டி

"என்னப்பா... நீ அபசகுனமாச் சொல்லுற"

"இல்லப் பாட்டி, இது பஸ் டிக்கெட் மாதிரி இல்ல, டிக்கெட் கன்பார்ம் ஆகலைன்னா.... ஏபோர்டில் உள்ளேயே விட மாட்டாங்க"

"அதெல்லாம் அவனுக்குத் தெரியும், நீ இப்படி அபசகுனமாகப் பேசாதேன்னு" சொல்லுச்சு. சரி நம்ம நாக்குல சனின்னு நானும் கம்னு இருதுட்டேன்.

பேக்கிங் முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது.

"சரி மச்சி, நான் நாளைக்கு காலையில் வரேன்னு" சொல்லிட்டு நான் என் வீடு வந்தேன்.

மறு நாள் அதிகாலையில் போனால் அவன் வீட்டில் எக்கச்சக்க ஜனம், முன்னூறு சதுரடி வீட்டில்... ஐம்பதருபது பேர், சரி முதல் முதல் போகிறான்னு எல்லோரும் வந்திருக்கிறாகள்ன்னு, நினைச்சுக்கிட்டு நான் வெளியிலேயே நின்னுக் கொண்டிருந்தேன். அவன் கம்பெனி நண்பர் ஒருவனும் என்னுடன் இருந்தான்.

"சார்...! இப்போ ஏபோர்ட் சான்ஸ்தான் எடுக்கப் போறான், டிசெக்ட் கன்பார்ம் ஆகலைன்னு" சொன்னார்

"என்ன சார்....? இப்படி சொல்றீங்க, நேத்து ராத்திரி கூட கேட்டேனே, கலையில் டிக்கெட் வந்துவிடும்னு சொன்னானேன்னு"

"இது அவனுக்கு முந்தா நாளே தெரியுமேன்னு" சொன்னார்.

எதோ நெருடவே....., அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், அமைதி காத்தேன். சரியாக ஐந்து மணிக்கு ரெண்டு மாஸ்தா வேன் வந்தது, கூட்டம் முண்டியடித்து ஏற, நானும் அந்த நண்பரும் என் பைக்கில் போவதாக முடிவானது. வண்டியில் ஏறும் முன்....

"மச்சி, ஒரு ஆயிரம் ரூபா இருக்குமான்னு....?" கேட்டான்

"சரி மச்சி, நான் ATMஇல் எடுத்துட்டு, ஏர்போர்டில் வந்து தருகிறேன்னு" சொன்னேன். ஏர்போர்டில் போய் தேவுடு காத்துதான் மிச்சம். அன்று அவனுக்கு இடமில்லை. திரும்பி வரும் வழியில், என் ட்ரவெல்ஸில் மருநாளுக்குண்டான டிக்கெட் புக் பண்ணி கொடுத்தேன்.

"உன்ன மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க, நான் கொடுத்து வைத்திருக்கனும்டா....."

"ஏய் ஃப்ரண்ட்ஷிப்பில், என்ன இது பார்மாலிடீஸ்" என்றேன்

"இல்லடா.... உனக்கு ரொம்ப பெரிய மனசுன்னு" சொன்னான்.
ஆனால் அவன் என் டிக்கெட்டை யூஸ் பண்ணாமலே, அவனுடைய பழைய டிக்கெட்டிலேயே..... மறுநாள் கன்பார்ம் பண்ணி வைத்தான்.

"அப்ப ஏண்டா....? இந்த டிக்கெட்ன்னு?" கேட்டதுக்கு

"ஒரு சேஃப்டிக்கு...." என்று சொன்னான். மறுநாளும் அதே அளவு கூட்டத்தோட ஏர்போர்ட் சென்றோம். இந்த முறை விமானம், அவன் மானத்தை ஏற்றாமல், அவனை ஏற்றிச் சென்றது. மாலை ஏதும் போன் பண்ணினான்னா என்று விசாரிக்க, அவன் வீட்டுக்குச் சென்றேன். அவன் மாமனார்.....

"போன் பன்னாருப்பா, நல்லபடியாப் போய் சேர்ந்ததாகச் சொல்லச் சொன்னார்" என்றார்.

"எனக்கு போன் பண்ணவில்லைன்னு...." சொன்னதுக்கு

"எல்லாத்துக்கும் எதுக்கு போன் பண்ணனும்னு, நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றார். சரி நம் தேவை முடிந்தது அதனால்தான் வீசப் படுகிறோம்னு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

அடுத்தநாள் அவன் மாமனார் எனக்கு போன் பண்ணினார். "நீங்க கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு வர முடியுமா?"

"எதுக்கு சார்....?"

"இல்ல வீட்ல, அம்மா ரொம்ப கவலையா இருக்காங்க" என்றார் சரி என்று ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டு போனால்..... எல்லோரும் ஒரே அழுகைக் கூட்டமாக இருந்தது. அங்கே அவன் கம்பெனி நண்பரும் இருந்தார். சரி முதல் முதல் வெளி நாட்டுப் பயணம், அதனால்தான் இப்படின்னு அமைதி காத்தேன்.

கோட்டி மாமனார் "என்னங்க இது ஏதோ பாலைவனத்தில் கொண்டுபோய் விட்டுட்டாங்களாம்...., சாப்பாடு ரொம்ப கஷ்டமாம், அதனால திரும்பி வரப் போறேன்னு சொல்றார்ன்னு" சொன்னார்

"ஏங்க.... இதெல்லாம் சகஜம், வலைகுடாவே பாலைவனம்தான், கொஞ்சநாள் பழ்கிட்டுதுன்னா சரியாகிவிடும்னு" சொன்னேன்.

"இல்லங்க.... அங்கே போய் அவர் ஒன்னும் அப்படி கஷ்டப் பட வேண்டாம். நாங்களே.... அவர திரும்ப வர சொல்லி விட்டோம்" என்றார்

"என்னங்க இது கொஞ்சங்கூட அக்கறையே இல்லாம பேசுறீங்க, அப்போ அவன் வாங்கிப் போன கடத்துகெல்லாம் யார்....? பதில் சொல்றது"

"அதுக்கு அவர அப்படி தவிக்க விட்டு, நாங்க நல்ல இருக்க வேண்டாம்" என்றார்.

"சரி உங்களுக்கு எது விருப்பமோ அதச் செய்யுங்க" என்று சொல்லி நான் கிளம்பி வந்து விட்டேன். அந்த நண்பரும் என்னுடனே கிளம்பி விட்டார்.

"எப்படியோ போய்ட்டான்னு.... பார்த்தா, இப்படி ஒரு குண்டத் தூக்கி போடுறாங்களே....! அப்ப நான் கொடுத்த பணம் என்னாகும்னு தெரியலையேன்னு" அவர் சொன்னார்.

"என்ன சார் நீங்களும் பணம் கொடுத்தீங்களா....?"

"ஆமா சார் இருபதாயிரம்" என்றார் அவர்.

"என்ன சார் நானும் ஐம்பதாயிரத்துக்கு மேல் கொடுத்திருப்பேன்" என்றேன்.

"ஐய்யையோ என்ன சார் இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறீங்க, ஆனா அவன் மாமனார் என்னிடம் நான்தான் அவருக்கு தேவையானப் பணத்தை, புரட்டிக் கொடுத்தேன். என்று சொல்கிறாரேன்னு" அதிர்ச்சியாக் கேட்டார்

"அவர் எப்படி சொன்னால் என்ன...? நான் அவன நம்பித்தான் பணம் கொடுத்தேன்" என்றேன்.

"இருந்தாலும்..... அவன் இப்போது திரும்பி வந்தால்.... எப்படி நமக்கு பணத்த திருப்பித் தருவான்....?" என்றார்.

"பார்க்கலாம் சார்ன்னு...." நான் ரொம்ப கவலையா வீட்டுக்கு வந்தேன். பின் நான் என் வேலையில் ரொம்ப பிஸியானதால்..... ஒரு மாதம் உலகம் சுற்றுகிறதான்னு....? கூடத் தெரியாமல் இருந்தேன். ஒரு நாள் ஏதேச்சையாய் கோட்டி நண்பரை கடைத் தெருவில் பார்த்தேன்.

"என்ன சார் எப்படி இருக்கீங்க?" என்று கேட்டதுக்கு

"நல்லா இருக்கேன் சார். கோட்டி ஊரிலிருந்து வந்துட்டான் சார்" என்றார்

"என்ன வந்துட்டானா?"

"ஆமா உங்களுக்கு தெரியாதா?"

"இல்ல சார்" என்றேன் அப்பாவியாய்.

"ஆமா சார் வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது."

"ஏன் சார் வந்தானாம்..." என்றேன்

"அது சார் அந்த கவிதா இல்ல?"

"எந்த கவிதா...?"

"அதான் சார்... அவன் கீப்பா வச்சிருந்தானே....! அந்த கவிதா"

"கீப்பா....? எப்போ எங்கே?"

"என்ன சார் உங்களுக்கு, விசயமே தெரியாதா...? அவன் பழைய எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் போது, அவள் அவன் கூட வேலை செய்தாள், அப்படியே பழக்கமாகிப் போய், இது கள்ளத் தொடர்பா ரொம்ப வருஷம் முன்னாடி இருந்தே தொடர்ந்து வருகிறது. அவளுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழ்ந்தை இருக்கு. இருந்தாலும் இவன் கூட அவ தொடர்பை வச்சுக்கிட்டா."

"என்ன சார்....! எனக்கு இது நாள் வரை தெரியாதே?"

"போங்க சார்...! நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க" என்றார்.
நேராக அவன் வீட்டுக்கு போனேன், அவன் வீட்டில் இல்லை, அவன் மனைவி மட்டும்தான் இருந்தது.

"அண்ணே உங்கள மாதிரி ஃப்ரண்ட் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்ணே, ஒரு ஆயிரம் ரூபா இருந்தா.....". ;

ஆல்பர்ட்டில் லெக்கு

லெக்கு மற்றும் சகாக்களுடன் ஆல்பர்ட்டில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். நம்ம ராஜா வழியில ஒரு டாஸ்க் மார்க் கடையைப் பார்த்ததும், கம்பத்தைப் பார்த்த நாய் போல பம்மினான். சரின்னு எல்லோரும் உள்ளே போனோம். ஒரு மானங்கெட்ட மானிட்டர் ஹாப் வாங்கி நாலு பேரு அடிக்கலாம்னு பிளான். மொடாக் குடியர்களுக்கு மப்பு ஏறனும்னா மானிடர்தான் சரி, பிபி என்றால் எல்லோரும் பத்தவில்லை என்று மேலும் பிபி ஏத்துவார்கள்.

லெக்குக்கு பீஃப் என்றால்.... நாக்கை நல்லா நாளின்ச்க்கு நீட்டுவார். அவருக்கு எப்போதுமே பீஃப்தான் சரக்கு, சரக்கு வெறும் கீப்தான். நாக்கில் சரக்கை நக்கினாலே வாய் தஞ்சாவூர் வரை தாறுமாறாகப் போகும். ஆகையால் அவரை எப்போதுமே நாங்கள் லிமிட்டில் வைப்போம்.

கொஞ்சம் அசட்டையா இருந்ததுல அதிகமா சரக்கடிச்சிட்டாரு லெக்கு. ஆஹா என்ன நடக்கப் போகுதோ, நடப்பதெல்லாம் நாராயணன் சித்தம்னு, நடையக் கட்டினோம் ஆல்பர்ட்டுக்கு. ஆல்பர்ட்டுக்குதான் போனோம், ஆனால் நம்ம கிரகம் அங்கே டிக்கட் கிடைக்கவில்லை, சரி நம்ம மணிரத்தினம் படமாச்சேன்னு பேபிக்கு விரைந்தோம். அப்பவே லெக்கோட அட்ராசிடி ஆரம்பாமாயிடிச்சி.

நா இந்த நாதாரிப் படத்திற்கு வர மாட்டேன். அவருக்கு நச்சுனு ஹீரோயின் இருக்கணும், இல்லன்னா கலக்கலான சண்டைகள் இருக்கணும். இது ரெண்டும் நம்ம மணி படத்தில் இருக்காது. கேட்டையே கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு அடம் பண்ணாரு. என்னடா இது ஆரம்பத்திலேயே அலும்பு தாங்கலைன்னு அவர அணைச்சி அள்ளிப் போட்டுட்டுப் போய் உள்ளே உட்கார்ந்தா.... அட்டகாசமான ஆரம்பம் அம்பேல் ஆயிடிச்சி படத்துல.

அப்படியே ஹாப் லைட் வெளிச்சத்துல, ஆளாளுக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நம்ம லெக்கு ஒரு ஆன்ட்டி மடியில உக்காரப் போய்....., அதிரிபுதியாப் போயிடிச்சி. மன்னிப்பு கேட்டு, மாமிய மடக்கி, உட்கார்ந்தோம். ஏற்கனவே அவருக்கு புடிக்காதப் படத்துக்குப் வந்ததில்.... பொறிப் போறியா துப்புன லெக்கு, ஆன்ட்டி மேட்டர்ல கடுப்பாயி, அக்கினியா அள்ளிப் போடுறாரு. அவர் பக்கம் திரும்பினாத்தானே அக்கினின்னு ஆன் ஸ்க்ரீனைப் பார்த்தேன்.

இன்டெர்வெல்லுக்கு முன்னாடி திரும்பி பார்த்தா ஆளக் காணோம்.... அடி வயிற்றில் அமிலம் சுரக்க, அலர்ட்ஆகி வெளியே வந்தால்.... ஒரு ஆன்ட்டியோட சண்டை போடுறாரு, இனிமா குடிச்ச கொரங்கா என்ட்ரி ஆனா.... ஆன்ட்டி நம்மளையும் சேர்த்து அடிக்க வருது, என்னன்னு விசாரிச்சா, மப்பில் லெக்கு.... லேடிஸ் டாயிலேட்டில் போயிருக்காரு,

"தியேட்டர்ல என் மேல உக்கரும்போதே, சும்மா விட்டுட்டோம் இப்ப விட முடியாதுன்னு" ஆப் ஆவாம சவுண்ட் விடுது ஆன்ட்டி.

அதற்குள் ஆன்ட்டி புருசனும் அங்கே வர, கயித்துல தொங்குன எங்க மானம், கருடன் கொத்துன கிளியாட்டம் சும்மா கிர்ர்னு பறக்குது. ஸாரு சைலன்ட் ஆனாலும்..., ஆன்ட்டி சாந்தி ஆகவே இல்லை. அதற்குள் கூட்டம் கூடி விட, சப்பைக்கே சப்போர்ட்டா வர சனங்க, சந்தனம் கிடைத்தால் விடுமா... ஆளாளுக்கு அள்ளி மார் மேலும் தோள்மேலும் பூச, அத்தனையும் வாங்கிட்டு அடக்கமா நின்னாரு லெக்கு.

"சார்....ர், ஏதோ தெரியாம நடந்துடுச்சின்னு...."
நாசூக்கப் பேசி, அவங்கள அனுப்பிட்டு ஆசுவாசப்பட்டோம். எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சின்னு எடத்த காலிபண்ணுற நேரத்துல.... இன்னொரு குடிமகன் லெக்கு கிட்ட வந்து, "எல்லாம் பத்துட்டப் போலன்னு....!!!" கேக்க அவனை அப்படியே அமுக்கி, ஆல்பர்ட்டுக்கு பாய் சொன்னோம். ;

குப்ப மேட்டரு....


ராக்கி சாவந்த் ஒரு பிட்டுப் பட நடிகை, (பிட்டுத் துணிப் போட்டு, பிட்டு பிட்டாக வடமொழிப் படங்களில் நடிப்பார்). இதில் இவர் ஓப்பனாக பேசுபவர் என்கிறப் பேர் வேறு. அவர் தனது மாப்பிள்ளையை நேற்று தேர்ந்தெடுத்தார் இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இந்நிகழ்ச்சி நேரடியாக NDTV Imagine ஒளிபரப்பானது.

இவரை கட்டிக் கொள்ள ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் கடைசியாக மூன்றுப் பேரைத் தேர்ந்தெடுத்து, அதில் நேற்று எலேஷ் பருஜன்வாலாவைத் தேர்ந்தெடுத்தார். எலேஷ் கனடா வாழ் இந்தியர், அங்கே ஏதோ வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாராம் (ஆமா இந்த மாதிரி நடிகைகளைக் கட்டிக் கொள்ளவென்று.... அவதாரமெடுத்திருக்கும் எல்லோரும், ஏதோவொரு வியாபாரம் செய்வார்கள்). வெத்துப்பட்டி விப்பவன், வெங்காயம் விப்பவன், எல்லோரும் வியாபாரிதானே.

இந்த கருமத்தையெல்லாம் ஒளிபரப்பி தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்யும் யுக்க்திதான் நெருடலாக இருக்கிறது. விட்டால் அவர்களது படுக்கையறைக் காட்சிகளைக் கூட ஒளிபரப்பி, தங்கள் TRB ரேட்டிங்கை அதிகரிப்பார்கள். இதுவே ஒரு சாலையோர பெண்ணின் சுயம்வரமென்றால்.... ஒளிபரப்பி இருப்பார்களா? மாட்டார்கள்...! ஏன் என்றால் ஒரு பிரபல முகமென்றால்.... நெற்றிப் பொட்டில் இருந்து, உள்ளாடை வரை விளம்பரங்கள் குவியும். பணம் அள்ளலாம், என்கிற மலிவான வியாபார நோக்கமே. நாட்டுக்கு நல்லது செய்யாவிடினும் சடுதியில் தள்ளி விடாமல் இருந்தால் அதுவே மிகப் பெரும் தேசத் தொண்டாகும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆகஸ்ட் 5, நண்பர்கள் தினமாம். இதுபோல்.... காதலர் தினம், அன்னையர் தினம், இத்யாதி இத்யாதி... ஹோட்டல், காபி ஷாப்புகள் மிகுந்துவிட்ட இந்நாளில்... இதெல்லாம் வியாபார நோக்கத்திலேயே எய்யப் படுகிறது. ஊடகங்களும் இதை வைத்து பணம் பண்ணுகின்றன. நல்ல நட்புக்கு எல்லா நாளும் நந்நாளாம், அதுபோலவே மற்றைய தினங்களுக்கும்.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த லக் ஹிந்திப் படம் பார்த்தேன், சூதாட்டம்தான் கதைக் களம், ஆனால் இது மனிதர்களை வைத்து ஆடும் சூதாட்டம். மாடுகளை வைத்தே..... ஆடக்கூடாதெனும்போது, மனிதர்களை வைத்து ஆடுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்சனைக்குரிய நீச்சல் காட்சி, கதைக்கு மிக அவசியம் மென்றார் ஸ்ருதி, ஆனால்.... அது கதைக்கு கொஞ்சம்கூட அவசியப் படவில்லை. சீரோ(Zero) ஹிப் சைஸ்சில் மிக அழஅகாகவே இருக்கிறார் ஸ்ருதி. மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்னும் இல்லை. குட்டி பதினாறடி பாய்ந்திருக்கிறது.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
மைக்ரோஸாப்ட் மற்றும் யாஹூவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்படி யாஹூ மைக்ரோஸாப்டின் பிங்(Bing) தேடுபொறியை உபயோகிக்கும், அதுபோலவே மைக்ரோஸாப்ட், யாஹூ தளங்களில் தனது விளம்பரங்களை வெளியிடும். அமெரிக்காவில் இன்டர்நெட் விளம்பரங்களில் வெறும் 25% மட்டுமே இந்த இரு நிறுவனகள் வைத்திருக்கின்றன. ஆனால் இவர்களின் போட்டி நிறுவனமான கூகிள் (google) 65% வைத்திருக்கிறது. இந்த புரிந்துணர்வு மூலம் கூகிளின் மார்கெட்டைப் பிடிக்க மார்தட்டுகின்றன.
-------------------XXX-----------------XXX---------------------XXX----------------
ஆமா இன்னும் மாசிலாமணி டாப் டென்னில், முதலில் இருக்கிறது. நாடோடிகள் இரண்டாமிடம். இதில் மாசிலாமணி ஜனரஞ்சகமாக ஓடுவதாக (எந்த தியேட்டரில் என்று தெரியவில்லை?) சுயதம்பட்டம் வேறு?. காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சுதான் போலும்.....
;
 

Blogger