நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வண்கம்இந்த +2 பரிட்சையில ரொம்ப பசங்க என்னவோ மறுகூட்டலாமே அதுல நிறைய மார்க் வாங்கீதுங்கபா, ஆனா, அவங்கள எல்லாம் முதலிடம் வான்கீனவங்களா அறிவிக்க முடியாதுன்னு சொல்டாங்கலாமே?
ஏம்பா கரீக்ட் பண்றசொல்லோவே ஒயுங்கா கரீக்ட் பண்ணாம உட்டது, அந்த புள்ளைங்க தப்பில்லையே! பாவம் அவங்க lifeஏ கெடுத்த அந்த வாத்திமாருகள இன்னாப் பண்ணப் போறாங்கோ? வாத்திமாருங்க நெனப்பெல்லாம் மாசாமாசம் வாங்குற சம்பளத்தைப் பத்திதான், அது கொறஞ்சா ஸ்ட்ரைக் பண்றாங்கோ, இதுக்கிப்போ இன்ன பண்ணப் போறாங்கோ? பஸ்டு இவங்களுக்கு வக்கினம்பா பரீட்ச.. நமகென்னபா தெரீது, நா ஒரு தற்குறி!!
கேட்டிங்களா நியூச... தியேட்டர்லேயே இனிமே பார் தொறக்க போறாங்களாம் என்னமாறி அன்னாடங் காட்சிக்கெல்லாம் சந்தொசம்பா. இல்லன்னா எப்டிப்பா நம்ம ஹீரோஸ் படம் பாக்கறது. நேத்து வந்த நண்டு சுண்டேல்லாம் பன்சு பேசுது, பறந்து பறந்து பைட் பண்ணுது, ஒரே பேஜாரப் பூடுதுபா, போட்னுப் போன சறுக்கு எறங்கிட்துபா, போர் அடிச்சா அப்டியே போயி ஒரு கல்ப் அடிச்சிக்னா ஷோக்கா இர்க்கும்பா. தலைவரு ஒகே சொல்டாருன்னா ரொம்ப புண்ணியமாப் போவும்.
இன்னிமே நம்ப ரிச்சால க்ரொவ்ட் வரும்பா, பெட்ரோல் வெலய ஏத்திட்டாங்களாமிள்ள! தொபாருப்பா சொல்லி முடில..., அதுக்குள்ள ஒரு சவாரி, வர்டாப்பா!!! ரைட் ரைட்.... ;
No comments:
Post a Comment